(Reading time: 5 - 9 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 23 - புவனேஸ்வரி கலைச்செல்வி

மூன்று வருடங்களுக்கு முன்பு ,

இதழில் குறும்நகையுடன் தனது அடையாள அட்டையை பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ் ... " ஹரிஹர சந்தோஷ் " என்றிருந்த தனது பெயரை பார்த்தான் .. " ஹரிஹரன் " இந்த பெயரில் தன்னை அழைப்பவர்கள் மிகக் குறைவு .. அவனுக்கு விவரம் புரிகின்ற வயதில் இருந்தே அவன் பெயர் சந்தோஷ் தான் .. ஏன் ? என்று கேள்வி எழுந்ததுமே சுபாஷின் பிடிவாத குரலும் அவன் நினைவில் நின்றது ..

" அம்மா , என் பேரு சுபாஷ் ..ஷ்ன்னு முடியுது அதே மாதிரி தம்பியும் சந்தோஷ் ..ஷ் ன்னு தான் முடினும் ... ஹரி வேணாம் அம்மா " என்று கொஞ்சம் மழலை குரலில் கெஞ்சும் மகனின் பேச்சினை கேட்காமல் மறுக்க யாருக்குத்தான் மனம் வரும்..?

Enna thavam seithu vitten

அன்றிலிருந்தே அவன் சந்தோஷ் தான் ! ப்பா ...சந்தோஷ் உன் பேருக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறா ? முடியலைடா டேய் " என்று தன்னையே கேலி செய்து கொண்டவன் அந்த விமான நிலையத்தில் இருந்து வெளியேற அங்கு குறும்புடன் சிரித்தபடி நின்றிருந்தான் சுபாஷ் ..

" அய்யோ போச்சு .. இப்போ என்னை பங்கமா கலாய்க்க போறானே " என்று தமையனை பார்த்து முணுமுணுத்தபடியே அவனை நோக்கி நடை போட்டான் சந்தோஷ் ..

" வாடா தம்பி "

" வணக்கம் அண்ணா "

" பார்த்து ரொம்ப நாள் ஆச்சு "

" டேய் அண்ணா "

" டேய் 48 மணி நேரம் ஆச்சு டா சகோ "

" அப்பா எங்க ? உன்னை எதுக்கு அனுப்பி வெச்சார் "

" ஹா ஹா ரெண்டு நாள் முன்னாடி , நான் இனி வெளிநாட்டு வாசம் தான் அண்ணா .. இனிமே நாம ஸ்கைப் லதான் பேசிக்கணும் .. ஐ மிஸ் யூ டா ன்னு டைலாக் பேசி இதே ஏர்போர்ட் ல கட்டிபுடிச்சு நின்னியே அது மறந்து போச்சா சந்தோஷ் கண்ணா ?"

" டேய் அண்ணா , போதும் ரொம்ப ஓட்டாதே "

" ஏதோ கலவரத்துக்கு பயந்துதான் நீ வெளிநாடும் வேணாம் , படிப்பும் வேணாம் ன்னு ஓடி வந்துட்டதா , சன் டிவி இல செய்தி சொன்னாங்க .. உண்மையாடா ?" என்று விடாமல் சலசலத்தான் சுபாஷ் ..

" ம்ம்ம், இல்ல டா .. எப்படியும் படிச்சு வேலைக்கு போயி கல்யாணம் தானே பண்ணிக்க போறேன் ? அதான் நேரடியா கல்யாணத்தை முதலில் பண்ணிக்கலாம்னு வந்தேன் " என்று கண்ணடித்தான் சந்தோஷ் .. "கேடி " என்று சிரித்த சுபாஷும் தம்பியை ஆரத்தழுவி கொண்டான் ..

இரண்டு வாரமாய் மொத்த குடும்பத்தையும் பாடாய் படுத்தி வெளிநாட்டிற்கு சென்றான் சந்தோஷ் ..ஆனால் , அங்கு நடந்த சில சம்பவங்கள் அவன் மனதினை பெரிதும் பாதிக்க , தனது கடமையானது தாய் நாட்டிற்கு தான் சேர வேண்டும் என்ற தீர்மானத்தில் திரும்பி வந்தான் .. அதைதான் கேலியாய் பேசி சிரித்து கொண்டிருந்தான் சுபாஷ் .. அவனது ஒவ்வொரு கேள்விகளுக்கும் கொஞ்சமும் சளைக்காமல் சந்தோஷிடம் இருந்து பதில் வந்தே கொண்டிருந்தது ..

