(Reading time: 10 - 19 minutes)

06. பூ மகளின் தேடல் - மனோ

ஷ்வின் அண்ணா” என்று மீரா கத்தியதும் இருவரும் சுய நினைவிற்கு வந்தார்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தார்கள். (இருவர் கண்ணிலும் காதல் கோவம்)

“சாரி கேளுங்க அண்ணா” அஷ்வினைக் கட்டளையிட்டாள் மீரா.

Poo magalin thedal

“அவ என்ன சொன்னா தெரியுமா” அஷ்வின் மீராவிடம் முறையிட்டாள்.

“அண்ணா...”

“சா......ரி” அவன் சொல்லுவதற்குள் அங்கிருந்து நகர்ந்தாள் ஸ்ரீ.

“அண்ணா இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோவம் ஆகாது” என்று மீரா பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அவன் ஸ்ரீ இருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஸ்ரீ மணி அருகில் சென்று “போலாம் அண்ணா” எனறாள்.

அஞ்சலியிடம் காதல் அலைகலை வீசிக்கொண்டு இருந்தவனிடம் ஸ்ரீ குறுக்கிட்டிறுந்தாள்..

“என்ன ஸ்ரீ சாக்லேட் வாங்கலயா.

“இல்ல அண்ணா. வாங்க வீட்டுக்கு போகலாம்”

“என்ன ஸ்ரீ குட்டி ஒரு மாதிரி இருக்க” என்று மணி கேட்டுக் கொண்டிருக்கையில் ஸ்ரீயின் கண்களில் நீர்த் துளி எட்டிப் பார்த்தது.

இதற்குள் அஷ்வின் ஸ்ரீ அருகில் வந்தடைந்தான்.

“ஸ்ரீ சாரி நான் வேணும்னே பண்ணல” என்று ஸ்ரீ கண்களைப் பார்த்து மன்னிப்புக் கேட்டான்.

“நீங்க போங்க அஷ்வின். ப்ளீஸ்.” அதற்கு மேல் அவளால் அழுகையினை அடக்க முடியவில்லை. கண்களில் நீர் பெறுக்கெடுத்து ஓடத் துவங்கியது.

ஸ்ரீயின் கண்ணீரைப் பார்த்த மணிக்கு கோவம் தலைக்கு ஏறியது.

“யாரு டா நீ. ஸ்ரீட்ட வந்து பிரச்சனைப் பண்ணிட்டு இருக்க” அஷ்வின் மீது கை வைத்து தள்ளினான் மணி.

“இல்ல சார். நான் சொல்வதை முதல்ல கேளுங்க” என்று அஷ்வின் கொஞ்சம் அருகில் சென்றான்.

இதனைக் கேட்கத் தயாராக இல்லாத மணி அஷ்வின் மீது மீண்டும் கை வைத்து தள்ளினான். ”என்னடா எங்க வீட்டு பொண்ணுட்ட வந்து சேட்டை பண்ணிட்டு இருக்க”.

“சார் இந்த மேல கை வைக்கிற வேலைலாம் வேண்டாம்”. அஷ்வின் கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாய் பேசினான்

மணி மீண்டும் அஷ்வின் மீது கை வைக்க அஷ்வினிற்கும் கோபம் தலைக்கு ஏறியது.

“என்னடா கூட வந்த பொண்ண ஒழுங்கா பாத்துக்க தெரியல நீயெல்லாம் என்னோட சண்டைக்கு வரியா” அஷ்வின் பொங்கி எழுந்தான்.

அதற்குள் மீரா அங்கு வந்துவிட்டாள்.

“அஷ்வின் அண்ணா வேணாம்… நிறுத்துங்க அண்ணா” என்று அஷ்வின் கையைப் பிடித்தவாரே “சாரி சார். சாரி ஸ்ரீ” என்று சொல்லி விட்டு அஷ்வினை இழுத்து சென்றாள்.

அஷ்வின் திரும்பிப் பார்த்து மணியை முறைத்தான். அருகில் காரினுள் கண்ணீருடன் இருந்த ஸ்ரீமதியைப் பார்த்த அஷ்வினின் மணம் கணத்தது.

ஷ்வினுடன் நடந்த பிரச்சனையை வீட்டில் யாரிடமும் கூற வேண்டாம் என ஸ்ரீ மணியிடம் கேட்டிருந்தாள். ஸ்ரீ மேலும் வருத்தப் படக்கூடாது என்பதற்காக சில நாட்கள் கழித்து அஷ்வின் பற்றிக் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டு விட்டான் மணி. மறு நாள் ஸ்ரீ குடும்பத்தினர் மதுரை வந்தடைந்தனர்.

You might also like - Puthir podum nenjam... A new romantic story...

துரை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு.

ஸ்ரீமதியின் அறை.

