Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 20 - 39 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Pin It
Author: vathsala r

மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலா

கொஞ்சம் கூட தயக்கமோ, பயமோ இல்லாமல் நேருக்கு நேராக காமெராக்களை பார்த்து அவன் பேசுவதற்கு வாய் திறந்த நேரத்தில்....

'கொஞ்சம் இருங்க ரிஷி. நானே எல்லாத்தையும் சொல்லிடறேன்' அவன் பின்னாலிருந்து குரல் கேட்டது. எல்லார் பார்வையும் அந்த திசையை நோக்கி திரும்பியது. சில அடிகள் முன்னால் வைத்து அவனருகில் வந்து நின்றாள் அவள். சத்தியமாக அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை ரிஷி. அவனுக்குள் பரவிய திகைப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல், புருவங்கள் உயர கண்கள் நிறைய கேள்விக்குறிகளுடன் அவளை பார்த்தான் ரிஷி.

அங்கே தனது தங்கையின் அறையில் தனது தோளில் சாய்ந்திருந்த அவளின் தலையை வருடியபடியே டிவியில் பார்வை பதித்திருந்த சஞ்சா, இன்னொரு அறையில் இருந்த சந்திரிக்கா, ராமன் உட்பட எல்லாரிடமும் ஒரே நேரத்தில் திடுக்கிடல். சில நொடிகள் சுவாசிக்க கூட மறந்திருந்தனர்.

Manathora mazhai charal

ரிஷியையும் அவளையும் சேர்த்து காமெராக்கள் விழுங்கிகொண்டிருக்க, அங்கே  வீட்டில் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்ட மகிழ்ச்சியில் டிவியின் திரையிலேயே பதிந்து கிடந்த சில கண்களில் உச்சக்கட்ட அதிர்ச்சி பரவிக்கிடந்தது.

'இவள் திருமணதிற்கு சென்றிருக்கிறாளா என்ன?' 'என்ன பேசப்போகிறாள் அவள்? 'நமது திட்டமெல்லாம் இப்போது நொறுங்கிப்போய் விடாதா? செய்வதறியாது அமர்ந்திருந்தனர் அவர்கள்..

சட்டென புரிந்தது ரிஷிக்கு. எய்தவனை நோக்கியே அம்பை திருப்பி விடும் அவளது திட்டம் புரிந்தது அவனுக்கு. அங்கே பேசுவதற்கு தன்னை அவள் அழகாக தயார் படுத்திக்கொண்டு வந்திருப்பதும் புரிந்தது. ஆனால் இத்தனை பேருக்கு முன்னால் அவளுக்கு எத்தனை பெரிய களங்கம் இது?' நிச்சயமாக உடன்பாடு இல்லை அவனுக்கு.

.'நீ எதுக்கு இங்கே வந்தே?' என்றான் அடிக்குரலில் 'உள்ளே போ... நான் பேசிட்டு வரேன்'. மற்ற நேரமாக இருந்திருந்தால் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று உள்ளே நிறுத்தியிருப்பான், ஆனால் இப்போது அது இயலாத காரியம். அவனது அசைவுகள் ஏன்? முக பாவங்கள் கூட தெளிவாக, நேராடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் கற்பிக்கபடும்

ரிஷியை ஒரு தீர்கமான பார்வை பார்த்துவிட்டு, எல்லாருக்கும் கேட்கும் படியே சொன்னாள் அவள் 'உண்மைகளை நீங்க சொல்றதை விட என் வாயாலே நானே சொன்னா தான் சரியா இருக்கும் ரிஷி.'

'நீ உள்ளே போன்னு சொன்னேன்....' கொஞ்சம் காரமாகவே வெளி வந்தன வார்த்தைகள்..

ஒரு தீவிரமான முக பாவத்துடன் இடவலமாக தலை அசைத்தவள் 'தப்பு செஞ்சது நான் தானே ரிஷி. நான் தான் பேசணும்' என்றாள் சத்தமாக. பின்னர் சட்டென திரும்பியவள் காமெராக்களை பார்த்து சொன்னாள் 'இந்த குழந்தை என்னோடது தான்.' என்றாள்

You might also like - Katrinile varum geetham... A family oriented romantic story 

அதிர்ச்சி அலைகள். எல்லாரிடமும் அதிர்ச்சி அலைகள். குழந்தையுடன் அமர்ந்திருந்தவனே சிலையாய் சமைந்திருந்தான். 'என்ன செய்வதாம் இப்போது???' ரிஷியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உடலும் மனமும் இறுக அந்த இடத்தில் எதையும் பேசிவிட முடியாத சூழ்நிலை கைதியாகவே நின்றிருந்தான் அவன்.

