(Reading time: 9 - 18 minutes)

03. கல்யாணம் முதல் காதல் வரை - சஹானி 

ஹேய் , கேர்ள்ஸ் லாம் டோரா தான் பார்பாங்க 

 பாய்ஸ் தான் சோட்டா பீம் பார்பாங்க .. இப்போ சொல்லுங்க யார் என் கட்சி என்று அரை கூவலில் அங்கிருந்த சிறுமிகள் பட்டாளம் இவள் பக்கம் சென்றனர்.

ஹேய் என் கட்சி தான் மெஜாரிட்டி சோ நீங்க லாம் தோத்தான்கோலி.. போங்க போய் வேற விளையாட்டு விளையாடுங்க ..- என்று அந்த சிறுவர் பட்டாள தலைவன் (கொஞ்சம் வயசுல மூத்தவன் ஏழு வயசு ) க்கு கட்டளை இட்டாள்  தலைவி திவ்யா.

Kalyanam muthal kathal varai

அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்க இரு தரப்பினர் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. ( நண்பர்களே , செய்திகள் வாசிப்பது என்ற பாணியில் இதை படிக்க தவறாதிர்கள்.)

அடியே, பத்திரிக்கை கொண்டு  மாப்பிள்ளை தம்பி வர நேரத்துல  என்ன இந்த பசங்களோட சண்ட போட்டுட்டு இருக்க உன்னைலம் காலேஜ் பொற பொண்ணுனு சொன்னா காலேஜ் கூட நம்பாது. (எங்களாலயும் நம்ம்ப முடியல அம்மா)

போ  போய் அக்கா ரெடியா இருக்காளான்னு பாரு - மேகலா

ம்மா, அவள தான் சோள கொல போம்மா போல இந்த கொஞ்ச நாளா ரெடி பண்றீங்களே இத நா வேற தனியா போய்  பாக்கணுமா வேற ஏதாவது நல்ல வேலை சொல்லு செய்றேன் . இப்படி உப்புக்கு பெறப்படாத வேலைலாம் சொல்லாதே

அப்படியா சரி அப்போ போய் , சமையல் கட்டுல உன் சித்தி தனியா கஷ்ட படுறா  அவளுக்கு ஹெல்ப் பண்ணு

அக்கா எந்த ரூம்ல மா இருக்கா ... அத சொல்லாம இப்படி வள வளன்னு பேசிட்டு இருக்க ( ஹா ஹா ஹா திவு செல்லம் உனக்கு உங்க அம்மா தான் சரி )

ஹேய், என்ன கல்யாண பொண்ணு ரெடியா ...

அட போடி, நீ வேற இவ வீட்ல இருந்து ஆள் வராங்கனு எங்கள படுத்தி எடுக்கறா , நீ தான் இந்த அநியாயத்த தட்டி கேக்கணும்  என்றாள் பெண்ணின் தோழி காவ்யா.

அப்படியா உங்க கல்யாணத்துல நீங்க இத விட அலப்பறை பண்ணதா இவ சொல்லிட்டு இருந்தாளே, அது சரி தல வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்னு எங்க பாட்டி சொல்றதுல தப்பே இல்ல போல ....

அதுசரி உன்ன போய் நியாயம் பேச கூப்டேன் பாரு என்ன சொல்லணும் -காவ்யா

தெரிஞ்சா சரி - திவ்யா

அவள் அங்கிருந்து நகர முற்பட சந்தியா வின் செல் சிணுங்கியது 

அத கொஞ்சம் எடேன் இதோட மூணாவது தடவ அடிச்சிட்டு சந்தியா வின் சேலை கொசுவத்தை சரி செய்தவாறு காவ்யா கூற 

கொஞ்சம்னா எப்படி செல் கவர மட்டும் எடுக்கவா  ( ஐயோ அம்மா முடியல )

உன் மொக்கைய நிறுத்திட்டு அதுக்கு உயிர் கொடு - சந்தியா 

You might also like - Mounam etharku... A family drama...

ஹலோ,

ஹலோ சந்தியா வா 

அக்...

நா சந்திரன் பேசறேன் .

அட ..ஆடு தானா வந்து மாட்டுது சரி என்னனு கேப்போம் 

ம்ம்ம் 

வந்து  .. சாரிங்க உங்கள காண்டக்ட் பண்ண ரொம்ப ட்ரை பண்ணேன் இப்போ தான் கிடைச்சது . அதோட என் தம்பி வந்து என் போன பிடுங்கி வச்சு கிட்டான் .கல்யாணம் முடிர வரை பேச கூடாதுன்னு கிழவன் எனக்கு ஆர்டர் போட்டு இருக்கான்.  இப்போகூட கைல கிடச்ச நம்பர்ல இருந்து பேசறேன் .நைட் பத்து மணிக்கு மேல நீங்க ப்ரீயா இருந்தா நா சொல்ற நம்பர்க்கு மிஸ் கால் கொடுங்க நானே கால் பண்றேன்.. இது தான் அந்த நம்பர் xxxxxxxxxx  .... மூச்சு விடாமல் பேசி கொண்டே போனவன் சிறிது இடைவெளி விட்டு...

