(Reading time: 9 - 18 minutes)

01. என் மனதை தொட்டு போனவளே - VJ G

இக் கதை முழுக்க முழுக்க என் சொந்தக் கற்பனையே, இதில் வரும் பெயர்களும், கருத்தும், எந்த ஒரு தனி நபரையும், எந்த ஒரு ஸ்தாபனத்தையும் குறிக்கவில்லை......இந்தக் கதை யார் மனதையாவது பாதித்திருந்தால் தயை கூர்ந்து மன்னிக்கவும் …...

இந்தக் கதை கூட்டுக் குடும்பத்தில், ஒரு வயதானவர்…... அவர்தான் அந்த குடுபத்தின் ஜீவன், அவரை பின் பற்றி நடக்கும், அவர் பேரன்…. அதனாலேயே அந்தப் பேரனின் மேல் அளவு கடந்த பிரியம் அந்த குடும்பத்தாருக்கு, அவன் என்ன செய்தாலும், சொன்னாலும் அவருக்கு பெருமை...  அவன் காதலிக்கும் பெண்ணையும், தன் பேரனின் மேல் எவ்வளவு பாசமும், அன்பும், வைத்திருக்கிறாரோ, அந்தப் பெண்ணின் மேலும் அளவுக்கு அதிகமாக பாசத்தைப் பொழிந்தார்... இதை பார்த்த அந்த குடும்பத்தாருக்கே ஆச்சர்யமாக இருந்தது... அந்தப் பெண் இல்லாமல் தன் பேரன் படும் பாட்டை பார்த்து, அந்த வயதானவர் மனது மிகவும் வேதனைப் பட்டது, அந்தப் பெண் திரும்பி வருவாளா…. தன் பேரன் அவளோடு சந்தோஷமாக குடும்பம் நடத்துவானா என்று ஏங்கி தவித்தார், அந்தப் பேரன் ருத்ராவும், அவன் காதலி சித்ராவும் ஒன்று சேர்ந்தார்களா????

இந்தக்கதையில் ஏதாவது குறை இருந்தாலும், அது உங்கள் மனதை பாதித்தால் என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்,

இந்தக் கதையை படித்து, குறை, நிறைகளை, எழுதி அனுப்ப தவறாதீர்கள்,

இந்தக் கதை முற்றிலும் என்னுடைய கற்பனைக் கதை, இந்தக் கதையில் வரும் பாத்திரங்களும், பெயர்களும், முழுக்க, முழுக்க என் சொந்தக் கற்பனையே அன்றி யாரையும், எந்த ஒரு தனி நபரையும் குறித்தது அல்ல, எந்த ஒரு நிறுவனத்தையும், குறித்தது அல்ல…..

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வ சந்த்யா

ப்ரவர்த்ததே, உத்திஷ்ட நரஸா தூலா

கர்த்தவ்யம் தைவமஹ்ணிகம்

en manathai thottu ponavaleகாலையில் ஆறு மணிக்கெல்லாம், நீலகண்டனுடைய கணீர் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது, காலையில் சூரியன் தக தக வென்று தன் ஒளிர் கதிரைக் கனந்துக் கொண்டிருந்தான்.

அடுப்படியில் நீலகண்டனின் மனைவி சிவகாமி காபி கலந்துக் கொண்டிருந்தார், அவரின் மூத்த மருமகள் கற்பகம் காலை டிபனுக்கு, ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள்.

நீலகண்டன், சிவகாமிக்கு, நான்கு மகன்கள், பெரியவன் சிவேஷ், அவன் மனைவி கற்பகம் அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள், இரண்டாவது, கணேஷ், அவனுக்கு மூன்று பெண் குழந்தைகள், மூன்றாவது தினேஷ், அவனுக்கு நிறைய வரன் பார்த்து, அவனுக்கு ஒவ்வொன்றும் பிடிக்கவில்லை என்று நிராகரித்துக் கொண்டிருக்கிறான், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறான்….

நான்காவது கார்த்திகேஷ் , அவனுக்கு ஷிவேஷின் மகன் ருத்ரேஷ் இரண்டு வயது சின்னவன்…. ஸ்கூலுக்கு ஒன்றாகவே செல்வார்கள் சின்னவனுக்கு, சிறு வயதிலிருந்தே அறிவு அதிகம், எதையும் சொன்ன மாத்திரத்தில் புரிந்துக் கொள்வான், தாத்தா நீலகண்டனின் நேசத்திற்கு உரியவன்…. இவனுடைய அப்பா சிவேஷ் ,அப்படியே ஸ்ரீ ராமனைப் போல் அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடைவர், அதேப் போல் பிள்ளை ருத்ராவும் அவரிடம் மிகுந்த மரியாதையுடன் இருப்பான், அவரும், இவனுடைய பர்சனல் விஷயத்தில் தலையிட மாட்டார், வளர்ந்த பிள்ளையிடம் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே இருப்பார். அவர் B E mech படித்து தன் அப்பாவின் கம்பனியை நடத்திக் கொண்டிருந்தார், பையனும் அதே படித்தான் ஆனால் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று,  தாத்தாவிடம் , சொன்னான்,MEng அண்ட் MBA ரெண்டும் ஒன்றாக படிக்க வேண்டுமென்று ஆசை என்றான், தாத்தாவிற்கு ஒரே பெருமை, “ஆனால், எப்படிப்பா ரெண்டையும் ஒன்றாகப் படிப்பாய், ரொம்ப கஷ்டமாச்சே” என்றார், “இல்லை தாத்தா என்னால் முடியும், நீங்கதான் அப்பாவிடம் பேசவேண்டும்”

அவர் பெருமையோடு “கண்டிப்பாக பேசுகிறேன், நீ மேலேபடி... எப்பவும் போல்  நம் கம்பனியில் வேலை கற்றுக்கொள்,என்னதான் நீ படித்தாலும் பிரக்டிகல் நாலெட்ஜ் வேண்டும் தெரிந்துக் கொள்” என்றார்.