'எந்த அம்மாவும் செய்ய துணியாத, செய்ய முடியாத ஒரு தப்பை நான் செஞ்சிட்டேன். எனக்கு பிறந்த குழந்தையை என் சினிமா வாழ்க்கைக்கு தடையா இருக்கும்னு மறைச்சு வெச்சிட்டேன். நான் ரொம்ப பெரிய சுயநலவாதி.'

அவள் பேசிக்கொண்டிருக்க, இத்தனை நேரம் வளைத்து வளைத்து கேள்வி  கேட்டுக்கொண்டிருந்த அந்த நிருபரின் கைப்பேசி அலறியது. ஓரமாக சென்று அழைப்பை ஏற்றான் அவன்.

'ஹலோ '

'இதுக்கு மேலே நீ யாரையும் ஒரு கேள்வியும் கேட்கக்கூடாது. அங்கிருந்து பேசாம கிளம்பு அங்கே குழந்தையோட உட்கார்ந்து இருக்கான் பார். அவனும் எதுவும் பேசக்கூடாது குழந்தையை அவ கையிலே கொடுத்திட்டு பேசாம எங்கேயாவது போக சொல்லு. இப்போ இங்கே வர வேண்டாம். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்..' மறுமுனையில் அழுத்தமாக ஒலித்தது குரல்.

'எல்லாரும் தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க.' காமெராக்களை பார்த்து கையெடுத்து வணங்கினாள் அவள். நான் செஞ்ச தப்பை உணர்ந்திட்டேன். இனிமே நான் அவளை பத்திரமா பார்த்துப்பேன். என் பொண்ணை என் கிட்டே கொடுத்திடுங்க. ப்ளீஸ்..... ' அவள் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. குரல் நடுங்கியது. அந்த கைதேர்ந்த நடிகை மிக அழகாக நடித்துக்கொண்டிருந்தாள் அங்கே.

அந்த நிருபரின் கண்ணசைவில் மடியிலிருந்த குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு எழுந்தான் அவன். திட்டமிட்டுக்கொண்டு வந்த காட்சி அப்படியே திசை மாறிப்போனதில் கொஞ்சம் தடுமாற்றத்துடன் நடந்து அவள் அருகில் வந்தான் அவன். கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு குழந்தையை நோக்கி கை நீட்டினாள் அவள்.

குழந்தை அவள் கைசேர அதன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள் அவள். உறங்கிக்கொண்டிருந்த பிஞ்சை தன்னோடு இறுக்கிக்கொண்டவள் அவள் அருகில் விழித்துக்கொண்டு நின்றவனை பார்த்து சொன்னாள் 'ரொம்ப நன்றி சார். உங்களாலே தான் எனக்கு புத்தி வந்தது. என் குழந்தையை என்கிட்டே கொண்டு வந்து சேர்த்ததுக்கு நன்றி.'

இந்த களேபரங்கள், எல்லார் முகத்திலும் தொற்றிக்கொண்டிருந்த பரபரப்புகள் எதை பற்றியும் அறியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது அந்த குட்டி தேவதை. அதனிடம் சென்று விட்ட பார்வையை திரும்ப எடுக்க ரிஷி மிகப்பெரிய முயற்சி செய்ய வேண்டி இருந்தது.

'மேடம்.....' அவளை நோக்கி நீண்டது ஒரு மைக் இந்த குழந்தையோட அப்பா....'

'அது என்னோட பெர்சனல் விஷயம். அதை நான் இங்கே சொல்ல விரும்பலை. ஆனால் ஒரு விஷயம் மட்டும்  தெளிவா சொல்லிடறேன். இந்த குழந்தையோட அப்பா நிச்சியமா சினிமா சம்மந்த பட்டவர் இல்லை. இதிலே தயவு செய்து வேறே யாரையும் இழுத்துவிடாதீங்க ப்ளீஸ்...' தெளிவாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

'மறுபடியும் சொல்றேன் நான் செஞ்சது பெரிய தப்புதான். நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கறேன் இனிமே இந்த தப்பு நடக்காது. இந்த விஷயத்தை இதோட விட்டுடுங்க. நன்றி...' மறுபடியும் காமெராக்களை பார்த்து வணங்கிவிட்டு அவள் கிளம்ப , அங்கிருந்து  நகர்ந்து விட எத்தனித்தான் அந்த குழந்தையுடன் வந்தவன்.

