(Reading time: 18 - 35 minutes)

ன்னம்மா நீங்க…” இவள் பல்லைக் கடித்துக் கொண்டு தொடங்க

“இந்தா சுசி…..நானே போய்ட்டு வந்தேன்….” ஒரு பெரிய பூப்பந்தை எடுத்து நீட்டியபடி வந்தார் அப்பா.

வார்த்தை மாறி வயலின் வாசிக்க வகைபட்டது இவள் வாய்.

“நிலுக்கு பிச்சிப்பூதான் ரொம்ப இஷ்டம்னுட்ட…..இங்க புதுப்பூ இன்னும் மார்கெட்டுக்கு வரலை….நேத்து பூதான் இருக்குது….அதான் நம்ம வல்லான்கிணறு தோட்டத்துக்கு போய்ட்டேன்…” இவள் மனம் எதையும் உணராமல் அப்பா பூ கொண்டு வந்த கதையை சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

“தோட்டத்துல போய் பறிச்சு…கட்டி…எப்படிங்க இவ்ளவு நேரத்துக்குள்ள?” அம்மாவுக்கும் இப்போ இதுதான் முக்கியமா போச்சு…

“செங்க சூள ஆள்கள் எல்லாத்தையும் பூ பறிக்க சொல்லிட்டேன்……6 பொண்ணுங்க உட்கார்ந்து பூ கட்டிருக்காங்க….அப்டியும் இவ்ளவு நேரமாகிட்டு..…ஆனா இதெல்லாம் இன்னைக்கு அங்க அத்தனை ஆள் வேலைக்கு நிக்க போய்தான் முடிஞ்சிது…….. நம்ம நிலுக்கு எப்பவுமே இப்படித்தான் நடக்கும்…அவ ஆசைப்பட்டது எப்படியும் அவளுக்கு கிடச்சுடும்…..” அப்பா முழு பூரிப்பில் சொல்லிக் கொண்டு போக…..இவளுக்கு அப்படியே தன் தலையில் ஓங்கி ஓங்கி போட்டுக் கொள்ளலாம் போல வந்தது. ஆனால் அப்பா முன்னால் அதற்கெல்லாம் தைரியம் ஏது? ….

அப்புறமென்ன அடுத்த அரை மணி நேரத்தில் நிலு என்ற நிலவினி அம்மா சொன்ன புடவையில் அப்பா தந்த பூவில்….அரை கிலோ நகையோடு அந்த அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

உள்ளுக்குள் கால்குலேஷன் கோயிங் ஆன்.

திபன் தானே காரை ட்ரைவ் செய்வது என முடிவு செய்திருந்தான். இன்னும் மூன்று எஸ்யூவியிலும்…ஒரு வேனிலுமாக இவன் வீட்டு சொந்தங்கள் பின்னால் வந்தாலும்… இந்த காரில் இவனது இம்மீடியட் ஃபேமிலி அதாவது இவனது பெற்றோரும் இரு தம்பிகளும் மட்டுமே….

மத்த சொந்தக்காரங்க யாரவது வந்தால், இங்கிதம் இல்லாமல், மத்தவங்களுக்கு மனசு கஷ்டமா இருக்குமேன்னு எதுவும் நினைக்காமல், ஏதோ இவனுக்கும் இவன் வீட்டுக்கும் நல்லது செய்ற மாதிரி….பெரிய மவன் இருக்க சின்னவன் தோள்ல கல்யாண மாலை வாங்கினா பெத்தவங்க மனசு என்னபாடு படும்னு யோசி தம்பி…. என தொடங்கி என்ன நோய்னாலும் இப்பல்லாம் வயித்தியம் இருக்காம்….நீ ஏன்பா கண்டதையும் போட்டு குழபிக்கிற….கல்யாணம் செய்…வர்றவ ராசியில எல்லாம் சரியாயிடும்…. என்பது வரை இவனிடம் கன்னா பின்னா என பேசி வைப்பாங்க.

இவன் தாங்குவான். ஆனால் அது அம்மாவிற்கும் இவன் வீட்டாருக்கும் ரொம்பவும் வலிக்க கூடும்.

அதோடு இவர்கள் மட்டுமாக செல்கையில் அம்மாவோ இவன் வீட்டில் மற்றவர்களோ மனதுவிட்டு ஏதேனும் பேச எண்ணக் கூடும்….அந்த ஃப்ரீடம் இல்லாமல் போய்விடக் கூடாது.

ஆக ட்ரைவரை கூட தவிர்த்து தானே எடுத்தான் காரை.

சம்பந்தம் பேச போகும் கலகலப்பு அங்கு சுத்தமாக இல்லை. வெகு நேரம் வரை காரில் முழு அமைதியே…

அப்பொழுதுதான் அதைக் கவனித்தான். எதிரிலிருந்து இவன் கரை நோக்கி மிரண்டு போய்  ஓடி வந்து கொண்டிருந்தாள் அவள். முழு காலையும் மறைத்த ஒரு தொள தொள பர்லல் ஃபேண்ட்ஸ் அதற்கு மேல் முட்டுவரையிலுமாய் கச்சமுச்ச என சுற்றப்பட்டு அவளுக்கு பின்னால் அட்டாச்ட் அகல வால் போல் பறந்து கொண்டிருந்த ஒரு சேலை…..அதை அவளை விட்டுப் பறந்து விடாதபடி அள்ளி பிடிக்க திணறிய படி அவள் கைகள்.  அந்த ஏர்போர்ட் பிக்பாக்கெட் பெண்….

ஒரு சின்ன ஜெர்க் அதிபனிடம்…இவள் இங்க என்ன செய்றா?...இந்த ஓட்டம் எதுக்கு? இவனுக்குள் கேள்வி பிறக்கும் போதே பாதி பதில் கண்ணில் படுகிறது.  அந்த ஓட்டத்துக்கு காரணகர்த்தா கண்ணில் பட்டார்…..வாய்விட்டு சிரித்தான் இவன்.

ஆம் அவளைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தது ஒரு கோழி!!!!

அதே நேரம் இவர்களது காரைப் பார்த்ததும் காரை நிறுத்தும் படியாய் அவள் சகை செய்ய தொடங்கினாள்.

தொடரும்!

Episode # 01

Episode # 03

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.