(Reading time: 25 - 50 minutes)

தன் பின்னும் அவளிடம் சொல்ல முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிய அவள் அரணை புரிந்து ஆகப் போவது என்ன என விட்டுவிட்டான் ப்ரபாத். அதோடு தான் ஜெயிலுக்கு போன விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது குறிப்பாக சுகவிதாவிடம் சொல்லவே கூடாது என கேட்டிருந்தான் அரண்.

அவள் அதை கேள்விப்பட்டு அனைவர் முன் அரணை கேலி செய்தால்…..? அந்த ஜெயில் விஷயம் வெளியே வருவதில் அரணுக்கும் அவன் அப்பாவுக்கும் சுத்தமாய் விருப்பம் இல்லை. அந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அரணின் அப்பா அவனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட எண்ணினார். நியாயம் யார் புறம் இருந்தால் என்ன அடி மகனுக்கல்லவா விழுகிறது என்பது அவருக்கு……

பள்ளி நிர்வாகத்திடம் இதைப் பற்றி அவர் பேசிய போது ‘10த் படித்துக் கொண்டிருக்கும் ஒரு ப்ரைட் ஸ்டூடண்டை அது பயங்கரமாக பாதிக்கும்....இனி சுகவிதா மூலமா  ஒரு ப்ரச்சனையும் வராம நாங்க பார்த்துகிறோம்’ என வாக்குறுதி கொடுத்து அரணை அங்கேயே நிறுத்தி இருந்தது நிர்வாகம். ஆக அதன் பின் அரணும் சுகவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லாத படி அவர்களுக்கு புது வரையறைகள். ஆக சந்திப்புகள் அபூர்வம்.

அதோடு அதன் பின் அரணுக்கு அவனது படிப்பிற்கும் விளையாட்டிற்கும் பேலன்ஸ் செய்வதே படு சேலஞ்சிங்காக இருந்ததால், மேல் மனதில் அந்த வலியைக் கூட மறந்துவிட்டான். பிடித்த வேலை சிறந்த வலிநிவாரணி. அந்த ஆண்டு பள்ளி இறுதி பரீட்சையில் அவன் மாநிலத்தில் முதலாவதாக வந்தான். சுகவிதாவோ அப்பொழுதே முடிவு செய்துவிட்டாள் அவளும் அப்படி 10த் இல் ஸ்டேட் ராங் வாங்கவில்லை எனில் அந்த அரணிடம் தோற்றுவிட்டதாக  அர்த்தம் என.

ஆம் அனவரதன் மகளிடம் மறக்காமல் அரணைப் பற்றி கொம்பு சீவிக் கொண்டிருந்தார் தினமும். அவனது ஒவ்வொரு செயலும் இவளை மூக்குடைக்கவே எனப்பட்டது அவளுக்கு. அரணின் அப்பா திரியேகனோ மகனை மற்றவற்றில் கவனம் செலுத்த கற்று கொடுத்துக் கொண்டிருந்தார். அவரவர் விதைத்த விதை அவரவர் பிள்ளைகளிடம் வளர்ந்தது.

ரண் இப்பொழுது 12த். அவன் சுகவிதாவைப் பார்ப்பது அபூர்வம். பார்த்தால் இவனை முறைத்துக் கொண்டு எதாவது குத்தலாக நக்கலடித்துக் கொண்டு போவாள் அவள். பதிலுக்கு இவனும் கிண்டலாக எதாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு  வருவான் அவ்வளவே அவள் அவனைப் பொறுத்த வரை.

ஆனால் சுகவிதாவிற்கு வாழ்வின் பெரிய எதிரியாக இவன் தான் தெரிந்தான். அவன் எதைச் செய்தாலும் அவளை அவமான படுத்த, அவளிடம் தான் பெரிய ஆள் என காண்பித்துக் கொள்ளவே செய்வதாக நினைத்தாள்.

