(Reading time: 14 - 27 minutes)

வுன்லோட் செய்துப் பார்த்தவள், சிரிப்பை அடக்கிக் கொண்டு “என்னது இது பிரகாஷ்” என்றாள்.

“இப்போ கண்ணமூடு மீரா. என்ன நினச்சுக்கோ இப்போ”

“இல்ல பிரகாஷ் வேண்டாம்” என்று மெல்லியதாகச் சிரித்தாள்.

“கண்ண மூடு மீரா.”

“சரி சரி” என கண்களை மூடியவளுக்கு அந்த போட்டோவில் இருந்த பிரகாஷ் தான் கண்ணுக்குள் வந்தான்.

முடியை மொத்தமும் கரைத்த சம்மர் கட்.  மீசை தாடி முழுவதும் இல்லாமல், ஒல்லியான பள்ளிப் பருவ பிரகாஷ். கைகளை இருக்கமாக நீட்டிக்கொண்டு, கண்களை மூடாமல் இருக்க கண்களைப் பெரிதாகத் திறந்து, உற்று குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு சிறுமி பூப்போட்ட பாவடை சட்டையில் பிரக்காஷிற்கு சற்றும் சலைக்காமல் நின்று கொண்டிருந்தாள்.

அவ்வளவு நேரம் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தவள் சட்டெனச் சிரிக்க ஆராம்பித்தாள். அவளின் சிரிப்பொலிக்காக பிரகாஷ் இத்தனை நாட்கள் காத்திருந்தான். கண்களை மூடிக்கொண்டான், அவன் மனதில் இருந்த மீரா அவனது கண்ணுக்குள் வந்தாள். அவனுடைய ஃபேவரைட் ப்ளு கலர் சாரியில் மீரா, அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். கண்ணாடிக்குப் பின் மகிழ்ச்சியில் மிளிர்ந்த அவளது கண்கள். பிறர் சிரிக்கும் பொழுது, கண்ணங்களில் விழும் குழிகளைக் காட்டிலும் அவள் சிரிக்கும் பொழுது அவளது கண்ணத்தில் வரும் சுருக்கங்களில் பிரக்கஷ் மயங்கினான். அவளது உதடுகளின் அசைவைக் கண்டு அவனது உதடுகள் மென்மையாகச் சிரித்தன, பிரக்கஷின் கண்ணங்களில் குழி.

ஒரு சில நொடிகளுக்குப்பின் சிரிப்பினை நிறுத்தினாள். பிரகாஷ் கண்களைத் திறந்தான்.  கண் முன்னே அவள் இல்லாத இந்த பொய்யான உலகத்தைக் காட்டிலும் கண்ணுக்குள் அவள் இருந்த கற்பனையான உலகையே பிரகாஷ் விரும்பினான்.

You might also like - Enna thavam seithu vitten... A family drama

சில நொடி மெளனத்திற்குப் பிறகு,

“இது தான் என் மீரா. பேக் டு ஃபார்ம். அஷ்வினுக்கு எந்த அளவுக்கு பிரச்சனைனு தெரியுது. நம்ம அஷ்வின் எல்லாத்தையும் ஈசியா ஸால்வ் பன்னிருவான். காதல், பொண்ணுலாம் புதுசுல அதான் பையன் திணறுறான். பழைய அஷ்வினா மாத்திரு, எல்லாம் சரி ஆகிடும்.”

“அண்ணா திணறுறாரு இதுக்குலாம் புதுசு, ஸார் ரொம்ப காஷுவலா இருக்கீங்க, ஸாருக்கு ரொம்ப எக்ஸ்பீரியன்ஸோ?” என்றாள் கேலியாக.

“ஐயோ, நீ செம ஃபார்ம்ல இருக்க, இனிமே உன்னோட பேச முடியாதுமா. நீயாச்சு உன் அண்ணாச்சு. என்ன ஆள விடுங்கடா” என போனைக் கட் செய்தான் பிரகாஷ்.

போன் இணைப்பிலிருந்து விலகியவன் அவள் மன இணைப்பில் சற்று முன்னேறினான்.

போனை காதிலிருந்து எடுத்தவள், ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த அஷ்வினைப் பார்த்தாள். அவளுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்திருந்தது.

துரை,

ஸ்ரீமதியின் அறை,

தலையனையை மடியில் வைத்துக் கொண்டு கையில் ஸ்கெட்ச் ஒன்றை வைத்திருந்தாள். அந்த தலையனையை எப்படியாவது அஷ்வினாக மாற்றி அதை அடித்து துவைப்பதே ஸ்ரீமதியின் திட்டம்.

