(Reading time: 10 - 20 minutes)

ரி. அதை விடு. நீ உன்னோட வாழ்க்கை பத்தி என்ன முடிவு எடுத்திருக்க? இப்படியே தான் இருக்கப் போறியா? ப்ளீஸ்டா.. உன் வாழ்க்கை மட்டுமில்ல, அண்ணியையும் யோசிச்சுப் பதரு. சீக்கிரம் சரி பண்ணிக்கோ.

அது பிரச்சினையில்லடா. கூடிய சீக்கிரம் எல்லாம் சரி ஆகும்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மதி சாப்பிட அழைக்க வர அப்படியே பேச்சை மாற்றினர்.

ன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதிதி “அண்ணா, என் பிரெண்ட்ஸ் எல்லாரும் ட்ரீட் கேட்கிறார்கள்? அத்தோடு மெகந்தி பங்க்ஷனும் வைக்கச் சொல்கிறார்கள்? என்ன செய்யலாம்?”

“அது அவசியமாடா? நம் பக்கத்;தில் அதெல்லாம் பழக்கமில்லையே “ என்றார் ஜானகி.

ஆதியும் யோசனையோடு நோக்கவும், “அண்ணா, என் பிரெண்ட்ஸ் மட்டும் தான். ப்ளீஸ்” என்று கேட்க,

அவள் ஆசையைத் தட்டமுடியாமல் தந்தையை பார்க்க, அவரும் சரி எனவே,

“சரி.. ஆனால் ட்ரீட்டும்  மெகந்தியும் ஒன்றாக கொடுத்து விடலாம். கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக நம் வீட்டிலேயே கொடுத்து விடலாம்.

ஹேய்.. சூப்பர். தேங்க்ஸ் “ என்று குதித்தாள்.

அப்போது ஆதி “மதி .. உங்கள் வீட்டிலும் மெகந்தி பங்க்ஷன் உண்டா ?” என்று கேட்க,

“அதெல்லாம் கிடையாது. ” என்றாள்.

அப்படியென்றால் அதிதி.. வாணியிடமும் சொல்லி விடு. அவள் பிரெண்ட்சும் வரட்டும். அவளுக்கும் இங்கேயே மெகந்தி பங்க்ஷன் செய்து விடலாம். நீங்கள் என்னம்மா சொல்கிறீர்கள்

“சரிதான்பா.. அவளும் கல்யாணப் பெண்தானே” என அதிதி அதை வாணியிடம் சொல்லப் போனாள்.

சூர்யா எங்கோ வெளியே சென்றிருக்க, ஆதி யோசனையோடு “ அப்பா, நான் கல்யாண வேலைகள் பெரிய விஷயமில்லை என்பதால் சேர்த்து செய்யலாம் என்று சொல்லி விட்டேன். ஆனால் அத்தை, மாமாவிற்கு அதில் ஏதாவது கஷ்டமிருக்குமா? நீங்கள் விசாரித்தீர்களா?” என்று கேட்க

“அதெல்லாம் பிரச்சினையில்லை ஆதி. நாள் குறைவாக இருப்பதால் பத்திரிகை கொடுப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கும். மேலும் நெருங்கிய சொந்தங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்கும். வாணிக்குத் துணையாக அவள் பாட்டியை வரச் சொல்லி விடுகிறேன் என்றான்.” என்றார்.

“இங்கே நம் வீட்டில் யார் செல்வது? பேசாமல் கொரியரில் அனுப்பி விடலாமா?” என ஆதி வினவ

“இல்லை. அது சரி வராது ஆதி. நம் வீட்டில் இரண்டு திருமணம் வேறு. அதனால் நீயும், மதியும் சென்று வாருங்கள்” என்றார் ஜானகி

“இல்லை அப்பா. இங்கே வேலை இருக்கிறது. ஓன்று செய்யுங்கள். பத்திரிகை அடித்து வந்ததும் நீங்கள், அம்மா, அத்தை, மாமா எல்லோரும் நம் காரில் போய் விடுங்கள். ஒரு வாரம் இருந்து அங்கே முழுதாக முடித்து விட்டால், இங்கே உள்@ரில் மற்றவர்களுக்கு நானும் மதியும் கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.”

