(Reading time: 6 - 12 minutes)

03. ஐந்து - பார்த்தி கண்ணன்

ந்த மலைப்பாதையின் நடுவே ஸ்கூட்டி மெதுவாய் ஊரிச்சென்று கொண்டிருந்தது. சைட்மிரரில்  அரவிந்தின் முகத்தைப் பார்த்தாள் அஞ்சலி. புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன சிரிப்பு?ம்ம்ம்?”

“பசங்க பொண்ணுங்கள உக்கார வச்சு வண்டி ஓட்டுறது ஒரு மேட்டரே இல்ல தெரியுமா? ஒரு பொண்ணு  ஓட்டும்போது,பின்னாடி உக்காந்து,இப்படி கட்டிபிடிச்சிட்டு போறது தான்  ரொமாண்டிக்கா இருக்கு”,என்று அவள் தோள் மேல் சாய்ந்து, அவள் கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டான்.

ainthu

“அப்படியா? எனகென்னவோ உன் பின்னாடி உக்காந்து போறது தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் ஓப்பன் ரோட்ல ஸ்பீடா போகும்போது வாவ்.செம் பீல்..”

“இந்த வாரம் போலாமா எங்கயாவது? ஒரு லாங் பைக் ட்ரிப்?”

“இந்த வாரமா? கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கிறேன். நெக்ஸ்ட் வீக் ரெண்டு ப்ராஜெக்ட் டெலிவரி இருக்கு. ஸோ இந்த வீக்கென்ட் கூட எங்க டீம்க்கு லீவ் கிடைக்காதுனு நினைக்கிறேன்"

அந்த வளைவில் வண்டியை மெதுவாய்த் திருப்பிக் கடந்தாள்.

“நல்ல டீம் போ. வாரம் பூரா வேலை செய்யாம வெட்டியா டைம் பாஸ் பண்ணிட்டு, வீகென்ட்ல வேலை செஞ்சுக்கிட்டு..”

“ஹேய் போ..எங்களுக்கு தானே தெரியும் கஷ்டம். கஷ்டமான ப்ராஜெக்ட் எல்லாத்தையும் செலக்ட் பண்ணி எங்களுக்குத் தள்ளி விட்றாங்க. HRல உனக்கு பிரெண்ட்ஸ் இருக்காங்க தானே? அவங்க கிட்ட பேசி உன்னோட டீம்க்கு என்ன மாத்தி விடுப்பா..ப்ளீஸ்..” செல்லாமாய் கெஞ்சினாள்.

அய்யோ..அதெல்லாம் முடியாது. நாம ஒரே டீம்ல இருந்தோம்னா அவ்ளோ தான். எல்லாமே நாசமா போயிடும். வேலையே நடக்காது. நீ அங்கேயே இரு"

“ஹேய் இல்ல,,அதெல்லாம் ஒண்ணுமில்ல. நாம கண்ட்ரோலா இருக்கலாம்"

“நம்ம? கண்ட்ரோலா? சிரிப்பு தான் வருது. பழசெல்லாம் மறந்துட்ட போல. நா வேணும்னா ரெண்டு மூணு விஷயத்த ஞாபகப்படுத்தட்டுமா?” என்று சொல்லி கிண்டலாக சிரித்தான்.

“அய்யே..தேவையே இல்ல. பேசமா வா"

அப்படியே சில மைல் தூரத்தைக் கடந்தனர். அப்பொழுது திடீரென கத்தினான் அரவிந்த்.

“ஹேய்..அஞ்சலி.நிறுத்து நிறுத்து..ஸ்டாப்..”

கிரீச்சென சத்தத்துடன் தடுமாறி நின்றது வண்டி.

“என்னாச்சுடா?” அதிர்ச்சியுடன் கேட்டாள் அஞ்சலி.

அவன் பார்வை வேறு திசையில் நிலைகொண்டிருந்தது.

“அங்க பார்" என்று கை நீட்டினான் அங்கேயே பார்த்தபடியே.

