(Reading time: 5 - 9 minutes)

01. காதல் பின்னது உலகு - மனோஹரி

பாவாடை தாவணியில் சற்று துள்ளி நடந்தபடி, நிலவினி தன் தாத்தா வீட்டு காம்பவ்ண்டிற்குள் நுழையும் போதே காதில் விழுகிறது உள்ளே அவள் அம்மா சுசிலா யாரிடமோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம்.

“அத ஏன் கேட்கிறீங்க…? நாங்களும் அவளுக்கு கல்யாணம் செய்யனும்னுதான்  ஆசைப் படுறோம்…ஆனா அவ போடுற கண்டிஷன்கெல்லாம் ஒத்து வர்ற மாதிரி ஒரு மாப்பிள்ள கிடைக்கனுமே….”

நொந்து போனாள் நிலவினி. ‘அடகடவுளே…… முன்னபின்ன தெரியாதவங்கட்ட போய் இந்த அம்மா எதெல்லாம் புலம்பிகிட்டு இருக்காங்க?’ நடையை வேகமாக்கி பேச்சு சத்தம் கேட்ட திசையைப் பார்த்துப் போனாள்.

Kadhal pinathu ulagu“சின்ன பிள்ளதானே மனசுக்கு படுறதை சொல்லத்தான் செய்வா….அப்படி என்ன கண்டிஷன் சொல்றா உங்க பொண்ணு?” அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த குரல் ஒரு வயதான பெண்ணுடையது என புரிகிறது.

தாத்தா வீட்டுல யார்லாம் வந்து தங்கி இருக்காங்கன்னே இவளுக்கு தெரியாது…. 8 வீடு உள்ள ஒரு காம்பவ்ண்ட் அது. ராயகிரி தான் இந்தியாவிலேயே பெரிய வில்லேஜாம். அதனால இன்டியன் வில்லேஜ் லைஃபை பத்தி ரிசர்ச் செய்ற இன்டியன்ஸ் ஃபாரினர்ஸ் யார்னாலும் எப்ப வேணாலும் வந்து ஊர் தலைவர் வீடுன்னு இங்க தான் தங்குவாங்க.

அதுவும் இந்த டிசம்பர்  டைம் கேட்கவே வேண்டாம். யார் யாரோ வந்து தங்குவாங்க. ஆனா வர்றவங்க தங்குற போர்ஷன்ஸ் பக்கம் கூட  இவள் போறது கிடையாது. அதுல யார் இந்த வயசானவங்க? அதுவும் தமிழ்காரங்க…..

“மாப்பிள்ள டாக்டரா இருக்க கூடாதாம், போலீஸா இருக்க கூடாதாம் ஏன்னா அவங்கல்லாம் ரொம்ப பிஸியா இருப்பாங்களாம்….கவர்மென்ட் வேலைல இருக்க கூடாதாம் லஞ்சம் வாங்றவனா இருப்பானாம்……சொந்தமா பிஸினஸும் செய்ய கூடாதாம்…” ஐயோ….அம்மா சொல்ல வேற செய்றாங்களே….ஓடினாள்.

அம்மாவிடம் பேசிக் கொண்டிந்தவருக்கு 70 வயதாவது இருக்கும். ஓடி வந்து நின்ற இவளைப் பார்க்கவும் பாசமாய் புன்னகைத்தார். “ வாம்மா நல்லாருக்கியா ? ” என்றார்.

‘ஹப்பா நாம வந்ததுல அட்டென்ஷன் டைவர்ட் ஆகி வேற எதையாவது பேசுவாங்க…’ இவள் நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொள்ளும் போதே

பொறுமை இழந்திருந்தார் அங்கு இருந்த குட்டிச் சண்டியர். அது அவளது பெரியம்மாவின் பேரன். இவளோட தோஸ்த்…வெல்விஷர், பெஸ்ட் ஃப்ரெண்ட் எல்லாம். வயசு 4. தூத்துக்குடியில் இவள் வீட்டிற்கு அடுத்த வீடுதான் அவனோட வீடு. நிலவினி கூட இப்ப ராயகிரி வந்திருக்கிறார் பெரிய மனுஷர்

 “ஏய் நானு நானு….மிச்சத்த நான் சொல்வேன்…. வதுதவன் சிட்டில இதுக்க கூடாது….சிட்டி லைஃப் போத்…அதுக்காக குண்டு சட்டில குதித ஓட்டுதவனாவும் இதுக்க கூடாது…அப்பப்ப ஃபாதின்  போணும்…அதோட அவன் ஊது ஷி ஷோதா இதுக்கனும்…” அவனை வைத்துக் கொண்டு  அவள் ஃப்ரெண்ட்ஸ்ட்ட கிண்டலாக  பேசியதை அச்சு பிசகாமல் ஒப்பித்தான் பிள்ளை.

