(Reading time: 18 - 35 minutes)

"சாரி வசந்த்,  ஒரு வருங்கால கலெக்ட்டரை நான் இப்படி வேலை வாங்கலாமா?.. உங்க குடும்பம் பற்றி அஜய் சொன்னான்.. என்னால் பணம் கொடுத்து உதவ முடியும்.. ஆனால் நீங்கள் அஜய், ஏன் பைரவியிடம் கூட பணம் வாங்க மறுத்ததாக கேள்வி பட்டேன்.. உங்கள் சுய கௌரவத்தை பாராட்டுகிறேன்..  நான் கூட வெளி நாட்டில் இருந்த பொழுது, என்னன்னவோ வேலைகள் எல்லாம் படிக்கும் பொழுது செய்திருக்கிறேன்..  இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை.. நேர்மையான முறையில் செய்யும் எந்தவிதமான வேலையும் கௌரவமானதே..  ஏதோ என்னால் முடிந்த உதவி.. என்ன வசந்த்,  உங்களுக்கு ஓ.கே.வா"  என கேட்டான் ஆனந்த்.

"ரொம்ப நன்றி சார்.. நான் எதிர்பார்க்கவேயில்லை.. எனக்கு இப்படி ஒரு பார்ட் டைம் வேலை கிடைக்கும் என்று.. இத்தனை நாட்களாக, பொறுப்பில்லாமல் படிப்பு என்ற பெயரில் பெற்றவர்களை வருத்தி கொண்டிருந்தேன்.. இனிமேலாவது அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. பைரவி தான் எனக்கு எடுத்து சொன்னார்கள்.. படித்து கொண்டு வேலை பார்ப்பதில் என்ன கௌரவ குறைவு சார்??.. இளைய தலைமுறையினர் இப்படி படிக்கும் பொழுதே சுய சம்பாத்தியம் ஈட்டுவது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.. நான் கலெக்டர் ஆனால், இளைய சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாய் இருக்க போகிறேன்.. ஏற்கனவே எத்தனையோ நம் அரசாங்கம் உதவினாலும், இப்படி அறியாமையில் இருப்பவர்களுக்கு வழி படுத்த வேண்டும்"  என்று உணர்ச்சி வசப்பட்டான் வசந்த்.

"கூல் வசந்த்..  எல்லாம் நடக்கும்.. நீங்கள் கூடிய சீக்கிரம் கலெக்டராகப் போகிறீர்கள்.. அப்புறம் பாருங்கள், நீங்கள் நினைத்தை எல்லாம் நல்லபடி நடத்துங்கள்.. இளைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக இருக்கப் போகிறீர்கள்.. ஆல் தெ பெஸ்ட்.. ஆனால் கொஞ்சம் என்னையும் ஞாபகம் வைத்துக் கொண்டால் சரி தான்.. ஓ.கே , சோ இன்றிலிருந்து வேலையை தொடங்கலாமா.."  என ஆனந்த் கேட்க,

"சரி சார்.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..  பைரவி நீங்கள் எப்படி வீட்டுக்கு செல்வது?"  என்ற வசந்தை,

"நோ ஓரீஸ்.. ஆட்டோ பிடித்தால் போயிற்று"  என,

அந்த சமயத்தில், அந்த அலுவலக அறை கதவை தட்டியபடி , "அண்ணா,..  நான் பேங்குக்கு கிளம்புகிறேன்"  என்றபடி உள்ளே நுழைந்தாள்  ஒரு இளம் யுவதி..  உள்ளே நுழைந்தவள் தன் அண்ணன் எதிரில் இருந்தவர்களை பார்த்து அதிர்ந்தவள், சட்டென்று சுதாரித்து கொண்டாள். அவளை பார்த்து அதிர்ந்தான் வசந்த்..