மேலும் சற்று நேரம் பேசிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றனர். ஆதி தன் அம்மாவை தனியாக அழைத்து “அம்மா, இன்று ஜோசியரிடம் பேசினேன். நடந்த விஷயங்களில் உங்கள் தவறு எதுவும் இல்லை என்று தெரிந்தது. மேலும் நீங்கள் மதிக்காகப் பார்த்து என்னை விட்டு விட்டீர்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் நிலையில் இருந்து பார்க்கும் போது உங்கள் மனநிலை எனக்குப் புரிந்தது. இதுவரை நான் உங்களிடம் நடந்து கொண்ட முறைக்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்றான்.

“இல்லை ஆதி. நானும் சில விஷயங்களில் ஏமாற்றப் பட்டு விட்டேன். அது எனக்குப் புரியவில்லை. அதனால் தான் நான் உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டு விட்டேன். நீயும் என்னை மன்னித்து விடுப்பா” என்றார்.

“என்னம்மா நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். நடந்ததை விடுங்கள்.”

“அது சரி. இப்போதாவது நீ நம் சொந்த ஊருக்குச் செல்லலாம் அல்லவா? நாங்கள் இங்கே பார்த்துக் கொள்கிறோம்.”

“அது மட்டும் முடியாது. நடந்த விஷயங்களில் இன்னும் எனக்கு முழு விவரம் தெரியவில்லை. ஆனால் அது பற்றி நான் உங்களிடம் இப்போது பேச மாட்டேன். அது மதிக்கும் எனக்கும் எல்லா விஷயங்களும் சரியாகும்போது பேசுவேன். அதன் பிறகு தான் நான் ஊருக்கு வருவேன்”

“இதில் மதியைப் பற்றி என்ன பிரச்சினை? சொல்லப் போனால் நடந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாதே.

“அது எனக்கும் தெரியும். ஆனால் …சரி அதை விட்டு நீங்கள் படுக்கச் செல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்”  என்று முடித்து தன் அறைக்குச் சென்றான் ஆதி. ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குச் சென்றார் ஜானகி.

தி தங்கள் அறைக்கு வந்தவுடன், “மதி, வாணிக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய உங்கள் வீட்டில் இப்போது முடியுமா? உன்  வீட்டு நிலைமை உனக்குத் தெரியுமல்லவா? எனக்கு நேரடியாக கேட்க சங்கடமாயிருக்கிறது. அப்படி ஏதாவது தேவையென்றால் நீ கொஞ்சம் சொல்லும்மா. வாணியும் எனக்கு அதியைப் போலத்தான்” என்றான்.

“அதைப் பற்றி பெரிதாக பிரச்சினையிருக்காது. அநேகமாக நகையெல்லாம் ரெடிமேடாகத்தான் வாங்குவார்கள். மற்ற விஷயங்களைப் பொருத்த வரை உடனே வாங்கக் கூடியது தானே. என்ன ஷாப்பிங்தான் தொடர்ந்து போக வேண்டியிருக்கும். அநேகமாக அவர்கள் ஊர்ப் பக்கத்தில் பத்திரிகை வைத்து முடித்த பின் அந்த வேலை ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அப்படியென்றால் இந்த வாரம் காஞ்சிபுரம் சென்று வந்த பிறகு, நம் இருவருக்கும் கொஞ்சம் வேலை இருக்கும். அதனால் நீ, அதிதி, வாணியோடு செய்ய வேண்டிய ஷாப்பிங்கை அதன் பிறகு வைத்துக் கொள்.

அவள் சரி எனவும், அவரவர் வேலையைப் பார்த்தனர். மறுநாள் சூர்யா வாணி கல்யாணப் பத்திரிகையும் வந்து விட, மூன்று குடும்பங்களும் ஒன்றாக சென்று இரண்டு கல்யாண பத்திரிகையும் பெசன்ட் நகர் அஷ்டல~;மி கோவிலில் வைத்து வழிபட்டு திரும்பினர்.

அந்த வார ஞாயிறு காலையில், பிரகாஷ் குடும்பத்தார் வந்து விட, இரண்டு பெரிய கார்களை எடுத்துக் கொண்டு, பெரியவர்கள் அனைவரும் டிரைவரோடு ஒரு காரிலும், சிறியவர்கள் எல்லாம் ஆதி வண்டியோட்ட ஒரு காரிலும் காஞ்சிபுரத்திற்கு கிளம்பினர்.

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.