(Reading time: 10 - 19 minutes)

08. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ரு வழியாய் வீட்டை அதகளப்படுத்திய கும்பல் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.. சாரதாவுக்கும் ராமமூர்த்திக்கும் உயிர் போய் உயிர் வந்ததை போல் இருந்தது.. ஆனாலும் என்ன செய்வது இன்னமும் தங்களை பற்றியே சுயநலமாய் சிந்திக்கும் தங்கள் மூத்த மகளையும் இரண்டாம் மகளையும் நினைத்தால் ஆத்திரமும் ஆயாசமும் தான் மிஞ்சும் என்று நினைத்த சாரதா, 'இப்படி கூட அடித்து பிடுங்குபவள்களா தன் பிள்ளைகள்.. மூத்தவள் என்று அவளுக்கென்று எல்லாவற்றிலும் முதலிடம் கொடுத்து வளர்த்தேன்.. அப்படி கூட துளியும் நன்றி கிடையாது.. இவள் பரவாயில்லை.. கல்யாணி பெரியவளை விட ரொம்ப மோசம்.. அவளே தேவலை என்று ஆக்கி விடுபவள்.. எப்படித்தான் என் வயிற்றில் வந்து பிறந்தார்களோ.. மஹதி மட்டும் தான் விதிவிலக்கு இந்த மூன்று பெண்களில்..நாலாவதை நினைத்தால்.....'என்று நினைத்து கொண்டிருக்கும் போதே

"குட் மார்னிங்க் மேடம்", என்று கோரஸாக குரல் கேட்க, கவனம் கலைந்தவள் வாசல் பக்கம் பார்த்தாள்..

"வாங்கோம்மா.. எல்லாரும் ரூமிலே போய் உட்காருங்கோ.. தோ நான் ரெண்டு நிமிஷத்திலே தண்ணி பாட்டிலோட வந்துடறேன்..", என்று உள்பக்கம் நடந்தாள் சாரதா.

vasantha bairavi

அன்றைக்கு மஹதிக்கு மத்தியான ஷிஃப்ட் ஆதலால் அவளும் கூடத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி எதையோ படித்து கொண்டிருந்தாள். சாரதா இரண்டு பாட்டில்களில் தண்ணீரை எடுத்து கொண்டு ரூமில் போய் அமர்ந்தாள்.

"சாரிம்மா இந்த பத்து நாளா நான் உங்களுக்கு சரியா கிளாஸ் எடுக்க முடியலை.. வீட்டிலே பெண்கள் வந்ததால் ஏகப்பட்ட வேலைகள்.. அதான் ரெண்டு நாளுக்கு ஒருமுறை உங்களையெல்லாம் வரச் சொன்னேன்.. தப்பா நெனைச்சுக்காதேங்கோ இனிமேல் ரெகுலரா இருப்பேன்", என்று பள்ளி மாணவி போல் பேசிவளை பார்த்த கலா,

"மேடம் சாரியெல்லாம் எதுக்கு.. எங்களுக்கும் தெரியாதா நீங்க பிஸியா இருந்தது.. அதான் நாங்களும் எங்களுக்கு தேவையான தியரி வொர்க்கெல்லாம் அந்த சமயத்துலே கொஞ்சம் முடிச்சோம்.. மேடம்".

"ரொம்ப தாங்க்ஸ்மா .. சரி இன்னிக்கு கீதா நீ கேட்டியே அந்த சினிமா பாடல்களில் ராக பிரயோகம்றதைப் பத்தி பார்க்கலாமா.. நீ என்ன ராகம்லாம் அதுக்கு செலெக்ட் பண்ணி வெச்சிருக்கே.."

"மேடம் எனக்கு முதலில் லலிதா ராகம் ரொம்ப பிடிக்கும்..உங்களுக்கு தெரிஞ்ச பாப்புலர் க்ருதியை எனக்கு சொல்லிக் கொடுங்கோ அதை பேஸ் பண்ணி நான் சினிமா பாடல்கள் சொல்லறேன்..", என்றவளை பார்த்த சாரதா

"கொஞ்சம் இரு என் பொண்ணு மஹதியை கூப்பிடறேன்..அவளுக்கும் இந்த டாபிக் ரொம்ப பிடிக்கும்" என்றவள்,

"மஹதி கொஞ்சம் இங்கே வாம்மா", என்று அழைத்தாள். வந்தவளிடம் விஷயத்தை சொன்னவர்,

"நீ கூட இதிலெல்லாம் நிறைய கண்டு பிடிப்பாயே எங்கே சொல்லு பார்ப்போம்..கலாவுக்கு லலிதா ராகத்துலே ஏதாவது பாபுலர் பாட்டு வேணுமாம்.."

"அம்மா..தீக்ஷிதர் க்ருதியிலே நீ எக்ஸ்பர்ட்டாச்சே.. அதான் நீ அடிக்கடி வெள்ளிக்கிழமை பாடுவியே"

"ஹிரண்மயீம் லக்ஷ்மீம்..

