(Reading time: 12 - 24 minutes)

ப்படியா, அப்போ நீ மட்டும்  ஏன்டி நம்ம அம்மா போல இல்லாம ஏன் அப்பாவ போலவும் இல்லாம... இப்படி ரெண்டும் கெட்டானா இருக்க.. 

அந்த டவுட் ரொம்ப நாளா எனக்கும் இருக்கு சந்தியா ... என்று அங்கு வந்தார் மேகலை.

என்ன டவுட் மா ... தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் கேட்க ஆசை.. 

சந்து........ பல்லை கடித்தாள் திவ்யா .

அதுவா ,  ஹாஸ்பிட்டல்ல எனக்கு பொரந்த கொழந்தைய யாரும் மாத்தி வச்சிட்டாங்களானு .. எங்க ரெண்டு பேரு போலயும் இல்லாம இவ மட்டும் எப்படி இருக்கானு.... எனக்கும் ரொம்ப நாளாவே சந்தேகமா இருக்கு...

அதுவா குடும்பத்துல எல்லாரும் கிறுக்காவே இருந்தா நல்ல இருக்காதுல்ல... அதான் நா மட்டும் தெளிவா இருக்கேன்... 

ஏன்டி, சந்து உன் குழப்பத்த தீர்த்து வைக்க நா ஒரு புது தியரி கண்டு பிடிச்சி சொன்னா நீ என்னையே கால் வாரி விடுரியா.... இருடி... உனக்கு ... இருக்கு... ஒரு நாள்.... வில்லனை போல் உறுமியவளை கண்ட மேகலையும் சந்தியாவும் வாய் விட்டு சிரிக்க அவளோ, 

இங்க ஒருத்தி வெறப்பா நிக்றேன்... நீங்க ரெண்டு பேரும் சிரிக்கிரிங்களா... 

உன்ன பாத்தா சிரிப்பு போலிஸ் மாறி இருக்கு திவ்யா...- சந்தியா

சிரிப்பு போலிஸா ? என்ன பாத்தா அப்படி சொன்ன ... 

உன்ன குறு குறுனு உத்து பாத்தா ஒரு மணி நேரத்துக்கு விடாம சிரிக்கலாமே ...- மேகலை.

மம்மி யூ டூ.... போங்க நா உங்க யார் கூடயும் பேச மாட்டேன்... உண்ணா விரதம்... 

ஹிஹிஹி....திவ்யா, அது மௌன விரதம்டி அது கூட தெரியாம நீ ... என்ன தான் எக்ஸாம் எழுதுனியோ ஹாஹாஹா..

அய்யையோ, கோவத்துல டங்க் சிலிப் ஆய்டுச்சே...

சரி, சமாளிப்போம். இத பார் சந்து.. நா மௌன விரதம் உண்ணா விரதம் ரெண்டும் தான்... 

ம்ஹ்ம்... நம்பிட்டோம். இருவரும் கோரசாக..

ஹாலில் சோபாவில்  ஆயாசமாக வந்து அமர்ந்த நாகுவை கண்டவர்கள், அவரிடம் சென்றனர்.

என்னங்க, 

ம்ம் சொல்லு அம்மு..

அத்தை... ம்ம் சொல்லுமா...

அது வந்து.. 

என்ன தயக்கம் சொல்லு.. அந்த சுந்தரி பேசுனது தானே.. நானே சொல்லனும்னு நினச்சேன். வா இப்படி உக்கார். 

ஆமா, ம்மா  நா கூட இத பத்தி பேசனும்னு நினச்சேன்.. அவங்க பெசுறத வச்சி பார்த்தா மாப்பிள்ளைக்கும்  நம்ம பொண்ணுக்கும் வயசு வித்யாசம் ரொம்ப இருக்கும் போல 

அட நீ வேற ஏன்டா .. தப்பு தப்பா நினச்சிட்டு... 

ஒரு வயசு வித்யாசமும் இருக்காது மாப்பிள்ளைக்கு 27 ல இருந்து 28 தான் இருக்கும் என் கணிப்பு படி..

ஓஹ்.. சரிமா, அது இப்போ பெரிய விஷயம் இல்ல...ஆனா...

ம்ம்ம், புரியுது.