அவன் க்ரிக்கெட்டில் வளர்ந்து வந்து கொண்டிருந்தான். அவளது ஒவ்வொரு டென்னிஸ் போட்டியும் அவனுக்கு பதில் கொடுக்கும் நடவடிக்கையே அவளைப் பொறுத்தவரை. அன்று மறுநாள் அரணுக்கு கெமிஸ்ட்ரி ப்ராக்டிகல் எக்ஸாம்ஸ்…..பள்ளி நேரம் முடிந்து சற்று நேரமாகி இருந்தது. லேபிலிருந்து அரண் வீட்டிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான். ப்ரபாத் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என அவன் ஏற்கனவே கிளம்பிப் போயிருந்தான்.

மாடியில் 6வது தளத்தின் இடது ஓர நீண்ட அறை இந்த லேப். சுகவிதா 8 படித்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது. ASPL அவள். பள்ளி முடியவும் ஒவ்வொரு வகுப்பறையும் ஒழுங்காக பூட்டி இருக்கிறதா என மானிடர் செய்ய வேண்டியது அவளது பொறுப்பு. அதற்கு வந்தவள் கண்ணில் அரண் லேபிற்குள் நிற்பது பட்டது. மற்றபடி லேப் காலியாக இருந்தது.

அறையின் ஒரு பக்க கதவு ஏற்கனவே அடைக்கப்பட்டிருக்க அவளுக்கு மனதில் ஒரு எண்ணம். அரண் கவனம் இங்கு இல்லை என உணர்ந்தவள் மெல்ல கதவை மூடி வெளிப்புறமாக அந்த அல்ட்ராப் லாட்சை போட்டு பூட்டி வைத்துவிட்டுப் போய்விட்டாள்.

‘ஒரு நாள் உள்ள கிடக்குட்டும்….அப்பதான் அறிவு வரும்…..’ இதுதான் அவளது எண்ணம். மறுநாள் ப்ராக்டிகல்ஸ் அவனுக்கு என்பதெல்லாம் அவள் ஞாபகத்திலோ, கவனத்திலோ இல்லை.

அவள் இப்படி பூட்டிவிட்டு சற்று தூரம் போய் அந்த ஃப்ளோருக்குள் நுழையும் மாடிப் படிகள் அருகில் இருக்கும் மெயின் கேட்டை பூட்டும் போது அரண் லேப் கதவு பூட்டப் பட்டிருப்பதை உணர்ந்துவிட்டான். சாவிகளின் சத்தம் தொலைவில் கேட்க, இவன் தான் உள்ளிருப்பதாய் சத்தமிட, லேப் சன்னல் அருகில் இவன் பார்வைக்கு படும் விதமாக வந்து நின்ற சுகவிதா

“ஏய் குண்டு மண்டு ஒரு நைட் உள்ள கிட, அப்பதான் உன் கொழுப்பு குறையும்…” என நக்கலாக சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் ஓடிப் போய்விட்டாள். இவனது எந்த கத்தல், மிரட்டல் எதுவும் அவளை சென்று சேரக் கூட இல்லை.

ஆனால் அரணுக்கு ப்ரச்சனை அது மட்டுமாக இல்லை. சுகவிதா கவனிக்காமல் போன விஷயம் லேபிற்குள் அரணது வகுப்பு மாணவி மானுவும் இருந்தாள் என்பதை. பானிக் ஆகிப் போனாள் மானு.  அரண் தான் இது ஒரு விஷயமே இல்லை..ஈசியாக வெளியே போய்விடலாம் என என்னவெல்லாமோ சொல்லி அழ ஆரம்பித்த அவளை சமாதானப் படுத்தி, அவனால் இயன்றவரை சத்தமிட்டு வேறு ஆட்களை கூப்பிட்டுப் பார்த்தான். யார் காதிலும் அவன் குரல் விழவே இல்லை. 6வது தளமல்லவா?

