(Reading time: 5 - 9 minutes)

01. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

காலை  கதிரவன் தன் பணீயயை தொடங்கிய சமயம்,  கடிகார நேரம் சரியாக  6.30 மணி.  விஜய சேஸ் மஹால் மின் விளக்குகளால் மின்னி கொண்டிருந்தது. “ராஜசேகர் அண்ட் ஃபேமிலி வெல்கம்ஸ் யு” என்று பெரிய கலர் பேணர் திருமனதிரிக்கு வந்தவர்களை அன்போடு வரவேற்றது. அதை கடந்து உள்ளே சென்றால், ஒரு பெயர் பலகையில் “தீபக் வெட்ஸ் அனு” என்ற  வாசகம் தங்க நிற எழத்துகளால் மின்னி கொண்டிருந்தது. திருமண மண்டபத்தில் நாதஸ்வர மேள தாளம் ஒரு புறம், ஓடி விளையாடும் குழந்தைகள் ஒரு புறம், தேவதைகள் போல தங்களை அலகரிது கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருக்கும் பெண்கள் ஒருபுறம், அவர்கள் செல்லும் திசையெல்லாம் அவர்களை கண்ணால் நோட்டம் விடும் காளையர்கள் ஒருபுறம் என அந்த மண்டபம் நிரம்பி வழிந்தது.

நூருவருசம் இந்த மாப்பிளயும் பொண்ணுதான்

பேரு விளங்க இங்கு வாழனும்

unakkaga mannil vanthenசோலை வனத்தில் ஒரு சோடி கிளி போலத்தான்

காலம் முழுக்க சேர்ண்து படனும்

மண்டபத்தின் மைக் செட்டில் பாடல் ஒலித்து கொண்டிருந்தது.

முன் வருசையில் ராஜசேகர், அவர் பக்கதில் ஆஜனுபகுவாக ஒருவர் கோட் ஸுட்டிலும், அவர் அருகில் பவ்யமாக மற்றொருவரும் அமரந்திருதனர்.

அலகரிகபட்ட மனமேடையில் மன கோலத்தில் அமர்திருந்தன் விஷ்ணு. என்னடா வெளியே தீபக்னு பேர் இருந்துது இப்போ விஷ்ணுனு சொல்றேனுன் பாக்குறீங்கள, அது என்னவென்று நம்ம விஷ்ணுவே சொல்லுவான் வாங்க.

என்னுடைய  திருமணத்திற்கு வந்திருக்கும்  உங்கள் அணைவருக்கும் என்னுடைய வணக்கம். நான்தாங்க விஷ்ணு, தீபக்னு வெளியே பேரு இருகு இங்க விஷ்ணுணு சொல்றேன்னு பாகாதிங்க இதுக்கு எல்லாம் கரணம் அந்த முன்வருசயில் கோட் ஸுட் போட்டு அமர்ந்திருபவர்தான் காரணம். அவர யாருன்னு தெரியலயா அவர்தான் மிஸ்டர் எமதர்ம ராஜா, அவர் பாக்கத்தில் பவ்யமாக அமரந்திருப்பவர் அவரோட அச்சிச்டன்ட் சித்துறகுப்தர்.

என்னடா ஏமன பார்த்த எல்லரும் நடுங்குவாங்க நீ ஜாலியா இன்றோ பண்ணி வெக்குறியேனு கேக்காதிங்க, நான் இவோலோ ஜாலியா இருகுரதுகு காரணமே அவஙக  ரெண்டு பேரும்தான். அது எப்பிடினா

"நாழியாகுது பெண்ண அழசிட்டு வாங்கோ" மந்திரம் சொல்லிட்டு இருந்த ப்ரோகிதர் மணமகள் அறையை பார்த்து சொன்னர். அனைவரின் தலையும் மணமகள் அறையை நோக்கி திரும்பியது.     

என்ன பாஸ் கதைய பாதில நிருதிடிங்க கண்டினியு.

ஸாரி பாஸ் இப்போ வர போறது என்னோட காதலி அனு. இந்த உலகத்துல எல்லா காதலனும் காதலிகிட்ட சொல்ற 2 பொய் "உனக்கதான் இந்த பூமில நான் வந்தேன்" "நீன்தான் என்னோட லைப் உன்னோட லவ் இல்லனா எனக்கு லைபே இல்ல". ஆனா என்னுடைய வாழ்க்கையில் இந்த ரெண்டு வாக்கியமும் பொய் இல்ல 100க்கு 100 உண்மை.

என்னடா பில்ட்அப் ரொம்ப ஓவரா இருக்கேனு பாக்குறிகளா, அனு இங்க வந்து என் பக்கத்தில் ஆமர்வதற்குள்  என்னுடைய லவ் ஸ்டோரியா ஷார்ட் அண்ட் ஸ்வீடா சொல்லி முடுசிடுறேன்.

