(Reading time: 14 - 27 minutes)

07. பூ மகளின் தேடல் - மனோ

ரண்டு நாட்களுக்கு முன்பு,

அதாவது, ஸ்ரீமதி கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தற்கு இரண்டு நாள் முன்பு,

ஸ்ரீமதி குடும்பத்தினர் ஊட்டியில் இருந்து கிளம்பிய நாள்.

Poo magalin thedal

ட்டியில்,

அஷ்வின் வீட்டில்.

“அண்ணா இருந்தாலும் நீங்க அவர்கிட்ட சண்டைப் போட்டுருக்க கூடாது”

முந்தைய நாள் ஸ்ரீமதி சாக்லேட் வாங்க மணியுடன் கடைக்குச் சென்றிருந்த போது, கார் அவள் மீது மோத வந்தது. அஷ்வின் காப்பாற்றினான், அந்நேரம் ஸ்ரீக்கும் அஷ்வினிற்கும் நடந்த வாக்குவாதம், மணிக்கும் அஷ்வினிற்கும் வாய்ச்சண்டையாக வலுத்தது. மீரா குறுக்கிட்டு அஷ்வினை அங்கிருந்து கூட்டிச் சென்றாள்.

அஷ்வின் எதிரே இருந்த மீன் தொட்டியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன அண்ணா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க பேசவே மாட்டேங்கிறீங்க”

அஷ்வின் எழுந்து அந்த மீன் தொட்டி அருகில் சென்று அதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய பானை போன்று கண்ணாடியில் இருந்த மீன் தொட்டியில் இரண்டு மீன்கள் அங்கும் இங்கும் துறுதுறுவென சுற்றித்திறிந்தன. அந்த கண்ணாடியில் அஷ்வினின் முகம் பிரதிபலித்தது, ஆனால் அவனுக்கு ஸ்ரீமதி முகம் மட்டுமே தெரிந்தது. அவளுடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்த மீன் தொட்டிக்கும் அவன் கண்களுக்கும் நடுவில் வந்து சென்றன.

“என்ன அண்ணா லவ்ஸ் ஆ??” மீரா கேலிச் சிரிப்பு சிரித்தாள்.

அந்தக் கோபத்திலும் அஷ்வின் முகத்தில் மெல்லியதாகச் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.

“ஹய்யோ எங்க அண்ணன் சிரிச்சுட்டான். ஆனா கோபத்துல இருந்து இவ்வளவு சீக்கிரமா நீங்க நார்மல் ஆனதே இல்ல அண்ணா. எப்படி? அண்ணி ஸ்பெஷல்லா?”

“அதல்லாம் நார்மல் ஆகல. இன்னும் கோபமாதான் இருக்கேன்.” என்று மீண்டும் அந்த மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அந்த மீன் தொட்டியில என்ன அண்ணா பாத்துட்டு இருக்கீங்க.”

“ஸ்ரீ ஓட குண்டு கண்.”

அங்கும் இங்கும் சுற்றித்திறிந்த குண்டு மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

You might also like - Nanaikindrathu nathiyin karai... A fast paced romantic thriller story 

துரை,

ஸ்ரீமதி வீட்டில்,

ஸ்ரீமதி அறையில்.

பயணக் களைப்பில் ஸ்ரீமதி அவளது படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

கனவில்,

தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீமதியை அவளது அம்மா, கோமதி எழுப்பினாள்.

“எழுந்திரி ஸ்ரீ” ஸ்ரீயின் தோள்பட்டையைத் தட்டினாள்.

“அம்மா இன்னும் கொஞ்ச நேரம் மா தூக்கமா வருது.” என்று கண்களைக் கசக்கியவாரு சினுங்கினாள் ஸ்ரீ.

“எழுந்திரி மா மாப்பிள்ளை வீட்டுக்காரங்களாம் வந்துட்டாங்க.. எப்படி தூங்குது பாரு...” என்றவுடன் பதறியவளாய் எழுந்தாள்.

ஸ்ரீமதி தான் பட்டுப்புடவையும் நகைகளயும் அணிந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள்.

“கீழ வாமா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரொம்ப நேரமா வெயிட் பன்றாங்க” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டுச் சென்றுவிட்டாள்.

ஸ்ரீமதி எழுந்து மாடியில் இருந்த அவளது அறையை விட்டு கீழே இறங்கினாள். வீடு முழுவதும் கல்யாணக் கோலம். மேள தாளங்கள் வாசித்துக் கொண்டிருந்தனர். வீட்டின் நடுவில் அக்னி குண்டம் எழுப்பப்பட்டிருந்தது. ஒரு பக்கம் ஐயர் மந்திரம் ஓத மறுபக்கம் மாப்பிள்ளை அந்த மந்திரங்களைத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். சுற்றிலும் சொந்தபந்தங்கள் அமர்ந்திருந்தனர்.