ப்ரபாத் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்ற செய்தி பள்ளி நேரத்தில் வந்திருந்ததால் தன் காரில் தான் ப்ரபாத்தை அனுப்பி வைத்திருந்தான் அரண். ஆக ட்ரைவர் இனி திரும்பி வந்து இவன் காத்திருப்பேன் என சொன்ன இடத்தில்  இவன் இல்லாததைக் கண்டு, இவன் தந்தையிடம் தகவல் சொல்லி அவர்கள் பள்ளிக்குள் தேடி வந்தால் மட்டுமே வெளியே இருந்து உதவி வர முடியும். அதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ? மானு வீட்டில் எப்படி பதறுவார்கள் இதற்கு?

மானு ஏற்கனவே சற்று பயந்த சுபாவம். அவள் ஓரளவிற்கு மேல் இவன் எத்தனை சொல்லியும் கேளாமல் அழ ஆரம்பித்துவிட்டாள். “என் அப்பா ஹார்ட் பேஷண்ட்….அப்பாக்கு எதாவது ஆகப் போகுது…ஒரு பாய் கூட லேட்டா வீட்டுக்குப் போனேனா என்னை கொன்னே போட்டுறப் போறாங்க…” என்ற ரேஞ்சுக்கு அழுது இவனை வேறு டென்ஷன் ஏத்தினாள்.

இவனும் செக்யூரிட்டியாவது இந்த பக்கம் தேடி வருவாரா என ஓரளவு பொறுத்துப் பார்த்தவன் இருட்டவும் அதற்கு மேல் நாமாக வெளியேறினால் தான் உண்டு என்ற மனநிலைக்கு வந்திருந்தான். லேப் அறையின் ரூஃப் அருகில் இருந்த க்ரில்டு வெண்டிலேட்டரை ஏறி கழற்றி, அதன் வழியாக அந்த 6வது மாடியின் வெளிப்புறமாக தொங்கி…. இருட்டென்றாலும் கூட இங்கிருந்து கீழே பார்த்தால் எப்படி இருக்கிறதாம்?

அங்கிருந்து கீழே 5ஆவது தள ஜன்னலின் மேலாக நீட்டிக் கொண்டிருந்த சன் ஷேட் ஸ்லாபில் இறங்கி, அங்கிருந்து ஒவ்வொரு தளத்தின் கீழிருந்த  ஜன்னலின் சன் ஷேட் மேலாக உயிரை பணயம் வைத்து குறி தவறாமல் குதித்து,  தரையை அடைந்து ப்ரின்ஸிபால் ரூமிற்கு அருகில் தண்ணி அடித்துவிட்டு விழுந்து கிடந்த செக்யூரிட்டியை எழுப்பிப் பார்த்தான் அரண். அவனிடம் அசைவு இல்லை. வெற்று உளறல் மட்டும் வந்தது. இதற்குள் தனியாய் இருக்கும்  மானு பயத்தில் என்ன ஆனாளோ?

கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்தின் நுழைவு வாசல்களிலும் கிரில் கேட் உண்டு. இவன் பூட்டை உடைத்து மானுவை கீழே கொண்டு வர நினைத்தால் ஏறத்தாழ 13 பூட்டுகளை உடைக்க வேண்டும். நடக்கின்ற காரியமா?  சாவி ப்ரின்ஸிபால் அறையில் இருக்கும். ஆனால் நாளைக்கு +2 பரீட்சையை  வைத்துக் கொண்டு ப்ரின்ஸி அறையை உடைத்தால் கொஸ்டியன் பேப்பர் திருட என்று கூட ப்ரச்சனை வந்து நிற்கலாம்.

அவனால் அதற்கு மேல் இன்னொரு கிரிமினல் கேஸை எதிர் கொள்ள முடியாது. அப்படித்தான் அப்பொழுது அவனால் நினைக்க முடிந்தது.ஆக வேறு வழி எதுவும் தோன்றாமல் அங்கு கிடக்கும் என தெரிந்த ஏணியை எடுத்துக் கொண்டு போனான். இவன் இறங்கிய வகையாக ,கட்டிடத்தின் பின் புறம் போய், தரையிலிருந்து க்ரவ்ண்ட் ப்ளோர் ஜன்னல் சன் ஷேடின் மீது அந்த ஏணியை சாய்த்து வைத்து, ஏணி மூலமா அந்த சன் ஷேடின் மீது ஏறிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.