Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 18 - 35 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

17. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ன்று காலையிலேயே விரைவாகத் தயாராகி பைரவிக்காக காத்திருந்தான் வசந்த். 

பைரவி அவனை அந்த தொழிலதிபர் ஆனந்த் வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்லியிருந்தாள்.. ஏற்கனவே அஜய் நேற்றே அவரிடம் தொலைபேசியில் இவர்களை பற்றி சொல்லி விட்டதாக விபரம் தெரிவித்திருந்தான்.

தன் தாயிடம் தனது இந்த பார்ட் டைம் வேலையை பற்றி இரவு பேசியவன், சற்று தயங்கிய சாரதாவுக்கு இந்த உதவிப் பணம் கிடைத்தால் அவனுக்குமே தந்தையிடம் அவனது சொந்த செலவுகளுக்காக கையேந்துவது அவசியமிருக்காது என்றும், தற்சமயம் மஹதி திருமணத்துக்கே பண நெருகடியில் இருப்பவரிடம் மேலும் மேலும் அவரை தொந்தரவு படுத்துவது அவனுக்குமே அவமானமாக இருக்கிறது என்றும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தான் வசந்த்.

vasantha bairavi

சாரதாவுமே அவன் படிப்பு கெடாத வகையில் கௌரவான எந்த வேலையாய் இருந்தாலும், பரவாயில்லை என்று அவனை புரிந்து கொண்டு தன் ஒப்புதலை அளித்தார்..  நேற்றைய சம்பவம் அவருக்குமே மன வருத்ததை கொடுத்திருந்தது.. இந்த முறை தன் மகன் அவன் முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்று இறைவன் முன் வேண்டுதலை வைத்தார்.

காலை எட்டு மணிக்கே பைரவி தயாராகி வந்து விட, காலை டிபனை முடித்தவர்கள், ஒரு ஆட்டோவை பிடித்து சாந்தோம் கடற்கரை அருகே இருந்த அந்த அழகிய பங்களாவை அடைந்தனர்.

வீட்டிற்கு வெளியே இருந்த செக்குயூரிட்டியிடம் அவர்களைப் பற்றி சொல்ல, சிறிது நேரம் காத்திருத்தலுக்கு பின் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடைக்க, "இவர் பெரிய தொழிலதிபர் வசந்த்.. பரம்பரை பணக்காரர்கள்.. அதான் உள்ளே செல்ல கூட இத்தனை கெடுபிடி" என்ற பைரவிக்கு ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான் வசந்த்..

'பணம் இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. வீட்டுக்கு தனி காவல் எல்லாம் ஒரு விஷயமா என்ன' என அவன் மனம் ஆலோசித்தது.

மெல்ல வீட்டை அடைந்தவர்கள், வரவேற்பரையில் இருந்த வயதான ஒருவர், அவர்கள் விவரங்களை கேட்டு அங்கே இருந்த ஒரு அலுவக அறையில் அமர சொல்லி விட்டு தன் பணியை தொடரச் சென்றார்..  அவர் அந்த வீட்டில் கேர் டேக்கராக இருப்பவர்.

வீட்டிற்குள் நுழையும் பொழுதே அந்த மாளிகையின் பிரமாண்டத்தில் கவர பட்ட வசந்த், அந்த வீட்டின் அழகை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.. யார் இதன் உரிமையாளர், யாராய் இருந்தாலும் நல்ல கலா ரசிகராக இருக்க வேண்டும், என்று அவரை மனதுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'ஹாய் பைரவி.. ஹவ் ஆர் யூ.. சாரி வந்து நேரமாகியதா?.. முக்கியமான கால் எடுக்க வேண்டியதாக இருந்தது.. வாருங்கள்.. இவர்" என இழுக்க,

"ஹலோ ஆனந்த்.. குட் மார்னிங்..  ஐ ம்ஃபைன்.. இப்பொழுதுதான் வந்தோம்..  அஜய் உங்களிடம் சொல்லியிருந்தானே வசந்த்.. நாங்கள் குடியிருக்கும் வீட்டு லேண்ட்லார்டின் சன்"  என்றவள், வசந்திடம் திரும்பி, "வசந்த் இவர் தான் ஆனந்த் ராமனாதன்.. வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்.. அஜய்யுடன் யூ.எஸ் ல் படித்தவர்.. " என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.

You might also like - Barath and Rathi... A free English romantic series

இருவரும் தங்களுக்குள் பரஸ்பர அறிமுகப்படுத்தலுக்கு பின்னர், ஆனந்த் இன்டர்காமில் அவர்களுக்கு காஃபி அனுப்புமாறு சொல்லிவிட்டு, வேறு எதாவது லைட்டாக சிற்றுண்டி எடுத்து கொள்ள கேட்க, அவர்கள் அப்பொழுதுதான் டிபன் முடித்து வந்தாக சொல்லி மறுக்க, ஒரு வழியாக காப்பியை குடித்து முடித்தார்கள்.

