(Reading time: 18 - 35 minutes)

02. காதல் பின்னது உலகு - மனோஹரி

ங்க பாரு பொரஸ் “ நிலவினி ஆரம்பிக்க

“ஏய் வீட்ல வச்சு இப்படி கூப்டாதன்னு எத்தனை தடவை சொல்லிருகேன்..…அது பனமரத்தோட பயாலஜிகல் நேம்னு எங்க வீட்ல கண்டாங்களா என்ன? ஏதோ ஒரு ஃபேரோஸைப் பத்தி பேசுறோம்னு நினச்சு நாலு இழு இழுக்கப் போறாங்க வாயிலயே…”

“ ஆமா இது வேற இருக்குதுல….சரி உங்கவீட்ல வச்சு அந்த நேம் சொல்லலை….இப்ப நான் வந்த விஷயத்துக்கு வழி சொல்லு……உன்னை நம்பி இவ்ளவு தூரம் அப்பாட்டலாம் பெர்மிஷன் வாங்கி வந்துறுக்கேன்….நீ மட்டும் இப்ப உருப்படியா ஐடியா சொல்லலையோ மவளே உன்னை சாத்து சாத்துன்னு சாத்தி மாத்து மாத்துன்னு…..ஹேய் ஒரு நிமிஷம் பேசாம நீதான் பொண்னுனு கல்யாணத்தப்ப மாத்திட்டா என்ன?” தன் ஆருயிர் ஃப்ரெண்ட் பவிஷ்யாவிடம் அவளது வீட்டிற்கே சென்று கல்யாணத்தை நிறுத்த ஐடியா கேட்டுக் கொண்டிருந்தாள் நிலவினி. வழக்கமான சந்தோஷமும் துள்ளலும் அஸ் யூஸ்வல் அவளிடம்.

Kadhal pinathu ulagu

“ம் மாத்துவ மாத்துவ….இங்க எங்கப்பா அந்த மாப்பிள்ளய குடும்பத்தோட காலி பண்ணிடுவாங்க….”

“ஐயோ அது எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயமாச்சே “

“ம் உன்னோட அவர் வீட்டைப் பத்தி பேச்சுக்கு சொன்னா கூட கஷ்டமா இருக்குதுல்ல….”

“ஹேய் இது வேற….கொஞ்சம் யோசிச்சு பாரு….நான் கல்யாண பொண்ணோட ஃப்ரெண்ட்…அதாவது இப்போ லாஸ்ட் மினிட்ல பொண்ணை மாத்தி உன்னை அந்த  பிஎம் தலைல கட்டியாச்சுன்னு வச்சுப்போம்..…அங்க இப்ப நான் பந்தில சாப்ட உட்கார்ந்தா என்னை ஸ்பெஷலாதான கவனிச்சுப்பாங்க…..எல்லோருக்கும் கல்யாணம் நின்னு போன கல்யாண பொண்ணுனு என் மேல ஒரு பரிதாபம்  இருக்கும்….கூடவே இப்ப நம்ம வீட்டு பையனுக்கு அப்ளிகேஷன் போட்டா கோல்ட் வெயிட் இன்னும் கூட்டி கேட்கலாம்னு மெகா ப்ளான் வேற இருக்கும் அங்க சுத்தி இருக்ற சிலருக்கு…சோ ஆளாளுக்கு ஓடி ஓடி எனக்கு பரிமாருவாங்க….நானும் வாழை இலைல சாம்பார் சாதத்துல இருந்து ரசம் சாதம் வரைக்கும் ஒன்னொன்னா ரசிச்சு கேட்டு வாங்கி சாப்டுவேன்…ஏன்னா…. ஏய் பவி ஏன்னு கேளு?”

“ஏன்?” என்ன வரப் போகிறது என்று ஊகிக்க முடியாமல் கேட்டாள் பவிஷ்யா…

 “இதென்ன கேள்வி…இவ்ளவு நாள் பழகிருக்க இது கூட தெரியலை….? ஏன்னா எனக்கு கல்யாண வீட்ல சாப்ட ரொம்ப பிடிக்கும்….இப்போ க்ளைமாக்‌ஸ்…..அதாவது நான் பாயசம் சாப்டுற டைம்..…நான் அதை அந்த சாம்பாரும் ரசமும் சாப்ட்டு முடிச்ச இலைல ஊத்தி …அதுல அப்பளம் நொறுக்கி போட்டு….அப்டியே மூனு விரலால எடுத்து…. வாயில வைக்கப் போற நேரம்……திடுதிப்புன்னு ஒரு கூட்டம் வெள்ளை வேஷ்டியும் வெள்ளை சட்டையுமா….ஆங் முக்கியமா எல்லோருக்கும் மெகா சைஸ் மீசை… ஏல எவம்ல அது எங்க வீட்டு பொண்ணுக்கு தாலி கட்டுனது அப்படின்னுட்டு ஓடி வராங்க….வர்றப்ப என்ன செய்றாங்கன்னு கேளு…”