“பொண்ண சீக்கிரமா அழைச்சிட்டு வாங்கோ” என ஐயர் கூறியதும் ஸ்ரீமதியின் தோழிகள் ஸ்ரீமதியின் இரு புறமும் நின்று அவளைக் கூட்டிச் சென்றனர். ஸ்ரீமதிக்கு மாப்பிளையின் முகம் அவர் அருகில் அமர்ந்ததும் தான் தெரிந்தது. அஜய். முதன் முதலாக ஸ்ரீமதியை பெண் பார்க்க வந்தவன். ஸ்ரீமதியின் அந்தஸ்த்தை பார்த்து அவளைப் பிடிக்கவில்லை என்று அவளை நிராகரித்தவன்.

ஐயர் மாங்கல்யத்தை மாப்பிள்ளையிடம் கொடுத்து “பொண்ணு கழுத்துல கட்டுங்கோ” என்றார். ஸ்ரீமதியின் நெஞ்சம் படபடத்தது

மாங்கல்யத்தை வாங்கி ஸ்ரீமதியை ஒரு நொடிப் பார்த்தவன். “எனக்கு பொண்ண பிடிக்கல” என மாலையைக் கழட்டிவிட்டு எழுந்துவிட்டான்.

மனம் உடைந்த ஸ்ரீமதி எழுந்து அவள் அறை நோக்கி ஓட ஆரம்பித்தாள். அவளது கைகளை யாரோ பிடித்தார்கள். அஷ்வின். ஊட்டி ரோட்டில் இருவரும் நின்று கொண்டிருந்தனர். கார்கள் வேகமாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அஷ்வின் சட்டென ஸ்ரீமதியின் கழுத்தைப் பிடித்தான். அவள் அதிர்ச்சியில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் அவள் அஷ்வினைக் கட்டிப் பிடித்திருப்பது போன்று போன்று ஓர் உணர்வு.

“கிஸ் பண்ணவா... கண்ணத் திற ஸ்ரீ”

“கண்ண திற கிஸ் பண்றேன்”

“ஸ்ரீ”

“முழிச்சுக்கோ ஸ்ரீ”

“எழுந்திரிடி”

“ஸ்ரீ”

சட்டென தூக்கத்திலிருந்து விழித்தாள் ஸ்ரீ.

“என்னப் பிள்ளையோ. கீழ வா ஸ்ரீ. எல்லாரும் வெயிட் பன்றாங்க.” மிகவும் போராடி ஸ்ரீமதியைத் தூக்கத்திலிருந்து எழுப்பிய கோமதி, கூறினாள்.

“எ.... எதுக்கு மா” ஸ்ரீமதிக்கு கனவு முழுவதும் நினைவிற்க்கு வந்தது.

“எதுக்கா..? மணி என்ன ஆகுது தெரியுமா? சாப்பிட வேணாமா? சீக்கிரமா வா... என்ன பிள்ளையோ காலைலயும் சாப்பிடல மதியம் எவ்வளவு நேரம் ஆச்சு பசிக்குதானு பாரு” என்று புலம்பிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள், கனவில் கட்டிபிடிப்பதை போன்று உணர்ந்தது அஷ்வினை அல்ல, தலையனையை தான் என்று. சட்டென்று வலகிப்படுத்தாள். மேலே காற்றாடி சுற்றிக்கொண்டிருந்தது. கனவின் காரனமாக வந்த படபடப்பினால் அவளது முகத்தில் இருந்த வியர்வைத்துளிகள் மெல்ல கரைந்தன. அஜயின் நிகழ்வைவிட ஸ்ரீமதிக்கு அஷ்வினின் நியாபகங்கலே நினைவிற்கு இருந்தது.

“வளந்துக் கெட்டவனே வளந்துக் கெட்டவனே” என்று சினுங்கிக் கொண்டே தலையனையை அடித்தாள்.

“சித்தி என்ன பன்னுறீங்க” ஒரு சிறு குழந்தையின் குரல் கேட்டது, ராஜ், வாசலில் நின்று கொண்டிருந்தான்.

வெட்கத்தில் இருகைகளாலும் முகத்தை மூடி தலையணையில் முகத்தைப் பதித்தாள், கால்களை மேலும் கீழும் ஆட்டியபடி.

ருகருவென நீளமான கூந்தல், முகத்தினைப் பாதி மறைப்பதை போன்று முடியின் ஒரு பகுதியை முன்னால் எடுத்துவிடப்பட்ட லூஸ் ஹேர். பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும்  கண்களை மறைக்க, கண்ணம் வரை கூலர்ஸ். ரவுண்ட் நெக் லூஸ் டீஷர்ட், டயிட் ஜீன்ஸ். கழுத்தில் துப்பட்டாவின் பயனை முழுதும் மறந்த ஸ்கார்ஃப் . ‘ஸைட் அடிக்க மாட்டேன்’ என வைராக்கியமாகச் செல்லும் ஆண்களையும் ஒரு நொடி நின்று திரும்பிப் பார்க்கச் சொல்லும் உருவம். அஞ்சலி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.