06. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்
“அப்படி என்றால் இன்னும் சரியாக மூன்று மாதம் டைம் இருக்கு, எனக்கு சம்மதம் நீங்க என்ன சொல்றீங்க சம்பந்தி” என்று ராஜசேகரை பார்த்துக் கேட்டார் சக்திவேல்.
அமைதியாய் அமர்ந்திருக்கும் தன் மகளை ஒரு கனிவான பார்வை பார்த்துவிட்டு “ எனக்கும் சம்மதம்தான் சம்பந்தி” என்றார் ராஜசேகர்.
நடப்பது அனைத்தையும் அமைதியாகக் கேட்டபடி அமர்ந்திருந்தாள் அனு. நடப்பது அவளின் நிச்சயதார்த்தம், அனுவின் முழு சம்மதத்துடன்தான் நடக்கிறது, ஆனாலும் அவளின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சங்கடம், ஒரு விதமான தவிப்பு. தான் எதோ தப்பு செய்வதைப் போல் உணர்ந்தாள் அனு. அதை யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.
இரு வீட்டாரும் சம்மதம் சொல்லியதால் புரோகிதர் கல்யாண பத்திரிக்கை எழுதுவதில் மும்மரமாக இருந்தார். கல்யாண தாம்பாலாம் கை மாற்றப்பட்டது.
அனைவரும் சுழ்ந்து இருக்க, அனுவின் கையில் மோதிரம் அணிவித்தான் திபக். அனுவின் கையில் மோதிரம் கொடுக்கப்பட்டது திபக்கிற்கு அணிவிப்பதற்காக. அனுவின் கையில் சிறு உதறல். அதை யார் கவனிக்கவில்லை என்றாலும், ராஜசேகரும், திபக்கும் கவனித்தனர். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொல்லவில்லை. திபக்கின் கையில் மோதிரம் அணிவித்தாள் அனு.
அனைவருக்கும் இரவு உணவு அனுவின் வீட்டில் பரிமாறப்பட்டது. அனு தனக்கு பசிக்கவில்லை என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள். தன் அறையில், சன்னலோரத்தில் இருந்த சேரில் அமர்ந்து வெளியே மின்னிக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். பல முறை அப்படி அமர்ந்து, அவள் நிலவின் அழகை ரசித்திருக்கிறாள், ஆனால் அன்று ஏனோ நிலவின் அழகை ரசிக்க மறுத்து அவளின் மனம் எதோ பலமாக யோசனையில் இருந்தது..
அனுவை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ராஜசேகர் பார்வதி தம்பதியரின் ஒரே மகள். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஒரு மென்பொருள் (software company) கம்பேனியில் பணிபுரிகிறாள். ராஜசேகருக்கு இறக்குமதி, ஏற்றுமதிதான் தொழில், ஆதலால் பணத்திற்கு குறைவில்லை. அனு அழகில் தேவதை, பார்க்கும் எவரையும் தன் சின்ன சிரிப்பால் சொக்க வைப்பாள். அழகும், பணமும் இருந்தாலும் அதற்கான கர்வம் சிறிதும் இல்லாமல் அமைதியாகவும், அடக்கமாகவும் இருப்பவள். யார் மனதும் தன்னால் காயம் பட்டுவிடக் கூடாது என்று நினைப்பவள், அதற்கு ஏற்றார் போல் நடந்தும் கொள்பவள். பல ஆண்கள் அவள் பின்னால் சுற்றி இருக்கிறார்கள், நிறையப் பேர் காதலும் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் ஏனோ அவர்களில் ஒருவரையும் அனுவிற்கு பிடிக்கவும் இல்லை, இது வரை காதலில் விழவும் இல்லை. இப்போது அவள் மணக்கப் போகும் திபக், அவள் தந்தை ராஜசேகரின் சாய்ஸ். அனுவின் விருப்பம் கேட்க பட்டுதான் இந்தக் கல்யாண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அவளின் எண்ண ஓட்டம் நிச்சயதார்த்தத்தின் மீது இருந்தாலும் அவளின் மனக்கண் முன்னால் விஷ்ணுவின் முகம் அவ்வப்போது வந்து சென்றது. அவளுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. மோதிரம் மாற்றும் போது தன் மனம் ஏன் சஞ்சலம் பட்டது என்றும் அவளுக்குப் புரியவில்லை. இவை அனைத்தையும் சிந்தித்தவாறு அமர்ந்திருந்த அனு, கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு திரும்பினாள்.
You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story
கதவின் அருகில் நின்று கொண்டிருந்தான் திபக்.
“மே ஐ கம் இன் அனு” தன் வருங்கால மனைவியிடம் அவளின் அறைக்குள் நுழைய அனுமதிக் கேட்டு நின்றான் திபக்.
“யா யா கம் இன் திபக்” சட்டென்று எழுந்து நின்று பதில் சொன்னாள் அனு.
