(Reading time: 10 - 20 minutes)

10. நேசம் நிறம் மாறுமா - தேவி

தியின் அலறலில் அவனை விட்டான் சூர்யா. அங்கே இரண்டு திருமணங்கள் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியது. மதியும் அவள் அத்தையும் இணைந்து எல்லோருக்கும் இனிப்பும், கூல் டிரிங்க்ஸ்ம் பரிமாறி விட்டு அவர்களும் அமர்ந்தனர்.

இதற்கிடையில் ராகவன் “ஆதி இவர்கள் இருவருக்கும் அதே தேதியில் திருமணம் நடத்துவதைப் பற்றி நம் ஜோசியரிடம் கேட்டு விட்டாயா? அவர் என்ன சொல்கிறார்?”

ஆதி “இன்று காலையில் நான் அவரைத் தான் பார்த்து விட்டு வருகிறேன். வரும் போது தான் பிரகாஷ், மதி வீட்டினரை வரச் சொல்லி எல்லோரிடமும் கேட்டு விட எண்ணினேன். இதோ நம் ஜோசியர் கொடுத்த பொருத்தம் மற்றும் திருமண தேதி பற்றிய விவரம். நீங்கள் பார்த்து விடுங்கள்”      

Nesam niram maaruma

யாராவது ஒருவர் அவரிடம் கேட்டால் போதும். இப்போது மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றைப் பார்ப்போம்.

மதியின் அம்மா “முதலில் எல்லோர் டிரஸ் பர்சேஸ் முடித்து விடலாம். அப்போது தான் பிளவுஸ் தைத்து சரிபார்க்க முடியும்.”

ஜானகி “இந்த ஞாயிற்றுக் கிழமை நல்ல நாளாக இருப்பதால் அன்றைக்கு காஞ்சிபுரம் சென்று எல்லாருக்கும் எடுக்கலாம்.” என்றார். பிரகாஷின் அம்மாவும் சரியெனவே காஞ்சிபுரம் செல்வது உறுதியாயிற்று.

ஆதி “அப்பா, மாமா இதோ சமையல்காரரிடமிருந்து மெனு லிஸ்ட் வந்து விட்டது. இதில் ஏதாவது மாற்றம் இருந்தால் சொல்லுங்கள். செய்து விடலாம். கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைகளா நீங்களும் பார்த்து விடுங்கள்.” என

பிரகாஷ் அதிதியின் காதில் “சாப்பாடா முக்கியம்.. எனக்கு ஸ்வீட்தான் வேணும். அதுவும் ..” என்று முணுமுணுக்க அதியோ வெட்கத்தில் முகம் சிவந்தபடி யாரும் அறியாதபடி அவனை கிள்ளினாள்.

சூர்யாவோ யாரும் அறியாதபடி வாணியைச் சீண்டிக் கொண்டிருக்க, வாணி மெதுவாக அவன் கையில் கிள்ளினாள்.

இதையெல்லாம் பார்த்தும் பாராதது போல் மற்றவர் பேசிக் கொண்டிந்தனர். ஆதி “சூர்யா நீயும், வாணியும் இன்று இன்விடேஷன் டிசைன் முடிவு செய்து விடுங்கள். உடனே அடித்து வந்தால் காஞ்சிபுரம் போய் விட்டு வந்த பிறகு கொடுக்க ஆரம்பித்து விடலாம்.” என்றான்.

“சரிண்ணா” என்றான்.

இதே போல் மேலும் பலவற்றை பேசி முடித்து விட்டு பிரகாஷ் வீட்டினர் கிளம்ப, பிரகாஷ் மனமே இல்லாமல் கிளம்பினான்.

மதி வீட்டாரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். சூர்யா, ஆதி ஏதோ அலுவலக விஷயம் பேசிக் கொண்டிருக்க, வாணியும், அதியும் அதி ரூமில் இருந்தனர். ராகவன், சுந்தரேசன் இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர். ஜானகி அவர்களுக்கு குடிக்க ஏதோ எடுத்துச் செல்ல, மதியும் அவள் அம்மாவும் மட்டும் இருந்தனர்.

மீனா மதியிடம் “மதி.. உனக்கு சந்தோஷமா” என்று வினவ,

மதி “எனக்கு சந்தோஷம் தான். ஆனால் நான் உங்களிடம் ஒன்று கேட்க நினைத்தேன். கேட்கவா?”

அவர் என்ன என்று கேட்க மதி “நீங்கள் இதற்கு சீக்கிரம் சம்மதிப்பீர்கள் என்று எண்ணவில்லை. என்னை நினைத்து தயங்குவீர்கள் என்று நினைத்தேன். எப்படி சம்மதித்தீர்கள்”

“மதி.. எனக்கு உன்னையும் ஆதியையும் நன்றாகத் தெரியும். நீ ஆதியைத் தவிர வேறு யாரையும் மணந்து கொள்ள மாட்டாய். ஆதி வந்தனாவோடு திருமணத்திற்கு சம்மதித்தானே ஒழிய அது ழுழுமனதோடு அல்ல. வந்தனா விபத்திற்கு பிறகு அவன் உன்னைத் தவிர யாரைக் கேட்டிருந்தாலும் திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டான். இதுவும் எனக்குத் தெரியும்”

மதி இடையிட்டு “அப்படியென்றால் எங்கள் திருமணத்தின் போது நீங்கள் முழுமனத்தோடு சம்மதிக்கவில்லையே. ஏன்.”