சட்டென அவன் தோளில் விழுந்தது ரிஷியின் கரம். அவன் தோளை அணைத்தபடியே அவன் கண்களை ஊடுருவினான் ரிஷி. இவ்வளவு நெருக்கத்தில் ரிஷியின் கண்கள்!!!!  அவை அவனை என்னவோ செய்தன.

'ரி... ரி... ரி...ஷி... ரி....ஷி....' ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தான் அவன். அவன் உடல் நடுங்குவதை ரிஷியால் நன்கு உணர முடிந்தது. ஆனால் ஏனோ சுள்ளென கொதித்து பொங்கவில்லை ரிஷியின் கோபம். 'இவன் வெறும் பொம்மை, இவனை ஆட்டுவிக்கும் விசை வேறெங்கோ இருக்கிறது, என்பதாலோ என்னவோ, அவன் மீது கொஞ்சம் இரக்கம் கூட பிறந்தது.

'உங்க பேரென்ன??.' நிதானமான தொனியில் கேட்டான் ரிஷி.

'தி தி...வாகர்.....'  ரிஷியை விட்டு விலக மறுத்தன பிரமிப்பும் தவிப்புமாக அலைபாய்ந்த அவனது விழிகள்.

'உள்ளே வாங்க திவாகர்.'....... நாம உள்ளே போய் பேசுவோம்' சொன்னான் ரிஷி.

'அங்கே கூடி இருந்தவர்களின் ஆராய்ச்சி பார்வைகள், ரகசிய கிசுகிசுப்புகள், ஒன்றிரண்டு கேலிச்சிரிப்புகள் எல்லாவற்றையும் கடந்து, மூவரும் உள்நோக்கி நடந்தனர். திவாகரின் தோளை விட்டு கையை விலக்கவில்லை ரிஷி. அந்த அணைப்பில் கட்டுண்டவனை போலத்தான் நடந்தான் திவாகர். அவன் ரிஷியை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை!!!!!

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# # RE: தொடர்கதை – மனதோர மழைச்சாரல்… - 11 – வத்ஸலாMeera S 2016-05-04 15:02
Sema Interesting update vathsu...
Agalya vanthu en kuzhanthai nu solluvanu ethirparkavae illa...
agalya pakkam konjam sanja manasu pogutha?...
thivakar, avan sister, ivanga ellam yaru?
kuzhanthaikum rishi kum enna sammantham?
sanja yen rishi kita ethuvum sollama maraikiran?...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாBhuvani s 2015-11-23 11:28
sema intresting epi mam superb :clap: :clap:
akalya saeriyana timela help panirukanga & pana thapayum unanthutanga bt athu unmayanu next var epi'sla than thaeriyum :)
sanjeev oru nala friend rishikaga niraya help panrar
theeksha papa paesamalae score panranga :dance: :dance:
mam next epilayathu konjm secreta reveal panirunga mam suspence thangala
waitng eagerly 4 ur nxt epi :GL: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:57
thanks a lot buvani for such a beautiful and interesting comment. felt very very happy to read it :thnkx: :thnkx: theeksha score panraalaa :thnkx: :thnkx: next epile konjam clues kodukkiren. ;-) ;-) lightaa sonnaa kooda namma makkal easyaa kandu pidichiduveengale :Q: :Q: enna seyylaam :Q: :Q: yosikkiren ;-) ;-) :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாNithya Nathan 2015-11-21 16:29
அருமையான அத்தியாயம் வத்சு (y) (y) (y)

கலைந்து கிடக்கும் புள்ளிகள் ஒவ்வொன்றையும் இணைக்கும் மையப் புள்ளி தீக்ஷா.

அகல்யா, சஞ்சேய், சஞ்சேய் ரிசியின் எதிரிகள் எல்லோரும் இணையும் புள்ளி தீஷா

தங்கள் வாழ்வில் குழந்தைகளை விட்டுக்கொடுத்துவிட்டு வாழ நினைத்ததால் அகல்யாவும் விட்டுக்கொடுக்க முடியாமல் போனதால் சஞ்சேயும் இணையமுடியாமற் போனது. இன்று ஒரு யாரோ குழந்தைக்காக அவள் தன் எதிர்காலத்தையே விட்டுகொடுத்துவிடத்துணிந்ததின் விளைவு அவளை சஞ்சேயுடன் இணைத்திருக்கிறது.

