(Reading time: 10 - 19 minutes)

சொல்லுங்க அப்பா”

சற்று நிதானித்தவர் “இந்தாமா” என்று பையில் இருந்த ஒரு கவரை அவளிடம் தந்தார்.

“என்னப்பா இது”

“மாப்பிள்ளை போட்டோ மா”

அவள் அந்த கவரைப் பார்த்தாள். அதனுள் அஷ்வினின் முகம் இருக்கும் என அவள் மணம் நம்பியது. ஏங்கியது. அவளுக்கு அஷ்வின் நியாபகம் ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அஷ்வினாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்.

“யோசி ஸ்ரீ. நல்லப் பையன். பெரிய இடம். கோயம்பத்தூர். பையன் பேரு”

அவளை அறியாமலே “அஷ்வின்” என்று மனதிற்குள் முணுமுணுத்தாள்.

“தருண்” என்றார் குரு. “நல்லப் பையன். யோசிச்சு நல்ல முடிவா எடு ஸ்ரீ.”

மணி ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தான்

“அவன் வெயிட் பன்றான் ஸ்ரீ கிளம்பு” என்றார் குரு.

மாப்பிள்ளை என்ற உடன் அஷ்வின் நியாபகம் வந்தது அவளுக்குக் குழப்பமாகவே இருந்தது. தருண் என வேறு பெயரைக் கேட்டதும் அவளுக்கு சோகம் அதிகரித்தது. அஷ்வினின் முகம். ஊட்டியில் அவனுடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவிற்கு வந்து சென்றது.

ஹார்ன் அடிக்கும் சப்தம் கேட்க சுய நினைவிற்கு வந்தவள் திடுக்கிட்டாள். அவளை அறியாமலே வீட்டிலிருந்து வெளியேறி காரின் அருகில் வரை வந்துவிட்டாள்.

“ஸ்ரீ என்ன ஆச்சு” மணி கேட்டான்.

“ஒன்றும் இல்ல அண்ணா” என்று காரினுள் ஏறினாள்.

கார் மெயின் கேட்டினைத் தாண்டியது.

You might also like - Ainthu... A horror genre story to scare you...

காரில் சுமார் கால் மணி நேரம் பயணித்திருப்பாள். ஆனால் அஷ்வினின் நினைவுப் பயணத்தில் தான் அவள் மணம் இருந்தது. சிறிது சிறிதாக அவள் தனது கல்யாணத்தைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கினாள்.

இதுவரை அவள் கல்யாணம் வேண்டாம் என அவள் எடுத்த முடிவிற்கு, ‘இரண்டு வருடம் வேலைப் பார்க்க வேண்டும் மேலும் மணி-அஞ்சலி கல்யாணம் (மணி-அஞ்சலி கல்யாணம் விரைவாக நடக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீமதியின் கல்யாணத்தைத் தள்ளிப் போடும் படி மணி ஸ்ரீயிடம் கேட்டிருந்தான்.)’ என இரண்டு காரணங்கள் இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்ரீயின் கவலை கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதை விட கல்யாணம் என்ற உடன் அஷ்வினின் நியாபகம் ஏன் வந்தது என்பதில் தான் இருந்தது.

“ஒரு வேளை அவன லவ் பண்ணுறியோ ஸ்ரீ” என்று தன் மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தாள்.

“அவனும் அவன் பேச்சும். அவனயா ஸ்ரீ லவ் பன்ற?”

“சரியான வளந்துக்கெட்டவன்” என்று நினைத்துக் கொண்டே சிரித்தாள்.

“அவன் யாரு எப்படிப் பட்டவன், யாரு என்னனே தெரியாது, எப்படி ஸ்ரீ அவன லவ் பன்றது. முதல்ல அவன் நல்லவனா.”

“பேச்சும் நல்லாப் பேச மாட்றான். கண்ணாலயேக் காதலிக்கிறான். ஒன்னுமே புரியலயே” என்று குழம்பிக்கொண்டிருந்தாள்.

இதனை அனைத்தயும் கவனித்துக் கொண்டிருந்தான் மணி, “என்ன ஆச்சு ஸ்ரீ?” என்றான்.

“ஒன்னும் இல்ல அண்ணா.” என்று வெளியேத் திரும்பிப் பார்த்தாள்.

