(Reading time: 6 - 11 minutes)

06. கிருஷ்ண சகி - மீரா ராம்

சில நாட்களுக்குப் பிறகு, சென்னையில் கே.என் மருத்துவமனையில்…

“வாங்க மகத்…. உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்…”

“சொல்லுங்க சார்… சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே…”

krishna saki

அவன் அப்படி சொன்னதும், “எனக்கு தெரியும் மகத் நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு…” என்று புன்னகைத்தார் குருமூர்த்தி…

அவரின் புன்னகையைக்கண்டவனுக்கோ அதற்கு பின்னாடி இருக்கும் காரணம் தெரியாமல் இல்லை… இருந்தும் மௌனம் காத்தான்…

“நாளைக்கு நான் வெளிநாடு கிளம்புறேன் மகத்….”

“என்ன சார் திடீர்னு… இன்னும் கொஞ்ச நாள் இருப்பேன்னு சொன்னீங்க…”

“சொன்னேன் தான் மகத்… இருக்கவும் விரும்பினேன்… ஆனா, நாளைக்கு நான் இங்க இருந்தா என் நிம்மதி கண்டிப்பா போயிடும்…”

அவர் வார்த்தைகளின் அர்த்தம் விளங்கியவனாய் மௌனத்தைக்கையிலெடுத்தான் மகத்…

“நீங்க எனக்கு செஞ்சிருக்குற உதவியை என் வாழ்நாள் உள்ள வரை நான் மறக்கமாட்டேன் மகத்… என் மானத்தையும், மரியாதையையும் காப்பாத்தியவர் நீங்க… இப்பவும் காப்பாத்துறீங்க…”

பேசிக்கொண்டே போனவரை இடைமறித்தவனை தடுத்த குருமூர்த்தி,

“நான் பேசணும் மகத்… ப்ளீஸ்…” எனக்கூற, அவன் சரி என்றான்…

“இத்தனை வருஷமா நீங்க செஞ்சிட்டிருக்குற உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியலை மகத்… ஊர் ஊரா நான் பறந்தாலும், தனிமையில நான் இருந்தாலும் எனக்கு நிம்மதி கொஞ்சமாவது கிடைச்சது… ஆனா, நாளைக்கு நான் இங்க இருந்தா நிச்சயமா என் நிம்மதி பறிபோயிடும் முழுசா… நீங்க கூட என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள்… ஹாஸ்பிட்டலில் இருந்தா போன் பண்ணுங்க… நான் பேசிடுறேன்… ஆனா வேற எந்த இடத்திலிருந்தும் போன் பண்ணிடாதீங்க தயவுசெய்து… உங்களை நான் கெஞ்சி கேட்குறேன்…” என கைஎடுத்து அவர் கும்பிட,

அவன் மனதில் சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் கண்முன்னே வந்தாடியது… அவரின் கையை வேகமாக சென்று பிடித்துக்கொண்டவன்,

“சார் ப்ளீஸ்… இமோஷனல் ஆகாதீங்க… உங்க ஹெல்த்க்கு நல்லது இல்ல அது…” என அவன் ஒரு மருத்துவனாய் அறிவுரை கூற,

அவர் சிரித்தார்…

“விடுங்க மகத்… போகணும்னு இருந்தா போயி சேர்வது தான் நல்லது…” என்றவர், அவனை பேசவிடாது கேள்வி ஒன்றை கேட்க, அவன் முகத்தில் இப்போது புன்னகை…

“உங்க பொண்ணு எப்படி இருக்குறா மகத்?....”

சிரித்தவண்ணம், “நல்லா இருக்குறா சார்… உங்களை கூட கேட்டதா சொல்ல சொன்னா…” என்றான் அவன்…

“ஓ… அவ்வளவு வளர்ந்தாச்சா நதிகா… குட்… நானும் கேட்டேன்னு சொல்லுங்க…”

“கண்டிப்பா சார்…”

“மகத் நான் ஒன்னு சொல்லவா?...”

“சொல்லுங்க சார்…”

“நீங்க நதிகாவை கூட்டிட்டு வந்து உங்களோட தங்க வைச்சிக்கோங்களேன் இன்னும் கொஞ்ச நாள்…”

“அவ அங்க இருக்கத்தான் சார் பிரியப்படுறா… அதும் இல்லாம மதர், பவித்ரா, அப்புறம் அங்க இருக்கிற குழந்தைங்களை விட்டுட்டு அவ வரமாட்டேன்னு சொல்லுவா…”

“எல்லாம் சரி தான் மகத்… ஆனா, நான் சொல்லுறதையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க…”

“ஹ்ம்ம்….”

“உங்க நல்லதுக்குத்தான் மகத் சொல்லுறேன்… உங்க பொண்ணு இப்போ உங்க கூட இருக்குறது எனக்கென்னவோ ரொம்ப நல்லதுன்னு தோணுது….”

