(Reading time: 34 - 67 minutes)

ங்கல்யாவை கல்ப்ரிட்னு காமிக்க அவ்ளவு மோசமா அவங்களைப் பத்தி கதை சொல்லிட்டு ஒழுக்க விஷயத்தில் மட்டும் ரொம்ப உயர்வா நீ சொன்னப்பவே நான் கெஸ் செய்துட்டேன்….சங்கல்யாவ ப்ரபாத்ட்ட இருந்து  பிரிச்சு வச்சதுல கல்ப்ரிட்டோட ஹேண்ட் இருந்திருக்குது….அதுக்கு காரணமே கைல மாட்டினா காதல்ல செஞ்சுட்டேன்னு கால் விழுந்து தப்பிச்சுகிற திட்டமாத்தான் இருக்கும்னு…..உண்மையில் உனக்கும் காதலுக்கும் கண்டிப்பா எந்த லிங்கும் கிடையாது….. அதோட சுகா காதுல விழாதுன்னு நினச்சுட்டு முதுகுக்குப் பின்னால கார்டன்ல வச்சு அவளைப் பத்தி பேசுறப்ப லூசுன்னு சொல்லுவ….முகத்துக்கு நேர கால்ல விழுவ…உன்னைய நான் நம்பனும் என்ன?  ”

அவனை இறுகிய முகபாவத்துடன் பார்த்தாள் தானா.

“எல்லாம் நான்தான் செய்தேன்…எனக்குன்னு டீம் யாரும் கிடையாது……இத எத்தனை விதமா ரிப்பிட் செய்துறுக்க தெரியுமா?...இவ்ளவு அழுத்தி சொல்றப்பவே தெரியுது உன் பின்னால ஒரு டீம் குறஞ்ச பச்சம் ஒருத்தனாவது நிச்சயம் இருக்கான்னு….யார் அவன்?”

“…………………….”

இப்பொழுது அடுத்த கால் வந்தது ப்ரவிருக்கு…..பேசி முடித்தவன்

You might also like - Vasantha bairavi... A neat family story...

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? நீ ஹயர் செய்த பாம் ப்ளாஸ்ட் டீமை எப்பவோ நான் பிடிச்சுட்டேன்…ஐ மீன் என் மானிடரிங்லதான் அவனுங்க இருக்காங்க…பட் அது அவங்களுக்கும் தெரியாது….உன்னை இங்க அனுப்பினானே உன் பார்ட்னர் இன் க்ரைம் க்ரிகெட்டர் தமன் ஸ்கோட்டா, அவனுக்கும் தெரியாது….இந்த தடியனுங்க வாங்கின காசு காலி போல ….. நீ அவனுங்களை கான்டாக்ட் செய்த நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்… கிரிமினல்ஸ் தானே அவனுங்க…..நீ அவங்களை கான்டாக்ட் செய்த நம்பர்க்கு இன்கமிங் கால் எந்த நம்பர்ல இருந்து அதிகமா வந்திருக்குன்ற டீடெய்லை அந்த நம்பர் சர்வீஸ் ப்ரவைடர்ட்ட இருந்து  திருட்டுத்தனமா வாங்கி, அந்த நம்பரை,  இன்னொரு பேமேன்ட் கேட்டு மிரட்ட கூப்டுறுக்காங்க….....இப்பதான் மெசேஜ் கிடச்சுது…..பைதவே இந்த எவிடென்ஸுக்காகத்தான் நான் உன் பாம் டீமை அரெஸ்ட் செய்யாம ஃப்ரீயா விட்டதே…..”

இப்பொழுது துள்ளி எழுந்துவிட்டாள் தானா….

“அரணை பெட்டிங்ல மாட்டிவிட ட்ரைப் பண்ணதுமே இதுல தமன் ஸ்கோட்டா கை இருக்கும்னு எனக்கு ஒரு சந்தேகம்….இப்ப கன்ஃபர்ம் ஆகிட்டுது…கூடவே உனக்கும் அந்த தமன்க்கும் உள்ள லிங்கை விசாரிச்சு சொல்லிட்டாங்க நம்ம பசங்க….”

கார் டயரில் நசுங்கிய காலி கோக் டின் போல போனது தானாவின் முகம்….

“ஆக தமன் பெட்டிங்க்ல மாட்டி டீமைவிட்டு டிஸ்மிஸானதுக்கும், பேனானதுக்கும் அரண் கொடுத்த சாட்சிதான் காரணம்னு நம்புறான்…அதுக்கு ரிவெஞ்ச் இது…..அது அவன் பக்க காரணம்….நீ எதுக்கு இதை செய்தன்னு தெரிய வேண்டாமா சதானா?”