சந்தோஷ் திரும்பி வந்ததில் மொத்த குடும்பத்துக்குமே சந்தோசம் தான் ! அதிலும் முற்றிலுமாய் மகிழ்ந்திருந்தவர் ஜானகி தான் .. சந்தோஷே " என்னம்மா , உங்க முகத்துல 1000 வாட்ஸ் பல்பு எரியுது .. சொல்லி இருந்தா நான் போயிருக்கவே மாட்டேன் ல ?" என்றான் .. மனதிற்குள் ததும்பிய உணர்வுகளை மறைத்தபடி குறும்பாய்

" நீ வேற கண்ணா .. என் சந்தோஷத்துக்கான காரணமே வேற .. எங்க வெளிநாட்டுக்கு போயி படிச்சிட்டு வரேன்னு நீ பாட்டுக்கு ஒரு வெள்ளைகாரியை என் மருமகளா கூட்டிட்டு வந்துட்டா என் பொழப்பு என்ன ஆகுறது " என்றார் அவர் .. அதை கேட்டபடி அங்கு வந்த சுபாஷோ

" கவலையே வேணாம் அம்மா .. நமக்கு தமிழ் நாட்டு மருமக தான் .. என் தம்பி கல்யாணம் பண்ணிக்கத்தான் திரும்பி வந்தானாம் .. இது உங்களுக்கு தெரியாதா ?" என்று சந்தோஷிடம் பேசியதை சபையில் போட்டு உடைந்தான் ..

" டேய் சந்தோஷ் என்னடா இது ?"

" ஐயோ அப்பா, அண்ணா பொய் சொல்லுறான் "

" இல்லபா , இந்த கத்தி படத்துல இளையதளபதி சமந்தாவை பார்த்ததும் ஊருக்கு போக மாட்டார்ல , அந்த மாதிரி இவனும் ஒரு பெண்ணை பார்த்து அவளை மறக்க முடியாம ரெண்டே நாளில் திரும்பி வந்துத்தான் "

" டேய் அண்ணா , எப்படி இப்படி சூப்பாரா கதை சொல்லுற , நான் வேனும்ன மணிரத்தினம் சார் கிட்ட அசிஸ்டண்ட் ஆ உன்னை சேர்த்து விடுறேன் " என்றான் சந்தோஷ் .. இப்படியே சிறிது நேரம் பேசியவன் " ஓகே எனக்கு வேலை இருக்கு " என்றபடி அவன் அறைக்குள் புகுந்துகொண்டான் ..

" என்னப்பா மூணு நாளா , சார் இதே வேலையாய் இருக்கார் ?"

" தெரியலையே அப்பா .. ஒருவேளை உண்மையிலேயே பொண்ணு பார்த்துட்டானோ ??? "

அன்பு நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம் .. இவ்வளவு நாட்களாய் நீங்க தந்துவரும் ஆதரவுக்கு என் நன்றியை சொல்லியே ஆகணும் .. சில்சீக்கும், சில்சீ மூலமாக கிடைத்த நண்பகர்களுக்கும் நான் நிறையவே கடன் பட்டு இருக்கேன் .. என்னுடைய எந்த கதையுமே சரியான நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இப்போது இருக்கிறேன் .. தொடர்ந்து கதை படிக்கும் வாசகர்களுக்கு இந்த மிக கண்கூடாக தெரியும் ..

சில்சீ ஒரு வலைத்தளம் என்பதை விட எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளோருக்கு ஊக்கம் அளிக்கும் தூண்டுகோளாய் இருக்கிறது என்பதுதான் உண்மை .. இப்போ எதுக்கு இவ்வளவு பில்ட் அப் புவி ன்னு சில பேரு கேக்குறது புரியுது .. ;) இந்த முறை அனுப்பிய பதிவு அத்தனை நிறைவானதாய் எனக்கு தோன்றவில்லை .. சில முக்கிய காரணங்களினால் என்னால் கதை எழுதமுடியாமல் போய்விட்டது ..அதே நேரம் எந்தவொரு பதிவையும் அனுப்பாமலும் இருக்க விரும்பவில்லை .. சில்சீ வலைத்தளத்தை சேர்ந்த அனைவருமே அதிகம் சகிப்புத்தன்மையோடு இருப்பதை நான் எனக்கு சாதகமாய் எடுத்து கொள்ள விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன் .. வாசிப்பவர்கள் என் நண்பர்கள் தானே , என்ற அலட்சியம் எனக்குள் எழவில்லை என்பதை கூறவே இந்த பதிவு :) கூடிய விரைவில் அனைத்ததும் சீரமைத்துவிட்டு எனது கதைகளை எப்போதும் போல தொடர்கிறேன் நண்பர்களே .. மன்னிப்பும் நன்றிகளும் :)

தவம் தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.