(Reading time: 25 - 50 minutes)

துவரை அது ஒரு சின்ன நிகழ்வாகவே தெரிந்தது. ஆனால் மறுநாள் அதுவே வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. காரணம் மறுநாள் காலை இவன் பள்ளியில் காரை விட்டு இறங்கும் போது கைது செய்யப்பட்டான். தன் வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் எந்த தகவலும் கொடுக்க அனுமதிக்கப்படாமலேயே இழுத்துச் செல்லப் பட்டான் அவன்.

இவனது ட்ரைவர் இவன் தந்தையிடம் தகவல் தெரிவித்து அவர் வந்து சேரும் போது சிறையிலிருந்தான் அரண். எஃப் ஐ ஆர் பதியப்பட்டிருந்தது அவன் பெயரில். கிரிமினல் கேஸ். திட்டமிட்டு இவன் தாக்கியதில் சுகவிதாவிற்கு காலில் எலும்பு முறிவு. மரண காயங்களுடன் அவள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்றது எஃப். ஐ ஆர்…

அரணால் அந்த நாளை எதிர்கொள்ளவே முடியவில்லை. 15 வயதில் இது ஒன்றும் சாதாரணமாக தெரியப் போவதில்லை. அதுவும் இயல்பு நிலை மீறாமல் வாழ்ந்து பழகி இருந்த அரணுக்கு இது தன்மானத்தில் விழுந்த மரண அடி. கூனிக் குறுகிப் போனான். காலையிலிருந்து சிறைக்குள் இருந்தான் அவன். முதன் முறையாக அவன் தந்தை தவித்து அவன் பார்த்த நாளும் அதுவே.

கிரிமினல் கேஸ்….ஒழுங்காக முடியவில்லை எனில் அவன் ஃபாரின் ட்ரிப் போக முடியாது…..என ஏதேதோ பயம் காட்டினார் இவர்களது லாயர். சம்பந்தபட்ட போலீசாஃபீஸரோ இவர்களிடம் பேசக் கூட தயாராயில்லை. கடைசியில் சி. எம் வரை தலையிட்டு ஒரு வழியாக இரவு வீடு வந்தான் அரண்.

சுகவிதா ஏன் இப்படி நடந்து கொண்டாள் என அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவனைப் பற்றி அவள் அப்பாவிடம் அவள் கம்ப்ளெய்ண்ட் செய்யாமல் இதெல்லாம் ஏன் நடக்கிறதாம் என்பது அவன் எண்ணம். அவள் மீது சுத்தமாய் மரியாதையின்றிப் போனது அப்பொழுதுதான். ஏனெனில் அவள் அதிலிருந்து சில நாட்களில் ஜூனியர் விம்பிள்டன் போட்டிகளில் கலந்து அதை ஜெயித்து வைத்தாள்.

முறிந்த கால் என்பது கூட எத்தனைப் பொய் என்பதற்கு அதைவிட பெரிய எவிடென்ஸ் வேற என்ன வேண்டுமாம்? ஆனால் உண்மையில் நடந்த கதை வேறு.

ரண் சுகவிதா இருவருக்கும் பூர்விகம் ஓரே ஊர். அங்கு ஊருக்குள் இரண்டு க்ரூப் அதாவது இரண்டு குடும்பங்கள். அதற்குள் கோல்ட் வார் எப்பொழுதும். இதில் ஒரு க்ரூப் மக்கள் அரண் தந்தை திரியேகனின் உறவினர். மற்றவர்கள் அனவரதனுக்கு சொந்தம்.

 அரணின் அப்பா திரியேகன் இந்த இன்டெர்னல் பாலிடிக்‌ஸ் எதற்குள்ளும் தலை இடாதவர். அனவரதனும் அப்படித்தான். ஆனால் இந்த முறை லோக்கம் எம் எல் ஏ எலெக்க்ஷனில் திரியேகனின் உறவினர் ஒருவர் ஜெயித்திருந்தார். அது அடுத்த க்ரூப்பை கடுப்படித்துக் கொண்டிருந்தது. இதில் தோற்ற அந்த நபர் அன்று சுகவிதா வீட்டிற்கு வந்திருந்தார். அப்பொழுதுதான் சுகவிதா நடக்க முடியாமல் அடிபட்டு வீட்டிற்குள் வந்தது.

அவள் இன்னும் இரண்டு நாட்களில் லண்டன் கிளம்பியாக வேண்டும். ஜூனியர் விம்பிள்டனில் விளையாடும் தகுதி பெற்றிருந்தாள் அவள். முதல் முறை மகள் விம்பிள்டன் போகிறாள் என படு உற்சாகத்தில் இருந்த அனவரதன் துடித்துப் போனார். இப்படி ஒரு இஞ்சுரியோடு எப்படி விளையாடுவதாம்?  அவர் விசாரித்ததற்கு இயல்பாய் நடந்ததை சொன்னாள் மகள். அனவரதனோ இவள் விம்பிள்டன் போவதை தடுக்க பொறாமை கொண்டு அரண் இப்படி வேண்டுமென்றே திட்டமிட்டு செய்துவிட்டதாக  எண்ணினார். திட்டித் தீர்த்தார், கொதித்து நொந்தார்.

அவளுக்கு காலில் காயம் தான். ஆனால் முறிவெல்லாம் இல்லை. ஆனால் அங்கு வந்திருந்த அந்த ஊர்க்காரரோ அவருக்கு இருந்த சொந்த கடுப்பில் அவரது தம்பியான  போலீஸ் உயர் அதிகாரியாரியிடம் சொல்லி அரணுக்கு ஆப்படித்துவிட்டார்.