சதா பஜாமி"

என்றவள்..அழகாய் அந்த க்ருதியை லலிதா ராகத்தில் பாடி முடித்தாள்...கேட்ட அனைவருக்கும் கண்களில் நீர் பெருகியது..

You might also like - Pani paarai... A family drama...

"தங்கத்தாமரை மகளான லக்ஷ்மி தேவியை குறித்த இந்தப்பாடலில் தீக்ஷிதர் அவரை ரக்ஷிகும்படி கேட்டுக் கொள்கிறார்..தீக்ஷிதர் தேவியின் அருளை வேண்டி யாசிக்கிறார்...அவள் கடக்ஷமில்லாமல் ஏதும் நமக்கு கிடையாது", என்று பாடலின் உட்கருத்தையும் அனைவருக்கும் விளக்கினாள் சாரதா.

"சோ இந்த பாடல் அமைந்த லலிதா ராகத்தில் மிக பிரபலமான ஒரு பாடல் அமைதிருக்கிறது..அது தான் நம் காதல் நாயகன் கமலின்",

" இதழில் கதை எழுதும் நேரமிது.

.இன்பங்கள் அழைக்குது."

என்று பாடல் முழுவதையும் பாடியவள்., இந்தப் பாட்டு உன்னால் முடியும் தம்பி படத்தில் வருகிறது..", என்று முடித்தாள் மஹதி.

படபடவென்று அனைவரும் கைகளை தட்டினர்.

"அக்கா சூப்பர்..நீங்க சினிமாவிலே பாடப் போகலாம்க்கா..அவ்வளவு அருமை உங்க வாய்ஸ்..பாரம்பரிய சங்கீதம் மெல்லிசை ரெண்டுக்கும் பொருத்தமான குரலிதுக்கா..நீங்க ஏன் பாடறதில்லை?..", என்று ஆதங்கத்துடன் கேட்ட கலாவை பார்த்த மஹதி வெறும் புன்னகையை பதிலளித்து தாயை பார்த்தாள்.

"இல்லேம்மா அவளுக்கு எங்கே டயம்.. நான் கூட எவ்வளவோ சொல்லறேன் குரலை இப்படி துரு பிடிக்க விடாதேன்னு.. ஏதோ இன்னிக்கு உங்க புண்ணியத்துலே இந்தமட்டுமாவது பாடினா.", என்று அங்கலாய்த்துக் கொண்டாள் சாரதா

"அக்கா ரீதி கௌளையில் ஒரு சினிமா பாட்டு.."

"ம்ம்..தலையை குனியும் தாமரையே..

உன்னை எதிர்ப்பார்த்து

கண்ணிரண்டும் வேர்த்து"

அப்புறம்..

"கண்கள் இரண்டால்,

உன் கண்களிரண்டால்,

கட்டியிழுத்தாய் இழுத்தாய்

அது போதாதென"

"இதையே

"குருவாயுரப்பனே அப்பன்

ஸ்ரீ க்ருஷ்ணன்"

என்று பாடியவளுக்கு அடுத்த இரண்டு மணினேரம் நேரம் போனது தெரியவில்லை..கடைசியில்

"என்னம்மா போதுமா? இல்லை இன்னமும் ஏதாவது நான் பாடனுமா?.."

"சூப்பர்டி மஹதி.. இது போதும்.."

"அக்கா என்னொட ஃப்ரெண்ட்ஸ் மூணு பேர் அமெரிக்காவிலேர்ந்து ஸ்கைய்பிலே சொல்லிதர முடியுமான்னு கேக்கறா?.. மேடம் கிட்டயும் சொன்னேன்..அவ மெயில் ஐ.டி யையும் கொடுத்தேன்.. நீங்க ஏதோ ரெடி பண்ணப் போறேள்னு மேடம் சொன்னாங்க.. எப்போ க்ளாஸ் ஆரம்பிக்கப் போறேள்?

"ஒ நீ வந்து ரெண்டு நாள் ஆச்சு இல்லையா..நேத்திக்கே அவா மூணுபேரும் பேசிட்டா..நாளைலேந்து கிளாஸ் ஆரம்பம்..தலா வாரம் ரெண்டு கிளாஸ் ஒரு ஒரு மணி நேரம்.. ஏற்கனவே நான் அவா கிட்டே பேசிட்டேன்..சோ உங்க மேடம் நாளைலேந்து இன்டெர்னெட்டில் பாடப் போறா.. சந்தோஷம் தானே..", என்று விஷயத்தை சொன்னாள் மஹதி

"மஹதி நாளைக்கு எப்போம்மா கிளாஸ் சொல்லியிருக்கே.?"

"அம்மா கவலையை விடு நான் அவாளுக்கு ஏற்கனவே மெயில் அனுப்பிட்டேன் .. நாளைக்கு கார்த்தாலே ஆறு மணிக்கு ஒருத்திக்கும் ஏழு மணிக்கு ஒருத்திக்கும் ஒத்துண்டு இருக்கேன்.. இன்னொருத்தி ராத்திரி கிளாஸ் கேட்டிருக்கா.. அவ ஏதோ டாக்டராம்.. அதனாலே அவளுக்கு டைம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வேணும்னு கேட்டிருக்கா.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.