(Reading time: 18 - 35 minutes)

ன் தந்தை அமெரிக்க மனைவியை விவாகரத்து செய்து வேறு இந்தியப் பெண்ணை மணந்தது பற்றி ஏனோ அவனுக்கு சொல்லப் பிடிக்கவில்லை.

"ஓ..  டாடக்டரா நீங்க தம்பி..  ரொம்ப  சந்தோஷம்..  காலையில் நீங்க வந்திருந்தீங்கன்னா, நானே உங்களை கையோடு உங்க அத்தை வீட்டுக்கு கூட்டி கொண்டு போயிருப்பேன்..  நான் அவுங்க ஊட்டுக்குத்தான் போயிருந்தேன்..  அந்த அம்மா ரொம்ப நல்லவங்க..  என்னை கணக்கே கேட்காது.. நான் தான் வருஷம் ஒரு தரம் குத்தகை பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டு கணக்கு சொல்லி போவேன்.. உங்களுக்கு அவுங்க விலாசம் தரேன் தம்பி.. நீங்களே பார்த்துகிரீங்களா..இன்னும் கொஞ்சம் நேரத்துல நான் ஊருக்கு கிளம்பறேன் தம்பி.. நல்ல சமயத்தில வந்து சந்தீச்சிங்க.. இல்லைன்னா வீண் அலைச்சலா போயிருக்கும்..  டயம் கிடைச்சா உங்க நிலத்தை வந்து பார்த்துட்டு கோவில்ல சாமி கும்பிட்டு போங்க தம்பி"  என்றவர்,

உடனேயே அவன் அத்தையின் வீட்டு விலாசத்தை எழுதி கொடுத்தவர், இருவருக்கும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்து உபசரித்து மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருமாறு அழைத்து விட்டு அவர்களுக்கு விடை கொடுத்தார் கோட்டைச்சாமி.

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

மீண்டும் கார் பயணம்..

"என்ன அஜய், கோட்டைச்சாமி அங்கிள் வீட்டிலிருந்து கிளம்பியதில் இருந்து மௌனமாக இருக்கிறாய்.. அந்த அட்ரஸ்சில் இருக்கும் உன் அத்தையை பார்க்க வேண்டாமா.. பாட்டி, தாத்தா பற்றி யோசனையா?"  என்ற பைரவிக்கு,

"எங்க அப்பா ஏன் தான் அவர் பெற்றவர்களை கடைசி வரை சந்திக்கவில்லை எனக்கு ஒன்றுமே புரியவில்லை..  அவ்வளவு சுயனலமா..பாவம் அவர்கள்.. கடைசி வரை அவருக்காக காத்திருந்திருக்கிறார்கள்.. அப்படியாவது தன் அமெரிக்க மனைவி, என் அம்மாவுடனாவது சந்தோஷமாக இருந்தாரா, அதுவும் இல்லை.. அம்மாவுக்கு கான்சர் நோய் என்றவுடன் அவரை விட்டு விட்டு வேறு ஒருத்தியை மணந்து கொண்டார்.. அம்மாவும் தனக்கு வேறு துணையை தேடிக் கொண்டார்.. நான் தான் இவர்கள் இருவரிடம் பந்தாடப்பட்டேன்”..

“இந்த அட்ரஸ்சைப் பார்.. பிறகு சொல்லு.. என்ன செய்யலாம் என்று"  தன் கையில் இருந்த அந்த வீட்டு விலாசத்தை அவளிடம் காண்பித்தான் அஜய்.

அதிர்ந்தாள் பைரவி..

"என்ன செய்யப் போகிறாய் அஜய்..  அவரிடம் சென்று உன்னைப் பற்றி சொல்லப் போகிறாயா?..  தேவையில்லாமல் குழப்பங்கள் உண்டாகலாம்"

"அதான் யார் எனது அத்தை என்று தெரிந்தவுடன் எனக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கு.. ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கிறது.. ஆனால் இன்றைய நிலையில் நான் ஒதுங்கி இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது... எல்லாம் நல்லபடியாக முடியட்டும்.. அப்பொழுது நானே சென்று அவர்களிடம் சொல்லுகிறேன்.. அது வரை சற்று தள்ளி இருந்து அவர்களுடன், எப்படி யாருடைய மனதையும் புண்படுத்தாமல் அவர்கள் வீட்டில் நுழைவது என்று பார்க்க வேண்டும்.. நீயும் அதற்கு உதவ வேண்டும் பைரவி" என்று அவள் கைகளை பிடிக்க,

அவன் கையை இறுக பற்றியவள், "கட்டாயம் அஜய்.. நாம் ஊருக்கு திரும்பும் முன் உன்னை உன் குடும்பத்தவருடன் சேர்ப்பது என் வேலை" என அவனுக்கு உறுதி அளித்தாள் பைரவி.

தொடரும்

Episode 16

Episode 18

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.