கட்டிலின் ஒரு பக்கத்தில் ஸ்ரீ அமர்ந்திருந்தாள், மறுபக்கத்தில் ஒரு தலையணை சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதில் முகம் போன்ற வடிவமும் கைகள் கால்களும் வரையப்பட்டிருந்தது. அந்தத் தலையணையை அஷ்வினாகப் பாவித்து அவளது கோபத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். வழக்கம் போல் சிறிது நேரம் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அதனைப் பார்த்துப் பேசத்துவங்கினாள்.

“என்ன முறைக்கிற???”

“அப்படியே கண்ண நோண்டிருவேன் பாத்துக்கோ.” என்று இரண்டு கைகளையும் நீட்டி ஆள் காட்டி விரலால் தலையணையின் கண்களைக் குத்துவது போல் பாசாங்கு செய்தாள்.

“அந்த கத்து கத்துற. வளந்துகெட்டவனே. மண்டைல அறிவு இல்ல? வேணும்னேவாடா கார் வரும் போது ஊடால நிப்பாங்க. வளந்துகெட்டவனே.” என்றுச் செல்லமாக தலையணையின் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

“ஆனாலும் உனக்கு கொழுப்பு அதிகம் டா. கிஸ் பண்ணுவியாம்ல. கொண்ணுடுவேன்” என்று சிறு குழந்தைகள் ஆள்காட்டி விரலை ஆட்டுவது போல் ஆட்டி சிரிக்க ஆரம்பித்தாள்.

ஒரு சிறு மெளணத்திற்குப் பிறகு “நான் அழுதது உனக்கு ஃபீலிங்கா இருந்ததா?”

“என்னது இல்லையா? பொய் சொல்லாதடா.. நீ போகும் போது திரும்பி நான் அழுவதப் பார்த்து ஃபீல் பண்ணத நான் பார்த்தேன். எப்போ பார் நடிக்கிறது. என்னை அவ்வளவு பிடிக்குமா” என செல்லமாகத் திட்டிக் கொண்டே தலையணையின் கையினைப் பிடித்து அவள் அருகில் மெல்ல இழுத்தாள்.

ஸ்ரீயின் வாட்ஸ்ஆப் அழைத்தது.

புதிய எண்ணிருந்து அஷ்வின் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பதைப் போன்று வீடியோ அனுப்பப்பட்டிருந்தது.

கதவைத் தட்டும் சப்தம் கேட்க, டவுன்லோட் கொடுத்து விட்டு கதவைத் திறந்தாள். வெளியே மணி.

“ஸ்ரீ வெளிய போலாம் கிளம்பி வா”

“எங்க அண்ணா?”

“போகும் போது சொல்றேன்”

“சரி ஒகே. ஐஸ்கிரீம் வாங்கித் தருவியா?”

மணி சிரித்துக் கொண்டே “ம்ம் வாங்கித் தாரேன். நீ மேக்கப் போட்டு ரெடி ஆகிட்டு வா. நான் கார்ல வெய்ட் பண்றேன்”

“நான் ரெடி தான் போலாம்.”

“க்ரீம் எதாவது போடுவேல போட்டு வா. அவசரம் இல்ல நான் வெய்ட் பண்றேன்”

“என்ன அண்ணா நான் இப்படியே அழகா இல்லயா?” என சோகமாய் கேட்டாள்.

“அழகா இருக்க என் செல்ல தங்கச்சி. இன்னும் அழகாகிட்டு வா. நான் கார்ல வெயிட் பண்றேன்” எனக் கண்ணத்தைக் கிள்ளிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

சிரித்துக் கொண்டே கண்ணாடிப் பக்கம் திரும்பினாள்.

“உனக்கென்ன ஸ்ரீ அழகா தான் இருக்கிற. உனக்கு எதுக்கு மேக்அப். அந்த வளந்துகெட்டவனுக்கே உன்ன பிடிச்சுருக்கே.” என்று பச்சைக் கலர் சுடிதார் காலரை தூக்கி விட்டுக் கொண்டு (அஷ்வின்)தலையணையைப் பார்த்து கண் அடித்து விட்டு சிரித்துக் கொண்டே வெளியேறினாள்.

ணி காரினுல் இருந்தான். ஸ்ரீ மாடியில் இருக்கும் தன் அறையிலிருந்து கீழே இறங்கினாள்.

“ஸ்ரீ மா” ஹாலில் இருந்த குரு அழைத்தார்.

வீட்டின் வெளியே செல்ல முற்பட்டவள் “அப்பா” என்றவாரே குரு பக்கம் திரும்பினாள்.

“வெளிய கிளம்பிட்டியா மா?”

“ஆமா அப்பா. மணி அண்ணா வெளியப் போகலாம்ன்னு சொன்னாங்க”

கார் ஹார்ன் அடிக்கும் சப்தம் கேட்டது.

“அவன் வெளிய வெயிட் பண்றானா?” என்று சிறிது யோசித்தவர், “மதுரைக்கு வந்ததும் பேசலாம்ன்னு நினச்சேன். நாள் ஆகிருச்சு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.