(Reading time: 6 - 12 minutes)

02. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

ன்று புதன் கிழமை, என்னுடைய வாழ்க்கையே முழுசா மாறா போவது தெரியாமல் கண்ணைத் திறந்து பக்கத்தில்  இருந்த கைப்பேசியை பார்த்த போது அது ஆஃப் ஆயிருந்தது. தலைக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தபோது மணி  8. தூக்கி வாரிப் போட்டது எனக்கு, இரவு படுக்கும் போதே கைப்பேசியில்  7 மணிக்கெல்லாம் அலாரம் வெச்சிட்டுதான படுத்தேன்,  பட் போன் ஆஃப் ஆனதால் அலாரம் அடிக்கவில்லை. வலது பக்கம் இருந்த சாமி போட்டோவை பார்த்து  "காலைலியே ஸ்டார்ட்  பாண்ணீடிய, உன்னைத் திட்ட இப்போ எனக்கு நேரம் இல்ல, 9 மணிக்கெல்லாம் நான் ஆபீஸ்ல இருக்கனும் உன்ன வந்து வெச்சுக்கிறேன் "

சொல்லிவிட்டு குளியல் அறைக்குப் போனால் பைப்பில் தண்ணீர் வரவில்லை "டேய் காட் இன்ணைக்கு ஓவரா பண்ற". இருந்த தண்ணீரில் ஒரு குட்டி குளியல் போட்டு, டிரஸ் பண்ணிக் கிளம்பும் பொது மணி 8.20. மறுபடியும் அந்தச் சாமி படத்தைப் பார்த்து "டைம் இல்லைன்னு சும்மா போறேன், உன்னுடைய விளையாட்ட இத்தோட நிருத்திக்கோ, எதுவா இருந்தாலும் ஈவினீங் பேசி தீதுகளாம்".

அவசர அவசரமா பைக்ல ஆபீஸ் போயிட்டு இருக்கும்போது சரியாய் சொல்லி வைத்தது போல் என்னுடைய பைக்க மட்டும் மடக்கி புடிச்சாரு ஒரு போலீஸ். அப்பிடி இப்படின்னு அவரை சமாளித்து,ஆபீஸ் வந்து உள்ளே நுழையும் போதே உங்களை எம்டி வரச் சொன்னாரென்று ஆபீஸ் பாய் ஆறுமுகம் கூறினான். "கடவுளே  9மணிக்கெலாம் வந்து மீட் பண்ணு,எதோ முக்கியமான அசைன்மென்ட்டுனு சொன்னாரே,போச்சு உன்னால இப்போ நான் திட்டு வாங்க போறேன்" மனதுக்குள் கூறிக்கொண்டேன். எம்டி அறைக்குச் சென்று "குட் மார்னிங் சார்" என்றேன்.

unakkaga mannil vanthen

"வாங்கச் சார் இதுதான் ஆபீஸ் வர டைமா” எம்டி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“சும்மாவே கழுவிக் கழுவி ஊத்துவாரு, இணைக்கு, நீ செத்தடா சேகரு” மனதில் நினைத்துக் கொண்டு "சாரி சார், டிராபிக் ஜாம், அதான் லேட்" என்றேன்.

"ஸீல்லி ரிசான்ஸ் சொல்லாமல் போய் வேலையப் பாருங்க சார்" என்னுடைய முகத்தைக் கூட பார்க்காமல் பதில் சொன்னார்.

"எதோ புது அசைன்மென்ட் தராத சொன்னிங்க சார்..." தயக்கத்தோடு அவரைக்  கேட்டபோது

"சார்க்கு அதெல்லாம் ஞாபகம் இருக்க, நீங்க வர வரைக்கும் என்னால் வெயிட் பண்ண முடியாது அதை மிஸ்டர் சந்துருகிட்ட கொடுத்துவிட்டேன் நீங்கப் போய் உங்க வேலைய பாருங்க" ஏளன முகத்தோடு சொல்லி முடித்தார்.

