(Reading time: 9 - 18 minutes)

சாராவின் பெயரை அவன் சொன்னதுமே சட்டென்று ஒரு சோகம் பற்றிக்கொண்டது. போன மாதம் இதே நாளில் ஐந்து பேரும் இதே போலத் தான் குடித்து கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். இன்று அவள் இல்லை. இப்பொழுது அவள் பேரைக் கேட்டதும் அந்த அறை முழுவதும் அவள் இருப்பதைப் போல் தோன்றியது. மௌனம் நிலவியது.

“ஹேய் ..சியர் அப்.. நடந்தத மறக்க தான் இந்த பார்ட்டியே நான் அரேஞ்ச் பண்ணினேன். திரும்பவும் அப்செட் ஆகாதிங்க. கமான்,,ட்ரிங்க்"  என்றான் முகுந்த் நித்யாவின் தோளைத் தட்டியபடி.

சில நிமிடங்கள் கழிந்தன.

“முகுந்த். நான் சொன்னேனே,,சாரா கடைசியா போன்ல அவங்க ரெண்டு பேரையும் பாத்ததா சொன்னாளே..அது உண்மையா இருக்காதா?”

“ப்ச். அதெல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் மன பிரம்மை. நீ சொல்றத பார்த்தா அவங்க பேயா வந்து பழி வாங்குறாங்கனு சொல்லுவ போல..நான் சென்ஸ். அத மறந்திடு" என்றான் முகுந்த்.

“ம்ம்ம்" என்று சொன்னாளே தவிர, அவள் மனது முழுவதாய் ஏற்கவில்லை.

அரைமணி நேரம் கழிந்தது. அனைவரும் தத்தம் வீட்டிற்கு புறப்பட்டனர். நித்யாவும் முகுந்தும் ஒரு காரில் கிளம்ப, வினோத் தன் பைக்கில் புறப்பட்டான்.

"குட் நைட் நித்யா,முகுந்த்..பாத்துப்போடா வினோத். போலீஸ்ல மாட்டிக்காத..அப்டியே மாட்டினாலும் எனக்கு போன் பண்ணி தொல்ல பண்ணாத,,ஜெயிலுக்கே போயிடு"என்று சிரித்துக்கொண்டே மூவரையும் வழியனுப்பினான் ஜேம்ஸ்.

“நோ ப்ராப்ளம் ஜேம்ஸ். இன்ஸ்பெக்டர் இஸ் மை அங்கிள் ஒன்லி. டாட்டா கய்ஸ்" என்று உளறியபடியே பைக்கைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான் வினோத்.

நித்யாவும்,முகுந்த்தும் கிளம்பியதும்,அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி கதவைப் பூட்ட, ஜேம்ஸ் தனது  பிளாட்டிற்கு திரும்பினான்.

நித்யா காரை நிதானமாக ஓட்டிச்சென்று கொண்டிருந்தாள். அருகில் முகுந்த்.

“நீ ட்ரைவிங் கத்துக்கிட்டது உன்னவிட எனக்கு தான் யூஸ்புல்லா இருக்கு"

அவள் மெலிதாய்ப் புன்னகைத்து விட்டு சாலையில் கவனத்தைத் தொடர்ந்தாள். நள்ளிரவை நெருங்கியிருந்ததால் அவ்வளவு போக்குவரத்து இல்லை சாலையில்.

“நித்யா"

“ம்ம்ம்?”

“ஐ லவ் யூ..”

“வாட்? ஐ லவ் யூவா?” கொஞ்சம் அதிர்ச்சி,ஆச்சர்யம் மற்றும் குழப்பத்துடன் கேட்டாள் அவனைப் பார்த்து.

“ஆமா,,ஐ லவ் யூ. நிஜமாவே. கொஞ்ச நாளா அப்படி தோணுது. இப்போ சொல்லனும்னு தோனுச்சு. சொல்லிட்டேன்.”

“இன்னிக்கு ஓவரா குடிச்சிட்ட நீ"

“உனக்கே தெரியுமே. நான் குடிச்சாலும் குடிக்கலனாலும் சீரியசான விஷயத்துல சீரியசாத்தான் இருப்பேன். இப்போ ஐ எம் ரியலி சீரியஸ்" என்று சொல்லி இன்னும் வசதியாக பின்னல் சரிந்து கொண்டு இவள் முகத்தை பார்த்து சிரித்தான்.