வழி முழுவதும் பள்ளிக் குழந்தைகள் குடிப் பழக்கத்திற்கும் புகைப் பழத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பி ஊர்வலமாக சாலையின் மறுபுறத்தில் நடைப்பாதையில் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீமதிக்கு கல்லூரிக் காலங்களில் குடி மற்றும் புகைப்பழக்கத்திற்கு எதிராக அவள் பங்கேற்ற சமூக ஆர்வல நிகழ்வுகளும் கல்லூரி வகுப்பிற்குல் குடித்துவிட்டு வந்த சக மாணவனைச் செருப்பால் அடித்து துவைத்த நிகழ்வும் நினைவிற்கு வந்து சென்றது.

“அப்பா என்ன சொன்னாரு ஸ்ரீ”

“அண்ணா” நீண்ட சிந்தனையில் இருந்த ஸ்ரீக்கு மணி கேட்டது காதில் விழுந்திருந்தது.

“அப்பா எனக்கு மாப்பிள்ளை பாத்துருக்காராம். போட்டோ கொடுத்தார்.”

அதனைக் கேட்டவன் திடுக்கிட்டவனாய் அவளைத்திரும்பிப் பார்த்தான்.

வண்டி அவன் கட்டுப் பாட்டை விட்டு சாலையின் மறுபுறம் சென்றது. எதிரே வந்த கார் டிரைவர் நிதானித்து இவர்களை மோதாமல் வளைத்துச் சென்றார். ஸ்ரீமதி கார் கண்ணாடியில் டமார் என முட்டினாள், அதற்குள் நிதானித்தவன் வண்டியைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தான். இதனால் ஊர்வலத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

“நான் கல்யாணம் வேண்டாம்னு தான் அண்ணா சொல்லப் போறேன். உனக்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் முடிந்ததும் தான் எனக்கு கல்யாணம் ஓகே வா அண்ணா”

“ஸ்ரீ குட்டினா ஸ்ரீ குட்டி தான். அப்பாட்ட என்ன சொல்லப் போற ஸ்ரீ”

“அப்போவே வேணாம்னு சொன்னா அப்பா கேட்க மாட்டார். மாப்பிள்ளைய பிடிக்கலன்னு சொல்லப்போறேன்” என்று சீட்டின் பக்கத்தில் இருந்த அந்தக் கவரைப்பார்த்தாள். அவள் போட்டோவைப் பார்க்க வேண்டாம் என முடிவு எடுத்திருந்தாள்.

மணி ஸடன் ப்ரேக் போட்டான். ஸ்ரீ எதிரே இருந்த ஸீட்டில் முட்டினாள். அவர்கள் கார் எதிரே வேறு ஒரு கார் வழி மறித்து நிருத்தப் பட்டிருந்தது.

மணி கோவத்துடன் இறங்கினான். “நீ உள்ளயே இரு ஸ்ரீ” என்றவாரே.

“அண்ணா” எனப் பதறினாள் ஸ்ரீ.

மணி இறங்கிய ஒரு நிமிடத்தில் ஸ்ரீ அமர்ந்திருக்கும் கதவருகில் பொத் என விழிந்தான். ஸ்ரீ பதறியவாரே இறங்கினாள். மணியின் மூக்குலும் வாயிலும் ரத்தம். மணி அருகில் அமர்ந்து மணியின் கைகளைப் பிடித்தவாரே எதிரே இருக்கும் நபரைப் பார்த்தாள். அஷ்வின்.

கோபம் தலைக்கேறியவளாய் அவன் அருகில் சென்று அவன் சட்டையைப் பிடித்தாள். அவன் அருகில் சென்றவளுக்கு குடி வாசனை குப் என அடித்தது. அஷ்வின் கண்கள் சிவந்திருந்தது.

“குடிச்சுருக்கியா டா?” என கோவமாகக் கேட்டவள் பளார் என கண்ணத்தில் அறைந்தாள்.

அவள் போட்டிருக்கும் செருப்பை எடுத்து அஷ்வினை அடிக்க ஓங்கியவள் “சீ, இனிமே என் முகத்துலயே முழிக்காத” என்று காரினுல் ஏறி அழுதுக்கொண்டிருந்தாள்.

அவள் கண்களுக்கு அந்த கவர் பட, குருவிற்கு செல்போனில் கால் செய்து “எனக்கு மாப்பிள்ளைய பிடிச்சுருக்கு கல்யாணத்துக்கு ஓகே” என்றாள்.

இந்த அதிர்சியை முற்றிலும் எதிர் பார்க்காத மணியும் அஷ்வினும் செய்வதறியாது திடுக்கிட்டு அவளயே பார்த்தனர். 

தொடரும்...

Go to episode # 05

Go to episode # 07

Mano is continuing the story from where it was let off. Appreciate your comments but no comparisons between the writers please...

{kunena_discuss:740}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.