You might also like - En manathai thottu ponavale... A family oriented romantic series

"ஹாய் கவி, என்ன அதற்குள் ரெடியாகி விட்டாயா.. ஓ.கே."   என்ற ஆனந்த், 

"கவி, இது பைரவி.. என் யு.எஸ். நண்பன் அஜய்யின் தோழி.. இவர் வசந்த்.. இவர்கள் இருவருடைய பிரண்ட்.. ஐ.ஏ.எஸ் பரிட்சைக்கு ஏழுதியிருக்கிறார்.. மேற்கொண்டு அதற்கேற்ப தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்..  இப்பொழுது பார்ட் டைமாக நம் வீட்டில் எனக்கும், அப்பாவுக்கும் உதவி செய்ய பி.ஏ.வாக சேர்ந்திருக்கிறார்"  என அறிமுகப் படுத்த, மீண்டும் அதிர்ந்தாள் கவி என்கிற கவிதா. 

'என்னது இது, அப்படியா, இது எப்பொழுதிலிருந்து என்ற முறையில் ஒரு நிமிடம் வசந்தை நோக்கியவள், பின்னர் பொதுவாக இருவருக்கும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு, தனக்கு வேலைக்கு நேரமாகி விட்டதாகவும், பிறகு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு தன்னுடைய அண்ணனிடமும் விடைபெற்று சென்று விட்டாள் கவிதா.

கவிதா வேறு யாருமில்லை.. வசந்தின் காதலியே தான்..

'கடைசியில் என் வீட்டிலேயே அசிஸ்டென்ட்டாக வந்து சேர்ந்து விட்டானா இந்த வசந்த்.. அவனுடன் இருக்கும் இந்த பைரவி யார்?..  அன்று கடையில் அவனுடன் பார்த்தோமே?..  இவர்கள் இருவருக்கும் என்ன உறவு.. இவள் வந்ததால்தான் என்னை அவாயிட் செய்கிறானா?..  அன்று பார்க்கில் கோபமாக போனவன், இன்று வரை ஒரு போன் கூட செய்யவில்லை?? இவளுடன் மட்டும் சுற்ற முடிகிறதோ??.. ஒரு வேளை அமெரிக்க மோகமோ??.. எது எப்படியோ, இனி அவனாக வந்து பேசினால் மட்டுமே நாம் பேச வேண்டும்' என்று நினைத்த கவிதா அவனை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினாள்.

சந்துக்கும் கவிதாவை கண்டதும் முதலில் அதிர்ச்சியே.. அவளை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை.. 'எதிர்பார்பது என்ன, அது அவளது வீடு, ஆனந்த் அவளுடைய அண்ணன் என்று முன்பே தெரிதிருந்தால் அவன் இந்த வேலைக்கு என்ன, அவள் வீட்டு பக்கமே தலை வைத்து படுத்திருப்பானா என்ன.. ஆனால் சற்று நேரம் முன்னர் தான் வேலையை ஒத்து கொண்டிருந்தான்.. சுளையான சம்பளம்.. அவன் இருக்கும் நிலையில் இது ஒரு நல்ல வாய்ப்பு.. வேண்டாம் என்று சொன்னால், இப்பொழுது இதற்காக முனைந்த பைரவியையும், அஜய்யும் அவமானப்படுத்துவது போல் ஆகும்'

'கவிதாவே அவனை கண்டு கொள்ளாத பொழுது, அவனுக்கு மாத்திரம் என்ன வந்தது, வந்தோமா வேலையை பார்த்தோமா' என்று செல்ல வேண்டியதுதான் என்று  தனக்குள் தீர்மாணித்து கொண்டான்.. ஆனந்தின் குரலுக்கு நிகழ்வுக்கு வந்தான்.

"என்ன வசந்த், நீ இங்கேயே இரு.. நான் உன்னை அப்பாவிடம் அறிமுகப் படுத்துகிறேன்.. பைரவியை எங்கள் டிரைவருடன் காரில் அனுப்பி விட்டு வருகிறேன்"  என்ற  ஆனந்துக்கு வசந்த் தலையாட்ட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.