(Reading time: 34 - 67 minutes)

கையும் களவுமாக பிடிபட்டிருந்த போதும் தானா குற்றத்தை ஒத்துக் கொள்ளவெல்லாம் இல்லை.

புதுக் கதை சொன்னாள். அவள் சற்று முன்தான் வீட்டிற்கு வந்ததற்கு போதுமான ஆதாரங்கள் செக்யூரிடி கேமிராவிலும் அவள் வீட்டிலிருந்த ரகசிய வாய்ஸ் ரெக்கார்டரிலும் இருந்தன.

“சங்கல்யா மேம் வர சொன்னதால போனேன்….போரூர் டோல்கேட் பக்கம் ஒரு வீடு…அங்க ஹயாவை கொஞ்ச நேரம் பாத்துக்க சொன்னாங்க…அவங்க பக்கத்து ரூம்ல ஏதோ வேலையா இருந்தாங்க…பிறகு என்னை திருப்பி அனுப்பிட்டாங்க…அப்ப இந்த மொபைலை ஆன் த வே டிஸ்போஸ் செய்துடுன்னு சொல்லி கொடுத்தாங்க…”

அவள் சொல்வதை எந்த முகமாற்றமுமின்றி கேட்டிருந்த ப்ரவிர்

“நவின் இவளை லாக் அப் கொண்டு  வாங்க…அங்க வச்சு கவனிச்சுகலாம்…” என கட்டளையிட்டான். அவள் உதவிக்காக எந்த லாயரை அல்லது யாரை கான்டாக்ட் செய்ய முயலுவாள் என ப்ரவிருக்கு தெரிந்தாக வேண்டும்…

ஆனால் அப்படி யாரையும் கான்டாக்ட் செய்யவே அந்த தானா முயலவில்லை….

“ஐயோ நான் எந்த தப்பும் செய்யலைங்க……சங்கல்யாதான் இப்படி அரண் வீட்டுக்குள்ள வேலக்காரியா போய் செட்டிலாகு…தென் நான் உள்ள வருவேன்….அப்ப நான் சொல்ற வேலைய செய்து கொடு போதும்னு சொல்லி அவங்க இங்க வர்றதுக்கு முன்னாலயே அனுப்பி வச்சாங்க….அவங்க ப்ராஜக்டுக்கு நான் அசிஸ்டெண்ட் மத்தபடி அவங்க ப்ராஜக்ட் என்னனே எனக்கு தெரியாது…என்னை விட்டுடுங்க சார்…எங்க வேணாலும் வந்து சாட்சி சொல்றேன்…”

You might also like - Barath and Rathi... A free English romantic series

“அண்ணி இங்க வந்ததுக்கு காரணம் முழு உலகத்துக்கும் தெரியும்….அண்ணாவோட ஃபியான்சியா இங்க வந்தாங்க” உதடசையாமல் சொன்னான் ப்ரவிர். அவனுக்கு தானா என்ன கதை சொல்ல போகிறாள் என தெரிந்தாக வேண்டும். அதன் மூலம் உண்மையில் என்ன நடந்திருக்கும் என இவனால் புரிந்து கொள்ள முடியும்…

 ” இல்ல சார்…..சங்கல்யா மேம் இங்க வந்தது முழுக்க முழுக்க அவங்க வேலைக்காகதான்…. அவங்க ப்ராஜக்ட்ல ஹெல்ப் பண்ண வந்த ஒரு அசிஸ்டெண்ட் நான்…அதுவும் அவங்க ப்ராஜக்ட் என்னன்னு தெரியாம வந்தவ நான்…அவங்க ப்ரபாத்தை மேரேஜ் செய்ய போறாங்கன்னு முதல்ல கேள்விபட்டப்ப எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு…பட் அவங்க அதையுமே ஒரு ட்ராமாவா தான் நினைக்காங்கன்னு பின்னால தான் புரிஞ்சிது எனக்கு…” என்ற தானா

அதற்கு சாட்சியாக சங்கல்யா தன் நிச்சய நகைகளை தன்னிடம் கொடுத்து வித்து வரச்சொன்னாள் என சொல்லி, விற்றதற்கு சான்றாக அந்த நகைகளை வித்த நகை கடை பில்லை காண்பித்தாள்.

