(Reading time: 18 - 35 minutes)

"ன் தங்கை சரியான பிடிவாதக்காரி.. எங்களுக்கு இருக்கும் சொத்திற்கு இவள் வேலைக்கு போக வேண்டிய அவசியமே இல்லை.. எம்.பி.ஏ. படித்திருக்கிறாள்.  பிடிவாதமாக தன் சொந்த காலில் நிற்பேன் என்று, கொஞ்சம் காலம் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு காம்பஸ் இன்ட்ர்வீயூ மூலம் இந்த பிரைவேட் பேங்க்கில் சேர்ந்திருக்கிறாள்.. அப்பாவுக்கு கொஞ்சம் இதில் குறையே.. எங்களுக்கே இத்தனை பிசினஸ் இருக்க, இவள் வெளியிடத்தில் வேலை பார்ப்பதா என்று.. இதில் நானும் இப்பொழுது இந்த மெடிக்கல் எக்குயூப்மென்ட்ஸ் தயாரிப்பில் இறங்கி விட்டேன்.. இவளாவது அவருக்கு உதவுவாள் என்று நினைத்திருந்தார்.."  என்ற ஆனந்த்,

"அம்மாவுக்கு தான், அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.. இவள் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாள்" என்றபடி பைரவியுடன் பேசியபடியே வெளியேறினான் ஆனந்த்..

You might also like - Puthir podum nenjam... A romantic story...

'ஓ .. மேடமுக்கு திருமண ஏற்பாடுகளா??.. நடக்கட்டும், நடக்கட்டும்.. இவள் ஒரு நாள் கூட தன்னை பற்றி முழுவதாக சொல்லவில்லை.. ஒரு வேளை அவள் இவ்வளவு பெரிய பணக்காரி என்று எனக்கு தெரிந்தால்,  நான் அவளை விடாமல் பிடித்து கொள்வேன் என்று நினைத்தாளோ!.. எது எப்படியோ, இனி அவளை மறந்து தன் வழியை பார்த்துக் கொள்ள வேண்டும்.. இனி அவளிடம் பேச முயல கூடாது' என்று தீர்மாணித்துக் கொண்டவன், ஆனந்த் வருவதற்காக காத்திருக்க தொடங்கினான்.

னந்திடம் விடை பெற்று அவன் காரில் அனுப்பி வைப்பதாக கூறியதற்கு மறுத்து விட்டு, ஒரு ஆட்டோவை பிடித்த பைரவி, நேராக வீட்டை அடைந்தவள்,  சாரதா மாமியிடம் வசந்துக்கு வேலை கிடைத்தது பற்றிய விஷயத்தை சொல்லி விட்டு, தனது அறைக்கு சென்று ஓய்வெடுக்க திரும்பியவள், மாடியில் இருந்து அஜய் இறங்கி வருவதை பார்த்து விட்டு,

"ஹாய் அஜய்.. என்னப்பா.. நாளை வருவதாக சொன்னாய்.. இன்றே வந்து விட்டாய்!! போன வேலை முடிந்து விட்டதா?.. எப்பொழுது வந்தாய்? .. எதாவது சாப்பிட்டாயா?" 

"ஏய் .. ஒவ்வொன்றாக கேள்.. முதலில் இன்னும் சாப்பிடவில்லை"  என தொடங்க,

"ஏய் சாப்பாட்டு ராமா..  கடைசி கேள்விக்கு முதலில் பதிலா"  என பைரவி சிரிக்க,

"முதலில் சாண் வயிற்றிக்குத் தான் ஈயனும்..  வா வா கொஞ்சம் அவசரமாக வெளியே போக வேண்டும்.. கேபிற்கு சொல்லியிருந்தேன்.. அதோ வந்து விட்டான் பார்.. போகும் போது எல்லாம் சொல்கிறேன்.. நீ எங்கே சுற்றி விட்டு வருகிறாய்"  என கேட்டுக் கொண்டே அவளையும் இழுத்துக் கொண்டு அங்கே காத்திருந்த காரில் ஏறி அமர்ந்தான்.

