(Reading time: 5 - 10 minutes)

20. நேசம் நிறம் மாறுமா - தேவி

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

                                                பாரதியார்

Nesam niram maaruma

ன்னிடம் அவகாசம் கேட்ட மதியின் முகத்தை பார்த்து ஆதி திகைத்து விழித்தான்.

ஆதியின் திகைத்த முகத்தை பார்த்த மதி சிரிக்க ஆரம்பித்தாள்.  அவளின் சிரிப்பை பார்த்த ஆதி “ஏய்.. வினு . உன்னை “ என்று பிடிக்க வர , மதி “எஸ்கேப் “ என்று மொட்டை மாடியிலிருந்து வீட்டுக்குள் சென்று விட்டாள்.

அவளை துரத்திய படி உள்ளே வந்த ஆதியை பார்த்து அப்போதுதான் உள்ளே வந்த சூர்யாவும், பிரகாஷும் சிரிக்க ஆதியோ முறைத்தான்.

“என்னடா சிரிப்பு.. தூங்க போகலையா?”

“அதுக்குதான் போறம்... நீ என்ன இந்த நேரத்திலே ஓடிபிடிச்சு விளையாடுற..?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நானும் தூங்கத்தான் போறேன்... குட் நைட் .. “ என்ற படி மதியிடம் ஜாடை காட்டி விட்டு உள்ளே சென்றான்.

“என்ன அண்ணி ... அண்ணா என்ன சொல்லிட்டு போறான்?”

இடுப்பில் கை வைத்து முறைத்தபடி “ஹ்ம்ம்.. காலையில் பிரகாஷ் ஊர்க்கு செல்ல வேண்டுமே .. எல்லோரையும் சீக்கிரம் எழுந்துக்க சொல்லு .. ன்னு.. சொல்லிட்டு போறார்...” என்றாள்..

அவர்கள் இருவரும் சிரித்தபடி செல்ல மதியும் தங்கள் அறைக்குள் சென்றாள்..

அங்கே காத்திருந்த ஆதியோ, அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன்,

“ஹ்ம்ம்.. ராட்சசி     .. ஏண்டி.. அப்பவே அப்படி சொன்ன... நானே இத்தனை நாள் கழித்து இப்போதான் உன்னோடு சந்தோஷமா வாழ ஆரம்பிக்கலாம்னு பார்த்தா, என்னை சீண்டி விளையாடுற? .. இதற்கெல்லாம் சேர்த்து இப்போ தண்டனை உனக்கு ...” என்றபடி அவளின் இதழில் முத்தமிட்டவன், மேலும் முன்னேறி தங்கள் வாழக்கையை தொடங்கினான்.

றுநாள் காலை ஆறு மணிக்கு கிளம்ப வேண்டும் என்பதால், சீக்கிரம் எழுந்த மதி குளித்து விட்டு வந்து ஆதியை எழுப்ப, ஆதியோ அவளை ஆவலுடன் பார்த்து, தன் கையை நீட்ட . சிரித்த படி நழுவி ஓடி விட்டாள்.

நேரே சமையலறை சென்றவள், அனைவருக்கும் காபி கலக்க, அங்கே வந்த ஜானகியும், மீனாட்சியும் அவளின் மலர்ந்த முகத்தை பார்த்து சிரித்தனர்.

மதி, “குட் மார்னிங் அம்மா, அத்தை “ என,

“குட் மார்னிங் மதிமா..” என்ற படி, அவர்களுக்கான காபியை எடுத்துக் கொண்டு, “ஆதி எழுந்துட்டானாமா.. “என்று வினவினார்.

“எழுந்தாச்சு அத்தை.. இன்னும் அரை மணி நேரத்தில் ரெடி ஆகி வருவார். “ என்று ஆதிக்கு காபி எடுத்துக் கொண்டு போனாள்.

அங்கே ஆதி குளித்து ரெடி ஆனவன், மதியின் வரவை பார்த்து , தன் கையை நீட்ட, நீட்டிய கையில் காபியை கொடுத்தாள்.

அவன் சிணுங்கலாக அவளை பார்க்க, அவளோ சிரித்தபடி அழகு காமித்தாள்.

காபி கப் கீழே வைத்து விட்டு, அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தவன்,

“என்ன வினு மேடம் ... காலையிலிருந்து எஸ்கேப் ஆயிட்டே இருக்க.. “

“எங்கே போனேன்.. உங்களுக்கு காபி கலக்கதானே “

வினு .. உன்னிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. நம் வீட்டில் இருந்த இந்த இரண்டு வருடங்களில், என்னிடம் ஒரு வார்த்தை பேசாமலே, எப்படி எனக்கு தேவையானது எல்லாம் சரியாக செய்தாய்... ? காலையில் நான் எழும் போது நீ அறையில் இருக்க மாட்டாய் .. ஆனால் சரியாக நான் பாத்ரூமில் இருந்து வரும்போது காபி வைத்திருப்பாய். .சாப்பாட்டிலும் எனக்கு பிடித்த மெனுவை செய்வாய்.. இதெல்லாம் எப்படி?

நீங்கள் எழும் நேரம் எனக்கு வந்த இரண்டு மூன்று நாட்களில் தெரிந்து கொண்டேன்... அதோடு உங்களுக்கு பிடித்த அத்தனையும் எனக்கு தெரியும். நீங்கள் கூடத்தான் .. நான் கோபி சாப்பிட மாட்டேன் என்று சரியாக சொன்னீர்களே .. நாம் இருவரும் ஓரளவு விவரம் தெரிந்த பின் தான் விலகியிருந்தோம். அதனால் நம்முடைய அடிப்படை பழக்கங்கள் மாறவில்லை. மற்றதை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

சரி ... இப்போ நம் பழக்க படி ... நாம் இருவரும் ஒரே காபி யை ஷேர் செய்து குடிக்கலாம் .. என்றவன்

அவள் இன்னொரு கப் ஐ எடுக்க, அவனோ அவளை தடுத்து , ஒரே கப்பில் அவளை அருகில் இழுத்து குடிக்க வைத்தான்.

மதியின் முகமோ சிவக்க, ஆதியோ, அவளிடம் கண் அடித்தான்.

அப்போது கீழே  இவர்களை அழைக்கும் குரல் கேட்க, இருவரும் இறங்கி வந்தனர்.

சூர்யா ,”என்ன அண்ணா, எங்களை சொல்லிவிட்டு நீதான் எழுந்திருக்க லேட் போலே”

அவன் தோளில் தட்டிய படி, “எல்லாம் எழுந்து ரெடி தான்.. காபி இப்போத்தான் வந்தது.. குடித்து விட்டு இறங்கினோம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.