(Reading time: 10 - 19 minutes)

".. அவளா.. ரொம்ப நன்னா பாடுவா மேடம்.. இன்ஃபாக்ட் அவ ஏன் டாக்டருக்கு படிக்கறான்னே எனக்கு தோணும் .. அவ்வளவு ஞானம் அவளுக்கு.. ஏதோ பாரம்பரியம் பத்தி ஆராய்ச்சி பண்ணறா.. லாஸ்ட் இயர் நான் மார்கழி உத்ஸவத்து அமெரிக்காவுக்கு என்னோட சங்கீத குரு கோகில வாணி மேடமோட போயிருந்தேன் .. அப்போ தான் அவ கச்சேரியை கேட்டேன்.. சிம்ப்ளி சூப்பர்ப்.. அக்கா..இப்போ நீங்க பாடினேளே ஆழ்ந்து அனுபவிச்சு..அப்படி இருக்கும் அவ குரல்.. பாட்டுக்குன்னே பொறந்தவ மாதிரி இருப்பா.. ஆனா டாக்டரா போயிட்டா.."

"ஒ வெரி குட்.. இப்படிப்பட்ட சிஷ்யை தான் அம்மாக்கு வேணும்.. தனக்கு பிறகு யாராவது தயாரா இல்லையேன்னு ஏங்கிண்டு இருக்கா.. வரட்டும் அவள்.. நன்னா கவனிச்சிக்க சொல்லறேன்", என்றாள் மஹதி.

"தாங்க்ஸ்க்கா.. என்னோட குரு கோகிலா மேடமும் அவ குரு வேதா மேடமும் சின்ன வயசுலேந்து ஒரே குருகுலத்திலே படிச்சவா... அவாளோட சிஷ்யைன்னா நிச்சயம் நீங்க ஒரு நல்ல பாடகியை எதிர் பார்க்கலாம்.. சரி மேடம்.. நான் கிளம்பரேன் ரொம்ப நாழியாயிடுத்து", என்று விடை பெற்றாள் கலா..அனைவரும் ஏதோ சளசளத்தபடி வெளியேறினர்.

"ம்மா.. பரவாயில்லை இந்த பொண்கள்ளாம் நல்ல மாதிரியா இருக்கா.. மத்தவாளுக்கு உதவற குணம் ரொம்ப பெரிசு இல்லையா..அவளுக்கு என்ன போச்சு நீங்க ஸ்கைப்பிலே சொல்லிக் குடுத்தாலும் சொல்லிக் குடுக்காவிட்டாலும்.. ஏதோ ஜென்ம பந்தம் போல ஒத்தாசை பண்ணறா."

"ஆமாம்டி மஹதி.. நானே உன்னை கேக்கனும்னு நினைச்சேன்.. நீ அவாளோடல்லாம் பேசிட்டயா.. பண கணக்கு பத்தியெல்லாம்.. அப்புறம் பின்னாடி ஏதும் பிரச்சனை வரக் கூடாது.. நமக்கு அங்கேயெல்லாம் எப்படி சார்ஜ் பண்ணுவானு தெரியாதே?", என்று கவலைப்பட்டாள்.

"அய்யோ அம்மா.. அந்த பிரச்சனையை நீ என் கிட்ட விட்டுடு.. இங்கே இருக்கறவா ஒரு கிளாசுக்கு இருநூறு ரூபாய் வாங்கினா.. அங்கே நாலு பங்கு அதிகம்.. சீனியர் ஸ்டூடன்ட்ஸுக்கு ஒரு கிளாசுக்கே ரெண்டாயிரம் மூவாயிரம் தருவா.. நான் வாரத்துக்கு ரெண்டு கிளாஸ்னு சொல்லியிருக்கேன்.. மூணு பேருமே சீனியர் ஸ்டூடன்ட்ஸ்.. அதனாலே.. நல்ல வருமானம் வரும் உனக்கு.. அதை இங்கே நம்ம அக்கவுன்டிடிலே போட சொல்லிட்டேன்..சோ..கவலையில்லாமல் கிளாஸ் நடத்து..", என்றாள் மகிழ்ச்சியாய்..

"இல்லைடி.. பணத்துக்காக நம்ம கலையை விக்கறாப்போல ஆயிடக் கூடாது.. இந்த பொண்ணுகளுமே மாசம் மொத்ததுக்கும் சேர்த்து தலா அஞ்சாயிரம் தரோம்ன்னா..ஏதோ என் பொல்லாத நேரம் நம்மாத்துலே எவ்வளவு கொட்டினாலும் நிறைய மாட்டேங்கறது.. பார்ப்போம்.. வசந்துக்காகவேணும் நான் இதை செய்யனும்.. பாவம் கொழந்தை ஏதோ கோச்சிங்க் போகனும்னு ரொம்ப ஆசைப்படறான்."

