(Reading time: 9 - 17 minutes)

மீரா, சிறு குழந்தை கோள் மூட்டுவது போல் ஒன்று விடாமல் அனைத்தையும் கூறினாள், அவளது அண்ணன் மீது உள்ள பாசம் அவள் கண்ணருகில் வெளிவர துடித்துக் கொண்டிருந்த கண்ணீர் காட்டியது.

“கவலைப் படாத மீரா. காலேஜ் டேஸல நானும் அஷ்வினும் 90’ஸ் லவ் படங்கள். நிறையா பாத்துருக்கோம் அதோட தாக்கம் தான் இது. மீனப் பாத்து ஹீரோயின் கண்ணுன்னு வர்நிக்கிறது, செடியில இருக்கிற பூவப் பாத்து, இது தான் என் காதலின்னு செல்றதுலாம் ரொம்ப பழைய டெக்னிக், நாம அதவிட பழைய டெக்னிக் யூஸ் பன்னுவேம். இனிமே என்ன பன்னனும்ன்னு நான் சொல்றேன்...”

பிரக்காஷ் கூறியதும் மீரா உதட்டில் புண்ணகை மலர்ந்தது. முட்டித் திணறிக்கொண்டிருந்த கண்ணீர் வெளியேறியது, கண்ணில் நம்பிக்கைப் பூத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

தேவியின் அன்பே உந்தன் சஞ்சாரமே... - குடும்ப தொடர்.... 

படிக்க தவறாதீர்கள்... 

ஜய் தன் வாழ்வில் மீண்டும் வந்ததை சற்றும் நம்பாத ஸ்ரீமதி, கையில் இருந்த போனை உற்றுப் பார்த்துக் கொண்டே எண்ணங்களை அலையவிட்டிருந்தாள். மீண்டும் அஜய் போன் செய்வான் என ஆழமாக நம்பினாள்.

திடீரென கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. ஸ்ரீமதிக்கு இனம் புரியாத பயம். அது அஜயாக இருக்கும் என நினைத்து பயந்தாள். பட படப்புடன் துப்பட்டாவினால் முகத்தில் இருந்த வியர்வையை துடைத்துவிட்டு கதவைத் திறந்தாள். மணி.

தான் எடுத்த முடிவில் உருதியாக இருந்தான் மணி.

ஸ்ரீமதிக்கு முன்னால் தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நீண்ட யோசனைக்குப் பின் மாற்றிருந்தான். தன் தங்கைக்கு தாம் தான் கல்யாணம் செய்தி வைக்க வேண்டும், அது தன் கடமை எண்பதை உணர்ந்தான்.

“ஸ்ரீ”

“என்ன அண்ணா?”

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும் ஸ்ரீ”

“சொல்லுங்க அண்ணா”

அவன் பேச ஆரம்பிப்பதற்குள், அவனது போன் அலறியது,. வாட்ஸ்ஆப் மெஸ்ஸேஜ், அஞ்சலியிடமிருந்து, “ஹாய் டா செல்லம்...”

கொஞ்சமாவது அறிவுன்னு ஏதாவது இருக்கா? எருமை மாதிரி வளந்துருக்கியே தவிர ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல...” எனக் காவேரி அஞ்சலியை திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தாள்.

கால்களை மடக்கி கட்டிக் கொண்டு அறையின் ஓரத்தில் இருந்த நாற்க்காலியில் சுறுண்டு கிடந்தாள் அஞ்சலி. கண்கள் சிவந்து நீர்வற்றிக் காணப்பட்டது. கண்ணங்களில் கண்ணீரின் சுவடு.

காவேரியின் திட்டம், அஞ்சலியை முதலில் மணிக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் தனது மகனை ஸ்ரீக்குத் திருமணம் செய்து வைத்து, ஸ்ரீக்கு பார்க்கும் மாப்பிள்ளையை அஞ்சலியின் தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதே ஆகும். இது அனைத்தும் அஞ்சலி அந்த வீட்டிற்கு மருமகளாக சென்ற பிறகே நிறைவேற்ற முடியும் என்பது காவேரி முன்னதாகவே யூகித்தது. அதற்கு ஏதுவாக திட்டங்கள் தீட்டி அஞ்சலி மூலம் செய்து கொண்டிருந்தாள். அன்று காலை காரில் செல்லும் போது மணி அஞ்சலியிடம் கூறியது அவளது திட்டத்தில் பிரளயத்தை  ஏற்படுத்தியது.

முன்னதாக ஸ்ரீமதியின் திருமணத்திற்கு முன்பாகவே தனது திருமனத்திற்கு ஒப்புக்கொண்டிருந்தான் மணி. அவனின் ஒப்புதல் காவேரிக்கு அவளது சூழ்ச்சிக்கு ஏதுவாக இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக மணி தன் தங்கைக்கு முன்பாக தனக்கு திருமணம் வேண்டாம் என முடிவு எடுத்திருந்தான். இதைக் கேட்ட அஞ்சலி செய்வதறியாது திகைத்தாள். இத்துனை சதி திட்டங்களுக்கும் காவேரி ஆட்டிவிக்கும் ஒரு பொம்மையாகவே இருந்த அஞ்சலிக்கு, மணி எடுத்திருந்த முடிவை அப்பொழுது ஒப்புக்கொள்ளத்தான் ‘சரி’ என்றே பட்டது.

“மர மண்ட மர மண்ட.. எல்லத்தையும் செஞ்சுட்டு எப்படி உக்காந்திருக்குன்னு பாரு” என்ற வாரே அஞ்சலியின் பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி விட்டாள் காவேரி. அஞ்சலி அமர்ந்திருந்த நார்க்காலியின் முன் தரையில் அமர்ந்தாள் காவேரி. அஞ்சலி காவேரியை பார்த்தாள்.

“என்னடி.. என்ன பார்க்கிற..”

அஞ்சலி மெளணித்திருந்தாள்.

“நீ பக்கத்துல இருக்கிறப்பவே அவன் கல்யாணம் இப்ப வேணாம்னு சொல்லிருக்கான், நீ என்னடி பண்ணிட்டு இருந்த?”

“இல்லம்மா.. அது வந்து..” அஞ்சலி சொல்வதறியாது திணறினாள்.

“சொல்லுடீ கார்ல தானே போனீங்க, அப்போ தானே சொன்னான்“

ஆம் என்றவாரு தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

“முண்டம், மண்டய மண்டய ஆட்டு, அப்போவே சண்ட போட்டு கார்ல்ல இருந்து இறங்கிருக்க வேண்டியதன, இல்ல அது தெரியலேனா அழுதுருக்க வேண்டியதான. எத்தன தடவ சொல்லிருக்கேன் என்ன பண்ணன்னு தெரியலேனா அழுதுரு உடனே பசங்க மடிஞ்சுருவான்ங்கன்னு.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.