(Reading time: 16 - 31 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 07 - வத்ஸலா

டுத்த ஒரே வாரத்தில் நிச்சியதார்த்தம். 'நிச்சியாதார்த்ததுக்கு எங்க சைடுலேர்ந்து நிறைய பேர் வருவா.' சொன்னார் வாசுதேவன்.

'ரொம்ப சந்தோஷம். பெரிய மண்டபமா பாத்துடறேன்' சொன்னார் கோதையின் அப்பா.

'எதுக்கு அவசியமில்லாத செலவு பண்றேள்? எங்காத்திலேயே வெச்சுக்கலாமே? நிச்சியம் பொண்ணாத்திலேதான் நடக்கணும் அது இதுன்னு எந்த ஃபார்மாலிட்டியும் வேண்டாம். இனிமே நாம எல்லாரும் ஒரே குடும்பம் தானே' வாசுதேவன் புன்னகையுடன் சொல்ல நிஜமாகவே நெகிழ்ந்து போனார் அப்பா.

Katrinile varum geetham

'வேதா போட்டோ இருக்கா? ஆவலுடன் கேட்டார் கோகுலின் பெரியம்மா யசோதா. 'உங்க பொண்ணை ஒரு தரம் பார்த்திருக்கேன். பார்க்க லட்சணமா இருப்பான்னு தேவகி சொன்னா. நேக்கும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.'

ஓடிச்சென்று அவளது ஒரு போட்டோவை எடுத்துக்கொண்டு வந்தார் ஸ்ரீதரன். அதை பார்த்தவுடனேயே எல்லார் முகத்திலும் ஒரு திருப்தி புன்னகை.

'முரளி சிங்கப்பூர் போயிருக்கான், திரும்பி வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். கரெக்டா நிச்சியதார்ததுக்குதான் வருவான்னு நினைக்கிறேன்  இதை அவனுக்கு அனுப்பி வைக்கிறேன். அவன் எப்படியும் ஒகே சொல்லிடுவான். வேணுமானா, அவா ரெண்டு பேரையும் இன்டர்நெட்லே பேசிக்க சொல்றேன். இந்த காலத்து குழந்தைகள். இப்பவே  மனசிலே இருக்கறதை பேசிண்டுடுட்டா பின்னாலே பிரச்சனை வராது பாருங்கோ. உங்க பொண்ணு போன் நம்பரையும் குடுங்கோ ' யசோதா சொல்ல சந்தோஷமாக தலை அசைத்தார் அப்பா.

'டேய்  இந்தாடா'  கோகுலிடம் அந்த போட்டோவை நீட்டினார் பெரியம்மா. 'இதை கம்ப்யூட்டர்லே முரளிக்கு அனுப்ப முடியுமா?

'நன்னா அனுப்பலாம். நான் பார்த்துக்கறேன்' சொல்லியபடியே போட்டோவை ஒரு முறை பார்த்துவிட்டு தனது சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான் கோகுல்.

எல்லாரும் விடைப்பெற்று காரில் ஏறிக்கொள்ள, கோகுல் மட்டும் காரில் ஏறவில்லை .'இங்கே ஒரு ஃப்ரெண்டை பார்க்கணும் பார்த்திட்டு நான் ஆத்துக்கு வந்திடறேன்'

கிட்டதட்ட கால் மணி நேரம் கடந்திருக்கும். வாசுதேவன் குடும்பத்தின் புகழ் பாடிக்கொண்டே இருந்தார் அப்பா. அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்கவில்லை. எல்லாவற்றையும் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் கோதை.

You might also like - Rojavai thalattum thendral... A breezy romantic story 

தே நேரத்தில் சரவணனுடன் காரில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தாள் வேதா.

'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.? இன்னைக்கு ஆத்திலே என்னை பொண்ணு பார்க்க வந்திருப்பா. அப்பா மத்தியானமே போன் பண்ணி என்னை சீக்கிரம் வரச்சொன்னார்'

'ஓ அப்படியா?' அவனுக்குள்ளே பல்வேறு கணக்குகள் ஓடிக்கொண்டிருந்தன.

'என்ன சாதரணமா அப்படியாங்கிறேள்? பெரிய இடம் அப்படின்னு அப்பா சொன்னார். கல்யாணம் நிச்சியம் ஆனாலும் ஆயிடும். சொல்லியபடியே தனது கைப்பேசியை மறுபடியும் அவள் உயிர்ப்பித்த அடுத்த நிமிடம் வீட்டிலிருந்தது அழைப்பு.

யோசித்தபடியே அழைப்பை ஏற்றாள் வேதா 'அப்பா... சொல்லுங்கோ'

'என்னமா இப்படி பண்ணிட்டே? உனக்காக எவ்வளவு நேரம் காத்துண்டு இருந்தோம் தெரியுமா?'

'இல்லப்பா... ஒரு மீட்டிங்.. கொஞ்சம் பிசியா இருக்கேன் பா....'

'சரி விடு. நோக்கு கல்யாணம் நிச்சியம் ஆயிடுத்து மா. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம். நான் இப்போ கோவிலுக்கு போறேன். வர ராத்திரி எட்டு மணி ஆகும். நீயும் அதுக்குள்ளே ஆத்துக்கு வந்திடு. மீதிய ஆத்துக்கு வந்ததும் பேசிக்கலாம். வெச்சிடறேன்' தனது மகளை முழுமையாக நம்பும் ஒரு தந்தை மகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் அங்கே.