நாம நம்ம சொந்த கிராமத்த விட்டு இங்க வந்து ரொம்ப வருசம் ஆச்சு...உனக்கு கல்யாணம் ஆன புதுசுல, இங்க வந்தது. சந்தியா பொறந்ததே இங்க தான்னு  நா சொல்ல தேவையே இல்ல.. ஆனா அப்பப்போ நாம நம்ம ஊருக்கு போய்ட்டு தானே இருக்கோம். 

ஆமா, அம்மா அதுக்கும்... 

இல்ல டா கிராமத்தானுக்கு ஒரு குணம் இருக்கு .. அவன் ஊரான் எல்லாரயுமே முறை வச்சி தான் கூப்ப்டுவான். அண்ணா,அக்கா, அண்ணி, மதினி, சித்தப்பா ,பெரியப்பா, அத்தை மாமா 

இப்படி தான் இருக்கும். நம்மோட  ரத்த சொந்தம்னு இல்லாம எல்லாருமே நம்ம உறவு காரங்களாதான் நினைப்போம்.  வெளியாட்கள் யாராவது போற  வீட்டுக்கு வழி தெரியாம நின்னா அவங்கள பத்திரமா அவங்க தேடி வந்த வீட்டுக்கு கூட்டிட்டு போறது தான் நம்ம பழக்கம். இங்க அப்படியா உன் அடுத்த வீட்டுல இருக்குறவனுக்கே உன் பேர் தெரியாது. அது தான் கிராமத்துக்கும் சிட்டிக்கும் உள்ள வித்யாசம்.

டப்டப்டப்டப்.... சூப்பர் பாட்டி, சுருக்கமா  சொல்லனும்னா ''சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா'' அப்படி தானே- திவ்யா 

ம்ம்ம் ஆமா, 

உன் பெரிய தாத்தா... அதான் என் பெரியப்பா  அவங்களும் சுந்தரி அப்பா ரங்கனும் ஒன்னா தொழில் பார்த்தவங்க... ரங்கன் மாமாக்கு ரொம்ப வருசம் கழிச்சி பொறந்தவங்க தான் .. அவங்க பெரிய பையன் கதிரேசன்.

ரங்கன் மாமாக்கு ஒரு ஆசை என் பெரியப்பா கூட நெருங்குன சொந்தமாகனும்னு , அதனால இந்த சுந்தரிய எங்க பெரியண்ணாக்கு கட்டி  கொடுத்தா நல்லா  இருக்கும்னு நினைச்சாங்க..ஆனா எங்க பெரியம்மா அவங்களோட தம்பி மக தான் தன் வீட்டு மருமகனு முடிவா சொல்லவே பெரியப்பாவாலயும் மாமாவாலயும் ஒன்னும் பேச முடியல..

அது  தான் முடிவாகலயே சரி, தம்பி பொண்ண  ரங்கன்  பையன் கதிரேசனுக்கு கொடுப்போம்னு  பெரியப்பா நினைக்க.. கதிர் அண்ணாக்கு அவங்க மாமன் மகளோட திருமணம் முடிவாய்டுச்சு.. சரி ரெண்டு குடும்பத்துக்கும் தொழில் பந்தம் தான் கடைசி வரைனு விதி போல.அதுக்கு அப்புறம் அந்த பேச்சே எடுக்கல அதுக்கு அப்புறம் எனக்கு ம், உன் சின்னம்மாக்கும் கல்யாணம் ஆகி அவங்க அவங்க ஊருக்கு போக நா என் பிறந்த வீட்டு பக்கம் போயே ரொம்ப  நாள் ஆச்சு .. எதாவது திருவிழானா  போறது அதும் உன் அப்பா கையோட கூட்டிட்டு வந்துருவாங்க.

பெரியப்பா இறப்புக்கு ஊருக்கு போனப்ப நீ வயத்துல எட்டாம் மாசம். அப்போ எதைச்சையா ரங்கன் மாமா குடும்பத்த விசாரிச்சப்ப, தொழில்ல நட்டம் ஆகி பெரும் தோல்வி வர முன்ன அவங்க அவங்க பங்க பிரிசிட்டதாவும் அதோட மாமா ஊர விட்டு குடும்பத்தோட பட்டணத்துல  செட்டில் ஆய்ட்டதாவும் கேள்வி பட்டேன். அதுக்கு அப்புறம் . நீ பொறந்தப்றம் எதைச்சையா கதிர் அண்ணாவ ஒரு நாள் பார்த்தப்போ ,  " அப்பா தவறிட்டாங்க கடைசி தம்பிக்கு ஆறு மாசம் . அவன தூக்கி வச்சி கொஞ்சிட்டு நைட் படுத்தவர் தான் காலைல எழுந்திரிக்கவே இல்ல" நு சொல்லி அழுதாங.. 

