(Reading time: 9 - 18 minutes)

02. ஐந்து - பார்த்தி கண்ணன்

ந்த பரபரப்பான தெருவின் எக்கச்சக்கக் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வேகமாக அவன் நடந்து கொண்டிருந்தான். அவளை எதிர்பார்த்து சுற்றும் முற்றும் அலைந்து திரிந்து கொண்டிருந்தன அவன் விழிகள். இந்நேரத்துக்கு அவள் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.  ஆனால் இன்னும் வரவில்லை.

திடீரென அவன் மணிக்கட்டை யாரோ பின்னாலிருந்து பற்ற, திரும்பினான். அவள் தான். 

“ஸாரி... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு"

ainthu

“இட்ஸ் ஓகே"

வேகமாக நடக்கத் தொடங்கினர் இருவரும்.

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?”

“ம்ம்ஹூம்.. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல அவ ரத்தத்தில ட்ரக் சாம்பிள் இருந்ததால,போலிஸ் இத பெருசா சந்தேகப்படல. அதுவும் இல்லாம, அவளோட அப்பா ரிட்டயர்ட் கமிஷ்னர். பொண்ணு போதைல செத்துப் போயிட்டான்னு வெளில தெரியக்கூடாதுன்னு பெருசா கேஸ் எதுவும் ஆகமா முடிச்சுட்டார். We are lucky this time”

“ஹ்ம்ம்..அப்போ அடுத்து யாரு? எப்போ?”

தன்மேல் இடித்தவர் ஸாரி சொல்ல, அவரை இட்ஸ் ஓகே சொல்லி புன்னகைத்து விலகிக்கொண்டான்.

“நெக்ஸ்ட் யாருனு இன்னும் முடிவு பண்ணல.  சரியானtime and situation  அமையனும். நான்  சொல்றேன். வெய்ட் பண்ணு"

“ஹ்ம்ம்"

“அப்புறம் இனிமேல் நம்ம வேலை ரொம்ப கஷ்டமா இருக்கப்போகுது. அஞ்சு பேர்ல ஒருத்தர்னா சந்தேகம் வராது. ரெண்டாவது ஆள் சாகும் போது யோசிப்பாங்க. மூணாவது ஆள்னு வரும்போது confirm பண்ணிடுவாங்க. உஷாராயிடுவாங்க. அதுக்கப்புறம் பாதுகாப்புக்கு போலிஸ்கிட்ட கூட போக வாய்ப்பிருக்கு. “

“ஹ்ம்ம். அப்புறம் நிச்சயமா எதனால இதெல்லாம் நடக்குதுன்னு guess பண்ணிடுவாங்க.  ஸோ உயிருக்கு பயந்து, ஜெயிலுக்குப் போனாலும் பரவாலேன்னு பாதுகாப்புக்கு போலிஸ் கிட்ட கூட உண்மைய சொல்லி சரண்டர் ஆக வாய்ப்பிருக்கு. அது நடக்கக் கூடாது.”

“Yes. நானும் அப்படி தான் யோசிச்சேன். இன்னிலேர்ந்து அவங்களுக்கு நாம கொடுக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அவங்களுக்கு உயிர் பிழைக்க நாம தர்ற வாய்ப்பா மாறிடும். ஸோ இனி நாம கொஞ்சம் வேகமா வொர்க் பண்ணனும் ”

“ஹ்ம்ம்"

“ நாம இத ஹண்ட்ரட் பர்சென்ட் புத்திசாலித்தனமா பண்றோம்னு சொல்ல முடியாது. ஏதாவது சின்ன தப்பு நம்ம அறியாமையே பண்ணுவோம். மாட்டிக்க chance  அதிகமா இருக்கு. முடிஞ்ச அளவுக்கு பர்பெக்டா செய்வோம். அஞ்சு பேரும் முடிய வரைக்கும்"

“ரைட்"

அந்தத் தெருவின் முனையை அடைந்திருந்தார்கள். 

“சரி,நீ கெளம்பு. ரோட் க்ராஸ் பண்ணி லெப்ட்ல போனா அங்க ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு. எல்லாம் செட் ஆனதும் கால் பண்றேன்."

“ஓகே. பை", சொல்லிவிட்டு சாலையைக் கடந்தாள்.  பின்னர் இடது பக்கம் திரும்பி கூட்டத்தில் கலந்து மறைந்து போனாள்.

செல்போனில் யாருடனோ பேசுவதைப்போல் பாவனை செய்தபடியே, தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டம் விட்டான். யாருமில்லை என உறுதியான பின், போனை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு வந்த வழியே திரும்பி நடக்கத் துவங்கினான்.

லேசான இருள் அந்த மாலை நேர வானில் படரத் தொடங்கியிருந்தது.

அந்தப் பாக்கெட்ட்டிலிருந்த கடைசி சாக்லேட்டை அவர்களது விரல்கள் பிடித்திருந்தன.

