(Reading time: 13 - 26 minutes)

01. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

நீ தய ராதா

காதனே வாரெவரு கல்யாண ராம (நீ)

நன்னு நாடே  தெலிய

vasantha bairaviஇன வம்ஸ திலக நீகிந்த தாமஸமா (நீ)

3னே வாரெவரு கல்யாண ராம (நீ)

நே பொகடிதே நீது மஹிமகு தக்குவா (நீ)

ராம ராம ராம த்யாகராஜ ஹ்ருத்-ஸதன

நா மதி ந்யாயமா வேகமே (நீ)

தமிழாக்கம்

தியாகராஜ கிருதி -  ராகம் வசந்த பைரவி

உனது தயை வாராதா?

கூடாதென்பவர் யார்?

கலியாண இராமா! இனகுலத் திலகமே! இராமா! தியாகராசனின் இதயத்துறைவோனே

என்னைக் காப்பவர் இவ்வுலகில் (நீயென) அன்றே அறிந்தும், உனக்கித்தனைத் தாமதமா?

அனைத்திற்கும் அதிகாரியென (உன்னை) நான் புகழ்ந்தும், (என்னை) மன்னித்தால் உனது மகிமைக்குக் குறைவா? எனதுள்ளம் தடுமாறுகின்றது; நியாயமா?

ம்பூராவில் ஸ்ருதி சேர்த்து கொண்டிருந்த சாரதாவிற்கு அபஸ்வரமாய் கேட்டது அந்த குரல், காலையில் விளக்கேற்றி ஸ்வாமி முன் ரெண்டு கீர்த்தனங்களாவது பாட வேண்டும் என்றிருந்தவளுக்கு அதற்கு மேல் தன்னால் அன்றைக்கு இசையில் மனம் லயிக்காது என்று நினைத்து ஒரு நமஸ்காரம் செய்து விட்டு கூடத்தின் பக்கம் சென்றாள்..

"உதவாக்கரை, உதவாக்கரை, ஒரு வேலையை ஒழுங்கா செய்யத் துப்பில்லை.. நீயெல்லாம் என்ன பெரிய ஐ.ஏ.எஸ். எழுதி கிழிக்கப் போறே.. உனக்கு நேத்தே படிச்சுப் படிச்சு சொன்னேன்.. இன்னிக்கு தான் லாஸ்ட் டேட் பால் கார்ட் வாங்கன்னு.. இப்போ பாரு இந்த மாசம் முழுதும் டெய்லி போய் பூத் காரன் கிட்ட தொங்கனும்.. பாலுக்கோசறம்.. தெரியாம தான் கேக்கறேன் இங்கே என்ன ஜில்லா கலெக்டர் வேலை தட்டு கெடறதுன்னு?.. ஒரு வேலையை உருப்படியா செய்ய முடியலை உனக்கு?.."

கர்ண கொடுரமாய் ஒலித்தது திருவாளர் ராம மூர்த்தியின் குரல்.. இத்தனை திட்டுக்களையும் தாங்கியபடி தகப்பனை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாமல், தலையை குனிந்தபடி நின்றிருந்த மகன் வஸந்தை பார்த்தவளுக்கு.. 'இன்னைக்கு காலையிலேயே இப்படியும் லட்சார்ச்சனை வாங்குமா இந்த பிள்ளை.. பாவம் ரொம்ப பொறுமை சாலி..', என்று நினைத்தபடி,

"கார்த்தாலேயே ஆரம்பிச்சுட்டேளா உங்க அர்ச்சனையை.. அவனை ஏதாவது சொல்லாட்டா பொழுது போகாதே உங்களுக்கு.. போதும் கொஞ்சம் இனிமே உங்க கோபத்தை மட்டு படித்திக்கோங்கோ.. தோளுக்கு மேலே பிள்ளை வளர்ந்தாச்சு.. இன்னமும் அவனை இப்படியே கரிச்சு கொட்டிக்காதீங்கோ.. அவனையும் கொஞ்சம் பேச விட்டா தானே என்ன பிரச்சனைன்னு தெரியும்?", என்று கேள்வியாய் அவரை பார்த்தவளை முறைத்தவர்,

"வந்துட்டியா பிள்ளைக்கு வக்காலத்து வாங்கிண்டு.. அவன் பண்ணின காரியத்துக்கு.. பால் கார்ட் வாங்க மறந்துட்டான் உன் புத்ரன்.. உனக்கு கோபம் வேற வரது அவனை சொன்னாக்கா."

"டேய் வஸந்த் என்னடா ஆச்சு.. கார்டு வாங்கினயா இல்லையா?", என்று சாரதா கேட்டவுடன்..