“அந்த பணத்தை அப்பவே சங்கல்யா வாங்கிட்டாங்க…அதோட ப்ரபாத் சார் சங்கல்யா மேம்க்கு போட்ட செயினை கூட வித்து தரச் சொன்னாங்க….அவங்க கேட்டாங்கன்னு அவங்க சொன்னபடி நான்தான்  மேன் மாதிரி மாறு வேஷம் போட்டு வீட்டுக்குள்ள போய், அந்த செயினை விக்றதுக்காக வாங்கிட்டு வர ட்ரை பண்ணினேன்….அதுக்குள்ள ஆள் யாரோ வர்ற சத்தம் கேட்கவும் தான் மாட்டிக்க கூடாதுன்னு சங்கல்யா மேம் தீஃப் தீஃப் னு கத்த ஆரம்பிச்சாங்க…..என்னை பால்கனி வழியா குதிச்சு ஓடச் சொன்னாங்க….

அதுக்கு பிறகுதான் அவங்க எதோ தப்பான ப்ளான்ல உள்ள வந்திருக்காங்க…இந்த எங்கேஜ்மென்ட் எல்லாம் ட்ராமான்னே எனக்கு புரிஞ்சிது….அதோட  எப்ப வேணும்னாலும் என்னை மாட்டிவிட்டுடுவாங்கன்னு எனக்கு பயம் வர ஆரம்பிச்சுது…..செய்ற வேலைக்கு எவிடென்ஸ் வச்சுகனும்னும் அப்ப இருந்துதான் தோண ஆரம்பிச்சுது…. அதான் இந்த தடவை அவங்க இந்த மொபைலை டிஸ்போஸ் செய்ய சொன்னதும், அவங்க டிஸ்போஸ் செய்ய சொன்னது எனக்கு ஃபேவரான எவிடென்ஸா இருக்கும்னு நினச்சு, அந்த மொபைலை கையோட கொண்டு வந்துட்டனே தவிர எனக்கு என்ன விஷயம்…நீங்க ஏன் என்னை அரெஸ்ட் செய்ய போறீங்கன்னே இன்னும் தெரியலை” என்று லாஜிகல் ரீசன் சொன்னாள் அவள்.

கேட்டுக் கொண்டிருந்த சுகாவிற்கு கொதித்துக் கொண்டு வந்தாலும் ப்ரவீர் படு அமைதியாய் அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கவும் தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமைதி காத்தாள்.

ப்ரவீருக்கோ அவளது திட்டத்தின் அத்தனை அம்சங்களையும் அறிந்தாக வேண்டும். அவள் தாட் ப்ராஸஸ் புரிந்தால் அவள் என்ன செய்திருப்பாள் என்பதும் புரியும்…

இதற்கு இடையில் ப்ரவிர்க்கு ஒரு கால் வந்தது. அதை அமைதியாய் 1 நிமிடம் கேட்டு முடித்தவன்

“சங்கல்யாவை எந்த இடத்துல மீட் பண்ணி மொபைலை கைல வாங்கினதா சொன்ன தானா?”

“போரூர் டோல் கேட் பக்கம்….”

“கரெக்ட்….அங்க நீ போய்ருக்க….. இந்த மொபைலும் தான்…..அங்க உள்ள டவர்ல இந்த மொபைல்ல இருந்து வாய்ஸ் கால் சிக்னல் ட்ரன்சாக்க்ஷன் நடந்துருக்குதுன்னு இப்பதான் இன்ஃபோ கிடச்சுது….ஆனா சங்கல்யா அங்க வரவே இல்லைனு  அவங்க ட்ராக்கர் சிக்னல் ஸ்ட்ராங்கா சொல்லுது…. இப்ப சொல்லு அங்க யார மீட் பண்ண போன? நீ யாரோட பப்பட்?”