"அம்மா.. அவனுக்குன்னு வேளை வந்தா கோச்சிங்க் இல்லாம கூட அவன் பாஸாயிடுவான் நீ வருத்தப்படாதே.. நான் எங்க சீனியர் டாக்டர் கிட்ட சொல்லி ஏதாவது அவனுக்கு செய்ய முடியுமான்னு பார்க்கறேன்..", என்று கூறியவள்,

"அம்மா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்.. நாலு மணிக்கு கிளம்பனும்", என்று கூறி தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

தே சமயம் சென்னை ஏர்போர்ட் அருகிலிருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் தூங்கலாமா வேண்டாமா என்று தனக்குள்ளே தர்க்கித்தபடி மடியில் ஒரு தலையனையை பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள் பைரவி.. அன்றைக்கு அதிகாலை தான் நியூயார்க்கிலிருந்து சென்னை வரும் விமானத்தின் வழியே இந்தியா வந்து சேர்ந்திருந்தனர் பைரவியும் அஜயும்... அஜய் தன் ரிசர்ச் விஷயமாகவும் பைரவியும் தன் ஆராய்ச்சி தொடர்பாகவும் இந்தியா வந்திருந்தார்கள்.

பைரவிக்கு நம்பவே முடியவில்லை தான் இந்தியாவில் அதுவும் சென்னையில் இருக்கிறோம் என்பதை.. ஏதோ தாய் மடியில் தவழ்கிற மாதிரி ஒரு சிலிர்ப்பு உள்ளே இன்னமும் ஓடியவாறு இருந்தது.. என்னதான் வீட்டில் தமிழ் நன்றாய் பேசி வளர்த்தாலும் எப்போதும் ஆங்கில முகங்களையே பார்த்து பழகி இருந்ததில்.. சென்னையில் தன்னை போல் ஒத்த நிறத்தவர்களை காணும் போது பரவசமே உண்டாயிற்று.. இவர்கள் என் மக்கள்,,இது என் ஊர், என் கலாச்சாரம் என்று மனதில் உற்சாகம் குமிழிட்டது..

ஏற்கனவே சில இந்திய நண்பிகள் சொல்லியிருந்தபடி ஜெட்லாகிலிருந்து தப்பிக்க வந்தவுடன் அந்த டைம் சோனுக்கு ஏற்ப முதல் நாளிலிருந்த பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து.. நல்ல தூக்கம் வந்தாலும் கூட வலுக்கட்டாயமாய் விழித்திருந்தாள் பைரவி.

ஹோட்டலில் அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தான் அஜய்.. நேரத்தை நெட்டித் தள்ளியபடி உட்கார்ந்திருந்தவளுக்கு வெளியே ஏதாவது சைட் சீயிங்க் போகலாமா? என்று யோசனை ஓடியது.. ஆனாலும் கொஞ்சம் தயக்கமாய் இருந்தது.. 'நமக்கோ யாரையும் இங்கே தெரியாது.. முதலில் நம் ஃப்ரெண்ட் கலாவுடன் பேசணும் அதற்கு பின்..', என்று யோசித்தவளுக்கு

"ம்ம்.. அந்த ம்யூசிக் டீச்சர் வீட்டுக்கு நாளைக்கே போகிற மாதிரி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.. பின்னர் மாமா எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை எப்படியாவது அவர் இருக்குமிடத்தை கண்டு பிடிக்க முடிந்தால் நல்லது..' என்று நினைத்தவளுக்கு இன்னமும் கூட நம்ப முடியவில்லை அப்பாவும் அம்மாவும் தான் சென்னை வருவதை தடுக்காமல் விட்டதை.. அவர்களுக்கு எப்போதுமே இங்கு வருவது பிரியம் இல்லை..குடும்ப பிரச்சனைகளால் கசந்து விட்ட உறவுகளை சரி செய்யவும் அவர்கள் மனம் இடம் கொடுக்க வில்லை..அட்லீஸ்ட் நாமாவது முயற்ச்சிப்போம்', என்று நினைத்தவள் ஃபோனை எடுத்து கலாவிடம் பேசத் தொடங்கினாள்.

ரெண்டு ரிங்க் போனது ஃபோனை எடுத்தாள் கலா.."ஹலோ"

"ஹேய் கலா.. பைரவி ஹியர்.. நீ எப்பிடி இருக்கே?"

"ஹாய் பைரவி வாட் எ சர்ப்ரைஸ்.. என்ன இந்த டயத்திலே கூப்பிடறே?.. இன்னமும் தூங்கப் போகலை?"

"மத்தியானம் ரெண்டு மணிக்கு யாராவது தூங்குவாளா?.. ம்ம்.. என்ன இன்னும் புரியலையா?.. யெஸ் மேன்..ஐ யாம் இன் இண்டியா.. தட் டூ இன் சென்னை."

"வாட் அ சர்ப்ரைஸ்.. இப்போ தான் நான் மியூசிக் கிளாஸ் முடுச்சுட்டு வரேன்.. உன்னை பத்திக் கூட அந்த சாரதா மேடம் கிட்ட சொன்னேன்.. பார்த்தா நீயே இங்கே வந்து நிக்கறாய்.."

என்று வளர்ந்தது அவர்கள் உரையாடல்.. அன்று சாயந்திரம் ஹோட்டலில் வந்து அவளை சந்தித்து மற்ற விவரம் பேசுவதாக கூறிய கலாவிற்கு நன்றியை தெரிவித்துவிட்டு.. ஃபோனை கட் செய்தவளுக்கு மனம் இறக்கை கட்டிகொள்ளாமலேயே பறக்கக் துவங்கியது..

மனதுள் அந்த பெயரை ஒருதரம் உச்சரித்து பார்த்துக் கொண்டாள்.. இனம் புரியா பரவசம் அவளை ஆட்கொண்டது.

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.