இத்தனை பிரச்சனைக்கும் காரணமான வஸந்த், "அய்யோ அம்மா நீ வேற ஆரம்பிக்காதே.. இப்போ சொல்லறேன் கேட்டுக்கோ.. நேத்திக்கு என்னோட ஃப்ரெண்ட் குமார் ஆத்துக்கு போனப்போ அவன் சொன்னான் மேனேஜ்மென்ட் பத்தி ஒரு ஃப்ரீ லெக்சர் கொடுக்கறார் ஒரு ப்ரொஃபஸர்னு.. அதான் அங்கே போயிட்டேன்.. மத்தபடி குமாரோட தம்பி கிட்டே கார்டையும் பணத்தையும் கொடுத்துட்டு வந்திருக்கேன்.. அதை நேத்திக்கு ராத்திரி வாங்க மறந்துட்டேன்.. இன்னிக்கு கார்த்தாலே அப்பா பால் கார்டை தேடியிருக்கார்.. அதான் சத்தம் போடறார்", என்று முடித்தான்.

"அதை மொதல்லேயே சொல்லறதுக்கென்னா.. இந்த வயசுலயே மறதி.."

"ஏண்டா..கையோட வேலையை முடிக்க வேண்டாமோ.. சரி சரி.. நீ போயி அதை கலெக்ட் பண்ணிண்டு வந்துடு...டிபன் ரெடியாயிருக்கு.. போ கண்ணா போய் சாப்பிட உக்காரு..", என்றாள் சாரதா வாஞ்சையுடன்.

"ஆஹ்ஹா அதுக்கென்னா மஹானுபாவன் இதெல்லாம் மறக்காம பண்ணிடுவாறே.. போடாப்பா போய் சாப்பிடு.. சீக்கிரம் சாட்டுட்டு ரெடியாகாட்டா உன்னோட டவாலி கோச்சுக்க போறான்," என்று கிண்டலடித்தார்.

ஒன்றும் பேசாமல் அங்கிருந்து அகன்றான் வஸந்த்.

"ஏன்னா, உங்களுக்கு அவன் மேலே ஏன் இந்த எரிச்சல்.. கொழந்தை ராப்பகலா கண்முழிச்சு படிச்சுண்டு இருக்கான்.. அவனை போய் இப்படி நாக்கிலே நரம்பில்லாமல் பேசறேளே?", என்று சாரதா அங்கலாய்த்தாள்.

"ஆமாம் சாரு.. எனக்கு ரொம்ப ஆசை பாரு அவனை குறை சொல்ல.. அவனவன் இவனோட படிச்சவனெல்லாம் கல்யாணத்துக்கு தயாராயிண்டு இருக்காங்க.. ஆனா இவன் எந்த ஒரு உத்யோகமும் பார்க்காம இப்படி நம்ம உழைப்பிலே உக்காந்துண்டு தண்ட சோறு சாப்பிட்டுண்டு படிக்கறேன்.. கலெக்டராரேன்னு சொல்லிண்டு திரியறான்.. இவன் வயசிலே நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட பொறந்தாச்சு தெரியுமோன்னோ.. வயசாறது இருபத்தியாறு.. நாலு கழுதை வயசாறது.. இன்னமும் உத்யோகம் பாக்காம இப்படி திரிஞ்சிண்டு இருக்கான்.. கொஞ்சமானும் பொறுப்பிருக்கா பாரு.. இவனுக்கு பெரியவ மஹதி .. கிட்ட தட்ட இருவத்தி எட்டு வயசாகப்போறது.. இன்னமும் கல்யாணம் காட்சின்னு இல்லாம ஒழச்சி கொட்டிண்டு இருக்கா.. அவ பொறுப்புல பத்துல ஒரு பங்காவது இருக்கா இவனுக்கு.."

"ஏன்னா அவன் படிப்பு முடியரப்பவே இருபத்தி ரெண்டு வயசாயிடுத்து..இப்போ ரெண்டு மூணு வருஷமா தானே இந்த பரிட்சை கொடுத்துண்டு இருக்கான்.. அதுலேயும் ப்ரிலிமினரி முதல் அட்டெம்ப்டுலயே பாஸ் பண்ணிட்டான்னு பெருமை பட்டேள்.. இப்போ ஃபைனல் ஏதோ ரெண்டு தரமா தவறிடுத்து.. அதுக்குண்ணிட்டு.. இப்படியெல்லாம் பேசுவேளா?.."