“சரி தாத்தா, நீங்கள் சொல்வது போலவே கேட்கிறேன்” என்றான்

இரண்டாவது மகன் கணேஷ் அவன் M com படித்தான், அவர்கள் கம்பெனியிலேயே அவனுக்கும்  அக்கௌன்ட்ஸ்  டிவிஷனில். ஒரு பொறுப்பு கொடுத்தார்... நீலகண்டன், மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தார், அவள் பெயர் கமலா, அவர்களுக்கு மூன்று பெண்கள்…. சிவேஷுக்கும், கணேஷுக்கும் ஐந்து வயது வித்யாசம், அதனால் கணேஷுக்கு பெரியண்ணன் பேரில் ரொம்ப மரியாதை, அப்பாவுக்கு எந்த அளவுக்கு மரியாதையோ அந்த அளவுக்கு சிவேஷ் மேல் எல்லோரும் மரியாதையை வைத்தார்கள்,கணேஷுக்கு மூன்று பெண்கள், பெரியவள் பன்னிரெண்டாவது படிக்கிறாள் அவள் பெயர் வனிதா, இரண்டாவது பெண் கவிதா அவள் பத்தாவது படிக்கிறாள், மூன்றாவது மகள் ஒன்பதாவது படிக்கிறாள், மூவரில் இவள் ஒருவள் தான் நன்றாக படிப்பாள்.

நான்காவது பிள்ளை கார்த்திகீஷ் படிப்பே ஏறவில்லை, நான் படிக்க மாட்டேன் என்றான்,ருத்ரேஷ் தான்' நீ ஒரு டிகிரீயாவது வாங்க வேண்டும்.. அப்பத்தான் உனக்கு யாரும் கல்யாணம் பண்ணிக்க பெண்ணைக் கொடுப்பார்கள் இல்லையெற்றால் யார் கொடுப்பார்கள்' என்றுசொன்னான், அப்போதான் சொன்னான்......

நீலகண்டனுக்கு , பெரிய பெரிய வண்டிகளுக்கு சிலின்டர்  தயாரிக்கும் கம்பெனி அவர் சின்ன வயதிலிருந்து நடத்திக் கொண்டிருந்தார்... அதுமட்டுமில்லை கோயம்புத்தூர் தாண்டி ஒரு சின்ன ஊரில் அவர்களுக்கு நூற்றிஐம்பது ஏக்கர் நிலம், அதில் எல்லாவித பழம், காய்கறிகள், நெல், என்று வித விதமாக பயிரிட்டு, தங்கள் தேவை போக மீதியை வெளியில் விற்றுக் கொண்டிருந்தார், தன் பெரிய மகனை பதினைந்து வயதில், ஸ்கூல் லீவ் வந்தால் ஊருக்கு அனுப்பி அங்கிருக்கும் மானேஜெரிடம் அவனுக்கு அவன் லெவெலுக்கு என்ன கற்றுக்கொள்ள முடியுமோ, கற்றுக் கொடுங்கள் என்று அனுப்பி வைப்பார். அவனை பதினெட்டு வயதிலேயே வேலை செய்யவைத்தார், தன் கம்பெனிக்கு கூட்டிக் கொண்டு போய் பாக்டரியில் வேலை செய்யவைத்தார் ,அங்கு வேலைப் பார்ப்பவர்கள் கூட இருந்து, அவர்கள் சாப்பிடும் தங்கள் காண்டீனிலேயே  சாப்பிடச்சொல்வார், அங்கு வேலைப் பார்பவர்களுக்குத் தெரியாது இவர் தங்கள்  முதலாளியின் மகன் என்று.

அதேபோல் தான், தன் பேரன் ருத்ராவையும், வேலை பார்க்க சொன்னார்.அவனும் தன் அப்பாவைப் போலவே எல்லாம் கற்றுக் கொண்டான்.

மற்ற மகன்கள், எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம் எங்களால் முடியாது என்று தன் பெரியண்ணனிடம் சொல்லி அப்பாவிடம் சொல்லச்சொன்னார்கள்….ஷிவேஷ் ,அதை தன் அப்பாவிடம் எடுத்துச் சொன்னார்,  அவரும் புரிந்துக் கொண்டார்.. எல்லாருக்கும் எல்லாம் பிடித்து விடாது என்று அவர்களை வற்புறுத்தவில்லை.

கார்த்திக்குக்கும், ருத்ராவுக்கும், இரண்டு வயதே வித்யாசம், அதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக பெண் பசங்களுடன் லீவுக்கு ஊருக்கு போவார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.