அனவரதனுக்கு இது எக்‌ஸாஸுரேட்டட் கேஸ் எனத் தெரிந்தாலும் மகள் விம்பிள்டன் ஜெயிக்க முடியாது இம்முறை என்ற வெறுப்பிலும் அரணை இனி ஒரு போதும் மகளிடம் வாலாட்டாமல் விலகி இருக்க வழி செய்ய வேண்டும் என்பதினாலும் இதற்கு மௌனமாக இருந்து மறைமுக ஆதரவு தந்து வைத்தார்.

ஆனால் அதன் பின் மருத்துவர் சுகவிதா போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கொடுக்க அந்த போட்டியில் கடும் வலியுடன் தான் என்றாலும் கலந்து கொண்டு போராடி ஜெயித்து வந்தாள் சுகவிதா. அரணுக்கு நடந்த கைது விவகாரம் சுகவிதாக்கோ, சுகவிதா வீட்டில் நடந்த இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி அரண் குடும்பத்திற்கோ தெரியாது.

ஆக அரண் அவளை கடுமையாய் வெறுக்க, அது எதுவும் தெரியாமல் பள்ளி வந்தாள் சுகவிதா. அவள் தந்தை  அவளை போட்டியில் பங்கேற்க தடுக்கவென அரண் செய்த சதிதான் அந்த சைக்கிள் மோதல் என சொல்லி இருந்ததில் அவளுக்கு அப்பொழுது அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அவன் சாரி தானே கேட்டான்….என்றது அறிவு.

அரணின் தந்தை அவனுக்கு திரும்ப திரும்ப சொல்லி இருந்த அறிவுரைப் படி சுகவிதாவை விட்டு விலகி இருக்கவே அரணும் முடிவு செய்திருந்தான். ஆனாலும் அன்று அவள் தான் வென்று வந்திருந்த விம்பிள்டன் கோப்பையை கொண்டு வந்து அசெம்ளியில் வைத்து பள்ளிக்கு காண்பித்து பெருமை அடித்துக் கொண்டதில் கொதித்துப் போனான்.

இவன் அப்பாவை தவிக்க வைத்து, இவனை கொல்லாமல் கொன்று புதைத்து இவளுக்கு இப்படி ஒரு சீனா…. ? ஆக அசெம்ப்ளி முடிந்து அவரவர் வகுப்பிற்கு திரும்பும் வழியில் அந்த ட்ரோபியை பிடுங்கி அடித்து உடைத்தான் அரண்.

சுகவிதாவிற்கு மனதளவில் அது பலத்த இழப்பு. அத்தனை வலி வேதனையுடன் விளையாடி வென்ற ஒன்று அது. எத்தனைகால கனவாய் இருந்த ஒரு வெற்றியின் அடையாளம்!!! அழுது கொண்டே அந்த அந்த சப்பிப் போன ட்ரோபியை எடுத்துக் கொண்டு போன சுகவிதாவிற்கு தன் அப்பா சொன்ன அரணின் ப்ளாட் கான்சப்ட்டின் மீது இப்பொழுது அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருந்தது.

 ‘சாரி கேட்ற மாதிரி என்னமா நடிச்சு என் காலை டேமேஜ் செய்துட்டான்….? கேடுகெட்ட கிரிமினல்…க்ரீன் ஐட் மான்ஸ்டர்.’

அவ்வளவுதான் அதன் பின் அவள் அரணை அனவரதனின் கண்ணோட்டத்தில் பார்க்க கற்றுக் கொண்டாள்.

ப்ரபாத்திற்கும் சுகவிதா வீட்டிலிருந்து வந்த அந்த கேஸ் புரியாத விஷயமாக இருந்தாலும்…..சுகவிதா அதற்கு காரணமாக இருக்க முடியாது என்பதை அவனால் அரணிடம் விளக்க முடிந்தது.

“அவ உன்னைய அவங்க அப்பாட்ட கம்ளெய்ண்ட்லாம் செய்திருக்க மாட்டாடா….அடி பட்டதுக்கு காரணம் சொல்லிருப்பா வீட்ல….போன தடவையே அவங்க அப்பா டென்ஷனாகிட்டாங்கல்ல… .இந்த டைம் இன்னும் கொஞ்சம் அதிகமா டென்ஷன் ஆகிருப்பாங்க….மத்தபடி அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதுடா...”

அரணுக்கும் இது ஏதோ ஒரு வகையில் இப்பொழுது ஏற்புடையதாகத் தான் தோன்றியது. இப்பொழுது அந்த விம்பிள்டன் கப்பை இவன் பிடுங்க போன போது…முதலில் அவள் இவனைப் பார்த்ததும் ஒரு ஃப்ரென்ட்லி ஜெஸ்டருடன் தான் வந்தாள். இயல்பான பல் தெரியா சிரிப்புடன்….இவன்தான்  இழுத்து போட்டு உடைத்துவிட்டான்….பாவம் அவங்க அப்பா செய்ததுக்கு இவ என்ன செய்வா….? இனி இவ இருக்க பக்கம் திரும்பி கூட பார்க்க கூடாது… ஆக அரண் அதன் பின் ஒருவிதமான இயல்புக்கு திரும்பிவிட்டான்.

அரணிடம் சொன்னது போல் அரணைப் பற்றி சுகவிதாவிடம் ப்ரபாத் சொல்ல முயன்றான்தான். ஆனால் அவன் பெயரைக் கூட காதில் வாங்க மறுத்துவிட்டாள் சுகவிதா. அதோடு கப் போனதில் படு அழுகை. 11 வயது குழந்தை தானே அவள் அப்பொழுது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.