"சாரு.. நோக்கென்னே.. நான் தானே வயத்துலே நெருப்பை கட்டிண்டு இருக்கேன்.. வயசு பொண்ணு இளமையை கரைச்சிண்டு உக்காந்துண்டு இருக்கா.. கல்யாணம் கூடித்துன்னா நம்ம கிட்ட பணமோ நகையோ அவ்வளவா இல்லை.. இருந்ததையெல்லாம் வழிச்சு போட்டு ரஞ்சனிக்கும், கல்யாணிக்கும் குடுத்தாச்சு.. நானும் ரிடயர் ஆகி நாலஞ்சு வருஷமாச்சு.. நான் பார்த்த ஸ்டேட் கவர்மென்ட் உத்யோகத்தில் ரிடயர்மெண்டில ஏதோ குடுத்தான்னு வாங்கிண்டு வந்ததை போட்டு அவா கல்யாணத்திலேயே மொத்தமா வேட்டு விட்டாச்சு.. சொற்ப பென்ஷன் பணத்திலே நம்ம ஜீவனம் ஓடறது.. இதில மூத்தவா ரெண்டு பேர் கல்யாணத்துக்கு வாங்கின கடன் மிச்சத்தை அடைக்க வேண்டியதா இருக்கு"..

ஏதோ அந்த காலத்துலே எங்கப்பா கட்டின சொந்த வீடு கைக்கு வந்ததுலே வாடகை பிரச்சனை கிடையாது.. மஹதி பாவம் சம்பாதிக்கறா.. நீயும் ஓயாம பாட்டு பாடி சொல்லி குடுத்து உன்னால முடிஞ்சதை சம்பாதிக்கறே இந்த வயசுலயும்.. ஆனா வயசு பையன் படிக்கரேன்னுட்டு.. இப்படி காசை கரைச்சிண்டு இருக்கான்.. இத்தனைக்கும் மூணு பொண்ணுக்கு பின்னாடி பொறந்த பிள்ளைன்னு ஓஹோன்னு தான் இவனுக்கு நான் எல்லாம் செஞ்சேன்.. எனக்கு நம்பிக்கை கொறஞ்சுண்டே வரது.." என்று துக்கப்பட்டவரின் அருகில் சென்ற சாரதா,

மெல்ல அவர் கையை தட்டி கொடுத்து, " ஏன்னா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?.. நம்ம கொழந்தைக்கு நாம செய்யாம யாராவது அசலார் வந்து செய்வாளா.. கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ.. எப்படியோ இவன் தலையெடுத்துட்டா.. நமக்கும் விடிஞ்சிடும்..". என்றாள் கண்ணீர் மல்க.

"நீ என்ன சொன்னாலும் சாரதா என் மனசு ஒப்பலை.. இந்த பைய்யன் அட்லீஸ்ட் ஒரு பார்ட் டயம் உத்யோகமாவது எடுத்துக்கலாம்..", என்று இழுத்தவரை பார்த்து,

"ஏன்னா அவன் பாவம்.. எத்தனை நாளா சொல்லிண்டு இருக்கான் இங்கே இந்த மாம்பலத்துலேயே ஆயிரெத்தெட்டு கோச்சிங் கிளாஸ் இருக்கு.. அதுலே சேந்தா.. நிச்சயம் பாஸ் பண்ணிடுவேண்ணான்.. நீங்க தானே அதுக்கெல்லாம் பணம் செலவழிக்க முடியாது.. நீயே காசுக்கு செலவில்லாமல் பண்ணா பண்ணு இல்லேன்னா தொந்தரவு பண்ணாதேன்னு சொன்னேள்.. இப்போ என்னடான்னா?"

"சாரு.. இவன் கேக்கற பணத்துக்கு பத்து பவுன் வாங்கினா மஹதி கல்யாணம் முடிஞ்சிடும்..நானே கஷ்டப்பட்டு போன வாட்டி ஏதோ அரியர்ஸ் வந்த பணத்தில் அவளுக்கு பத்து பவுன் சேர்த்துருக்கேன்..அது முக்கியமா? இல்லை இது முக்கியமா?."

"நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேக்கலை.. அவன் கேட்ட பணத்தை கட்டி கிளாஸ் சேத்துருந்தாக்கா, முதல் அட்டெம்ப்டுலேயே ஜெயிச்சிருப்பானோ என்னமோ.. அவன் மாத்திரம் கலெக்டராயிட்டா.. மஹதியை கல்யாணம் பண்ணிக்க நான் நீன்னு போட்டி போட்டுண்டு வந்துருக்க மாட்டோளோ மாப்பிள்ளையாத்துக்காரா?.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.