பேய் முழி முழித்தாள் தானா.

அமைதியாய் அவளை நெருங்கி சென்ற ப்ரவிர் எந்த அலட்டலும் முன் அடையாளமும் முக மாறுதலும் இன்றி கேஷுவலாய் அவள் அருகில் கிடந்த மேஜையில் ஒரு அடி…இரண்டாஉ உடைந்து விழுந்தது அது.

“கல்ப்ரிட்ல மேன் வுமன்னு நான் பார்க்றதுல்ல….பர்ஜ் த ஈவில் தான் என் பாலிசி….” இப்பொழுதும் அவன் முக பாவத்தில் எந்த மாறுதலும் இல்லைதான்.

ஆனால் தானாவின் முகத்தில் அப்சைட் டவ்ன் மாற்றம். சற்று முன் அவள் பார்த்த அடி அவள் மேல் விழுந்தால் எதெல்லாம் உடையும் இவளுள்?                                     

“சொல்லு ஃபேக்ட்ரில பாம் செட் செய்த கல்ப்ரிட்டுக்கும் உனக்கும் என்ன ரிலேஷன்ஷிப்? இதெல்லாம் எதுக்காக செய்து கொடுக்க நீ?”

ப்ரவிர் கேட்டுக் கொண்டிருக்க சட்டென ஓடிச் சென்று அங்கு நின்றிருந்த சுகாவின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து அவள் கால்களைப் பிடித்துக் கொண்டாள் தானா….              

“ஐயோ அப்படில்லாம் எதுவும் இல்லை சுகா மேம்..…யாருக்காவும்லாம் இல்லை….இது வேற….தயவு செய்து என்னை மன்னிச்சுவிட்டுடுங்க….”

“விஷயத்தை சொல்லு” ப்ரவிர் தான்.

“சுகா மேம் நீங்க படு ஷார்ப்….அதோட என் மனசை உங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்….” தானா அழத் தொடங்கி இருந்தாள்.

“இப்படி அழத் தான் போறன்னா செல்க்கு வந்து அழுதுக்கோ….நவின் இவளை கிளப்புங்க” ப்ரெஷர் போட்டான் ப்ரவிர்.

“நான்….நான் ஜோனை….அதாவது ப்ரபாத்தை விரும்புறேன்….” தன் செயலுக்கு விளக்கம் சொல்ல முனைந்தாள் தானா.

“அவங்க க்ரிகெட் விளையாட ஆரம்பிச்சதுல இருந்தே அவங்கள பிடிக்கும்….ஐ லவ் ஹிம்…..வாழ்க்கைனா அது அவங்க கூடதான்னு தோணிட்டு…..அவங்கள மீட் பண்ண நான் எவ்ளவோ ட்ரைப் பண்ணிப் பார்த்தேன்….பட் அவங்க ரீச்சபிளே இல்லை… எப்பவும் அரண் சுகவிதான்னு இவங்க கூடவே இருப்பாங்க….அதான் இங்க வந்து ஜாய்ன் செய்தேன்….எப்படியாவது அவங்கள மீட் பண்ணி என் விருப்பத்தை புரிய வைக்கனும்னுதான் வந்தேன்…..பட் அவங்கட்ட நான் ஒரு வார்த்தை பேசுற அளவுக்கு கூட சிச்சுவேஷன் அமையுறதுக்கு முன்னமே இந்த சங்கல்யாவை தன் ஃபியான்ஸின்னு கூட்டிட்டு வந்துட்டாங்க ஜோன்….எனக்கு உயிரே போய்ட்டுது…. அதோட இம்மிடியட் எங்கேஜ்மென்ட்….அதான் சங்கல்யாவை ஜோன்ட்ட இருந்து பிரிக்கனும்னு……”

“பிரிக்கனும்னு…?” ப்ரவிர் எடுத்துக் கொடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.