“ஆதி உன்னைத் திருமணம் செய்து கொண்டாலும் அவன் மனம் மாற நாட்கள் ஆகும் என்று தெரியும். இப்போது ஏற்படும் வேதனைகளைத் தவிர்க்கலாமே என்று எண்ணம். உன் மாமா கேட்கவும், அப்பா உடனே சம்மதம் சொல்லி விட்டார். ஆனால் அப்போது இங்கே எல்லாரும் ஒரு மாதிரி உடைந்திருந்த நேரம். நீ இங்கு வந்தால் ஒரு மாற்றம் ஏற்படும் என்று உன் மாமாவுக்கும் அப்பாவிற்கும் எண்ணம். அதனால்தான் நானும் சம்மதித்தேன். உனக்கும் ஆதிக்கும் நடுவில் உள்ள உறவு சீக்கிரம் சரியாகிவிடும் என்று எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் தான் வாணி சூர்யா திருமணத்திற்கு சம்மதித்தேன்.

சூர்யா முதல் நாள் அலுவலகம் முடிந்து வாணியைக் கொண்டு விடும்போதே ஊகித்து விட்டேன். வாணியும் பெரிய அளவில் அவரை வெறுக்கவில்லை. வாணி மறுத்தால் அது உன்னை உத்தேசித்துத் தான் இருக்கும். ஆனால் அதை சூர்யா சரி செய்து விடுவான் என்பதால்தான் நாங்கள் இவர்கள் திருமணத்திற்கு சம்மதித்தோம். ஆனால் நான் கேட்டதற்கு நீ ஒன்றும் சொல்லவில்லையே?” என்றார்.

“எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லைமா. அவரும் மாறிக் கொண்டிருக்கிறார் என்று புரிகிறது. வாணிக்கு சூர்யாவைப் பிடித்திருப்பதால் இது எனக்கு சந்தோஷமே” என்றவள்,

“அது இருக்கட்டும். உனக்கும் அத்தைக்கும் எப்படி இவ்வளவு நெருக்கம். எனக்குத் தெரிந்து என் திருமணத்தின் போது தான் நீங்கள் ரொம்ப நாள் கழித்துப் பார்த்துக் கொண்டீர்கள் என்று நினைத்தேன். அது மட்டும் இல்லை இங்கே எல்லாரையும் ரொம்ப பழகியவர்கள் போல் அவர்களைப் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்.” என்று கேட்க,

“அது… நாங்கள் இருவரும் எப்போதும் போனில் பேசிக் கொண்டிருப்போம். உன் அத்தைக்கும் நம் எல்லோரைப் பற்றியும் தெரியும். எனக்கும் இங்கு நடப்பது எல்லாம் தெரியும். மேலும் ஆதி பத்து வயது வரை என்னிடம் மிகவும் ஒட்டுதலாக இருப்பார். பிறகு தான் அவரோடு தொடர்பு விட்டுப் போயிற்று. என்னுடைய ஒரே தோழி என்றால் அது உன் அத்தைதான். ஜானகிக்கும் நான்தான் தோழி”

இது எல்லாம் அப்பாவிற்கும், மாமாவிற்கும் தெரியுமா என

தெரிந்திருக்கலாம். ஆனால் எங்களிடம் கேட்டதில்லை. அதே போல் அவர்களும் தொடர்பில் தான் இருந்தார்கள். நாங்களும் கேட்டதில்லை.

என்னது .. அப்படியென்றால் அப்பா மாமாவை எதேச்சையாக சந்திக்க வில்லையா?

இல்லை. ஆனால் திருமணம் பேசியதுதான் எதிர்பாராமல் நடந்தது.

அப்படியென்றால் நாங்கள்தான் முட்டாளா .. உங்களை .. என்று கோபப்பட

மதியின் அம்மாவோ “சாரிடா மதிக் குட்டி .. உங்கள் சிறு வயதில் சில விரும்பாத விஷயங்கள் நடந்து விட்டது. அதைப் பற்றி இப்போது பேசுவதால் எந்தப் பயனுமில்லை. ஆனால் உங்கள் இருவரின் திருமணம் என்பது ஆண்டவன் போட்ட முடிச்சு. அதனால்தான் என்ன என்னவோ நடந்தும் உங்கள் கல்யாணம் நடந்தது. இனிமேல் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறேன் ” என்று சமாதானப் படுத்தினார். மேலும் “ மதி .. இதெல்லாம் தெரிந்ததாக யாரிடமும் காட்டிக் கொள்ளாதேடா” என்றார்.

“சரி .. சரி” என்று மதி கூறவும், எல்லாரும் வரவும் சரியாக இருந்தது. ஆனால் இதையெல்லாம் ஆதியும், சூர்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.

தி வீட்டினர் கிளம்பிய பின், மற்றவர்கள் உள்ளே செல்ல சூர்யாவும் ஆதியும் தோட்டத்திற்கு சென்றனர்.

சூர்யா “டேய் ஆதி அண்ணா, என்னடா நடக்குது இங்க? இந்த பெரிசுகளெல்லாம் சேர்ந்து நம்மளை முட்டாளாக்கிட்டு இருந்திருக்காங்க..? உனக்கு ஏதாவது புரியுதா?” என்றான்.

ஆதியோ “எனக்கு இப்பத்தான் சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சுருக்கு. இதோட முடிவு இப்போத் தெரியாது. ஆனால் கொஞ்ச நாள்ள தெரியும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.