ஒரு அருமையான கருத்தை புப்படுத்துவதாக சஞ்சேய் , அகல்யா இணை காட்டப்படுகிறது .ஒரு நல்ல விடயத்தை தவிர்க்க நினைக்கும் போது விளைவுகள் நன்மையைத் தரும் என எதிர்பார்ப்பது மடமை. அதுவே பலரின் நல்லதுக்காக சுயநலத்தை தவிர்த்து சிந்திக்கம்போது அது எதிர்பாராத. நன்மைகளைக் கூட தந்துவிடுகிறது.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாNithya Nathan 2015-11-21 16:33
என்னமாதிரியான நட்பு ரிஷி – சஞ்சேயுடையது. நண்பனை பிரச்சனைகளிருந்து காக்க தீக்ஷாவுக்கு தகப்பனான் சஞ்சேய். குழந்தை பற்றிய விபரங்கள் விளக்கங்கள் தெரியாமயே விளைவுகளைப் பற்றி சிந்திக்காம சஞ்சேய்க்காக குழந்தையைப் பொறுப்பேற்க நினைத்தான் ரிஷி
‘’உடுக்ககை இழந்தவன் கைபோ -ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’’

மாறுவது மனிதர்கள் அவர்கள் இயபு. மனிதம் மாறாதது மாறக்கூடாதது. சஞ்சேய், ரிஷியை நோக்கிவரும் ஆபத்து தெரிந்திருக்கிறது. அதிருந்து அவர்களைக்காக்கும் வழியாக தன்னையே நுழைத்துக்கொள்ளும் வழி ததெரிந்திருக்கிறது எனும்போது தீக்ஷா பற்றி உண்மைகள் அகயாவிற்கும் தெரிந்திருக்கிறதா?

சஞ்சேயைவிட்டுப்பிரியும் முன்னே அவள் அறிந்த விபரங்கள் அவை. ஆனா அவனைப் பிரிந்த பின்னும் அவள் அதனை அவளாக வெளியிடவில்லை.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாNithya Nathan 2015-11-21 16:36
சஞ்சேயின் குர பேசி நம்பவைத்து சில விபரங்கள் அறியப் பட்டிருக்கிறது. ஆக அவள் சஞ்சேயைவிட்டுப்பிரிந்தாலும் அவனைக் கெடுக்கும் எண்ணம் அவளிற்கு இருக்கவில்லை பிரிவுக்காலத்தில் எதற்காகவும் குழந்தை பற்றி வாய் திறக்காதவள் இன்று எல்லோர் முன்னும் குழந்தை தன்னுடையது என பொய் கூறி வாய்திறந்துள்ளாள். அவள் செய்யாததிற்கும் செய்ததிற்கும் காரணம் அவள் அடிப்படையில் நல்லவள் என்பதே. சில காரணங்கள் அவளை மோசமானளாக காட்டுகிறது

