(Reading time: 12 - 24 minutes)

02. கல்யாணம் முதல் காதல் வரை - சஹானி 

வன் என் கடைசி  தம்பி  மனோ ,

இவ அவன் பொண்டாட்டி அமிர்தம் ,பேர போல குணம். 

ரெண்டு பசங்க மூத்தவனுக்கு தான் இப்போ இனம் பேசறோம் சின்னவன் வேலைல நல்ல முன்னுக்கு வந்தப்றம்தான் கல்யாணம்னு சொல்லிட்டான் ... என்று அவர் பேசிக்கொண்டே போக  இருக்கையில் இருந்து எழுந்த அமிர்தம்  மேகலாவிடம் ,

Kalyanam muthal kathal varai

சரசு சொன்னா நீங்க ரெண்டு பெரும் பால்ய சிநேகிதமாமே , அவ உங்க பொண்ண பத்தி சொன்னத வச்சு எங்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சி போச்சு நீங்க என்ன சொல்றிங்க ,

அத்தை தி கிரேட்  . கரக்ட்டா கேக்க வேண்டிய  இடத்துல கேட்டுடாங்க...என்று   சந்தியாவின் காதில் முனுமுனுத்தாள் திவ்யா .

எங்களுக்கும் உங்க மேல நல்ல அபிப்ராயம் தாங்க இருந்தாலும் பொண்ணு இப்போ தான் படிப்ப முடிச்சிருக்கா அதான் அவங்க அப்பா கொஞ்சம் தயங்குறாங்க அதோட இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் னா என்ன பண்றதுன்னு தெரில அதான்..... என்று இழுக்கவும்

(என்ன ஒரு  வாரத்துலயா)

அதுகென்னங்க ,  கல்யாணத்துக்கு அப்புறம் கூட வேலைக்கு போகலாம் எங்க சைடுல ஒன்னும் பிரச்சன இல்ல ... 

எனக்கு  ரெண்டு பசங்க, மூத்தவன் பாரின்  போய் வேல கன்பாம் ஆனதும் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சப்ப சின்னவன் இப்போ தான் பாரின் போனான்  அவனுக்கு இப்போ வேலை கன்பாம் ஆகுற ஸ்டேஜ் இப்போ போனா திரும்ப ரெண்டு இல்ல நாலு வருஷம் கழிச்சு தான் வர சான்ஸ் கிடைக்கும் . ரெண்டு பேருக்கும் ஒன்னா எடுக்கலாம் னா சரோ இப்போ வேண்டாம்னு சொல்றான்  சந்திரனுக்கு வயசு ஏறிட்டே போது , ரெண்டு பேரும் ஊர்ல இருக்குறதோட  இவனுக்காச்சும் கல்யாணம் பண்ணிடலாம் னு  தான் .. உங்கள இப்படி இக்கட்டுல மாட்டி விட்றோமேனு எங்களுக்கும் வருத்தம் தான் ஆனா என்ன பண்றது வர ஞாயிறு  போய் அடுத்த ஞாயிருநல்ல நாள் அதோட மறு நாள் திங்கள் சரோ பொறப்புடுற நாள்  என்ன செய்றதுன்னு தெரில என்று சொல்லும் போதே அந்த தாயின் கண்களில் நீர் சேர தொடங்கியது .

அவரின் தோளில் சமாதான படுத்தும்  விதமாக அவரின் கணவர்  மனோவும் கை வைக்க அதன் பிறகே அவர் ஓரளவு சமாதானம் அடைந்தார்.

இத   பாருமா  , புதன் கிழமை அதுமா பொட்ட புள்ள இப்டி கண்ண கசக்க கூடாது - பாட்டி ( அப்போ சனி கிழமை ஓகே வா பாட்டி )

கண்ண தொடச்சிக்கோ இப்போ என் பிள்ள வர நேரம் தான் அவன் வந்ததும் எல்லாரும் பேசி ஒரு முடிவெடுப்போம் .