விஷ்ணு என்னுடைய பெயர். வயசு 26. அப்பா, அம்மா,சொந்தம் பந்தம் யாரும் இல்லாத ஒரு அனாதை. நான் கை குழந்தைய இருக்கும் பொது என்னை "சற்குரு அனாதை ஆஸ்ரமம்" முண்ணாடி போட்டு அவ வேலை முடுன்சிதுன்னு என்னை பெற்றவள் போயிட்ட. வளந்தது, படித்தது எல்லாம் அந்த ஆஸ்ரமத்தில்தான். சின்ன வயசுல இருந்தே என்னை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க, எனக்கும் எதிர்த்து பேச பயம், அதுனால யார்கிட்டாயும் செறிய பேசுமாட்டேன், அதனால எனக்கு பிரிண்ட்ஸ் யாரும் கிடையாது.

படிப்பு விஷயதில் நான் நடுத்தரம் தான். பள்ளீ, கல்லுரினு எப்பிடியோ பி ஏ ஹிஸ்டரி முடிச்சேன். அங்கேயும் எனக்கு நண்பர்கள் யாரும் கிடையது.  போடோக்ராப்பி எனக்கு ரொம்ப பிடிக்கும்,அதனால படிப்பு முடிச்சி ஒரு புகழ் பெற்ற  வார பத்திரிகை போடோக்ராபர வேளைக்கு சேர்ந்தேன். வேலை பார்க்கும் இடத்திலும் அதே நிலைமை தான், என்னுடன் யாரும்  நண்பர்களாக சேரவில்லை.அங்க இருக்குறவங்களும் என்ன கேளி செஞ்சி விளையாடுவாங்க.

நான் பொறந்ததில் இருந்து இப்போ வரைக்கும் என் லைப்ல எல்லமே எனக்கு பிரச்சனைதான். பெத்தவங்க யாருன்னு தெரியாது, பிரிண்ட்ஸ் யாரும் கிடையாது, அதுனால எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும், அது சின்னதோ பெருசோ, காலைல அலாரம் அடிகலனாலும் சரி, நைட் துக்கம் வர்லனாலும் சரி, கொசு கடிச்சாலும் சரி இல்ல ஹோட்டல் சாப்பாடுல கல் இருந்தாலும் சரி, நா திட்டுற ஒரே ஆளு அந்த கடவுள் தான், வேறு யாரை திட்டுவது. அந்த கடவுள் இந்த கடவுள்னு கிடையாது எல்லாரையும் திட்டுவேன்.  நான் மூச்சிகு 300 தடவ சொல்ற ஒரே மந்திரம் "டேய் கடவுளே இப்பிடி கொஞ்சம் கொஞ்சமா என்ன கொல்வதர்க்கு பதில் ஒரேயாடியா என்ன கொன்னுடு". ரெண்டு மூனு தடவ தற்கொலைக்கு கூட ட்ரை செஞ்சிருக்கேன், பட் என்னோட பேட் லக் அதுக்கூட மிஸ் ஆயிடுச்சி.

இப்பிடி டோடல் வேஸ்டா இருந்த என்னோட வாழ்க்கையில்  கலர்புலான ஒறே நல்ல விஷயம் என்னோட அனு. “லவ் அட் பஸ்ட் சைட் னு” சொல்வாங்களே, அதுதான் எனக்கு நடந்தது. இன்று நேற்று நடந்தது இல்லை,  அப்போ எனக்கு 6 வயசு அனுவுக்கு 4 வயசு, எங்க ஆஸ்ரமம் இருந்த அதே ஏரியாலதான் அனுவோட வீடு. ஒருநாள் நான் ஸ்கூல்ல இருந்து வரும்போது யாரோ சிரித்து விளையாடுற சத்தம் கேட்டு திரும்பின, அங்க பூ செடிகளுக்கு நாடுவே குட்டி தேவதை மாதிரி என்னோட அனு நாய்குட்டி குட விளையாடிடு இருந்த. அப்போ அடிச்சிது அந்த காதல். அந்த நிமிஷத்தில் இருந்து அவள லவ் பண்ண ஆரமிச்சிடேன். தினமும் அவள ஒரு தடவையாவது பார்த்திடுவேன். எத்தனையோ தடவை அனுகிட்ட என்னோட லவ் சொல்லனுன்னு ட்ரை பண்ணிருக்கேன் பட் அனு முகம் பார்த்து காதல் சொல்ல எனக்கு தைரியம் வந்ததில்லை.  

இப்படி டல்லா போய்ட்டு இருந்த என்னோட லைப் மொத்தமாக மாறியது சரியா 91 நாட்களுக்கு முன்னாடி. எப்பிடின்னு கேக்குரிங்களா சொல்றேன்.

தொடரும் . . .

Episode # 02

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.