சொல்லும் போதே பாட்டியின் கண்ங்களில் நீர் முட்ட அருகில் இருந்த சந்தியா தான் அவரை ஆசுவாச படுத்தினாள்.

என்ன சொல்லி அவரை சமாதான படுத்துவது என்று அ,ங்குள்ள யாருகும்  தெரியாததால் அமைதியாகவே சென்றது சில நிமிடங்கள்

சிறிது நேரத்தில் தன்னிலைக்கு வந்த பாட்டி, சந்தியாவிடம்

இதோ பார் சந்தியா உன் மாமனாருக்கும் என் மகன் வயசு தான் ஆகும் .அதோட அவன நீ உனக்கு இன்னொரு அப்பாவாவும் அத்தைய ஒரு நல்ல அம்மாவாவும் தான் பார்க்கனும் இது இந்த பாட்டி சொல்றது .சரியாமா.

ம்ம்ம் சரி பாட்டி, என்றவளின் தலையை அன்பாய் வருடி கொடுத்தார். 

டெய், நாகு அந்த தம்பி போகும் போது உன் கிட்ட மாப்பிள்ளை போட்டோ கொடுத்துச்சே அத எல்லார்ட்டயும் காட்டு.. 

அப்பா பையன் போட்டோவ வைச்சிகிட்டே தான் இவ்லோ நேரமும் கதை கேட்டிங்களா வொய் பா வொய்..

பர்ஸ்ட் நீங்க இத தானே சபைல சொல்லிருக்கனும் . 

மேகலை.. என்ன புருஷன வளர்த்து வச்சிருக்க நீ கூறு இல்லாம... ச்சச இப்டியே போனா இந்த பேமிலிய எப்படி முன்னுக்கு கொண்டு வரது. ம்ம்ம். 

அடி கழுத அப்பாவ பேர் சொல்லி கூப்ட்ற நீ  என்று அவளை அடிக்க துரத்த அவளோ அங்கிருந்து ஓடி விட்டாள். 

வளர்ந்தும் இன்னும் குழந்தையாகவே இருக்கும் தன் இளய மகளை கண்ட மேகலையொஒ, இவளுக்கும் இது போல் ஒரு நல்ல வரன் அமைய வேன்டும் என்ட சட்டென்று கடவுளுக்கு ஒரு அவசர அப்பிளிகேசனை போடார். 

தூரத்்தில் இருந்து  ஒரு அசரீரி

ஆஹான், அதுக்கு நீ இன்னும் நாலு வருசம் காத்திருக்கனும் மேகலா. அப்போ தானே நா வெல் செட்டில்ட். 

வேறு யார் திவ்யா தான் . தாயின் வேண்டுதல் அவள் செவியை எட்டிவிட்டது போல். ( நீங்க மைன்ட் வாய்ஸ்னு நினச்சி சத்தமா பேசிட்டீங்க போல) 

அதன் பின்னர் வேலைகள் மும்முரமாய் நடை பெற்று கொண்டிருந்தன. நெருங்கிய உறவினர்கள் முன்னமே வந்து விட அதனால் தான் இந்த வீடு இவ்வளவு ஜகஜோதியாக காட்சியளிக்கிறது.

இன்று....

ஹேய் , கேர்ள்ஸ் லாம் டோரா தான் பார்பாங்க..  பாய்ஸ் தான்் சோட்டா பீம் பார்பாங்க .. இப்போ சொல்லுங்க யார் என் கட்சி... என்ற அரை கூவல். ( நீங்க எல்லா ரும் எந்த கட்சினு முடிவு பண்ணி வைங்க ப்ரண்ட்ஸ்)

முடிந்த அளவு இந்த எபிசோடுல உங்க டௌட்ஸ க்ளியர் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன் . இன்னும் தெளிவா புரிய வைக்கனும்னா நா என் பாட்டிய தான் போய் கேட்கனும்  ஏன்னா அவங்க தானே எனக்குள் இந்த உறவு பாலத்துக்கு விதை போட்டது..அதான் .ஹிஹிஹிஹிஹி

தொடரும் . . .

Episode # 01

Episode # 03

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.