தலை குனிந்து நின்றாள்  அவள். அவளது பெயரை சதானா என சொன்னதிலே தன்னைப் பற்றி அவனுக்கு நிறையவே தெரிந்திருக்கிறது என அவளுக்கும் தெரிகிறதுதான்…

 “ஆக்சுவலி நீ ஒரு ரிப்போர்ட்டர்….” ப்ரவிர் நடந்தவைகளை சொல்ல தொடங்கினான்..

 “சங்கல்யா இங்க எதுக்காக வந்ததா சொன்னியோ உண்மையில் அதுக்காக வந்தது நீதான்….உனக்கு ஹாட் நியூஸ் வேணும்….வல்லராஜன் நீ எல்லாம் வல்லமை சேனல் பார்ட்னர்ஸ்….….தமன் ஸ்கோட்டா முன்னமே உங்களுக்கு பழக்கம்….அவன் பேனானதுக்கு அரணை ரிவெஞ்ச் எடுக்கனும்னு ரொம்ப நாளா புலம்பிட்டு இருந்தான்….அதுக்காக அவன் தர பேமென்ட்….ஹாட் நியூஸால மீடியால கிடைக்கிற காசு…..சேனல் க்ரோத்னு உங்களைப் பொறுத்த வரை ஹெவி ஃப்ராஃபிட் ப்ராஜக்ட் இது….

சங்கல்யா உங்க சேனலுக்கு நியூ கம்மர்…படு டேலன்டட்…. அவங்களை இந்த ப்ராஜக்ட்ல யூஸ் செய்துக்கனும்னு முடிவு செய்து அவங்களுக்கு முன்னமே நீ அரண் வீட்டுக்குள்ள வந்துட்ட….சங்கல்யாட்ட அரண் சுகா  பத்தி உள்ள போய் டீடெய்ல் ஸ்டடி செய்துட்டு வான்னு அனுப்பி வச்சான் வல்ல ராஜன். நீ வல்லராஜன் ஆள்னே சங்கல்யாவுக்கு தெரியாது….

சங்கல்யா உன்னை மாதிரி எதாவது ஒரு வேலை தேடிகிட்டு அரண் வீட்டுக்குள்ள வருவாங்கன்னுன்னு தான் நீங்க எதிர் பார்த்தீங்க……அவங்க வரவும் பாம் ப்ளாஸ்ட் செய்துட்டு….இப்படி அவங்க காது கேட்க சுகாவை  குறை சொல்லிட்டு அதை சேனல்ல இன்டர்வியூவா கொடு…நல்ல பேமண்ட் தரேன்னு சொன்னா அப்படி சங்கல்யா இன்டர்வியூ தருவாங்கன்னு நம்புனீங்க…. அடுத்து காசுக்காக, அப்படி ஹாட் நியூஸ் உண்டு பண்ண சங்கல்யாதான் பாம் ப்ளாஸ்ட்டே செய்தான்னு போட்டுவிட்டுட்டு நீங்க தப்பிச்சுகிடனும்னு ப்ளான்….சோ பாம் ப்ளாஸ்ட் செய்ய ஹயர் செய்த டீம்ல இருந்து எல்லோர்ட்டயும் சங்கல்யா பேசுறது போல நீயே பேசுன…..

உங்க ப்ளான்ல முதல் ட்விஸ்ட் சங்கல்யா அனவரதன் மூலமா ப்ரபாத்ட்ட சொல்லிட்டே உள்ளே வந்தாங்க…..மாட்டிபமோன்னு முதல்ல பயம் இருந்தாலும் இதுல உங்களுக்கு ஜாக்பாட் சங்கல்யா ப்ரபாத்தோட ஃபியான்சின்னு ஆனதுதான்…..அது சங்கல்யா ப்ரபாத்தோட  ட்ராமான்னு தான் முதல்ல நம்புனீங்க….சோ எங்கேஜ்மென்டுக்கு பிறகும் நீங்க கேட்டா சங்கல்யா சுகா பத்தி போட்டு கொடுப்பான்னு கனவு கண்டீங்க….அப்படின்னா  ப்ரபாத்தோட ஃபியான்சி அரண் வைஃபை கல்ப்ரிட்னு சொன்னதா நியூஸ் வரும்…. அப்றம் ப்ரபாத் ஃபியான்சி அரண் ஃபேக்ட்டரிக்கு பாம் செட் செய்ததா நியூஸ் வரும்….சோ நீங்க ஆசைப்பட்ட ஹாட் நியூஸ் இப்ப சூப்பர் டூப்பர் ஹாட் நியூஸாகிரும்னு சந்தோஷப் பட்டீங்க…..

அடுத்துதான் ப்ரபாத் நிஜமாவே சங்கல்யாவை விரும்புறதா நீங்க நம்ப ஆரம்பிச்சது….சோ சங்கல்யாவை ஈசியா கல்ப்ரிட்னு கைய காமிச்சுட்டு தப்பிச்சு போக ப்ரபாத் விடமாட்டாங்கன்னு உன் டீமுக்கு தோணிட்டு…….அதனால சங்கல்யாவுக்கு எதிரா இன்னும் இன்னும் எவிடென்ஸ் செட் செய்ய நினைச்சீங்க…..