தீவிர ரசிகன் துரோகியாக மாறும் அளவிற்கு அவனை செத்தியது எது ? தங்கைமீது அன்போ அவள் துழந்தை மீது அக்கறையோ இ. பணம் அவனது குறி. இருந்தும் சஞ்சேயின் கட்டுப்பாட்டி இருந்தவனை விலைகொடுத்து வாங்கியது என்றா சஞ்சேயின் நெருக்கமான யாரோ ஒருவர் அவன் அருகியே இருக்கவேண்டும். தன் ஒருதிட்டம் தோற்றதுமே அடுத்த திட்டத்தை செயற்படுத்த விரையும் அளவிற்கு எதிரியின் கையாள் அருகில் இருக்கிறானா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:53
உங்க analyisis எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நித்யா. :clap: :clap: superb thought process. (y) (y) அஹல்யா அடிப்படையில் நல்லவள் :yes: :yes: (y) தீவிர ரசிகன் துரோகியாக என் மாறினான்? எதிரியின் கையாள் அருகிலேயே இருக்கிறானா? எல்லா கேள்விகளுக்கும் விடை அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துவிடும். :yes: :yes: கதையோட ஒவ்வொரு பகுதியையும் ஆழ்ந்து படித்து நீங்கள் சொல்லும் analysis superb :clap: :clap: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:49
ரொம்ப நல்ல கேள்வி. ரிஷியை நோக்கி வரும் ஆபத்துக்கள் அஹல்யாவுக்கு தெரிந்திருக்கிறது. தீக்ஷா பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கிறதா? (y) (y) போன அத்தியாயத்தில் 'குழந்தை யாரென தனக்கு தெரியாது என்று அஹல்யா ரிஷி கிட்டே சொன்னாள் இல்லையா? அடுத்த அத்தியாயத்தில் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். (y) (y) :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:44
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நித்யா :thnkx: :thnkx: உங்க கமெண்ட் வரும் போது கதையே அழகா ஆனது போல் தோன்றுகிறது. ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க நித்யா. குழந்தை விஷயமே அவர்கள் இருவரையும் மறுபடியும் இணைத்திருக்கிறது. (y) (y) சுயநலம் இல்லாமல் சிந்திக்கும் போது எப்போதுமே எதிர்பாராத நமைகள் கிடைத்துவிடுகிறது. :yes: :yes: (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாflowerr 2015-11-21 14:01
interesting ah irunthathu mam.padikum pothe aduthu ena nadakumnu oru feel.nijamave enaku oru padam pakara mariye irunthathu.antha ponnu arunthathinu tha ninachean.rishi and arunthathi baby nu solvanu expect panune.bt appa cini field ilanu sollavum tha yarune yosika thonuchu.sanjeev....romba romba great.pirinjavanga marupadi searnthuruvangala? ama pattu chellathoda real daddy yaru? eagerly waiting for nxt ep mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:38
Thanks a lot flower for such a beautiful comment. felt very happy :thnkx: :thnkx: Athu arunthathinnu thaan ellarum expect pannuveenganu theriyum athanaale thaan muthalile ellarum shock aananga appadinnu sonna idathile kooda arunthathi perai use pannalai. ;-) ;-) pirinjavanga sernthiduvaangalaa? yosikkiren ;-) pattu chellathoda appa yaaru seekiram solren Thanks again flower :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாusha amar 2015-11-20 21:26
ஹே வத்சலா..

உங்க எழுத்து எனக்கு பிடிக்கும். சீரியஸ் சீன் என்றாலும், வலிக்காம மருந்து ஏத்துவது போல.. Short and Strong and Sweet ஆ... அப்படியே மனசுக்குள்ள பதிய வைச்சிடுறீங்க..

Excellent Episode! Mesmerizing & Thrilling
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:32
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உஷா உங்க கமெண்ட் படிக்க. :thnkx: :thnkx: மனதில் நிஜமாகவே ஒரு மழைச்சாரல். :dance: :dance: feeling very very happy :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாBalaji R 2015-11-20 18:24
Awesome movie experience. sanja!! Great guy. I hope RKs mother never sheds a tear. I find her to be stoic. Kudos to akalya. she turned the tables on whoever is trying to hurt them. Who is the puppet and who is the puppeteer here. The puppet master has kept things interesting. Rishis emotions are very well described. All the scenes are instant classic. Whose trap will divakar turn into. Excellent episode. Just as always, you rock. :clap: :hatsoff: :yes: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:30
Thanks a lot Balaji for such an interesting and beautiful comment. :thnkx: :thnkx: Even I hope RKs mother never sheds a tear. And that is the base of this story. Let me see How things move :-) Felt very happy to read your comment :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # MMSAkila 2015-11-20 14:37
Hi

As usual super!!!
As Mano stated, we have to wait for 15 long days to know the suspense and thrill.How Rishi related to this baby. Eagerly waiting for further updates.
Once again no words to say. Such a nice moving.

