(Reading time: 5 - 10 minutes)

03. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

ய் மானிடா, சீக்கிரம் கண்களை திற, நேரம் ஆகின்றது” கணீர் என்று இருந்த அந்தக் குரல் கேட்டு கண் விழித்தேன்.

கண் விழித்துப் பார்த்தபோது, எங்கு இருக்கிறேன் என்பதேப் புரியவில்லை. கண்களை நன்கு திறந்து பார்த்தபோது, பெரிய பெரிய வெள்ளை தூண்களை கொண்ட விசாலமான கட்டிடத்தில் இருந்தேன். என்னைச் சுற்றிலும் நிறையப் படுக்கைகளும் அதில் பலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். என் நினைவில் இருந்த கடைசி ஞாபகம், கார் மோதியதில் நான் பறந்து சென்று சாலையில் விழுந்ததுதான். ஒரு வேளை நான் மருத்துவமனையில் இருக்கின்றேனோ என்ற பெரிய குழப்பம் என் மனதுக்குள். சாலையில் விழுந்தபோது ஏற்பட்ட வலி எதுவும் எனக்கு இப்போது இல்லை.

என்னால் அந்தக் கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை, கேட்டுவிட்டேன். “நா எங்கே இருக்கேன்”.

unakkaga mannil vanthen

“ஏம லோகத்தில்” என்று மீண்டும் அந்த கணீர்க் குரல் ஒலித்தது.

குரல் வந்த பக்கம் அதிர்ச்சியில் திரும்பினேன். முழு கறுப்பு நிற ஆடையில், பருத்த உடலுடன் முரட்டுத்தனமான முகத்துடன் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் டேப்லட் போன் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு, அதைப் ஆப்ரேட் செய்து கொண்டிருந்தார். அந்த டேப்லட் போன்னை உற்றுக் கவனித்தபோது அதில் எருமை மாட்டின் தலை சின்னமாக பொறிக்கப் பட்டிருந்தது.  இதற்கு முன்னர் நான் அவ்வாறு பார்த்ததில்லை. அவர் அந்த டேப்லட் போனோடு நிற்கும் காட்சி பார்க்கவே பயமாக இருந்தது.

அச்சத்தோடு அவரைப் பார்த்து, “நீங்கச் சொன்னது எனக்குப் புரியவில்லை, நான் எங்கே இருக்கிறேன்”.

அவர் என்னைப் பார்த்து, கணிர் கூறலில் பேசத் தொடங்கினார். “உன் பேர் தானே விஷ்ணு”.

நான் ஆம் என்று தலையை அசைத்தேன். மீண்டும் அவர் கையில் வைத்திருந்த டேப்லட் சிறிது நேரம் பார்த்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

“நீ இறந்து 2 மணி நேரம் ஆகிறது. கார் மோதியதில் நீ அந்த இடத்திலே உயிர் இழந்தாய். இப்போது ஏம லோகத்தில் இருக்கிறாய். இன்னும் சற்று நேரத்தில் நீ சென்று ஏம தர்ம ராஜாவைச் சந்திக்க வேண்டும், உனக்குத் தீர்ப்பு வழங்கப்படும். சீக்கிரம் எழுந்து சென்று அந்த வரிசையில் நில்”. என்று நடுங்கும் கூறலில் கூறினார்.

எனக்கு நடப்பது யாவும் கனவுப் போல்த் தோன்றியது. கண்களை இருக்க மூடிக்கொண்டு இது கனவுதான், மூழுச்சிக்கோ விஷ்ணு, இது ஒரு பயங்கரமான கனவுதான், என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

மீண்டும் அந்தக் கூரல் “இது கனவு அல்ல, எழுந்து சென்று வரிசையில் நில்.”

நான் மனதில் நினைத்ததை,  என் மனதைப் படித்ததைப்போல் கூறியவரை அச்சரியத்தோடுப் பார்த்தேன்.

சொல்வதைச் செய் என்பது போல் என்னை முறைத்துப் பார்த்தார் அவர்.

எனக்குக் குழப்பம் இன்னும் தீரவில்லை. நான் எழுந்து சென்று அவர் கூரிய வரிசையில் நின்றேன். அந்த வரிசையில் வெள்ளைக்காரர் போல் ஒருவர், கிரிஸ்துவர் போல் ஒருவர், நீக்ரோவை போல் ஒருவர் எனப் பலதரப்பட்ட மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

என் குழப்பம் மேலும் அதிகம் ஆயிற்று. ஒரு வேளைத் தலையில் அடிப் பட்டதால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போலும் அதனால் தான் இப்படித் தோன்றுகிறதோ என்று கூட நினைத்தேன்.

