(Reading time: 9 - 17 minutes)

08. பூ மகளின் தேடல் - மனோ

ஸ்ரீமதியிடம், அஜய் போன் செய்து பேசிக்கொண்டிருந்தான்.

“ஸ்ரீ நான் உன்ன லவ் பண்றேன். உங்க வீட்டுக்கு முன்னாடி தான் நிக்கிறேன். நீ வெளிய வா இல்ல நான் உள்ள வாரேன்.” என்று அஜய் படபடப்புடன் கூறினான்.

ஸ்ரீமதி திகைத்தாள். அவள் கால்களில் தலையணை தட்டியது. அஷ்வினை (தலையணையை) திகைப்புடன் பார்த்தாள்.

Poo magalin thedal

“ஸ்ரீ... ஸ்ரீ.. இருக்கியா??”.

இந்நேரம் ஸ்ரீமதி பால்கனி வழியாக எட்டிப்பார்த்தாள். ஹீரோ ஹோண்டா வண்டி ஒன்றின் பக்கத்தில் அஜய் நின்று, ஒரு கையில் போனையும் மறுகையில் வண்டியில் உடைந்திருந்த இடது பக்க இண்டிகேட்டரை மீண்டும் ஒட்ட வைக்க முயன்று கொண்டிருந்தான். வண்டியின் இண்டிகேட்டர் மட்டுமல்லாது ஸ்ரீமதியுடன் அவன் இருக்கப் போகும் வாழ்கையையும் ஒட்ட வைக்க முயன்று கொண்டிருந்தான். இரண்டிலும் அவனுக்கு தோல்வியே.

ஸ்ரீமதி அமைதியாக இருந்தாள். பால்கனியிலிருந்து மீண்டும் அவளது அறைக்குள் சென்றாள்.

ஸ்ரீமதி தன்னை கவனிக்கின்றாள் என்பதை உணர்ந்திருந்தான் அஜய். 

“நீ லைன்ல தான் இருக்கன்னு தெரியும் ஸ்ரீ. உன்னை பார்த்த உடனே எனக்கு பிடிச்சிருச்சு. உன்ன பிடிக்கலன்னு சொன்னதுக்கு... “

அதற்கு மேல் அவன் பேசவில்லை.

அஜயின் மொணத்தைக்கண்டு ஸ்ரீ பேசினாள். “ஹலோ”

பதில் இல்லை.

“ஹலோ”

இம்முறையும் பதில் இல்லாததால், மீண்டும் வெளியே எட்டிப் பார்த்தாள். ஒருவரும் இல்லை.

இந்நேரம் போன் கால் துண்டிக்கப்பட்டது. ஸ்ரீமதியின் குழப்பம் துண்டிக்கப்படவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

ராசுவின் ஒரு கூட்டுக் கிளிகள்... - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

கார் சுமார் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. உச்சி வெயில் காரின் வெளிப்புறத்தில் பட்டு பளீர் என்று வைரத்தைப் போன்று ஜொலித்துக் கொண்டிருந்தது. காரின் வேகத்தை விட அதை ஓட்டிக் கொண்டிருக்கும் அஷ்வினின் மன ஓட்டம் வேகமாக இருந்தது. மீரா கூறியது அவனது மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

அன்று காலை, சூரிய வெளிச்சம் மீராவை நெருங்கிய அதே நேரம், அவளது செல்போனின் ரிங்டோன் அவளை நெருங்கியது. முதல் ரிங் அடித்தவுடனே விழித்தாள். அஷ்வினின் இந்நிலையினை நினைத்து நினைத்து முந்தைய இரவின் தூக்கம் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்த்து. மீராவின் சிவந்த குண்டு கண்களுக்கு கண்ணாடி ஏறியது. தூக்க கலக்கத்தில் பிரக்காஷின் பெயர் சற்று மங்களாகவே தெரிந்தது. படுத்துக்கொண்டே அவளது போனைக் காதருகில் வைத்தாள்.

“ஹலோ” போனை எடுத்ததும் மீரா பேசினாள்.

“என்ன இன்னும் தூக்க கலக்கம் போகலயா? நீ உங்க அண்ணன மாத்த நேத்து போட்ட பிளான் எல்லம் ஃப்ளாப் தன.. நியாயப்படி உனக்கு தூக்கமே வந்துருக்க கூடாதே” பிரக்காஷ் ஏற்கனவே கணித்திருந்தான்.

“உனக்கு எப்படி தெரியும்?”

பிரக்காஷ் விளக்க முன் வருவதற்குள், “வேணாம் நீ இதுக்கும் ஒரு பெரிய கதை சொல்லுவ” என்றாள். சிரித்துக் கொண்டே.

தூக்க கலக்கத்துடன் மீராவின் சிரிப்பில் இருக்கும் அழகைக் கேட்டு அவனது உதடுகள் மெல்ல சிரித்தன, கண்ணங்களில் குழியுடன்.

“சரி அவன் என்ன சொன்னான் தெளிவா செல்லு மீரா. நாம எதாது பண்ணலாம்.”

“அவன் என்ன லூசு மாதிரி உளரிக்கிட்டே இருக்கான்.”

“பாவம் அவன் என்ன பண்ணுவான் நீ என் பக்கத்துல இருக்கிற மாதிரி அந்த பொண்ணு அவன் பக்கத்துல இல்லயே”

அவன் கூறியதைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.  அவன் கூறிய அந்த வார்த்தைகள் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒரு வித குழப்பத்துடன் மீண்டும் போனை காதருகில் வைத்தாள். அவள் கவணிக்கத் துவங்கியதை உணர்ந்தவனாய்,

“தூக்கம் போச்சா? இப்ப சொல்லு” என்றான்.

“எருமை மாடு பன்னி எது எதுல விளையாடுரதுன்னு இல்ல”

அவன் கூறியதற்கு அவள் திட்டினாளே தவிற அவன் அப்படி கூறியது அவளுக்குப் பிடித்திருந்தது. அது அவனுக்கும் தெரிந்திருந்தது.

பிரக்காஷ் சிரித்துக்கொண்டே ”தூக்கம் போறதுக்கு அத சொல்லியாச்சு, இப்ப கோபம் போகுறதுக்கு ஒன்னு சொல்லனுமே”

“டேய் என்னடா சொல்லப் போற?” அவள் சற்று அதிகமாகவே எதிர்ப்பார்த்தாள்.

“சாரி சும்மா விளையாட்டிக்குச் சொன்னேன்”

“ஐயோ ராமா.. “ என்று தலையில் கை வைத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“கோபம் போயிருச்சா? நீ ரிலாக்ஸா இருந்தா தான் அஷ்வின நார்மல் ஆக்க முடியும்.”

மீரா மெளனமாக இருந்தாள், பிரக்காஷ் கூறியது சரி என்றே பட்டது அவளுக்கு.

“சரி மீரா என்ன நடந்தது, அவன் என்ன சொன்னான்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.