அதே நேரம் தப்பி தவறி சங்கல்யா தப்பிச்சு, உங்க டீம்  மாட்டிகிடும் போல இருந்தா ப்ரபாத் மேல காதல்னு கால்ல விழுந்து நீ தமனை காப்பாத்திவிடனும்னு உங்களுக்குள்ள டீல்……தமன் நேம் வெளிய வந்தா உனக்கு அவன்ட்ட இருந்து வர்ற மேஜர் அமவ்ண்ட் அடிவாங்கிடுமே…. அதோட காதலை தொலச்சுடுவனோன்ற வலியில இப்படி செய்துட்டேன்னு நீ கால்ல விழுந்துட்டா சுகா மைன்ட் செட்டுக்கு உன்னை காப்பாத்திவிட்டுடுவான்னு உனக்கு நம்பிக்கை…..அதுக்கு நீ ப்ரபாத்தை படு தீவிரமா லவ் பண்ணினங்கிற மாதிரி எவிடென்ஸ் வேணும் உனக்கு….

 ப்ரபாத் மேல லவ் அதனால சங்கல்யா கூட அவனை சேரவிடலைனு நீ சொன்னா எந்த பொண்ணும் ஈசியா நீ ப்ரபாத்தை லவ்பண்ணதா நம்பிடுவான்னு உனக்கு நினைப்பு….அதுதான் உன் காதலுக்காக சுகாக்கு நீ காமிக்க நினச்ச எவிடென்ஸ்

அதே நேரம் சங்கல்யா ப்ரபாத்தை பிரிச்சு வைக்றதால நாளைப் பின்ன ப்ரபாத் சுகா அரண் எல்லோருமே சங்கல்யா ப்ரபாத்தை நிஜமா லவ் பண்ணலைனு நம்பவும் வசதியா இருக்கும்னு உனக்கு பிலிஃப்……அப்படின்னா பிளாஸ்ட்டுக்கு பிறகு அவங்க யாரும் சங்கல்யாவை காப்பாத்த ட்ரை பண்ண மாட்டாங்கன்னு கணக்கு போட்ட…. சோ நீ மாட்டிக்கிறதுக்கான சான்ஸ் ரொம்பவே குறஞ்சிடும்னு கால்குலேட் செய்த…..அதனாலதான் நீ பொன்மேடு தேடிப் போய் அந்த சர்ச் வெட்டிங் கதை கிளப்பிவிட்டது…..வெட்டிங் நைட்ல எமிடிக்‌ஸ் கொடுத்தது எல்லாம்….

 எங்கேஜ்மென்ட் நகையை திருடினது….சங்கல்யா கழுத்துல இருந்த செயினை கட் செய்துட்டு போக நினைச்சது எல்லாமே….சங்கல்யா பண ஆசை பிடிச்சவங்க….மத்தபடி ப்ரபாத்தை லவ் பண்ணலைனு காமிக்கவும்…..இல்லைனா நீ ஒருவேளை பின்னால மாட்டிகிட்டனா, ப்ரபாத் மேல வச்சிருக்க காதல்னால பொறாமைல திருடிட்டன்னு காமிச்சுகவோ எவிடென்ஸ் செட் செய்ய செய்த வேலை….”

“நீ, தமன் ஸ்கோட்டா, வல்லராஜன் மூனு பேரும் எதிர்பார்க்காத அடுத்த மெகா ட்விஸ்ட் சங்கல்யா ப்ரபாத்தை விரும்ப ஆரம்பிச்சதுதான்….எத்தனை பெரிய அமவ்ண்டுக்கும் எந்த மிரட்டலுக்கும் சுகாவை காட்டிக் கொடுக்க சங்கல்யா ஒத்துகலைனதும் ஆடிப் போய்ட்டீங்க….உங்க ப்ளான் படு ப்ளாப்…. அதே நேரம் அனவரதன் மிரட்டல்ல வல்லராஜனும் கழன்டுகிட…தமனும் நீயும் சேர்ந்து செய்த ப்ளான்தான் இந்த ஹயா சங்கல்யா கிட்நாப் ப்ளாட்…பழிக்கு பழி, நியூஸ்க்கு நியூஸ்….பெட்டர்ஸ்ட்ட இதுக்கு கமிஷன் வேற எக்கசக்கமா வாங்கி இருக்க…. ஒரு சேனல் தனியா தொடங்கிரலாம்னு உனக்கு தோணிட்டு…..பட் இப்ப எல்லா ப்ளானும் அட்டர் ப்ளாப்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.