அதன் பின் நேரம் கரைய  சந்தியாவின் அப்பா நாகு வீட்டினுள் நுழைந்தார் . முகம் தெரியா நபர்களை கண்டவர் பொதுவாக அவர்களை வரவேற்று பின் மனைவியிடம் கண்களால் வினவினார் . அவரும் சைகையாலே எதோ கூற  மீண்டும் சுந்தரியே பழைய பல்லவியை பாடினார். ( அத மறுபடியும் எழுதுனா என் கை இல்ல விரல் தான் வலிக்கும் அதான் இந்த இரத்தின சுருக்கம்)

அவரின் அந்த உறவு முறை பாலத்தை கேட்டவருக்கோ கழுத்திலிருந்து  தலை  

க்ழண்டு தன் கையில் விழுவது போல் ஒரு பிரமை சட்டென்று தன் தலையை குலுக்கி சோதனை செய்து கொண்டார். அவசரமாக....

ஆவரின் செய்கையை கண்ட மகள்களோ வாஇ மூடி சிரித்தனர் .

கொஞ்சம் இருங்க முகம் கழுவிட்டு வந்துடறேன் என்று அவர் தன் அறையை நோக்கி விரைந்தார். அவர் சென்ற சிறிது நேரத்தில் மேகலாவும் எதோ வேலை  போல அங்கு  வந்து சேர அவர்களின் நயன லீலைகளை கண்டும் காணாது ரஞ்சிதம் மௌனமாய் சிரித்தார்.

என்ன அம்மு , என்ன இதெல்லாம் ? 

என்னங்க என் ப்ர்ண்ட் கூட சொன்னாளே நல்ல இடம்னு இப்போ இவங்கள்ட பேசுனத வச்சி இவங்க குணம் எப்படின்னு ஓரளவுக்கு ஊகிக்க முடிது . நம்ம பொண்ணுக்கு இது போல ஒரு இடம் அமைஞ்சா நல்ல இருக்கும் நீங்க என்ன சொல்றிங்க

ம்ம்ம் , நான் கூட இத பத்தி பேசணும்னு தான் இருந்தேன்  நீ சொன்னதுலே இருந்து வெளிய விசாரிச்சிட்டு தான் இருந்தேன் எல்லாம் நல்ல பதிலா தான் வருது . சரி இத பத்தி மேல பேசலாம்னு  வீட்டுக்கு வந்தா இங்க நிச்சயமே முடிஞ்சிடும் போல எனக்கு தெரியாம ..

என்னங்க , இப்டி சொல்லிடிங்க  என்றவர் குரல் வேணா அழுதுடுவேன் என்பது போல்  இருக்க

அவரின் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்தார்  . உன்ன கல்யாணம் பண்ணி கூட்டி வந்த நாள்ல இருந்து இன்ன வரை நீ மாறவே இல்ல..

உன்ன போலவே உன் பிள்ளையையும் வளர்த்து வச்சிருக்க .

நாளைக்கு இந்த மாப்பிள்ளையும் என்ன போல  ரொம்பவே கஷ்ட படனும் போல .

ஆமா, கஷ்ட பட்டுட்டாலும் , அட,

அப்போ நீங்க இந்த எடத்தையே  .....

  அவரும் புன்னகையொடு மேலும் கீழும் தலை அசைத்தார். 

சரி, வா கீழ போய் நம்ம சம்மதத்த சொல்லிடுவோம். 

ம்ம்ம், சரிங்க .. என்று அவர் செல்ல போக அவர் கையை பற்றி தடுத்தவர், 

ஆமாம் , அது யார்டி மாப்பிள்ளைக்கு அத்தை முறை வருமே அவங்க எதோ புரிஞ்சும் புரியாம எதோ சொன்னாங்களே அது என்ன ....

ம்ம்ம் அது என்னனு உங்க அம்மாட்ட தான் கேக்கனும். சரி வாங்க அவங்களுக்கு நல்ல பதில சொல்லிட்டு அது என்னனு அப்புறமா பேசி தீர்த்துபோம்.

அவர்கள் விடை பெற்று சென்ற பின் அந்த வீட்டில் அப்படி ஓர் அமைதி.   தாய் தந்தை ஒரு புறம் எதோ யோசனையில் இருக்க திவ்யாவிற்க்கு தான் அது மிகவும் கஷ்டமாக இருந்தது. 

ச்ச.. ஏன் இப்படி எல்லாரும் ஒரே சோக வயலின் வாசிக்கிராங்க....எனக்கு இது பிடிக்கவே இல்லையே.....( அதானே நீயெல்லாம் லொடலொட கேஸாச்சே....)

வேறு வழி இல்லாமல்,  அவள் தன் தமக்கையை நாடி சென்றாள்.

அங்கு அவளோ, கன்னத்தில் கை ஊன்றி தீவிரமான சிந்தனையில்  இருந்தாள்.