“நாளைக்கு பேசலாமா?”

“Yeah! No hurry! Tomorrow is so fine” என்று சொன்னவன் அப்படியே கண்ணயர்ந்து போனான்.

அவர்களுக்கு எதிர் திசையில் வினோத் மைக்கில் படுவேகமாக பறந்து கொண்டிருந்தான்.

இன்னும் பத்து நிமிடங்களில் அவன் வீடு வந்துவிடும். தன் மாமா வீட்டில் தங்கியிருக்கிறான்.

சாலையில் எந்த வாகனமும் இல்லை. இயர்போனில் முழு வால்யூமில் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது.

நீண்ட நெடிய அந்த சாலையில் தூரத்தில் ஒரு கார் திடீரென தோன்றியது. இவனுக்கெதிராக வேகமாக வந்துகொண்டிருந்தது. அதில் முன்விளக்கு எரியவில்லை. ட்ரைவர் சீட்டுக்கு மேல் மட்டும் ஒரு ஒளி.வெண்ணிற ஒளி.

ஒரு சில நூறடிகள் அருகில் வந்ததும் , அதை கவனித்தான். ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அமர்ந்திருந்தனர். இப்போது போதை தலைக்கேறி தள்ளாடுவது போல் ஒரு உணர்வு ஏற்பட,வண்டியின் வேகத்தைக் குறைத்தான். ஐம்பது அடி தூர இடைவெளியில் அந்தக் கார் இவனை நெருங்கிக்கொண்டிருந்தது.

வண்டியை நிறுத்திவிட்டான். அப்படியே சைட் ஸ்டாண்ட் போட்டுவிட்டு டேன்க் மீதே சரிந்துவிட்டான்.

கார் மிக அருகில் நெருங்கியது. அதன் ஹார்ன் எழுப்பிய அதிக சத்தம், இவனை எழுப்ப,லேசாய் தலை தூக்கிப் பார்த்தான். முப்பதடி தொலைவில் சீறிக்கொண்டு நெருங்கியது. பளிச்சென அதன் முன்விளக்குகள் இரண்டும் ஒளிர்ந்ததன. கண் கூசியது.

சட்டென அந்த ட்ரைவர் ஸ்டியரிங் வீளை வலது பக்கம் திருப்பினான். கார் இவனை வினோத்தை நோக்கித் திரும்பியது.

“ஹேய்,,ஹேய்..நான்.இங்க..” எனக் கத்தினான் வினோத்.

அடுத்த நொடி பைக்கோடு சேர்ந்து  இருபதடி பின்னால் பறந்து சென்று நடு சாலையில் விழுந்தான். முகம்,கை,கால் என சதை கிழிந்து ரத்தம் பீறிட்டது. தலையின் பின்பகுதியில் சாலையில் கிடந்த கற்கள் குத்தி பிளந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கினான். கார் இவனை கடந்து சென்றிருந்தது.

சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமாகப் பிறழத் தொடங்கியது. அப்போது அந்த கார் கொஞ்ச தூரத்தில் திரும்புவதைக் கண்டான். இதயத்துடிப்பு உச்சத்திற்கு சென்றது. திரும்பிய கார் முன்பை விட படுவேகமாய் இவனை நோக்கி வருவதை உணர்ந்தான். காப்பாத்துங்க என கத்த குரலேடுத்தான். குரல் வரவில்லை. மிக அருகில் வந்துவிட்டது. அப்போது அந்த இருவரையும் பார்க்க முடிந்தது. பார்த்ததும் உறைந்து போனான்.  நன்கு தெரிந்த முகங்கள்.

“அர்ஜுன்,அஞ்சலி..” பெயர்களை நினைவுக்குக் கொண்டுவரும் முன்பே காரின் முன்சக்கரங்கள் இவன் மேல் ஏறின. இவன் கழுத்தெலும்பும், முதுகெலும்பும் உடையும் ஒலி கேட்டது. அதன் வலி மூளையை எட்டும் முன்னரே அவன் உயிர் அமைதியாய்ப் பிரிந்தது. அவனது திறந்த கண்களில் அந்த காரின் பின்பக்க விளக்கின் ஒளி பட்டு பிரகாசித்தது. சில நொடிகளில் அந்தக் கார் தூரத்தில் ஒரு புள்ளியாய் சென்று மறைந்தது.

Episode # 01

Episode # 03

தொடரும்

{kunena_discuss:911}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.