அவர் சொல்வதின் அர்த்த்த்தை உள்வாங்கியவன் அவரை புரிந்துகொண்டவனாய் பார்க்க,

“நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னு இல்ல மகத்… உங்க பொண்ணு உங்ககூட இருக்குறது உங்களுக்கு ரொம்பவே ஆறுதலா இருக்கும் இனி… அது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்…” என அவர் சொல்லி முடிக்க,

அவன் மெல்ல சிரித்து, “நான் பார்த்துக்கறேன் சார்…. கவலை வேண்டாம்… விடுங்க…” என அவன் தைரியமாய் அவருக்கு நம்பிக்கை ஊட்ட…

“உங்க பொண்ணை கூட்டிட்டு வந்துடுங்க… இன்னைக்கு நைட்டே கிளம்பி போயிட்டு வாங்க… நாளைக்கு நீங்க இங்க வரும்போது கண்டிப்பா உங்க பொண்ணோட வர்ற மாதிரி பார்த்துக்கோங்க… சரியா?...”

“சார் நான் பார்த்துக்கறேன் சார்…”

“நான் சொல்லுறதை கேளுங்க மகத்… என் வார்த்தையை அலட்சியம் செய்யாதீங்க…”

“அப்படி எல்லாம் இல்ல சார்… நீங்க வொரி பண்ணாதீங்க…”

“நானே உங்க பொண்ணை அழைச்சிட்டு வந்து இங்க விட்டுட்டு போறேன் மகத்… எனக்கு அப்பதான் மனசு நிம்மதி அடையும் கொஞ்சமாச்சும்…. உங்க கிட்ட பேசி இனி வாக்குவாதம் நான் செய்யுறதா இல்ல… நானே நேரா செய்யவேண்டியதை செய்யுறேன்…” என மனதிற்குள் சொல்லிக்கொண்டவர்,

அவனிடம், “நான் கிளம்புறேன்…” என சென்றுவிட்டார்…

வர் சென்றதும், “என்னாச்சு மகத்… குருமூர்த்தி சார் ஒரு மாதிரி போறார்…” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் சதாசிவம்….

“அவர் நாளைக்கு வெளிநாடு கிளம்புறார் தாத்தா… அதான் சொல்லிட்டுப்போக வந்தார்…”

“அடடா… அவர் வந்து ஒருவாரம் கூட ஆகலையே தம்பி… அதுக்குள்ள கிளம்புறாரா ஏன்?...”

“நாளைக்கு இங்க இருந்தா அவர் நிம்மதி போயிடும்னு சொல்லிட்டுப்போறார் தாத்தா…”

“அவர் நிம்மதி போயிடுமா?... என்ன சொல்லுற தம்பி?....” என கேள்விக்கேட்டவருக்கு சற்று நேரத்தில் பதிலும் நினைவுக்கு வந்துவிட, எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்…

“நதிகாவை இங்க கூட்டிட்டு வர சொல்லுறார் தாத்தா… எங்கூட தங்க வச்சிக்க சொல்லுறார்…”

“நல்ல யோசனை தானே தம்பி… உடனே கூட்டிட்டு வா…”

“இல்ல தாத்தா… அவ வந்தா எங்கூடவே இருப்பேன்னு சொல்லுவா… அப்புறம் ஹாஸ்பிட்டலுக்கு நான் எப்படி வர முடியும்?... அதும் இல்லாம வீட்டுலயும் அவளை தனியா விட்டுட்டு வர முடியாது… அதான் யோசிக்கிறேன்…”

“அட என்ன தம்பி நீ ஏன் தனியா விடணும் வீட்டுல… அதான் உன் பாட்டி இருக்கால்ல, அங்க விடலாம்… அவ பார்த்துப்பா… நாமளும் சாப்பிட வீட்டுக்கு போகும்போது புள்ளையை பார்த்தமாதிரி இருக்கும்… அப்புறம் நீ நைட் சாப்பிட்டு புள்ளையையும் சாப்பிட வைச்சிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போ…”

“இல்ல தாத்தா… உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?...”

“நீ இப்படி பேசுறது தான் சிரமமா இருக்கு எனக்கு…”

“தாத்தா… நான் என்ன… சொல்லுறேன்னா…”

“நீ எதும் சொல்லவேண்டாம்… பகல் முழுக்க உன் பாட்டி தனியா தான் இருக்கா… நதிகாவை அவகிட்ட விட்டா, அவளும் சந்தோஷப்படுவா, நதிகாவுக்கும் நல்லது… அதும் இல்லாம, நதிகா நீ இல்லாத நேரம் வீட்டுல இருக்குறதும் எனக்கு சரியாப்படலை… அதனால தான் சொல்லுறேன்… நதிகாவை அழைச்சிட்டு வா… காலையில உன் பாட்டிகிட்ட விட்டுட்டு இங்க வந்துடலாம்… நான் சொல்லுறதை சொல்லிட்டேன்… இனி நீ முடிவு பண்ணிக்கோ…”

“சரி தாத்தா… நீங்க சொல்லுற மாதிரியே செய்யுறேன்…” என அவன் சொன்னதும் அவர் முகத்திலும் புன்னகை… அவனுக்கும் அது தொற்றிக்கொள்ள, அவனும் சிரித்தான் அழகாய்…

ஆனால் அந்த சிரிப்பு விடிந்ததும் முற்றிலும் காணாமல் போய்விடும் என்று அவர்கள் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்…

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.