போச்சு.. இவ சும்மாவே அமைதியின் சிகரம்..  இதுல இது வேறயா.... 

சந்து.... அடி, ச.....ந்......தி.... யா...

அவள் போட்ட சத்தத்தில், பச்சிளம் குழந்தையே பதறி இருக்கும்.. சந்தியாவை பற்றி கேக்கவா வேண்டும்.  அலறி அடித்து கொண்டு திவ்யாவை நோக்கினாள். 

ம்ம் அது.. அந்த பயம் இருகட்டும் .ஏன்டீ உனக்கு தேவை இல்லாத வேலை எல்லாம் செய்ற..

என்ன நானா....

பின்ன நானா...

நான் என்னடி பண்ணேன்..

பின்ன மூளை இருக்றவங்க தானே   யோசிக்கனும் நீ ஏன் இதை எல்லாம் பண்ற...

போடி நானே குழப்பத்துல இருக்கேன். நீ வேற கடுப்பேத்திட்டு இருக்க...  

ஏன்? என்ன குழப்பம்.. சந்து இந்த கல்யாணத்துல  விருப்பம் இல்லையா..எதாச்சும்...

ச்ச்சீ ,...போடி அசிங்கமா பேசாதே..

அதானே பார்த்தேன்.. நீயாவது லவ் பண்றதாவது... உனக்கும் அதுக்கும் ஏணி வச்சா கூட எட்டாதே..

ஏன்டி உனக்கு ஒழுங்கா பேசவே வராதா.. பர்ஸ்ட் என்ன பேச விடு..அது எப்படி தான் அடுத்தவங்கள பேசவே விடாம நான் ஸ்டாப்பா பேசிட்டே ..

அதுவா..கடவுள்  பேசுற சக்தியையும் மூளையயும்  உன்ன விட எனக்கு கொஞ்சம்  அதிகமாவே கொடுத்ததுல யார் மேல தப்பு சொல்ல ..( யாரயும் சொல்ல தேவை இல்ல கேக்ற எங்கள தான் சொல்லனும்..) 

இன்னும் வாயை மூடாமல் வளவளக்கும் தன் தங்கையை ,  செய்தால் தேவலாம் என்று யோசிக்க தொடங்கி விட்டாள் மூத்த சகோதரி..

சரி .. சரி..இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நா கப்சிப்.. நீ  சொல்லு நடுல எதுவும் பேசாம கேட்டுக்கிறேன். (சரினு ஒரு வார்த்தைல முடிக்க வேண்டியதையே இவ்வளோ இழுத்து சொல்ற நீயா எதும் பேச மாட்ட ... நம்பமுடியலையே..)

வாயில் கை வைத்து  சிறு குழந்தையை போலமர்ந்து இருக்கும் தன் தங்கையின் நிலையை பார்த்த பின்புதான் தன் யோசனையை கைவிட்டாள்.

அது பெருசா ஒன்னும் இல்லடி, 

ஏதோ கூற வந்த திவ்யா அக்காவின் அனல் பார்வையில் அடங்கிவிட்டாள். ( நான் சொல்லல.)

அந்த சுந்தரிமா , சொன்னத வச்சி பார்த்தா.. எனக்கு என்னமோ இந்த மாப்பிள்ளைக்கு

என்ன விட வயசு கூட இருக்குமோனு தோனுதுடி,

இப்போ பேசலாமா என்று வாயில் தன் கையை வைத்து சைகையால் அவள் கேட்க 

பேசித்தொலைடி... ( சரியான இடத்துல பேசமாட்டாளே)

சந்து... நீ கவனிச்சியானு தெரில .. அந்த மாப்பிளையோட அப்பா செம ஹாண்ட்சமா இருந்தாங்க..

னா என்ன சொல்றேன் .. நீ என்ன பேசுற.. போடி, ( அவ சின்ன பிள்ளைனு அடிக்கடி ப்ரூஃப் பண்றா சந்தியா அக்கா)

னா  ஒன்னும் புரியாம பேசல பொதுவா பசங்க எல்லாரும் அப்பாவ போல.. பொண்ணுங்க அம்மாவ போல அத வச்சி பார்த்தா உன் மாமனாரே இவ்ளோ சின்ன பையன போல இருக்கும் போது, உன் வருங்கால கணவர பத்தி கேட்கவே வேண்டாம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.