இல்லை அவள் அப்பா அம்மாவோடாது பேசியிருக்கலாம். அட்லீஸ்ட் என் அப்பா அம்மாவிடம் மட்டுமாவது அவளை பற்றி விசாரித்து கொண்டிருந்தால், அவர்களிடம் நேரடியாக கேடிருக்கலாம். எதுவும் செய்யாமல் இப்படி கடைசி நேரத்தில் அடித்துக் கொண்டால், என்ன செய்வது ? என்று என்னை நானே சமாதனப் படுத்திக் கொண்டேன்.
அந்த சூழ்நிலையில் தான் நான் வந்தனாவோடு கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்.
“வினு, நீ என் கேள்விக்கு பதில் சொல். இந்த பதினைந்து வருஷத்தில நீயும் நானும் ஒரு தடவை கூட சந்திச்சது கிடையாது. நீ எப்பாவது என்ன நினைத்திருக்கிறாயா ? நான் என்ன பண்றேன் எதாவது உனக்கு தெரியுமா? அதனால்தான் நீ வேறு ஒருவரோடு திருமணத்திற்கு சம்மதிதிருப்பாய் என்று எண்ணினேன்” என்று நிறுத்தினான்.
“உங்களை பற்றி எல்லாமே எனக்கு தெரியும் அத்தான். “ என்று மதி கூறவும், திடுக்கிட்டான் ஆதி.
அவளை பிரமிப்பாக பார்த்தபடி “எப்படி வினு ?” என்றான் ஆதி.
“நீங்களே சொன்னது போல் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லைதான். ஆனால் நான் உங்களை ரொம்ப மிஸ் செய்தேன்.
You might also like - Ennai edho seithu vittaai... A family drama...
என்னுடைய ஒன்பது பத்தாவது வயதில் நீங்கள் நீ டான்ஸ் ஆடினால் நன்றாக இருக்கும் என்று சொன்னதை கேட்டு, அந்த வருடம் எங்கள் ஊர்க்கு சென்ற பின் முதல் வேலையாக டான்ஸ் கற்றுக் கொண்டேன். அந்த வருடம் அடிப்படை மட்டும் தான் சொல்லிக் கொடுத்தார்கள்.
ஆனால் நான் டான்ஸ் டீச்சரிடம் ஒரே ஒரு பாரதியார் பாட்டுக்கு மட்டும் முழு நடனம் கற்றுக் கொடுக்க கெஞ்சி, அந்த பாட்டை ஆடினேன். நான் எதிர்பார்த்தது போல் நீங்கள் முழு மகிழ்ச்சி அடைந்தீர்கள். அதை பார்த்து நானும் சந்தோஷம் அடைந்தேன். அதற்கு பின் நாங்கள் ஊருக்கு திரும்பி விட்டோம்.
சின்ன வயதில் நீங்கள் வருவீர்கள் என்று ஒவ்வொரு லீவிலும் ஊரில் காத்திருப்பேன். நீங்கள் வர வில்லை. அப்போது அம்மாவிடம் கேட்டதற்கு “ஆதி வருவான் மா. அவனுக்கு படிப்பு, நிறைய எக்ஸ்ட்ரா கிளாஸ் எல்லாம் போவதால் நேரம் கிடைப்பதில்லை. “ என்று சமாதானப் படுத்துவார்.
கொஞ்ச நாட்கள் கழித்து கேட்கும் போது அவர்கள் மிகவும் வருதப்பட்டார்கள். அதற்கு பின் நான் கேட்பதில்லை. ஆனால் யாரிடமும் எதுவும் சொல்வதில்லை. யாராவது கேட்டால் பதில் சொல்வதோடு சரி.
இப்படியே சில வருஷம் போன பின், நான் கல்லூரி முதல் வருடம் படிக்கும் போது என்னிடம் ஒருவன் ப்ரோபோஸ் செய்தான். (இந்த இடத்தில ஆதியின் முகம் விளக்கெண்ணை குடித்தது போன்று மாறியது.)
அன்றைக்கு அதை பகிர்ந்து கொள்ள, அது சரியா, தவறா என்று தெரிந்து கொள்ள யாரிடமும் முடியாமல் ரொம்ப கஷ்ட பட்டேன். வாணி சிறயவள். அம்மாவிடமும் கேட்க சங்கடமாயிருந்தது.
அன்றைக்கு உணர்ந்தேன். என்னால் உங்களை தவிர யாரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று. அதனால் தான் எனக்கு அதிகம் தோழிகளும் இல்லை என்று.
ஆனால் ஒன்று புரிந்தது. அவனுடைய ப்ரோப்சை ஒத்துக் கொண்டால் அவனுக்கு உங்கள் இடத்தை கொடுக்க வேண்டியிருக்கும் என்று. அதனால் நான் அதை மறுத்து விட்டேன்.
அதற்கு பிறகு உங்கள் நினைவு அதிகமாக வந்தது. எதனால் நமக்குள் இவ்வளவு இடைவெளி என்று யோசிக்க தோன்றியது. அப்போது அந்த சம்பவம் உங்களை காயப் படுத்தியிருக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் விலகி விட்டர்கள் என்று புரிந்தது.
சரி நீங்கள் ஒரு நிலைக்கு வந்த பிறகு இதை பற்றி யோசிப்பீர்கள் என்று புரிந்து கொண்டேன். ஆனால் அதற்குள் எனக்கு உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
சென்னையில் உங்கள் அலுவலக முகவரி வைத்து அங்கே யாரோ போல் சென்று உங்கள் வீட்டு முகவரி பெற்றுக் கொண்டேன்.
எதேச்சையாக நான் உங்கள் வீட்டிற்கு அருகில் வரும்போது வீட்டில் நீங்க, சூர்யா, அதிதி எல்லோரும் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தீர்கள். அவர்கள் இருவரும் உங்களை அண்ணா எனவும், நீங்கள் தான் என் அத்தான் என்று உணர்ந்து கொண்டேன்.
அதோடு அன்றைக்கு அவர்கள் இருவரின் படிப்பு பற்றிய பேச்சு வரும்போது , உங்கள் படிப்பு பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். மேலும் படித்து விட்டு நீங்கள் பிசினஸ் செய்யப் போவது பற்றியும் தெரிந்து கொண்டேன்.
அதனால் தான் நானும் என் படிப்பை உங்கள் படிப்போடு சம்ந்தபடுவதாக ஏற்படுத்திக் கொண்டேன். நீங்கள் படிப்பில் கெட்டி என்பதால், நானும் முயற்சி செய்து முதல் தர கல்லூரியில் இடம் பெற்றேன்.
இதை எல்லாம் செய்து, உங்களுக்கு தகுதியானவளாக என்னை மாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் நீங்கள் வந்தனாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்.
அன்றைக்கு நான் அழுத அழுகையை பார்த்த என் அம்மாதான், நீ ஆதியை இன்னும் மறக்கவில்லையா என்றார்கள். நான் இல்லை என தலையாட்டவே, அம்மாவும் உடைந்து விட்டார்கள்.