அதற்கு பின் என்னை ஒரு மாதிரி சமாளித்து வெளியே வரும் போதுதான், விபத்து செய்தியும், உங்கள் திருமணம் நின்ற செய்தியும் வந்தது. அந்த சமயம் நான் அங்கே வந்தால் நன்றாக இருக்காது என்று எண்ணித்தான் அப்போது நான் உங்கள் வீட்டிற்கு வர வில்லை.
பிறகு அப்பா நம் திருமணத்திற்கு கேட்டார்கள். நான் உங்களுக்காக மட்டும் தான் நம் திருமணத்திற்கு சம்மதித்தேன். ஆனால் நீங்கள்தான் மாமாவிற்காக இந்த திருமணத்திற்கு ஒத்து கொள்வதாகவும், உங்கள் மனநிலையை பற்றியும் அப்பா சொன்னார்கள்“
இந்த இடத்தில் ஆதி “ ஆம் .. ஆனால் அது நீயாக இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் நான் ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன் வினும்மா.
உன் அப்பாவின் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு. ஏன் என்றால் ஏற்கனவே அப்பா கேட்டும், என் மன நிலையை அப்பாவிடம் எடுத்து கூறி தடுத்தார். அதோடு மீண்டும் கேட்கும் போதும், உன்னை என்னிடம் திணிக்காமல் என் விருப்பம் கேட்டு வேறு பெண் பார்க்கவும் தயார் என்று கூறினார்.
ஆனால் ஒரு குழப்பம். உனக்கு திருமணம் ஆகிருக்க வேண்டுமே என்று. உன் அப்பா அதை பற்றி எதுவும் சொல்லாததால், நானும் அவரிடம் கேட்க வேண்டாம் என்று எண்ணி , உன் விருப்பத்தை மட்டும் கேட்டு செய்ய சொன்னேன்.
அதுவரை உன்னை பற்றி பெரிதாக எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் உன் விருப்பம் தெரிந்த பிறகு உன்னை பார்க்கும் ஆவலும் உன்னை அறியும் ஆவலும் தோன்றியது.
திருமணத்தன்று உன்னை பார்த்த போது நான் என் வசம் இல்லை. உன் அழகு, நான் பார்த்து பழகிய அந்த முகம், இது எல்லாம் என்னை கட்டி போட்டது.
அன்றைக்கு நம் திருமண வாழ்வு உடனே நடந்திருக்காது என்றாலும், உன்னிடம் நான் பழைய ஆதியாக மாற வேண்டும் என்று எண்ணித்தான் உன்னிடம் பேச வேண்டும் என்றேன்.
ஆனால் நீயானால், நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்று தெரியும். சொல்லப் போனால் நானும் அதே நிலையில் தான் இருக்கிறேன் என்று கூறவும், யாரோ என் தலையில் ஓங்கி அடித்தது போல் இருந்தது.
அன்று நீ ஏன் அப்படி சொன்னாய்?” என்று வினவினான்
You might also like - Puthir podum nenjam... A romantic story...
“ஆமாம். வேறு என்ன சொல்வது ? அப்பா அன்று முழுவதும் ஆதியிடம் எதுவும் கேட்க கூடாது, உன்னால் அவன் வேதனை படக் கூடாது என்று எனக்கு அறிவுரை. நான் ஏதாவது கேட்டு நீங்கள் கஷ்டபட்டால் என்று தான் அப்படி பேசினேன். மேலும் நீங்கள் வந்தனாவோடு உங்கள் கதை பற்றி சொல்லப் போகிறீர்கள் என்று எண்ணினேன். அதை கேட்க பிடிக்காமல்தான் அப்படி சொன்னேன்.”
அவள் அப்படி சொல்லவும் ஆதி, அவள் மூக்கை பிடித்து ஆட்டி “பொறாமை ... நீ அப்படி சொன்னவுடன், நானும் நீ உன் முதல் கல்யாண பேச்சு வார்த்தையை நினைத்துக் கொண்டிருப்பாய் என்று தவறாக எண்ணி விட்டேன். உன்னால் அதை மறக்க முடியவில்லை என்று எண்ணி விட்டேன்.