பைரவி சாரதா மாமியிடம் அஜய்யுடன் வெளியே செல்கிறேன் என்று பொறுப்பாக சொல்லி விட்டே அவனுடன் சென்றாள்.

முதலில் ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தச் சொன்ன அஜய், மதிய உணவை முடித்தனர்..

"உம்..  இப்ப கேளு.. எல்லாத்துக்கும் பதில் சொல்கிறேன்"  என்ற அஜய்க்கு..

"ஹப்பா.. இப்பவாது சொல்லனுன்னு தோணிச்சே.. சாப்பிடுவதிலேயே இரு"  என்று செல்லமாக அவனிடம் சீண்டியவள்,  "ஓ.கே அஜய்.. போன வேலை என்னாச்சு.. உன் தந்தையுடைய குடும்பம் பற்றி தெரிந்ததா?..  அவரை பெற்றவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?.. வேறு என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு".

"வெயிட்  மேடம்.. காரில் போகும் போது சொல்கிறேன்"  என்றவன், காரில் அவளுடன் அமர்ந்து, காரை மந்தவெளி பக்கம் செலுத்த டிரைவரிடம் சொன்னவன், பைரவியிடம் திரும்பி,

"அப்பப்பா என்ன அவசரம் டா சாமி..  நேற்று நான் மாயவரத்தை அடைந்தவுடனேயே என்னிடம் இருந்த அந்த அட்ரஸ்சை தேடிப் போனேன்.. ஆனால் அங்கே நான் தேடியவர்கள் யாருமே இல்லை..  ஒரு பதினைந்து வருடம் முன்பே அந்த வீட்டை நேற்று நான் சந்தித்தவர்களிடம் விற்று விட்டு சென்னைக்கு சென்று விட்டார்களாம்.. அதன் பிறகு எந்த தொடர்பும் பெரிதாக இல்லை என்று சொன்னார்கள்.. திகைத்து ஒரு ஆதாரமும் வேஸ்டாக போய்விட்டதே என்று நினைத்து ஊர் திரும்ப நான் தீர்மாணித்தேன்.. என் அப்பாவின் பூர்விகம் இனி என்னால் கண்டுபிடிக்க முடியாது,  அவருடனேயே அழிந்து போய் விட்டது என்று வருத்ததுடன் இருந்தேன்."

"அய்யோ..  வெரி சாரி அஜய்.. அப்ப உன்னால் உன் பூர்வீகத்தை கண்டு பிடிக்க முடியவில்லையா?..  இனி என்ன செய்யப் போகிறாய் அஜய்.. கவலைப் படாதே.. எதாவது வழி கிடைக்கும்"  என அவனுக்கு பதற்றத்துடன் ஆறுதல் அளித்தவளை பார்த்தவன்.

"ஹேய்.. கூல்.. வழி கிடைத்து விட்டது.. ஆல்ரெடி எனக்கு அவர்களை பற்றி தெரிய வந்து விட்டது.. என் மூதாதையர்களின் வீட்டை வாங்கியவர்கள், என் தாத்தாவுக்கு தஞ்சை அருகே ஒரு கிராமத்தில் சொந்தமான கொஞ்சம் நில புலன்கள் கோட்டைச்சாமி என்பவரிடம் குத்தகைக்கு விட பட்டிருக்கிறது என்றும், அந்த கோட்டைசாமியை அணுகினால் நான் தேடுபவர்களை பற்றி அறிய முடியும் என்றும் சொன்னார்கள்.. அந்த கோட்டைசாமி, கொஞ்சம் நாட்கள் வரை அவர்களுக்கு சொந்தமான நிலத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாராம்.. கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் தான் மொத்தமாக அவர்கள் நிலத்தை விற்று விட்டனராம்.. அவருடன்  தொடர்பு விட்டு விட்டாலும், அவருடைய அட்ரெஸ்சை கொடுத்தார்கள்"  என்று நிறுத்தினார்.

"ஓ.. அப்ப நீ கோட்டைசாமியை போய் பார்த்தாயா.. விவரம் ஏதாவது தெரிந்ததா?"   என பரபரப்புடன் கேட்டாள் பைரவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.