How Rishi related to this baby????
Therinjikka avalaga waiting.
Reply | Reply with quote | Quote
# RE: MMSvathsala r 2015-11-26 12:26
Thanks a lot Akila for such a sweet and beautiful comment. Felt very very happy to read it. :thnkx: :thnkx: How is rishi related to this baby? seekiram solren :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாchitra 2015-11-20 12:48
super epi, nan mudala arundathi thannu ninaijen, antha twist super, appuram varisaiya neenga koortha scenes ellam kaelaidoescope madri kan munnadi viriyuthu, it was fantastic to read, as usual emotional play azhagaa varunichirukinga :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 12:01
Romba romba azhagaana commentukku thanks a lot Chitra. :thnkx: :thnkx: unga comment padikkum pothu eppavume oru encouraging feel enakku .Kaleidoscope ---- felt very very happy chitra :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாDevi 2015-11-20 11:37
As usual rocking update Vatsala mam :clap:
Rishi - Sanja -Agalya characterization super :hatsoff:
Rishikkum andha kuzhandaikum enna sambandham :Q:
Arundhadhiyoda reaction enna :Q:
Waiting to read the further episodes (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 11:51
Thanks a lot Devi for such a sweet comment. :thnkx: :thnkx: rishikkum kuzhanthaikkum enna sammantham seekiram solren :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாManoRamesh 2015-11-20 10:03
As always super epi.
:clap: :clap:
Antha suspense ah innum 15 days thalli pottuteengale.
Sharon sonna mathiri Sanja - Agalya scene just Magical. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 11:50
Thanks a lot Mano for such a sweet comment. Feeling very happy. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாnalini 2015-11-20 06:58
:dance: Super episode vatsu ma :clap: :clap: Waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 11:43
Thanks a lot Nalini. Feeling very very happy :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாnalini 2015-11-20 06:55
Hi
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாSharon 2015-11-19 23:58
Superb Episode Vathsu mam :clap: :clap:
Ellar munnadium vandhu paesura penn, naan Agalya nu ninaikala.. arundhadhi nu ninachu dan padikka arambichen :yes: Superb :)
Kai thaerndha nadikai migha azhaagaa nadithaal :hatsoff:
Rishi oda kovam rombavum nyaayam.. Annanai perfect (y)
Aduthu en Agalya vandhadhum, ellam amaidhiyaachu??? So idhai seiravanga, avalukku vaendapattavangala? :o
Sanja- Agalya scene azhagu, Its magical :-)
Mathavanga ellarum saptacha?? ;-) :P Cute Dheeksha :-)
Ellathukum kaaranamaana kaelvi... Andha kuzhandhai yaarodathu??? :-?
Seekiram sollunga Vathsu mam :yes: Naanga pavam la :-) :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 11:42
Thanks a lot Sharon for your beautiful comment. Unga comment enakku spl. kathaiyile irukkira china china vishaynaglai neenga quote panni solrathu enakku romba pidikkum :thnkx: :thnkx: mathavanga ellarum sappittaacha/ naan rasichu ezhuthinathu :thnkx: :thnkx: for quoting that. ahalya vanthathum en ellam maarichu? next epile solren. kuzhanthai yaarodathu sila vaarathile solren :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாJansi 2015-11-19 23:56
கடைசி வரிகளில் ரிஷியின் கேள்விக்கு பதிலாக தான் தான் தீக்‌ஷாவின் அப்பா என்று சஞ்சா சொல்வான் என்றே தோன்றிற்று வத்சலா.

வழக்கம் போல மிக அருமையான அத்தியாயம்.
(y)
சஞ்சாவை பாராட்டாமல் இருக்க முடியாது மிக அருமையான கதாபாத்திரம்.
:clap: அகல்யாவும் கூட தற்போது அந்த வரிசையில் சேர்ந்துக் கொண்டாள்.
:yes பூவோடு சேர்ந்த நார் போலும்.!!

இவர்கள் இருவரும் மறுபடி இணைவார்களா?

திவாகர் தங்கை யார்? ரிஷிக்கு ஏன் உண்மை தெரியவில்லை?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 10:07
உங்கள் அழகான கருத்து பதிவுக்கு ரொம்ப நன்றி ஜான்சி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு :thnkx: :thnkx: இருவரும் இணைவார்களா? இணைக்கலாமா வேண்டாமா? இதைத்தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன். பார்க்கலாம். ரிஷிக்கு ஏன் உண்மை தெரியலை? சீக்கிரம் சொல்றேன். :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாChillzee Team 2015-11-19 23:40
superb epi mam

Antha kuzhanthai yarudaiyathu, athe kelvi than enakum :)

Agalya seithathu avanga mana matrathai theliva kaatuthu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலாvathsala r 2015-11-26 10:04
thanks a lot for your very sweet commen chillzee team. Kelvikku bathil oru sila vaarangalil kidaikkum. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top