(Reading time: 11 - 21 minutes)

"ஸ்ஸ்ஸ் ஆஅஆ..."

வலியில் முனகியவள் பையை இடக்கைக்கு மாற்றுகையில் சட்டென்று முன் தோன்றியது அவன் முகம்.

அவள் இடையை பற்றி தூக்கி நிறுத்துகையில் இடக்கையால் இடையை பற்றியவன் அவள் நின்றவுடன் வலக்கையில் அவள் கையை பற்றி நிறுத்தி விட்டு வண்டியில் ஏறினான். அவசர கதியில் அரை நிமிடத்திற்குள் நடந்தவற்றை அமைதியாக அக்கக்காக ஆராய்ந்தது மனது.

சில்லிட்ட உணர்வும் சேர்ந்தே ஏற்ப்பட்ட சிறு எரிச்சலும் யார் அவன்? அருகாமையில் மருண்ட விழிகளுக்குள் படம் பிடிக்க பட்டு மூளையின் அடித்தளத்தில் பதுக்கபட்ட அந்த முகம். அவன் முகம்!!!

கோபத்திலும் வேகத்திலும் கனன்ற கண்கள்.. பிடிவாதத்தை வெளிபடுத்தும் அழுத்தமான முக பாவனை.. ஒரு ஓரத்தில் கூட கருணையை காண முடியவில்லையே.. ஆனால் விழ போனவளை தூக்கி நிறுத்திநானே? கருணையை கட்டாத இல்லை காட்ட விரும்பாத பிடிவாதம்..!! கச்சிதமான முக மூடி அணிந்து வலம் வருபவனோ?

எண்ணங்கள் தறி கெட்டு ஓட, அவள் அன்பனை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்தன புதியவனின் எண்ணங்கள். வண்டியை ஏன் எடுத்துட்டு போனான்?

'ஐயையோ வண்டி, இப்போ ஆபீஸ் போகணுமே, ஏய் அனன்யா என்னடி ஆச்சு, ஐயோ மீட்டிங் இருக்கே?'

அவசரமாக பரத்தின் எண்ணிற்கு அழைத்தாள்.

"டேய் ஒரு சின்ன ஏக்சிடன்ட் டா"

"ஹே எரும என்னடி ஆச்சு"

"ஒன்னும் இல்ல, கொஞ்சம் ஆபீஸ்க்கு பக்கத்துல இருக்க பெட்ரோல் பங்க் வரைக்கும் வந்து பிக் அப் பண்ணிக்கோ டா"

"ஓகே ஓகே இரு வரேன், பத்திரமா இரு"

"ம்ம்" அழைப்பை துண்டித்த உடன்.சும்மா இருந்தா மூளையையும் மனதையும் தேவின் நினைவுகள் குத்தகைக்கு எடுத்தன.

அவள் பின்னால் எதனை மாதங்கள் சுற்றி வந்தான், எவ்வளவு இனிமையான நாட்கள் சேர்ந்திருந்தான்.

அமெரிக்காவிற்கு வேளைக்கு செல்கையில் கூட அவளை விட அவன் தானே அரற்றி அழுதான். எவ்வளவு கனவுகளின் அஸ்திவாரம் அவன். அவன் பெயரை சொல்லும் போதோ கேட்கும் போதோ பெருமையில் முகம் மின்னுமே!! என் தேவ்..!! அனன்யா விதார்த் தேவ்..!!

"னு.. என்னடி ஆச்சு? வா வண்டியிலே ஏறு"

"ஹான்..?! ம்ம்ம்"

"நான் வந்து ஹாரன் அடிச்சது கூட தெரியாம எண்ண யோசனை?"

"ஒண்ணுமில்ல டா"

"எப்போ இருந்து டி என்கிட்டையே பொய் பேச ஆரம்பிச்ச"

"....."

"அனு அனு..?"

"...ம்ம்ம்"

"சரி வண்டி எங்க?"

"...."

"அனு ஏய்.. கேட்டுகிட்டே இருக்கேன் .. டேய் குட்டிமா அழறியா?"

வண்டியை நிறுத்தியவன் திரும்பி அவள் முகம் பார்க்க அவனுக்கு முகம் காட்டமல் திரும்பி கொண்டு கண்ணை துடைத்து கொண்டவள்

"வண்டியை எடு லேட் ஆகுது" என சொல்லவும் கோபத்தில் வண்டி சீறியது.

ஆபீசை அடைந்து அவர்கள் இருக்கைக்கு செல்லும் வரையிலும் ஏதும் பேசவில்லை பரத். அவளுக்கும் அது தேவைப்பட்டது.

அவள் இருக்கையில் அமர்ந்து கணினியை உயிர்பிக்க கோபத்துடன் வெளியில் விரைந்தான் பரத். கவலையுடன் கண் மூடி கொண்டாள் அனன்யா.