அவன் கை காட்டிய திசையில் திரும்பினாள். அப்படியே வாயடைத்துப்போய்விட்டாள்.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

நித்யா அழுதுகொண்டிருந்தாள். அவள் அருகில் முகுந்த், எதிரில் ஜேம்ஸ். இருவரின் முகத்திலும் கவலை கலந்த பயம் பற்றிக்கொண்டிருந்தது. வினோத் இறந்து ஒரு வாரத்திற்குப்பின் அவர்கள் மூவரும் சந்தித்துக்கொண்டனர்.

“இப்ப என்ன சொல்லப்போறிங்க? இதுவும் coincidence தானா? நான் தான் அப்போவே சொன்னேனே. சாரா சொன்ன மாதிரி அவங்க ரெண்டு பேரும் தான் இதெல்லாம் பண்றாங்க. அவங்க இன்னும் பேயா நம்மள சுத்தி வராங்க",அழுதபடியே சொன்னாள்.

“முட்டாள் மாதிரி பேசாத நித்யா. எந்த காலத்துல இருக்கோம் நாம? சும்மா பைத்தியம் மாதிரி பேய் பிசாசுனு உளறிக்கிட்டு" என்றான் முகுந்த்.

“ஆமா நித்யா. உனக்கே தெரியும் அன்னைக்கு எவ்ளோ போதைல அவன்  கெளம்பினான்னு. அவன் போற ஸ்பீடுக்கு இந்த ஆக்ஸிடென்ட் நடந்தது ஒன்னும் ஆச்சர்யம் இல்ல”

“நீங்க நம்ப மாட்டிங்க. அடுத்து நம்ம மூணு பேர்ல அடுத்து யாருக்காவது ஏதாவது ஆகும். அப்புறம் புரிஞ்சுப்பிங்க. சொன்னா கேளுங்க. நாம எதாவது பண்ணனும். இல்லேன அந்த அர்ஜுனும் அஞ்சலியும் நம்ம மூணு பேரையும் விட மாட்டாங்க"

“ஜஸ்ட் ஷட் அப் நித்யா. ஸோ ஸ்டுபிட்" எழுந்து வெளியே சென்றான் முகுந்த்.

ஜேம்ஸ் அவளருகில் வந்து உட்கார்ந்தான்.

“பாரு நித்யா. கொஞ்சம் பொறுமையா கேளு. இது ரொம்ப சாதாரணமா புரிஞ்சுக்கக் கூடிய விஷயம். ரெண்டு பேரும் சாகும் போது நிதானமே இல்லாத அளவுக்கு போதைல இருந்தாங்க. அதுல நடந்த ஆக்சிடெண்ட்ல இப்படி ஆயிடுச்சு. அவ்ளோ தான். பேய் எல்லாம் இல்ல. அந்த அருணும் அஞ்சலியும் செத்து போயிட்டாங்க. அதுல இருந்து நம்ம எல்லாரும் மாட்டிக்காம தப்பிச்சுட்டோம். இதையும் அதையும் சேர்த்து பார்க்குறதுல எந்த அர்த்தமும் இல்ல"

சிகரெட்டை புகைத்த படியே உள்ளே வந்தான் முகுந்த்.

“அண்ட் உனக்கு நம்பிக்கை வர்றதுக்காக இன்னொரு விஷயம் பண்றோம். இன்னிலேர்ந்து நோ ட்ரிங்க்ஸ்,நோ ட்ரக்ஸ். போதைல இருந்ததால நடந்த சாவு தான் இந்த ரெண்டும்னு உனக்கு நிரூபிக்கப் போறோம். நீ வேணாப் பாரு.இனிமேல் பாரு.எதுவும் நடக்காது",என்று சொல்லியபடியே சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தி அணைத்தான் முகுந்த்.

சிகரெட் லைட்டரால் மெழுகுவர்த்தியை கொளுத்தினான். டேபிள் இன்னும் வெளிச்சம் பெற்றது.

நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அந்த சாலயோர ட்ரைவ்-இன் உணவகத்தில், கேன்டில் லைட் டின்னர் புக்  செய்திருந்தனர். அவர்களுக்கென தனியே ஒரு குடில் அறை ஒதுக்கப்பட்டு,மெழுகுவர்த்திகளால் ஒளியேற்றப்பட்டிருந்தது. அந்த தனிமை இவர்களுக்கு பிடித்திருந்தது. டேபிளில் அவர்கள் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

“ஸார் ..ஆர்டர் ப்ளீஸ்",வெய்ட்டர் வந்து நின்றான் செயற்கைப் புன்னகையுடன்.

மெனுவில் இருந்த ஏதோ இரண்டை ஆர்டர் செய்து அவனை அனுப்பிவிட்டு அவளைப் பார்த்தான்.

“அடுத்து முகுந்த். தனியா தான் தங்கியிருக்கான். ஸோ அவன் தான் ஈஸி டார்கெட்" என்றான்.

“சரி. எப்போனு சொல்லு"

“கொஞ்சம் டைம் எடுத்துப்போம். வினோத் செத்ததால இப்போ அவங்களுக்கு சந்தேகமும்,பயமும் அதிகமாயிருக்கும். அதனால நாம கொஞ்சம் பொறுமையா இருப்போம். ரெண்டு சாவும் ஜஸ்ட் ஒரு Coincidenceனு அவங்க நம்பட்டும்"

“ஒருவேளை சந்தேகம் வந்து,விசாரிக்கத் தொடங்கியிருப்பாங்களோ?”

“வாய்ப்பேயில்ல. ஒன்னு, அவங்க இந்த விஷயத்தில மாட்டிக்காம தப்பிச்சதே பெரிய விஷயம்னு இருக்காங்க. ஸோ அவங்க இத மறுபடியும் தோண்டி எடுத்து, தானா மறுபடியும் மாட்டிக்கமாட்டாங்க. அதையும் மீறி விசாரிக்க ஆரம்பிச்சாலும்,அவங்களுக்கு எந்த விபரமும் தெரியாது. அஞ்சலிங்குற பேர் மட்டும் தான் தெரியும். அரவிந்த்ங்குற உண்மையான பேர்  அவங்களுக்கு தெரியாது. என்னோட கணிப்புப்படி அவங்க நியூஸ்பேப்பர்ல தான் எல்லா விபரமும் படிச்சுத் தெரிஞ்சிருப்பாங்க. அப்படி பாத்தா, அந்த சம்பவம் நடந்ததுக்கு மறுநாள் ரெண்டு பேப்பர்ல தான் இந்த நியூஸ் வந்திருக்கு. அதுவும் சின்னதா ஒரு மூலைல. ஒரு பேப்பர்ல அர்ஜுன்,அஞ்சலினு பிரிண்ட் ஆகியிருக்கு. இன்னொண்ணுல அருண்,அஞ்சலி. ஸோ இது நமக்கு ஒரு பெரிய அட்வான்டேஜ்.”

“சரி" அவள் தலையசைத்தாள்.

“உனக்கு ஒன்னும் பயமில்லையே? நான் உன்ன கட்டாயப்படுத்தல. நீ தாராளமா எப்போ வேணாலும் விலகிக்கலாம்" என்றான்.

“தயவுசெஞ்சு இன்னொரு தடவ இப்படி சொல்லாத. என் உயிரே போனாலும் அவங்க அஞ்சு பேரும் சாக வரைக்கும் இதுல உறுதியா இருப்பேன். எனக்கு இருக்கிற ஒரே பயம்,இந்த காரியம் முழுசா முடியறதுக்குள்ள நாம மாட்டிக்குவோமோனு தான்"

“ஹ்ம்ம்..”

“சரி. என்ன ப்ளேன் வச்சிருக்க?”

“சொல்றேன்".

சில நிமிடங்கள் கழித்து அந்த வெய்ட்டர் அவர்களின் ஆர்டரைக் கொண்டு வந்த பொழுது அந்த மேசை காலியாக இருந்தது. மெனு புக்கில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்துச் சென்றிருந்தார்கள். அதன் ஒரு பாதி காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது.

Episode # 02

Episode # 04

{kunena_discuss:911}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.