“ஆன்டி சொன்ன்ங்க நீ சாப்பிடாமல் வந்துட்டேனு, அதான் என்ன ஆச்சினு பார்க்க வந்தேன். ஆர் யு ஆல் ரைட்” அக்கரையோடு விசாரித்தான் திபக்.
“எஸ், ஐ அம் ஃபைன் திபக், தேங்க்ஸ்” தன் மனதின் குழப்பத்தை வெளிக்காட்டாமல் கூறினாள் அனு.
“நோ அனு, யு ஆர் நாட் ஃபைன். மோதிரம் மாற்றும் போதே கவனித்தேன். சம் திங் ஸ் பாதரிங் யு” தான் கவனித்த அனுவின் தடுமாற்றத்தைக் கூறினான் திபக்.
அந்தத் தடுமாற்றத்தை கவனித்துவிட்டானே என்று சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் அதைச் சமாளித்தவாறு பதில் கூறினாள் அனு “அது எல்லாம் ஒன்றும் இல்லை திபக், மோதிரம் மாற்றும் போது நான் கொஞ்சம் நர்வஸ் ஆயிட்டேன் அதான். நௌ ஐ அம் ஆல் ரைட்”.
அவள் உதடுகள் அவ்வளவு உறுதியாகக் கூறினாலும், அவளின் கண்களில் இருந்த தயக்கம் திபகின் மனதில் ஒரு சிறு சஞ்சலத்தை ஏற்படுத்தியது.
“அனு நான் உன்னிடம் நான் ஒன்று கேட்கலாமா?” கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருந்தான் திபக்.
கேள் என்பது போல் தலை அசைத்துவிட்டு, இந்தச் சமயத்தில் என்ன கேட்க போகின்றான் என்று அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“டோண்ட் மிஸ்டேக் மீ அனு, உனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் தானே, டூ யு லைக் மீ” தயக்கத்தோடு கேட்டான் திபக். அவன் அந்தக் கேள்வியை கேட்டாலும் அவன் மனம் அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தது அனு “எஸ்” சொல்ல வேண்டும் என்று.
அனுவை அவன் அவ்வளவு நேசிக்கின்றான், அனு இல்லாத ஒரு வாழ்க்கையை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. திருமணத்தில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தவன் திபக். அனுவின் போட்டோவைப் பார்த்த மாத்திரத்திலேயே திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்.
அனுவின் மனதிலோ ஆயிரம் எண்ண அலைகள் ஓடிக்கொண்டிருந்தது. அனுவிற்கு திருமணம் என்று பேச்சு எடுத்தபோது ஒரு உறவினர் மூலம் வந்தது திபக் குடும்பத்தாரின் சம்பந்தம். அப்பா, அம்மா இருவருக்கும் திபக்கையும் அவன் குடும்பத்தாரையும் பிடித்துப் போக, அதன் பின்தான் அனு திபக்கின் போட்டோவைப் பார்த்தாள். நல்ல அழகுதான் அவன். பெற்றோருக்குப் பிடித்திருந்ததால் தனக்கும் திபக்கை மணக்கச் சம்மதம் என்று சொன்னாள். இரண்டு மூன்று முறைதான் அவனை நேரில் சந்தித்திருப்பாள், சில தடவை போனில் பேசியிருப்பாள். பழகிய வரை நாகரிகமாகத்தான் நடந்து கொண்டான். நேற்று வரை அவள் மனதில் இந்தக் குழப்பம் இல்லை. இன்று ஏன் இந்தத் தடுமாற்றம் என்று அவளுக்குப் புரியவில்லை. நிஜம் மறந்து தன் மனதின் எண்ண ஓட்டங்களில் மூழ்கிப் போயிருந்தவள் திபக்கின் குரல் கேட்டு மீண்டும் சுய நினைவிற்கு வந்தாள்.
“என்ன அனு எதுவும் சொல்லாமல் இருக்க, டூ யு ரீயலி லைக் மீ” அவள் மவுனத்தால் தவித்து போயிருந்தவன் பொறுமை இழந்து மீண்டும் கேட்டான்.
“திபக் ஐ ரீயலி லைக் யு, இந்தக் கல்யாணத்தில் எனக்கு முழு சம்மதம்தான், இன்றைக்கு நான் கொஞ்சம் நர்வஸ் ஆயிட்டேன், மற்றபடி ஒன்றும் இல்லை” வெளியே சாதாரணமாக பதில் சொன்னாலும் அனுவின் மனம் அமைதியாக இல்லை.
“தேங் காட். ரொம்ப தேங்ஸ் அனு. ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன். ஓகே அனு நாங்க கிளம்புறோம், அதைச் சொல்லலாம் என்றுதான் வந்தேன். சீ யு தென்” என்று நகர்ந்தான் திபக்.
“நானும் வருகிறேன் திபக்” என்று அவளும் நடந்தாள்.
அதைக் கேட்ட திபக் நின்று, பெரிய சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.