இதுவும் போச்சா, அடேய் கடவுளே இப்போ உனக்குச் சந்தோஷமா திட்டிக்கொண்டே என்னுடைய நாற்காலியில் அமர்ந்தேன்.

“ஹாய் விஷ்ணு வந்துடியா, எங்க வரமாட்டியோணு பயந்துவிட்டேன் “ கூறியபடியே பின்னால் வந்து தோலை தட்டினான் சந்துரு.

இவன்தான் சந்துரு, என்னுடைய வில்லன். இவ்வளவு பாசமாக விசாரிக்கிறான், இவனைப் போய் வில்லன் என்று சொல்கிறேன் என்று பார்க்குறிங்களா, இது பாசமா இல்ல எனக்கு இவன் வைக்கிற ஆபானு இப்போது தெரிந்துவிடும் .

சந்துரு பத்தி சொல்ல வேண்டும் என்றால், இவனும் என்னைப் போல ஒரு போட்டோ க்ராஃபர்தான். இந்த ஆபீஸ்ல இருக்கிற எல்லோருக்கும் இவன் ஹீரோ, என்னைத் தவிர. ஆபீஸ் பெண்களுக்கு இவன்தான் ரோமியோ, எம்டிக்கு செல்லப் பிள்ளை, இப்படி எலோருக்கும் ஃபேவரட் இருக்கிற இவனை எனக்குப் பிடிக்காததுக்கு காரணம் இருக்கிறது. இவனுக்கு டைம் பாஸ் ஆகவேண்டும் என்றால், நான்தான் இவனுக்கு ஜோகர், இவன் பெண்களிடம்  சீன் போட வேண்டும் என்றால் என்னைத்தான் கலாய்ப்பான், நான் எடுக்கிற நல்ல போட்டோவை இவன் எடுத்ததா சொல்லி நல்ல பேர் வாங்குவான். நான்  என்னை யுஸ் பண்ணியதை விட  இவன்தான் என்னை அதிகம்  யுஸ் பண்ணுவான்.

அவன் இவளோ பண்ணியும் நீ எதற்காக சும்மா இருக்கிறாய் என்று கேக்குரிங்களா, சந்துருவ பார்த்த எனக்குக் கொஞ்சம் இல்ல இல்ல நிறையவே பயம் அதான்.

இப்போ எதற்கு இவ்வளவு பாசம் காட்டுகிறான் என்று தெரியவில்லை. வாங்கப் பார்ப்போம்.

"எனக்கு வெரைட்டியான பூக்கள் போடோஸ் வேண்டும், நீதான் பூக்களை  வித விதமா போட்டோ எடுத்து வெச்சுருப்பியே அதை எனக்குக் காபி பண்ணி குடு" என்று பெண்-டிரைவை நீட்டினான்

“எதற்கு சந்துரு” அவனைச் சந்தேகத்தோடு கேட்டேன்.

“எதற்கு என்று சொன்னால் தான் தருவியோ, எம்டி கொடுத்த நியு அசைன்மென்ட்க்கு தேவை, சீக்கிரம் எனக்கு டைம் இல்லை” அதிகாரத்தோடு கூறினான்.

சந்துரு இவ்வளவு அதிகாரமாகக் கேட்டும் அவனை என்னால் ஓன்னும் செய்ய முடியவில்லை, அவன் கேட்டது போல நான் ரசித்து எடுத்த புகைப்படங்களை அவனிடம் கொடுத்தேன். நத்திங் டூயிங், திஸ் ஸ் மை லைப் இன் ஆபீஸ்.

எப்போதும் போல் அன்றும் ஆபீஸ்ல இருந்து ஈவீனிங் 4.30 மணிக்கெல்லாம் புறப்பட்டுப்போய், அனு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப்ல அவளுக்க காத்திருந்தேன். இதுவும் எனோட ரெகுலர் வேலையில் ஒன்று. அனுவிடம் இன்றாவது பேசிவிட வேண்டும், என்னுடைய காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பேன் பட் சொல்ல எனக்குத் தைரியம் வந்தது இல்லை.