அதிர்ச்சியின் எல்லைக்கு போனாள் வேதா 'இப்போ என்ன பண்றது கோகுல். அப்பா கல்யாணம் நிச்சியம் பண்ணிட்டார். உங்காத்திலே நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாளா? அவனை கவலையுடன் பார்த்தபடியே கேட்டாள் வேதா.

'ம்? கொஞ்சம் கஷ்டம்தான்... பேசிப்பார்க்கலாம் அவள் தவிப்பும் அவள் நிலைமையையும்  புரிந்துக்கொண்டவனாக குரலில் சேர்த்துக்கொண்ட கொஞ்சமான அலட்சியத்துடன் சொன்னான் சரவணன்.

'என்ன கோகுல் இப்படி சந்தேகமா ... நேக்கு பயம்மா இருக்கு.... அவளது பதற்றம் அவனது தைரியத்தை அதிகப்படுத்தியது.

'இப்போ உடனே பேசறது கஷ்டம்டா செல்லம். ஒண்ணு பண்ணலாமா நாம முதல்லே கல்யாணம் பண்ணிக்கலாமா? அதுக்கப்புறம் ஆத்திலே போய் நின்னா அவா ஏத்துண்டு தானே ஆகணும்?

'இல்லை அது வந்து எங்கப்பா... எங்கப்பாவை விட்டு நான் எப்படி? தயக்கமும், பயமுமாக சொன்னாள் வேதா.

'சரி விடு உன்னை உங்காத்திலே விட்டுடறேன். உங்கப்பா சொல்ற பையனையே நீ கல்யாணம் பண்ணிக்கோ... நான் இப்படியே உன்னை நினைச்சிண்டே....'

'ஏன் கோகுல் இப்படியெல்லாம்... ப்ளீஸ் கோகுல்... லவ் யூ கோகுல்... நேக்கு நீங்க வேணும்.... ப்ளீஸ் கோகுல்...'

'அப்போ நான் என்ன சொன்னாலும் கேட்பியா? சொன்ன இடத்துக்கு வருவியா?' அவள் கண்களை ஊடுருவிய படியே நிதானமாக கேட்டான் சரவணன்.

.........................

'சொல்லு ப்யூட்டி... இப்போ நீ சொல்றதுதான் பதில்... இல்லைன்னா ... உன்னை உங்க ஆத்திலே விட்டுட்டு நான் போயிண்டே இருப்பேன். அப்புறம் உன்னை பார்க்க வரமாட்டேன்.' வார்த்தைகளை நிதானமாக கோர்த்தான் சரவணன்.

சில நிமிட சிந்தனை பின் தட்டு தடுமாறி வந்தது அவள் குரல் 'ம்.... சரி.'

சில நிமிடங்கள் பேசவே இல்லை சரவணன். அவள் வீடிருக்கும் தெருவை நெருங்கியவுடன் காரை ஓரமாக நிறுத்தினான் அவன். சீட்டின் பின்னால் சாய்ந்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் கண்ணில் எங்கிருந்தோ முளைத்ததோ கன்னங்கள் தாண்டி வழிந்தது கண்ணீர்.  

'அய்யோ.... இப்போ எதுக்கு அழறீங்க?

'எனக்கு பயமா இருக்குடா. ஆத்துக்கு போனதும் மனசு மாறிட மாட்டியே? என்னை மறந்திட மாட்டியே?' ஒரு கைதேர்ந்த நடிகனாக குரல் நடுங்க கேட்டான் சரவணன்.

'நான் எப்பவும் மாறமாட்டேன் கோகுல். ப்ளீஸ் அழாதீங்க....' அவனை முழுதாக நம்பிவிட்டவளின் குரல் பதற்றத்துடன் ஒலித்தது.

'நிஜமாவா..? மறுபடி 'நிஜமாத்தானே சொல்றே? மறுபடி கேட்டவன் கடைசியில் தன்னை தேற்றிக்கொண்டவனாக  சொன்னான். 'ரெடியா இரு... நான் எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டு எப்போ வேணும்னாலும் போன்  பண்ணுவேன். நீ உடனே கிளம்ப தயாரா இருக்கணும்.'

'சரி....' அவன் முகம் பார்த்துக்கொண்டே தலை அசைத்தாள் வேதா.

அவளை அங்கிருந்த கோவிலின் வாசலில் இறக்கி விட்டு, கை அசைத்து விட்டு காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான் சரவணன்.. மனம் பாரமாக அழுத்திக்கொண்டிருக்க வீட்டுக்கு செல்லும் எண்ணமே வராமல் அந்த கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள் வேதா.

சில நிமிடங்கள் கழிந்திருந்த நிலையில் கோதைக்காக ஒரு கைப்பேசியை வாங்கிக்கொண்டு அந்த மொபைல் ஷோ ரூமிலிருந்து வெளியே வந்தான் கோகுல். இதை அவள் கையில் சேர்க்க வேண்டுமே? என்ன செய்யலாம்? மறுபடியும் அவள் வீட்டுக்கு போவது சரியாக இருக்குமா? யோசித்தபடியே ஒரு ஆட்டோவில் ஏறினான் கோகுல்.

அதே நேரத்தில் தனது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான் சரவணன். மறுமுனையில் விக்கி.

'சூப்பர்டா ... கிட்டத்தட்ட ஜெயிச்சிட்டே போலிருக்கே?

'இல்லடா எனக்கு பயமா இருக்கு. இது சரியா வருமா? எனக்கென்னமோ.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.