"வெல்.. சொல்லுங்கள் பைரவி.. நான் என்ன செய்யனும்.. அஜய் என்னவோ, வசந்துக்கு உதவுமாறு கேட்டிருக்கிறான்.. உங்களுக்குதான் தெரியுமே .. எனக்கு அஜய் நான் யூ.எஸ் ல் இருந்த பொழுது எவ்வளவோ விதத்தில் உதவி செய்திருக்கிறான்.. அதற்காக மட்டும் அல்ல, மிஸ்டர். வசந்தை பற்றி நேற்று இரவு சொன்னான்.. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்து கொண்டிருப்பதாக சொன்னார்..  வெல், இப்பொழுதுக்கு எனக்கு ஒரு உதவியாளர் வேண்டியிருக்கிறது.. அலுவலகத்தில் எனக்கு பெர்சனல் அசிஸ்டெண்ட் இருந்தாலும், காலை எட்டு மணியிலிருந்து பதினோறு மணி வரை இங்கே வீட்டிலேயே எனக்கு சில பல குறிப்புகள் எடுக்க..  மற்றபடி என் தந்தைக்கு தற்சமயம் கால் பிராக்ச்சர் ஆகியிருப்பதால், இங்கே வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறார்.. கொஞ்சம் அவரது அலுவக சம்மந்தமான மெயில் செக் செய்து உதவ வேண்டும்".

"அது தவிர, இங்கே என் தாயாருக்கு வெளியே செல்ல போக வர வேண்டியிருக்கும்.. என்னதான் டிரைவர் இருந்தாலும், சில இடங்களுக்கு இதற்கு முன் இருந்த பி.ஏ. தான் அவருக்கு அனைத்தையும் செய்வார்.. அவரது வேலை நிறைய இருக்காது.. வாரம் இரு முறை பாங்க், அல்லது வேறு ஏதற்காகவாது அழைப்பார்..  என்ன வசந்த், உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா?..  மதியம் மூன்று மணி வரை இருந்தால் போதும்.. காலை, மதியம் இங்கேயே உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.. ஈவ்னிங்  உங்கள் படிப்பு சம்மந்தமாக நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.. உங்களுக்கு மாதம் இருபத்தி ஐந்தாயிரம் கொடுக்கிறேன்"  என்ற ஆனந்த்,

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

SriLakshmi

Latest Books published in Chillzee KiMo

 • DeivamDeivam
 • jokes3jokes3
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிShanthi Venkatasubra 2016-01-13 22:56
Mahathi ajai jodiyaa? Bairavi ananth jodiyaa? Aanaalum vasanth and bairavi maarina kuzhandaigalai iruppargalo!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிflower 2016-01-13 17:05
nice ep mam (y)
ajay aththai saratha mami thaanea :Q:
vasanth- kavi ananth - bhairavi ajay-mahathi ivunga thaan pair ah :Q:
ini epdi ellarum searaporanga?
bhairavi avunga relative ah yepo kandupidika pora?
waiting to know mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிDevi 2016-01-13 16:50
Super update Srilakshmi mam (y)
Kavitha anandhin thangaiyaa ... unexpected :-?
Saradha mami than ajiayin atthai endru ninaikiren... :Q:
Ini kadhai eppadi pogum.. :Q: Waiting for next episode (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிKJ 2016-01-13 12:19
Romba romba enga curiosity ah thoonrenga ponga... Yaruku yaru? Yaroda relation yarunu yosiche tired agiduren :P
Oru doubt... Namma Kottasamy Ajay ah pathavudene kandu piducharna enn namma sarada amma kandupidikala? (if she is his aunt :) )
Kathai romba suvarashiyama poguthu (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிGokila Sivakumar 2016-01-13 11:21
Nice episode :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிChithra V 2016-01-13 10:36
Bairavi ammavoda
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிChithra V 2016-01-13 10:34
Appo ajay oda athai than saradha va :Q: appo bairavi annavoda Anna yaru :Q: anand Appa va :Q: Vasanth Appa va :Q: appo bairavi appavoda sister yaru :Q: ippadi niraya questions oda unga series super (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிChriswin 2016-01-13 10:22
So vasanth fmly tha avan atha fmly nu nenaikuren super epo mam...arumai
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிJansi 2016-01-13 06:15
Nice epi Srilakshmi
Appo Ajay-oda atai Sharda...va?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிChillzee Team 2016-01-13 06:05
interesting update mam

Saradha than Ajay oda athaiya :Q:

Vasanth - Kavitha relationship ennaga poguthu :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வசந்த பைரவி - 17 - ஸ்ரீலக்ஷ்மிsrilakshmi 2016-01-13 13:46
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லோருக்கும் மிக்க நன்றி.. கிட்டதட்ட சரியாகவே யூகிச்சிருக்கீங்க நிறைய பேர். சீக்கிரமே இதற்கான விடை கிடைக்கும் இன்னும் ஒருசில அத்தியாயங்களில். அதுவரை.. கொஞ்சம் பொறுமைப்பா ப்ளீஸ்..பைரவியின் மாமா யார்?.. அஜையின் அத்தை யார்.. விடை விரைவில்..

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம் தோழமைகளே..
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top