வந்து என்ன பிடிச்சிருக்கா ... என்று இழுக்க( ச்ச ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சீக்ரமே கேட்டிங்க போங்க )

ஹா ஹா ஹா .... போன் எடுத்ததும் சந்தியவானு கேட்டிங்க நா பதில் சொல்றதுகுள்ள நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறீங்க   . நா சந்தியா இல்ல அவ சிஸ் திவ்யா

ஒஹ் ........... சாரி பாப்பா கொஞ்சம் அக்கா ட்ட போன கொடேன் 

என்னது பாப்பா வா ( பின்ன பீம்க்கும் டோராக்கும் சண்ட போடுறவள பாப்பானு சொல்லாம பீப்பானா சொல்வாங்க)

என்னாச்சு ஏன்மா இப்படி கத்துற யாரும் அடிச்சிட்டாங்களா 

ஹலோ நா காலேஜ் போக போற ஸ்டேஜ் ல இருக்கேன் என்னய்யா பாப்பான்னு சொல்றிங்க இருங்க உங்க பியான்சி கூட உங்கள பேசவிடாம பண்றேன்.

அய்யோ , அப்டிலாம் செஞ்சிடாத தாயே உனக்கு புண்ணியமா போகும் எங்க சைடுல பொண்ணோட தங்கச்சி ஸ்கூல் படிக்கறானு சொன்னாங்க அதான் தெரியாம பாப்பா நு சொல்லிட்டேன் அதோட உன் குரலும் கீச் கீச னு கிளி மாறி இருந்துச்சா அதான் .....  வேணுனா நாலு அடி அடிச்சிக்கோ 

என்று என்னென்னவோ கூறினாலும் அவள் சமாதானம் ஆக வில்லை .

அதெல்லாம் ,முடியாது நீங்க உங்க கிழட்டு தம்பி சொன்னது போல கல்யாணம் வரைக்கும் பேசாம இருக்கிறது தான் என்னோட தண்டனை பாய் பாய் ....

அடிப்பாவி , போன்ல யாரு அவங்களா.. ஏண்டி அவங்கள்ட இப்படி பேசுன எதாச்சும் தப்பா எடுத்துக்க போறாங்க

அதெல்லாம் முடியாது எப்படி அவங்க என்ன பாப்பானு சொல்லலாம் ... என்று மிடுக்கி கொண்டாள்

ஆமா, உன்ன போய் பாப்பா னு சொல்லிட்டாங்களே  அத தான் என்னால தாங்க முடியல - காவ்யா ( எங்களாலையும் தான்)

  சரி என்ன சொன்னாங்க அத மட்டும் சொல்லாம மத்தத சொல்றியே செல்லம்  ம்ம்ம் சொல்லு அவங்க என்ன சொன்னாங்க,

ஓஹ் அதுவா... அவங்க சைடுல கல்யாணத்த எடுத்து செய்ய ஆள் காணாதாம் அதான்  சம்பிரதாய பத்திரிக்கைய கொண்டு அவங்களே வராங்களாம்... இதற்குள், தோழிகளின் உதவியோடு சேலையை கட்டியவள் மற்றவர் வெளியேற காவ்யாவுடன் அங்கிருந்த இருக்கையில் அமர அவளோடு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் திவ்யா

நங்.........

ஸ்ஸ்ஸ் ஆஆஆ 

டேய் எலி ஏன்டா என்ன கொட்டுன....

இதற்க்கு மறுபடியும் ஒரு கொட்டு வாங்கி கொண்டாள் .

எத்தன தடவ சொல்லிருக்கேன் என்ன எலின்னு கூப்டாதனு ....

டேய், அதுக்கா கொட்டுன அப்போ முதல் கொட்டு எதுக்கு டா

அதுவா, பத்திரிக்கைய கொண்டு மாப்பிளை தான் வரார்னு யார் சொன்னா உனக்கு ?

ஏன்டா?  அம்மா தான் மாப்பிள்ளை தம்பி வராங்கனு சொல்லுச்சே

அடியே, நீ எல்லாம் எக்சாம்ல என்ன தான் எழுதி கிழிச்சியோ மார்க் வந்தா தான் தெரியும் .

கவல படாத நீ எடுத்தத விட கூடவே எடுப்பேன். 

ம்க்ம்ம்... இந்த வீராப்புக்கு ஒன்னும் குரை இல்லை. 

வேற எது குறை... 

மூளைல குறை..

ம்ம்ம், அப்படியா ...அப்பொ நீயே குறை இல்லாம சொல்லிடு....

மாப்பிள்ளை  தம்பி வரல மாப்பிள்ளையோட தம்பி வராப்ல .

ஓ, அது எனக்கு தெரியும் டா எலி ..

(எப்படியொஒ, நாம பேசுனத மறந்துட்டாங்க....)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.