”ஆமா இது தெரியாதா என்னனு கேட்கிறதுக்கு….? அத்தனை டேபிள் சேரும் பறக்கும்…”

“எக்‌ஸாக்ட்லி…. நீ புத்திசாலி பவிகுட்டி……அப்போ என் கைல இருந்து வாயைப் பார்த்து ட்ராவல் பண்ணிகிட்டு இருந்த பாயசம் மட்டுமா பறி போகும்….? ….. என் மொத்த இலையுமே அப் சைட் டவ்ணா டர்ன் ஆகி அதுல இருந்த அத்தனை பாயசமும் அவ்ட் ஆகிடுமே..….நினச்சுப் பார்க்கவே கொடுமையா இல்ல? எனக்கு என் பவி கல்யாணத்துல சூப்பர் பாயாசம் வேணுமாங்கும்…..சோ இந்த ப்ளான நாம ட்ராப் பண்ணிடலாம்….” பவிஷ்யாவின் கழுத்தை கட்டினாள் நிலவினி

“அடப்பாவி நீ எவ்ளளளவு நல்லவ?”

“ஏன் அப்ப நீயே அந்த பிஎம் ஐ கல்யாணம் செய்துக்கிறேன்றியா….? நோ ப்ராப்ஸ்….நானே முன்ன இருந்து பேசி முடிக்கிறேன் இந்த சம்பந்தத்தை….என்ன எங்க வீட்டு மிஸ்டர் ஜெயநாதனை மட்டும் அந்த பக்கம் வரவிடாமா பார்த்துக்கோ…….அவரைப் பார்த்தாலே எனக்கு வாய்ல வயலின் தான் வரும்…நோ வேர்ட் கம்மிங் யூ நோ”

“எனக்கென்னமோ நிலு நீ மாப்ளை சார்ட்ட கவுந்துட்டன்னு தான் தோணுது…..அப்பாவ பேர் சொல்ற அந்த மாப்பிள்ளை மட்டும் பி எம் ஆ?”

“போடி இவளே பி எம்னா பட்டிகாட்டு மிட்டாய்காரன்னு அர்த்தம்……அதோட அந்த ஆள் பேர் என்னனு கூட நான் கேட்டுகலை… இப்ப அதவிடு….ப்ளான் ப்ளீஸ்…இல்லைனா நீ தான் பலி……உனக்குத்தான் தான் தாலி…..” கடைசி வரியை ஒருவித ஸ்லோமோஷன் எஃபெக்டில் சொன்னவள்….

”ஹே பாருடி உனக்கு கல்யாணம்னதும் எனக்கு கவிதைலாம் வரும் போல….இந்த ப்ரச்சனைல இருந்து மட்டும் என்னை காப்பாத்தி விடு….உன் கல்யாணத்துல நான் கவிதை அரங்கமே நடத்துறேன்…”

இப்பொழுது  பவிஷ்யாவின் மனகண்ணிற்குள் ஆணொருவன் திருவுலா. ப்ளாக் ஜீனும் டக்கின் செய்யாத ப்ளாக் ஹால்ஃப் ஸ்லீவ்  கேஷுவல் ஷர்ட்டுமாய்  பேண்ட்ஸின்  ஒரு பக்க பாக்கெட்டில் மட்டும் கை நுழைத்தபடி  ப்ரவ்ண் நிற கேஷுவல் 6 இன்ச் ஷூக்கால்களால் அந்த பனி உறைந்த சாலையில் நடந்தான் அவன்.

 “வெட்டிங்க நிப்பாட்ட ஒன்னு செய்யலாம்….” அவன் நினைவை தவிர்த்து நிலவினியிடம் கொண்டு வந்தாள் அவள்.

“ நிலு உனக்கு ஏதோ பெருசா உடம்புக்கு முடியலை…அப்படி இப்படின்னு அந்த மாப்ளை வீட்ல சொல்லிடுவோம்….அவங்களா நிப்பாட்டிடுவாங்க…” தன் யோசனையை தொடங்கினாள் பவிஷ்யா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.