(Reading time: 8 - 16 minutes)

 

ன்ன ஆச்சு திபக்” திடீரென்று அவன் சிரிப்பதின் அர்த்தம் புரியாமல் கேட்டாள் அனு.

“இல்ல அனு நீ இப்போ என்ன சொன்ன” அந்த சிரிப்பு மாறாமல்க் கேட்டான் திபக்.

“நீங்கக் கிளம்புவதாக சொன்னிங்க, அதான் வழியனுப்ப நானும் கீழே இறங்கி வருகிறேன் என்று சொன்னேன்” அனு விளக்கமாகப் பதில் கூறினாள்.

“ஆனால் நீ சொன்னது என் காதில், நீ இப்போதே என் கூட, என் வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்ன மாதிரி விழுந்தது. அதான் மகிழ்ச்சியில் சிரிச்சிட்டேன்” அசடு வழியப் பதில் சொன்னான் திபக்.

தன் மீது பைத்தியமாக இருக்கிறான் என்பது அனுவிற்கு புரிந்தது. என்ன சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை. அதற்குள் கீழே இருந்து யாரோ திபக் என்று அழைக்கும் குரல் கேட்டு இருவரும் கீழே இறங்கிச் சென்றனர்.

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

கீழே இறங்கி வந்த அனுவை கிண்டலாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அனுவின் தோழி திவ்யா. அனுவிற்கு அவள் சிரிப்பின் அர்த்தம் தெரியும், அவள் அருகில் சென்றாள் கிண்டலாக ஏதேனும் கூறுவாள் என்றும் தெரியும் இருந்தாலும் வேறு வழி இன்றி திவ்யாவின் அருகில் சென்று நின்றாள் அனு.

திவ்யா மெல்ல அனுவின் பக்கம் சாய்ந்து, அவளுக்கு மட்டும் கேட்கும் கூறலில் “என்னடீ மாடியில் மாப்பிள்ளையோடு செம ரோமான்ஸா?. இன்று முழுதும் மாப்பிளை சார் உன்னைப் பார்த்த பார்வைக்கு மாடியில் என்னவெல்லாமோ நடந்திருக்கும் போல” குறும்பாகக் கேட்டாள்.

“ஏய் லூசு வாயை மூடு, நாங்க சும்மா பேசிக் கொண்டுதான் இருந்தோம்” திவ்யாவின் வாயை அடைக்கப் பதில் கூறினாள் அனு.

“மாப்பிளை சாரை பார்த்த அப்படித் தெரியலையே” மீண்டும் சீண்டினால் திவ்யா.

என்ன சொன்னாலும் திவ்யாக் கேட்கமாட்டாள் என்று அனுவிற்கு தெரியும், அவள் வாயை அடைப்பதற்காக திவ்யாவின் கையில் நறுக்கென்று கிள்ளினாள் அனு. வலி தாங்காமல் “ஆ” என்று கத்தினாள் திவ்யா. அனைவரின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது.

“ஒன்றும் இல்லை ஆன்டி, எரும்பு கடிச்சிடுச்சு” என்று அசடு வழியப் பதில் சொன்னாள் திவ்யா. அனைவரும் சகஜமான பின், கிள்ளிவிட்டு சிரித்துக் கொண்டிருந்த அனுவை கோபமாகப் பார்த்தாள். அவள் சட்டென்று கண்ணடித்துச் சிரிக்க, அனுவோடு சேர்ந்து சிரித்தாள் திவ்யா.

திபக் வீட்டார் கிளம்ப, தனக்குப் பசிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் தன் அறைக்குச் சென்றாள் அனு. அறைக்குச் சென்றவள் தன் படுக்கையில் சாய்ந்தாள். படுக்கையில் படுத்தவாறே தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருந்த ஃபேனை உற்று நோக்கியவாறே, இன்று நடந்த நிகழ்ச்சியை தன் மனக்கண் மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தாள். இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏன் திபக் அப்படி ஒரு கேள்வியை கேட்டான் என்பது அனுவிற்கு தெரியும். நேற்று வரை நன்றாகத் தானே இருந்தேன், இவ்வளவுக் குழப்பம் இல்லை மனதில், யார் என்றே தெரியாதவன் எப்படி என்னைக் குழப்பினான்?. இத்தனை நாள் அவனைப் பார்த்திருக்கிறோம், ஆனால் இன்றுதான் அவனிடம் பேசவேண்டும் என்று தோன்றியது, அது ஏன்?. திபக்கிடம் “ரியலீ லைக் யு” என்று சொன்னாயே நிஜமாகவே நீ திபக்கை விரும்புகிறாயா? இப்படிப் பல கேள்விகளை அவள் மனம்க் கேட்க மிகவும் குழம்பி போயிருந்தாள் அனு.

தொடரும் . . .

Episode # 05

Episode # 07

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.