னு ஆபீஸ் பஸ்ல இருந்து தேவதை மாதிரி இறங்கினால். எங்கிருந்து வந்ததென்று தெரியாத ஒரு தென்றல் காற்று, அவளை உரசிச் செல்ல, அந்தக் காற்றில் அவளுடைய ப்ரீ ஹேர் முகத்தில் வந்து விழ, அதை ரொம்ப க்யூடா வலது கையால் விலகி விட்டுவிட்டு தன் தோழியோடு நின்று பேசிக்கொண்டு இருந்தாள் என் காதல் தேவதை.  நான் அனுவை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது திடீர் என்று அனு என் பக்கம் பார்த்து சின்னதா க்யூட்டா ஒரு முறைப்பு முறைத்து விட்டு, என்னை நோக்கி நடந்து வந்தாள்.

"ஹலோ மிஸ்டர், கொஞ்ச நாளாகவே நான் போர இடத்தில் எல்லாம் உங்களைப் பார்க்கிறேன், நீங்க என்ன ப்ஹலோ பண்றிங்களா?. அப்பாடி  ப்ஹலோ பண்றதா இருந்த, ஃபிலிஸ் ஸ்டாப் இட். இந்த ப்ஹலோ பண்றது,   சைட் அடிக்கிறது, அதுக்கபுறம் வந்து ப்ரொபோஸ் பண்றது இதெலாம் எனக்கு சுத்தமா பிடிக்காது, அந்த மாதிரி எதுவும் ஐடியா இருத்த ப்ளீஸ் மறந்துடுங்க”. தீபாவளி பட்டாசாய் என்னிடம் பொரிந்து கொண்டிருந்தாள் அனு.

அனு பக்கதுல வந்தவுடனே நான் காலி, டோட்டலா ஆப். அனு கையை அசைத்து அசைத்துப் பேசியது எனக்கு ஒரு கவிதையே கவிதை சொன்னதுபோல் இருந்தது. அனு என்ன சொன்னாள் என்று கூட எனக்குக் கேட்கவில்லை.

“ஹலோ நான் சொல்வது புரியிதா, உங்ககிட்டதான் கேட்டுட்டு இருக்கேன்". என்னைப் பார்த்து மறுபடியும் அனு கேட்க,

எப்படி தலையை ஆட்டினேன் என்பது கூட தெரியாமல் ஓகே என்று தலையை ஆட்டினேன்.

“தட்ஸ் குட், புரிந்து கொண்டதுக்கு தேங்ஸ்” என்று கூறிவிட்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அனு வீட்டினுள் சென்று மறையும் வரை அவளைப் பார்த்து தலையை அசைத்துக் கொண்டே இருந்தேன்.

என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள் இதுதான். வானத்திற்கும் பூமிக்கும் தாவிக் குதிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. எனக்கு தலை கால் ஒன்றும்  புரியவில்லை. மகிழ்ச்சியில் பைக்கை ஸ்டார்ட் செய்தேன், என்றுமே சிறிது தொல்லை கொடுக்கும் பைக் அன்று சட் என ஸ்டார்ட் ஆனது. மனதில் வாழ்க்கையே முழுவதுமாக மாறியதுபோல் ஓர் உணர்வு. எங்குப் போகிறோம் என்று கூட தெரியாமல் பைக்கை ஓட்டினேன்.

திடிர் என்று வந்த ஒரு கார் என் பைக்கை நேருக்கு நேர் மோதியது. என்ன நடந்தது என்பது தெரிவதற்குள் காற்றில் பறந்து, தொப்பென்று சாலையில் விழுந்தேன். சிறிது சிறிதாக உலகம் இருட்ட ஆரம்பித்தது, சுற்றி இருந்த மக்களின் சத்தம் மட்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. நொடிப் பொழுதில் கண்கள் முழுவதுமாய் இருண்டு, சத்தம் அடங்கியது.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விஷ்ணு உயிர் இழந்தான்.

தொடரும் . . .

Episode # 01

Episode # 03

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.