ரத்..!! அவள் வாழ்வில் இப்பொழுது இன்றியமயாதவன். அவர்களின் நட்பு சற்றே வித்தியாசமானது.

சாத்தியம் இல்லை என பலரால் மறுக்க பட்டதும் கூட.ஏன் அவளுமே நினைத்தாலே ஆனால் அதை பொடி பொடியாய் தகர்த்து எரிந்து வியக்க வைத்தது அவன் அவள் மேல் கட்டிய அக்கறையும் அன்பும் நண்பன் என்னும் எல்லைக்குள் இருந்து. அது தான் பரத்.

கல்லூரி நாட்களில் அவனை முதன் முதலில் பார்த்ததுமே மோதல் தான். அதன் பின் அவசர காதல்!! ஆனால் காதல் வயப்பட்டது பரத். அதை அவன் அவசரமாய் தான் வெளிப்படுத்தினான்.

அவன் சொன்ன அடுத்த சில நிமிடங்களிலேயே அவளும் தேவ் மீதான தன் காதலை கூறி விட்டாள்..!! சினிமா நாடகங்களில் வருவது போல அதை பெரிய விஷயம் ஆக்காமல் இயல்பாய் எடுத்து கொண்டது தான் அவளை ஆச்சர்ய படுத்தியது.

அடுத்த சில நாட்கள் எப்போதாவது வருத்தம் கொண்டாலும் ஆனந்யாவை விட அவள் தேவ் மீது கொண்டிருந்த காதலின் மேல் தான் அவனுக்கு ஈடுபாடு அதிகரித்தது.

அடுத்து வந்த சில மாதங்களில் "தேவ் ரொம்ப லக்கி டீ, நீ எனக்க கிடைசுருக்கலாம்" எனும் அவன் புலம்பல் கூட நின்று போனது!!

அப்பொழுதும் கூட அவள் அவனை முழுதாக நண்பனாக ஏற்று கொள்ளவில்லை.

தேவ்வை சந்திக்க நேரும் தருணங்களில் எல்லாம் இயல்பாய் புன்னகைத்து நண்பனை போல் பேசுவதும். அவளோட பேச நேரம் செலவிடுவதை விட அவனோட பேசுவதும் அவளை பற்றிய செய்திகளை நேராக கேட்காமல் பகிர்ந்து கொள்ளாமல் தேவ் உடன் இருக்கும் போது கேட்பதும் பகிர்வதும் என அவனுக்கே நண்பன் ஆனான் பரத்.

"உன் ப்ரெண்ட் பரத் ரொம்ப நல்ல டைப் இல்லடா" என தேவ் ஒரு முறை அனன்யாவிடம் சொல்லவும், மிகவும் ஆச்சர்ய பட்டு போனாள் அவள்.

இப்படி கூட ஒருவனால் இருக்க முடியுமா. எதார்த்தத்தை ஏற்று கொள்வதில் அவன் தான் சிறந்தவன் என்று தோன்றும் போதே இன்னொன்றும் நினைவில் வரும் அது அவள் விஷயத்தில் மட்டும் தான் என்று..!

மற்ற விஷயங்களில் குழந்தையை விட மோசமானவன். விந்தை தான்..!!

காதலுக்கு சக்தி அதிகம்.. இல்லை எந்த உறவானாலும் அடிப்படை அன்பிற்கு தான் சக்தி அதிகம். அந்த அன்பு அந்த உறவையே விட்டு கொடுத்தால் தான் நிலைக்கும் என்றால் அதற்கும் தயங்காமல் துணிவது.!!

அதை தான் பரத் அவளுக்கு உணர்தியிருந்தான்.

லையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவளின் முன்னே ஆவி பறக்கும் காபியை வைத்தான். அவள் நிமிர்ந்து பார்க்க, கைகளில் பஞ்சு, கட்டு போடா துணி மருந்து சகிதம் நின்றான் பரத்.

"மீடிங்க்கு இன்னும் டைம் இருக்கு. இந்த காபியை குடிச்சுட்டு என்கூட வா" குரலில் வேற்றுமை காட்டி செயலில் கனிவு காட்டினான். ஏன் என்று சொல்லாததால் கோபம் புரிந்தது அவளுக்கு.

மறு பேச்சின்றி காபியை குடித்தவள் அவனுடன் நடந்தாள்.

ஓய்வாக அமரும் இடத்திற்கு சென்றவன் அவளை அமர வைத்து காயத்திற்கு மருந்திட்டவாறே அவளை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவள் எழ முயல,

"எங்கடி போற? எங்க சொன்ன வேலை ஆகும்ன்னு எனக்கு தெரியும்" என கூறி கொண்டே செல்போனை எடுத்து தேவ்வின் நம்பரை அழுத்த சட்டென போனை பிடுங்கிவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள் அனன்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.