(Reading time: 34 - 67 minutes)

19. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

சென்னை:

“ஜீவாட்டயோ ப்ரபுட்டயோ இப்ப விஷயத்தை சொல்ல வழியே இல்லையே….என்ன செய்ய ப்ரவிர்?” தவித்தாள் சுகா.

மெல்பர்ன்:

Nanaikindrathu nathiyin karai - 19எந்த ஒரு மனித உயிரையும் விட விளையாட்டு என்பது முக்கியமல்ல, சொந்த குழந்தையை விட ஒரு தகப்பனுக்கு தன் தொழில் மேலானதும் அல்ல, க்ரிகெட் என்பது தாய்நாட்டின் நன்மை தீமைய நிர்ணயிக்கும் போரும் அல்ல….ஆனால் வாட் அபவ்ட் ஃபெய்த்ஃபுல்நஸ்….இப்பொழுது அரண் என்ன செய்ய வேண்டும்?

சென்னை:

ப்ரவிர் சுகாவிடம் பேசிக் கொண்டிருக்க, சங்கல்யாவோ

“எனக்கு உங்க மொபைலை இம்மீடியட்டா தாங்க…..… அரண் அண்ணாக்கும் ஜோனத்க்கும் மெசேஜ் பாஸ் செய்துடலாம்…” என சொன்னவள் படு வேகமாக செயல் பட்டாள்.

“சுகா நீ வீட்ல யாரை சந்தேகப் பட்டாலும் அங்க உள்ள என் ஆஃபீஸர் நவின்ட்ட சொல்லி அவங்களை அரெஸ்ட் செய்ய சொல்லனும்…இப்ப அரண் மச்சானுக்கு லியா அண்ணி விஷயம் சொல்லவும் அந்த பெர்சன் அலர்ட் ஆகி தப்பிசுட கூடாது…” சுகா தன் வீட்டிற்கு வேக வேகமகா செல்ல காரணம் அங்கு யாரையோ அவள் சந்தேகப் படுகிறாளாய் இருக்கும் என ப்ரவிர் யூகித்திருந்தான்.

“தானா …” என்றாள் சுகா பதிலாக

You might also like - Enna thavam seithu vitten... A family drama

 மெல்பர்ன்:

பௌவ்ல் செய்ய அந்த ஆஸி பௌவ்லர் மெதுவாகவே நடந்து தன் இடத்திற்கு போய் நின்றார்…… பின்னே அவரது பௌலிங்கை இப்படி விளாசினால்….?

சென்னை:

இப்பொழுது சங்கல்யா தன் கையில் வாங்கிய மொபைலில் தன்னையும் ஹயாவையும் சேர்த்து விடியோ ரெகார்டிங் அதுவும் ப்ரவிர் அருகில் இருப்பது போல் தேவைப்படும் வண்ணம் எடுத்துக் கொண்டு, ஜெட் ஃபாஸ்டில் FB யில் லாக் இன்னாகி தன் ஃப்ரென்ட் லிஸ்ட்டில் இருந்த ஒரு சரன் க்கு அர்ஜென்ட் என ஒரு மெசஜ்….அடுத்த நொடி வாய்ஸ் கால் ஃப்ரெம் சரன் என்ற அறிவிப்பு டிஸ்ப்ளே ஆகியது சங்கல்யா கையிலிருந்த மொபைலில்…

“சங்கு நான் என செய்யனும்னு சொல்லு….” சங்கல்யா இணைப்பை ஏற்கவும் நொடி கூட விரயம் செய்யாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் அந்த ரிப்போர்ட்டர் சரநிதா….சங்கல்யாவின் காலேஜ்மேட் அண்ட் ஃப்ரெண்ட்…..அர்ஜென்ட் என்ற அறிவிப்போடு FB யில் அழைக்கிறாள் சங்கல்யா என்றவுடன் சங்கல்யாவின் மொபைல் அவள் கையில் இல்லையாய் இருக்கும்….அதோடு ப்ரபாத் விளையாடிக் கொண்டிருக்கும் போது அர்ஜென்ட் என இவளை தொடர்பு கொள்கிறாள் எனில்……

என்ன செய்ய வேண்டும் என சொன்னாள் சங்கல்யா.

மெல்பர்ன்:

அரணின் முகத்தில் எந்த பாவமும் இல்லை…..பேட் முனையால் பிட்ச்சை தொட்டு பொஷிஷனுக்கு வந்து ஆயத்தமானான் அவன்…..

தன் டீமிற்கு ஃபீல்டிங் பத்தி ஏதோ சொன்னார் ஆஸி கேப்டன்.

சென்னை:

“அந்த தானா அங்க இருக்காளான்னு பார்த்து அரெஸ்ட் செய்துடுங்க நவின்” ப்ரவிர் அரண் வீட்டிலிருந்த தன் டீம் மெம்பருக்கு இன்ஸ்ட்ரெக்ட் செய்தான்.

மெல்பர்ன்:

பௌவ்லரைப்பார்த்தபடிபொஷிஷனில்நின்றிருந்தான்அரண்.

ஸ்டேடியத்தில் முழங்கிக் கொண்டிருந்த டம் டம்….காது கிழிக்கும்…பீ பீ….அதிர்ந்து கொண்டிருந்த இரண்டு கடல் சத்தம் வெகுவாய் குறைகிறது இப்பொழுது….. டிவியில் வந்த காட்சியில் மக்களின் கவனம் குவிந்தது காரணம்…

அங்கு அரணுக்கோ பந்து வீச வேண்டிய பௌவ்லர் ஓடி வர ஆயத்தம்.