அதனால் தான் பிறகும் உன்னிடம் நெருங்காமல் உன்னை விட்டு விலகினேன். நீ என் அறையில் இருந்தால் எனக்கு அது சொர்க்கமாக இருக்கும். நான் எதாவது சொல்ல போய் நீ என்னை விட்டு சென்று விடுவாயோ என்று தான் உன்னிடம் பேசாமலும் இருந்தேன்.
உன்னோடு எங்கும் வெளியில் செல்லாதது கூட எங்கே என்னை அறியாமல் நான் உன்னிடம் என் மனதை சொல்லிவிடுவேனோ என்று பயந்துதான்“
மதி குறுக்கிட்டு “பின் எப்படி நீங்கள் கொஞ்ச நாட்களாக மாறினீர்கள்?” என்று வினவினாள்.
“அதற்கு அந்த விபத்து தான் காரணம். நீ விபத்து செய்தி கேட்டு ஓடி வந்து அன்று இரவு ஐ.சி.யூ வில் என்னை பார்க்க வந்து, எனக்கு முத்தம் கொடுத்தாயே அப்போது நான் விழித்து விட்டேன். ஆனால் நான் அசையாமல் இருந்தேன்.
அன்றைக்கு யோசிக்கும் போதுதான், நீயும் என்னை விரும்புகிறாய் என்று புரிந்தது. மேலும் நீ என்னோடு இருந்து எனக்கு உதவி செய்ய விரும்பினாய். இதை பார்த்து தான் நான் உன்னிடம் உரிமை எடுத்து கொள்ள ஆரம்பித்தேன்
அதற்கு பின் உனக்கு வீட்டில் எல்லோரும் சப்போர்ட் ஆக இருந்தார்கள். அம்மாவும், அப்பாவும் நீ இல்லாத நேரங்களில் உன்னை பற்றி எடுத்து சொல்லி, இனிமேலாவது அவளை சந்தோஷமாக வைத்திரு என்றார்கள்.
அதிதி வந்து ஒருநாள், அண்ணா.. மதி அண்ணியை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு . ரொம்ப பாசிடிவ் ஆகவும், அதே சமயம் பிரண்ட்லியாகவும் இருக்கிறார்கள் என்றாள்.
சூர்யா வந்து “ அண்ணா .. அண்ணி உன் மேல் ரொம்ப அன்பு வச்சிருக்காங்க. நீங்களும் அதை புரிஞ்சுக்கோங்க” என்றான்
ஆனால் இவர்கள் அறியாத ஒன்று, நான் உன்னிடம் எப்போதோ சரணடைந்து விட்டேன் என்று ...
இதற்கு பின் வரிசையாக அதிதி திருமணம், சூர்யா காதல் இதில் எல்லாம் உன் அணுகுமுறையை நான் வியந்தேன். பிறகு மெகந்தி பங்க்ஷன் போது என் மன நிலையை உனக்கு புரிய வைக்கும் முயற்சியாக உன்னிடம் சற்று நெருக்கமாக நடந்து கொண்டேன்.
இப்போ உனக்கு புரிந்ததா வினும்மா.. என்னுடைய எண்ணங்கள்.. & சாரி .. நான் நடந்து கொண்ட முறை உன்னை வேதனை படுத்தியிருக்கும் என்று புரிகிறது. ஆனால் இனிமேல் உன்னை நான் நன்றாக பார்த்து கொள்வேன்.” என்று முடித்தான்.
சற்று நேரம் அமைதியாக கழிய, ஆதி மதியை அணைத்து தன் பிடிக்குள் கொண்டு வர முயன்ற போது, மதி அவனை தடுத்தபடி “அத்தான் .. நடந்த விஷயங்கள் எல்லாம் ஜீரணிக்க எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்” என்று கூற, ஆதியோ ஞே என்று விழித்தான்.
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்
{kunena_discuss:903}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.