குழப்பத்தோடு பார்த்த எனக்கு துரத்தில் இருவர் அமர்ந்திருப்பதும், வரிசையில் செல்பவர்கள் அவரிடம் பேசுவது கண்ணில் பட்டது. நன்கு உற்றுப் பார்த்தால் அவர்கள் டாக்டர் போல் உடை அணிந்து இருந்தனர். அதைப் பார்த்த எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது, நான் அவர் கூறியது போல் சாகவில்லை, நான் மருத்துவமனையில்தான் இருக்கிறேன் என்று.

ரிசையில் இருந்த ஒவ்வொருவராய் மருத்துவரைச் சந்தித்துவிட்டு மறு பக்கம் வெளியே செல்ல நான் மருத்துவர் முன் சென்று நின்றேன்.

அந்த அரையை நன்கு கவனித்தேன். வெள்ளை டாக்டர் கோட் அணிந்த ஒருவர் அஜானுபாகுவான உடலுடன் மேஜைக்குப் பின் அமர்ந்திருந்தார், அவர் உடல் மிரட்டுவதாக இருந்தாலும் அவர் முகத்தில் அப்படி ஒரு அமைதி. அவர் அமர்ந்திருந்த மேஜையில் அதே எருமை சின்னம் போடப்பட்டிருந்த கணினி ஒன்று இருந்தது. அவருக்குப் பக்கத்தில் மற்றொருவர் அமர்ந்தபடி அவருக்கு முன்னால் இருந்த கணினியில் எதோ செய்துகொண்டிருந்தார். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்னால் இருந்த சுவரில் இரண்டு பெரிய எல்சிடி ஸ்க்ரீன் டிவி மாட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு டிவியில் நியூஸ் சேனலில் வருவது போல், ஒருவர் கறுப்பு நிற ஆடையில் அமர்ந்து இறந்தவர்களின் விபரங்களைச் செய்தி போல் கூறிக்கொண்டிருந்தார். மற்றொரு டிவியில் வன்ன வன்ன படங்கள் போல் எதோ ஒளிபரப்பாய்க் கொண்டிருந்தது, உற்றுக் கவனித்தேன் ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒரு சில வார்த்தைகள் பெயர்களைப் போல் இருந்தது, அது மட்டுமே புரிந்தது.

எனக்குள் ஆயிரம் கேள்விகள் என்னை அரித்துக் கொண்டிருந்தது. நான் அவரைப் பார்த்து “டாக்டர் எனக்கு என்ன ஆச்சி, நான் எங்கே இருக்கேன், ப்ளிஸ் சொல்லுங்க”.

அதுவரை கணினியை பார்த்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்து என்னை நோக்கினார். “உன் கேள்விகள் அனைத்திற்கும் உனக்கு எப்போதோ பதில் கிடைத்துவிட்டதே, உன் மனம் கூறுவதை கேள்”.

என் மனதில் வெளியே கூறியவரின் குரல் தான் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. “நீ இறந்து இரண்டு மணி நேரம் ஆகின்றது”. என் மனதில் என்ன நினைக்கிறேன் என்று இவருக்கு எப்படித் தெரிந்தது.

“டாக்டர் ப்ளிஸ் நீங்களும் என்னை கன்ஃபுஸ் செய்யாதிங்க, எனக்கு என்ன ஆச்சு சொல்லுங்க” சற்று குரலை உயர்த்திக் கூறினேன்.

“ஏய் மானிடா, இது எம லோகம், இங்கு யாரும் பொய் கூற மாட்டார்கள், நீ இறந்ததாக வெளியே இருந்தவர் கூறியது உன்மைதான், உன் முன்னால் இருப்பவர் மருத்துவர் அல்ல, நியாயத்தின் தலைவர் எம தர்ம மகாராஜா” என்று அருகில் இருந்த அவர் அசிஸ்டண்ட் கூனார்.

அப்போது திடீரென்று என் கண் முன்னால் நடந்தது அந்த அதிசயம், என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. கண்களை ஒரு முறை நன்கு கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன். அதுவரை டாக்டர் போல்த் தோற்றம் அளித்த அந்த இருவரும், தமிழ்ப் படங்களில் வரும் கடவுளை போன்று, பட்டு ஆடைகள், கழுத்து மற்றும் கை காலில் தங்க, வைர நகைகள் எனத் தெய்விகமாக மாறினர். முன்னால் அமர்ந்திருந்தவரின் மேஜையில் இருந்த ச்டேதொஸ்கோப் கருப்பு நிற கயிறாக மாறியது. அப்போது எமன் சிரித்த சிரிப்பு ஒளி இடியைப் போல் முழங்கியது.

ஆ ஆ ஆ……………………..

தொடரும் . . .

Episode # 02

Episode # 04

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.