சட்டென தோன்றிய அமைதியில் விளையாடிக் கொண்டிருக்கும் அனைவரின் காதிலும் வழக்கத்திற்கு மாறாக தெளிவாய் கேட்கிறது இந்த குழந்தையின் சத்தம்.

மூச்சை இழுத்துப் பிடித்த வண்ணம் நிமிர்ந்து பார்த்தான் அரண். எதிரிலிருந்த ஜோனத் முகத்தில் ஆயிரமாயிரம் வாட்ஸ் பல்ப்…. அரணைப் பார்த்து ஸ்டேடியத்திலிருந்த அந்த மெகா டி வியைக் காண்பித்தான்.

அரணுக்கு பௌல் செய்ய வேண்டிய பௌலர், அவரே உணராமல் சில நொடிகள் தாமதித்தான். கவனச் சிதறல்….

“ இது அரணின் குட்டி மகளும் ப்ரபாத்தின் மனைவியும்…..இருவரும் ஹேப்பி பெர்த் டே சாங்க் பாடுவது போல் தெரிகிறது….இங்கு அருகில் இருக்கின்றனரோ….ஆனால் இங்கு கெஸ்ட் ப்ளேசில் அவர்கள் இல்லைதான்….ஆனாலும் எங்கிருந்தாலும் கண்ணைக் கவரும் அழகுக் காட்சி இது…காமிராவில் கிடைத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை…..அரணுக்கு இன்று பிறந்த நாள் இல்லைதான்…ஆனாலும் அவரது குட்டி தேவதைக்கு இன்றுதான் பாட பிடிக்கிறது என்றால் இதையே பிறந்த நாளாக அரண் கொண்டாடினாலும் தப்பில்லை….பிறந்த நாள் ஷாட்டாக அரண் தன் மகளுக்கு என்ன காண்பிக்க போகிறார் என இந்த பந்தில் பார்ப்போம்….” ஸ்டேடியத்திற்கான கமென்டேட்டர் எக்ஸ்‌ க்ரிகெட்டர் அசோக் சிரிப்புடன் சுத்த ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு போக,

ஹயாவும் லியாவும் சேஃப் ஸோனுக்கு வந்தாயிற்று என தெளிவாய் புரிந்து விட்டது கேப்டன் அண்ட் வைஸ் கேப்டனுக்கு.

அரண் ப்ரபாத் தவிர மற்ற அனைவருக்கும் அது லைட்டர் மொமன்ட்….

அடுத்து அரண் சந்தித்த பால்தான் பேட்டை தொட்டதிலிருந்து சிக்‌ஸராய் பவ்ண்ட்ரி லைனை தாண்ட உலகிலேயே மிக குறைவான நேரத்தை எடுத்துக் கொண்ட க்ரிகெட் பால். லைட்னிங் சிக்‌ஸர்…..

சென்னை:

சரநிதா மூலமாக ஸ்டேடியத்திற்குள் இருக்கும் வீடியோ மிக்ஸ்‌ செய்யும் டெக்னிகல் டீமிடம் அவ்வீடியோவை சேர்த்திருந்தாள் சங்கல்யா. அவர்களைப் பொறுத்தவரை அவ்வீடியோவின் மதிப்பு என்னதாக இருக்கும் என இவளுக்குத் தெரியும்…

சுகா தன் வீட்டை அடைந்த சில நிமிடங்களுக்குள் ப்ரவீருமே அங்கு வந்து சேர்ந்திருந்தான். அவன் ட்ரைவிங் அப்படி….”உங்க அண்ணா ட்ரைவிங்கை படு ஜென்டில்னு ஃபீல் பண்ண வச்சுடீங்க” என மற்ற சூழலாய் இருந்தால் நிச்சயம் சங்கல்யா சொல்லி இருப்பாள் தான்.

ஆனால் இப்பொழுது பொங்கி வடியும் கண்ணீரும்…நேரெதிராய் முகம் கொள்ளா நிம்மதியும் மகிழ்ச்சியுமாய் சுகா ஹயாவை கைகளில் அள்ள….ஏதோ அம்மாவை விட்டுவிட்டு அவ்டிங் போய் வந்த சந்தோஷத்தை வெளிப் படுத்துவது போல் கீழ் வரிசையில் மட்டும் முளைத்திருந்த இரண்டு பற்கள் தெரிய அழகுச் சிரிப்புடன் அம்மாவிடம் தாவிய ஹயா சுகாவின் அழுகையை கண்டு சிணுங்க ஆரம்பிக்க….

“நீங்க வரவேண்டாம் அண்ணி…ரெஸ்ட் எடுங்க….” சங்கல்யா தானாவை சந்திக்க வராதவாறு தடுத்து அவளை வீட்டிற்குள் அனுப்பிவிட்டு “சுகா அங்க அந்த தானா தவிர வேற வுமன் யாரும் இல்லை… நீ கொஞ்சம் சீக்கிரம் வர முடிஞ்சா நல்லாருக்கும்…” என்றுவிட்டு க்வார்ட்டஸிற்கு சென்றான் ப்ரவிர்.

இதற்குள் வந்திருந்த புஷ்பத்திடம் ஹயாவை கொடுத்துவிட்டு தானும் அவன் சென்ற திசையில் போனாள் சுகா.

அங்கு தானா ப்ரவீரின் ஆபீஸர் நவீனின் கைதியாய்….அதுவும் சுகா சந்தேகப் பட்டது போல் குற்றவாளியைப் பிடிக்கும் நூல் முனையாய் இல்லாமல் குற்றவாளியாகவே அவள்….ஆம் சங்கல்யாவின் மொபைல் அவள் கையிலிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.