ஐயோ இவன் வேற மானத்த வாங்குறானே…..இப்ப இன்ஸ்டண்ட்டா அவன் வாய மூடனுமே “ஆரவ் குட்டி வா போய் மன்ச் வாங்கிட்டு வருவோம்” அவனை கிளப்ப முயன்றாள்.

“என்த்த டூ மன்ச் இதுக்கே” பாக்கெட்டிலிருந்து அவசரமாக இரண்டு மன்ச் சை எடுத்து காண்பித்தவன் பேசியதை மறக்காமல் தொடர்ந்தான்.

“முக்கியமா  வீட்ல தினமும் நான்வெஜ் தான்….ஆனா நான் நான்வெஜ் குக் செய்ய மாட்டேன்…..” இவள் சொன்ன எல்லாவற்றையும் சொல்லி முடிக்காமல் ஆரவ் நிறுத்த போவதில்லை எனப் புரிய விடு ஜூட். அசடு வழிய அங்கிருந்து மெல்ல நகர்ந்து பின் ஒரே ஓட்டம்..போயேவிட்டாள் நிலவினி.

“எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ளதுதான், கல்யாணம்னதும் வர்ற இயல்பான பயம்…அதான் சும்மா கண்டிஷன் போட்டுகிட்டு இருக்கா போல….அதைப் போய் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க….” நிலவினி சென்றதும் சொல்லிய அந்த வயதான மரகதம் அம்மையார் சட்டென “உங்க பொண்ண எங்க பையனுக்கு தருவீங்களா?” என கேட்டு வைத்தார் என நிலவினிக்கு தெரியாது.

நிலவினி இப்பொழுது தூத்துகுடி திரும்பி இருந்தாள்.

“என்னமா விளையாடுறீங்களா? படிச்சு படிச்சு சொல்லிருக்கேன் எனக்கு பிஸினஸ் செய்ற மாப்ள வேண்டாம்னு…..அதுவும் ஒரு ….” அவளை பேசி முடிக்கவிடவில்லை அம்மா.

“நிலு இதுக்கு மேல பேசணும்னா நீயே அப்பாட்ட பேசிக்கோ” எழுந்து போய்விட்டார் சுசிலா.

இந்த ட்விஸ்ட்டை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை நிலவினி. அப்பாட்டயா? அவர் எதுவும் சொல்றதுக்கு முன்னமே இவ தலை ஆமா சாமி போடுமே…

 இதுவரைக்கும் இவளுக்கு பிடிக்கலைனு சொன்ன எல்லா ப்ரபோசலையும் அம்மா தான் அப்பாட்ட சொல்லி வேண்டாம்னு சொன்னது. இப்ப என்ன ஆச்சு? அதுவும் ஒரு பட்டிகாட்டு மிட்டாய்காரனை பிடிச்சுகிட்டு இந்த ஆட்டம் ஆடுறாங்க….. இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்த யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.

திபன் சென்னை இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டில் தன் நண்பன் ப்ரியனை வழி அனுப்பி விட்டு வெளியே வந்தான். வெளியில் வருவோரும் போவோருமாக இன்று கூட்டம் அதிகம். அந்த கூட்டத்திற்குள் நுழைந்து கார் பார்க்கிங்கை நோக்கி இவன் நடக்க தொடங்கிய நேரம் எதேச்சையாய் இவன் கண்ணில் படுகிறாள் அவள். அந்த வைட் ஃபாரினர். எதாவது ஈரோப்பியனா இருக்கும்….டூர் வந்திருப்பாளா இருக்கும்.

அவனை அவள் புறம் கவனிக்க வைத்த விஷயம் எதுவாம்? அவளது நடை. அது நார்மலாக இல்லை. கொஞ்சம் குனிந்து சற்று அலர்ட்டாய் இதென்ன நடை? இன்னுமாய் சற்று முன் சென்று எட்டி பார்த்தபடி அவளை பின் தொடர்கிறான் இவன்.

சே இவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே.. அந்தப் பெண் தனக்கு முன்னால் போன நபரின் பாக்கெட்டிலிருந்த வேலட்டை, அந்த ஆள் கவனியாத வண்ணம் மெல்ல உருவிக் கொள்கிறாள். பின் சுற்று முற்றும் ஒரு திருட்டுப் பார்வை… ‘யாரும் பார்த்துட்டாங்களா?’

‘ஓ மை காட்…. பிக் பாக்கெட்…பட்டப் பகலில்…எவ்ளவு தைரியம்?’ “ஏய்…” இவன் சத்தம் கொடுக்கும் முன் கூட்டத்தில் சட்டென கலந்து பார்க்கிங்கில் நுழைந்து எங்கு போனாள் அவள் என தெரியவில்லை. காணமல் போய்விட்டாள்.

தொடரும்!

Episode # 02

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.