சிறிது நேரத்திற்கு முன்பு, அக்கா வேணியிடம் தன் கனவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாள். இடையூறாக அங்கும் இங்கும் சேட்டை செய்துக் கொண்டிருந்த ராஜ் இடம் ஸ்ரீமதி அவளது செல்போனை கொடுத்திருந்தாள், கேண்டி கிரஷ் விளையாடுவதற்கு. வேணியிடம் கெட்ட கனவு என்பது வரை மட்டுமே கூறியிருந்தாள்.

“அது வெறும் கனவு தான். அதப் பத்தி ஏன் இவ்ளோ குழம்பிக்கிற. உனக்கு எதும் பயம்மா, அக்கா இருக்கேன், சொல்லு அக்கா உன் கூட கொஞ்ச நாள் படுத்துக்கிறேன். இல்ல யாரும் பிரச்சனை பண்ணாங்களா? போ நேராப் போ. அடிச்சுரு, அக்கா இருக்கேன். இல்ல போன் பண்ணி நீ உன் பாட்டுக்கு திட்டு, எனக்கு தேவை என் செல்ல தங்கச்சி சந்தோசமா இருக்கனும்.”

“உன்ன எங்கடா தேடிப்போய் அடிக்கிறது, என் கண்ணுல நீ சிக்குற வரை உனக்கு இதான் கதி” என்று தலையணையை ஒரு குத்து விட்டாள்.

“அடுத்து எப்போ என் கண்ணுல படுரியோ அப்பா பளார்ன்னு ஒரு அறை ” என்று கண்களை மூடிக்கொண்டு தலையனையை அறைந்தாள், அது சற்று தள்ளி சென்று விழுந்தது.

ராஜ், போனுடன் ஓடி வந்தான், ”சித்தி போன் வருது”

போனில் அஜய்.

சற்று பதறியவளாய் எழுந்தாள், போனை அட்டன்ட் செய்து இரண்டு அடி நகர்ந்தாள்.

மறுபக்கத்தில் மெளனம்.

“ஹலோ” ஸ்ரீ போசினாள்.

“ஹலோ ஸாரி ஸ்ரீ, நான் உன்ன வேண்டாம்ன்னு சொல்லிருக்க கூடாது, எல்லாம் என் கோழைத்தனம் தான். உன்கிட்ட பேசனும் ஸ்ரீ”

“ஹலோ ஹலோ நிறுத்துங்க, யாரு நீங்க உங்களுக்கு என்ன வேணும்” வெறுப்புடன் ஸ்ரீமதி கத்தினாள்.

“ஸ்ரீ. நான் அஜய்”

“அப்படிலாம் எனக்கு யாரையும் தெரியாது, நீங்க..” ஸ்ரீமதி பேசி முடிப்பதற்குள்,

“ஸ்ரீ நான் சொல்லுறதக் கேளு”

“நீங்க யாரு, நான் எதுக்கு நீங்க சொல்லுறதக் கோட்கனும்”

“ஸ்ரீ நான் உன்ன லவ் பண்றேன் ஸ்ரீ. உங்க வீட்டுக்கு முன்னாடி தான் நிக்கிறேன். நீ வெளிய வா இல்ல நான் உள்ள வாரேன்.” என்றான் படபடப்புடன்.

ஸ்ரீமதி திகைத்தாள். அவள் கால்களில் தலையணை தட்டியது. அஷ்வினை (தலையணையை) திகைப்புடன் பார்த்தாள்.

“ஸ்ரீமதி அஜய் பிரச்சனையை எப்படி சமாளிப்பாள். மணி அஞ்சலியிடம் என்ன கூறினான். மணிக்கும் அஷ்வினிற்கும் சண்டை வந்த பொழுது, மணி ஸ்ரீமதியை எங்கே கூட்டிச்சென்றான்(ஸ்ரீமதி கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த பொழுது.) அஷ்வின் எப்படி அங்கு வந்தான். அஷ்வினிற்கும் மணிக்கும் ஏன் சண்டை வந்தது – இது பற்றி அடுத்தடுத்துவரும் பகுதிகளில் காணலாம்”

தொடரும்...

Go to episode # 06

Go to episode # 08

Mano is continuing the story from where it was let off. Appreciate your comments but no comparisons between the writers please...

{kunena_discuss:740}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.