(Reading time: 20 - 39 minutes)

'சாப்பிட்டேன் சஞ்சா.' அவன் எதிர்ப்பார்க்காத வகையில் பளிசென்ற பதில் அவளிடமிருந்து. 'நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா? அம்மாவை பார்க்கணும் போலே இருக்கு. வீட்டிலே அவங்க தனியா இருக்காங்க. டி.வி பார்த்தாங்களா இல்லையானு தெரியலை. நான் குழந்தையை தூக்கிட்டு போறேன் சஞ்சா. நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் மிச்சத்தை பார்த்துக்கலாம்.' அவள் படபடவென சொல்ல

'அம்மாவை தானே பார்க்கணும்.. கார் அனுப்பி இருக்கேன். உனக்கு காலைக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திட்டே இருக்காங்க. ஒகே வா? என்றான் ஒரு இதமான புன்னகையுடன்.

வியப்பில் குளித்தவளாக அவள் அவனை பார்க்க 'உன் போன் கிடைக்கலையாம். டி.வி பார்த்திட்டு எனக்கு போன் பண்ணாங்க. ரொம்ப பயந்து போய் பேசினாங்க. அதான் இங்கே வரசொல்லிட்டேன்' என்றான் சஞ்சா. அவன் பேசிக்கொண்டிருக்கும் போது அறையினுள் நுழைந்தான் ரிஷி

.'திவாகர் எங்கேடா?  கேட்டான் அவன்

'அவன் பத்திரமா இருக்கான் என் கஸ்ட்டடிலே' என்று அவன் சொன்ன நேரத்தில் தீக்ஷா கொஞ்ச அசைய துவங்கினாள். இப்படியும், அப்படியும் கொஞ்சம் புரண்டு படுத்து முகத்தை சுருக்கி புருவங்களை கோர்த்து விரித்து அரை விழிப்பு நிலைக்கு அவள் வர..

'ஒரு மேஜிக் பார்க்கறீங்களா எல்லாரும்?' என்று கேட்டபடியே 'பட்டுசெல்லம்... ' என்றான் சஞ்சா.

You might also like - Vasantha bairavi... A neat family story...

இப்போது இல்லை என்றாலும், குழந்தை அவனை எப்போது பார்த்தாலும் அவனிடம் உடனே தாவி வரும் என சஞ்சாவுக்கு தெரியும். குழந்தைக்கும் அவனுக்கும் ஏற்கனவே பழக்கம் என்பது இவர்களிடம் மறைத்து விடக்கூடிய விஷயம் இல்லை என்பதையும் அறிவான் அவன்.

அவனது அழைப்பில் விருட்டென கண் திறந்தது குழந்தை. சில நொடிகள் எதுவும் புரியாமல் அது எல்லாரையும் மாற்றி மாற்றி பார்த்தது.

'பட்டுசெல்லம்... நான்தான்டா கூப்பிட்டேன்' சஞ்சா அழைக்க சட்டென அவன் பக்கம் திரும்பியது அந்த தேவதை.

'டா...டி....' குழந்தை உற்சாகமாக கூவ, அதை அப்படியே அள்ளி எடுத்து ஒரு சுழற்று சுழற்றி அதன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான் சஞ்சா. ஆச்சரியத்திலும், திகைப்பிலும் ஒரு சேர விழுந்து மீண்டனர் மற்றவர்கள் மூவரும். சில நொடிகள் கழித்து மெல்ல மெல்ல விழி நிமிர்த்தி எல்லார் முகத்தையும் படித்தான் சஞ்சா.

'என்னடா இது? உனக்கு குழந்தையை முன்னாடியே தெரியுமா?' கேட்டான் ரிஷி.

'ம்...' என்றான் குழந்தையை தன்னோடு இறுக்கியபடியே.

'அப்புறம் ஏன்டா இவ்வளவு நேரம் எதுவுமே சொல்லலை. யார் குழந்தைடா இது?'

'அந்த திவாகரோட தங்கச்சி குழந்தை'

'அப்போ திவாகர் உனக்கு ஏற்கனவே பழக்கமா? எப்படி பழக்கம்? எனக்கு புரியலை சஞ்சா.' ரிஷி கேட்க பெண்கள் இருவரும் சஞ்சாவையே பார்த்திருந்தனர்.

பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை சஞ்சாவுக்கு. ஏதோ யோசித்தபடியே  'பட்டு பாப்பாக்கு பசிக்குதா? ஏதாவது சாப்பிடறீங்களா? குழந்தையை பார்த்து கேட்டான் சஞ்சா.

மேலும் கீழுமாக தலை அசைத்தது குழந்தை. 'பாப்பாக்கு பசிக்குது...'

'அச்சச்சோ... என் செல்லத்துக்கு பசிக்குதா? வாங்க சாப்பிடலாம்' என்று நகரப்போனவனை தடுத்தது ரிஷியின் குரல்.

'டேய்... இங்கே ஒருத்தன் கேள்வி கேட்டுட்டு இருக்கேன் நீ பாட்டு குழந்தையை கொஞ்சிட்டு இருக்கே? இத்தனை நேரம் இங்கே எல்லாரும் பைத்தியம் பிடிச்ச மாதிரி அலைஞ்சு இருக்கோம் தெரியுமில்ல?. என்ன நடக்குது சஞ்சா?

'இல்லை டா அது...

'என்னடா இல்லை? சரி இந்த இந்த குழந்தையோட அப்பா யாரு? அதை முதல்லே சொல்லு' என்றான் ரிஷி.

Episode # 10

Episode # 12

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.