“சரி,,நீயே எடுத்துக்கோ" என்றாள் அஞ்சலி.

“இல்ல பரவால,,நீயே எடுத்துக்கோ" என்றான் அரவிந்த்.

“நோ நோ.. இத உனக்கு தானே எடுத்துட்டு வந்தேன். ஸோ, உனக்கு தான்" என்றாள்.

“உன் இஷ்டம்" , அந்த கடைசித் துண்டு சாக்லேட்டை வாயில் போட்டுக்கொண்டான்.  அந்தக் கவரை கீழே எறிந்துவிட்டு, கைகளைத் துடைத்துக்கொண்டான்.

“உங்க குடும்பம் பொழைக்கத் தெரியாத குடும்பம்.. எங்கயோ இருக்க வேண்டியவங்க..” என்றான் அரவிந்த்.

“என்ன? எப்படி சொல்ற?” ஆச்சரியத்துடன் கேட்டாள் அஞ்சலி.

“உங்க அம்மா இவ்ளோ டேஸ்டா சாக்லேட் செய்வாங்கன்னு எனக்கே இன்னிக்கு தான் தெரியுது. நீங்க மட்டும் ஒரு சாக்லேட் பேக்டரி ஸ்டார்ட் பண்ணிருந்திங்க,எங்கயோ போயிருப்பிங்க,, செம டேஸ்ட்" 

“அதுவா..ஆமா..எங்கம்மா இது மட்டும் இல்ல,எல்லாமே சூப்பரா சமைப்பாங்க"

“ஹ்ம்ம்..பாப்போம்..அதெல்லாம் சாப்பிட கொடுத்து வச்சிருக்கானு"

“ஹ்ம்ம்..சரி..கெளம்பலாம்.. தேடுவாங்க என்ன... “

அவள் சொல்லிமுடிக்கவும் அவளது போன் ஒலித்தது. ஹேண்ட்பேக்கிலிருந்து எடுத்தாள்.

“ஷ்ஷ்ஷ்.. அம்மா" ,என்றாள் இவனை பார்த்து வாய் மீது ஒரு விரல் வைத்தபடியே.

“அம்மா"

“ம்ம்ம்..வாங்கிட்டேன்..”

“ம்ம்ம்..இன்னும் ஒன் அவர்"

“சரிம்மா சரி..வர்றேன் சீக்கிரமா"

கட் செய்தாள். 

“போலாமா? நேரா சூப்பர் மார்க்கெட் போய் ஷாப் பண்ணனும்.  அப்படி சொல்லிட்டுத் தான் வந்திருக்கேன்.”

“அப்டியா? இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே இருக்கலாம் போல..ம்ம்ம்ம்..சரி ..let's go.” , என்று சொல்லி எழுந்தான்.

அவளும் எழுந்தாள்.

கைகோர்த்த படியே நடந்து சென்றனர்.

சாராவின் இறுதிச்சடங்கு முடிந்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தன. நால்வரும் கொஞ்சம் அந்த அதிர்ச்சியிலிருந்து தேர்ந்திருந்தனர். ஜேம்ஸின் வீட்டில் அந்த சந்திப்பு நடந்தது.

“இன்னொரு ரவுண்ட் போலாமே,,ப்ளீஸ்,,” கெஞ்சினான் வினோத்.

“போதும் டா.. இவ்ளோ அடிச்சிட்டு அப்புறம் எப்படி வீட்டுக்கு போய் சேரப்போற?” என கேட்டான் ஜேம்ஸ்.

“No problem dude. இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் என் பிரெண்ட். யாரும் என்ன எதுவும் கேக்க முடியாது. நீ ஊத்து..இன்னும் கொஞ்சம்.” என்று கிளாசை நீட்டினான்.

“என்னமோ பண்ணித் தொலை" என்று சலித்துக்கொண்டே அவன் கிளாசை நிரப்பினான் வினோத்.

நித்யா கோக் பாட்டிலை திறந்து அவன் கிளாஸில் கொஞ்சம் ஊற்றிவிட்டு , மீதியை குடிக்கத் தொடங்கினாள்.

“நித்யா..எவ்ளோ நாள் தான் இன்னும் பெப்சி, கோக்னு கொழந்தைங்க மாதிரி. Try it, no? Come on. பீர்லேர்ந்து ஸ்டார்ட் பண்ணேன்..ம்ம்ம்?” என்றான் ஜேம்ஸ்.

“சீ..போடா..எனக்குன்னு சில பாலிசி இருக்கு. அத நான் மீற மாட்டேன்" என்றாள்.

“நல்ல பாலிசி போ.. சாரா இருந்திருந்தா இந்நேரம் பிளாட் ஆகுற அளவுக்கு குடிச்சிருப்பா..நீயும் தான் இருக்கியே..” என்று போதையில் உளறியபடியே கீழே விழுந்தான் வினோத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.