(Reading time: 9 - 18 minutes)

ருத்ராவுடைய தங்கை வித்யா, அவனுக்கு நான்கு வயது சின்னவள், அவளும்  கம்ப்யூட்டர் இஞ்ஜிநிரிங் படிக்கிறாள், இவர்கள் எல்லோரும் வருடா, வருடம் ஊருக்கு போகும் போது, ருத்ரா எல்லா வேலையும் கற்றுக் கொள்வான் ஆனால் கார்த்திக் ஊரை சுற்றிக் கொண்டிருப்பான்.

ஆனால், திடீரென்று கார்த்திக் ருத்ராவிடம்  ‘எனக்கு படிக்க இஷ்டம் இல்லை, நான் படிக்கப் போவதில்லை,’ என்றான் பிறகு அவனிடம் ருத்ரா,’ நீ ஏன் படிப்பை நிறுத்தனும்.. உனக்கு நான் சொல்லித்தரேன்... அதனால் நீ படி ,தாத்தாவை  வருத்தப் பட வைக்காதே..விவசாயம் படி, அதுக்கும் உனக்கு நான் உதவி செய்யறேன், அப்போதான் சொன்னான், 'நம்ம ஊரிலே, கனகான்ற ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அவளும் என்னை காதலிக்கிறாள், எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்' என்றான்

‘சரி அதுக்குக் கூட நீ படிக்கணும், அதுக்குத்தான் விவசாயம் படி, என்று சொல்கிறேன்,'என்றான் ருத்ரா

‘அப்பா, என்னை வேறே படிக்கச் சொன்னா?,’

“நான் பேசறேன் தாத்தாவுடன் உனக்கு விவசாயத்துலே விருப்பம் இருக்குன்னு, அதனாலே நான் சொன்னா மாதிரி  படி, அதுக்கப்புறம் உன் காதலை பற்றி தாத்தாவிடம் எடுத்துச் சொல்லி, நீ கல்யாணம் பண்ணிக்கலாம், அதனாலே நீ படிச்சே ஆகணும் அப்புறம் நீயும் உன் பெண்டாட்டியுடன் ஊரிலேயே இருக்கலாம், என்ன சொல்லறே…”

'சரி, நீ சொல்றதை கேக்குறேன்'

'நல்லது, நீ தாத்தாவுடன் பேசு அவர் ஏதாவது சொன்னால் நான் பார்த்துக்கிறேன்'

'சரி' என்றான் கார்த்திக்

அவன் தாத்தாவுடன், தான், அவருடன் இருக்கும் நேரமாக வந்து பேசினான்... அவன் பேசியதைக் கேக்க தாத்தாவுக்கு கோபம் வந்தது, 'ஆமாம் உன்னோட ரெண்டு வயது சின்னவன் அவன் என்ஜீநீயரிங் முடித்துவிட்டான் ,  நீ இப்போதான் உன் பன்னிரெண்டாவது முடிச்சிருக்கே,' என்றார்

அவன் கோபத்துடன் போய்விட்டான்

தாத்தாவைப் பார்த்தான் ருத்ரா,' தப்பு தாத்தா, நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, அவன் மேலே படிக்க மாட்டேன் என்றான், நான்தான், அவனை விவசாயம்  படி என்றேன், நீங்கள் அவனை எதுக்கும் கோபிக்கக் கூடாது, நல்ல விதமாக சொல்லுங்கள், அவனைக் கூப்பிட்டு அவன் இஷ்டம் போல படிக்கச் சொல்லுங்கள், நான் அவனுக்கு உதவி செய்கிறேன்’ என்றான் ருத்ரா

'சரி நீ சொல்ற மாதிரியே செய்யறேன்' என்றார் நீலகண்டன், அவர் மனத்திலும் அதான் சரி என்று பட்டது...

கனேஷின் மனைவி கமலா, தன் பிறந்த வீட்டிலேயே முக்கால்வாசி நேரமும் தங்கிவிடுகிறாள்.. அவள்  பெண்களுக்கும் கூட சிவகாமியும், கற்பகமும் தான் எல்லாம் செய்துக் கொண்டிருந்தார்கள், பசங்களும் அதைப் பத்தி கவலைப் படவில்லை, ஆனால் நீலகண்டனுக்கு ரொம்ப கோபம் தான், தன் பெரிய மகன்தான் ஒழுங்காக குடும்பம் நடத்துகிறான் என்று நினைத்துக் கொண்டார் .

கணேஷ் தன் மனைவியை ஒன்றும் கேட்க மாட்டான், கேட்டால் சண்டை போடுவாள், அவன் கூடுமானவரை தன் அண்ணனை பின்பற்றுபவன், அதனால் ரொம்ப பேசமாட்டான், அதையே அவள் தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்வாள்.அவனுடைய பெரிய பெண் பன்னிரெண்டாவது படிக்கிறாள்.

ன்று ருத்ரா தன்னுடைய கம்பெனி ப்ராஜெக்ட் ப்ரோபோசலை எதுத்துக் கொண்டு தங்கள் வங்கிக்கு போனான், தன் ப்ரோபோசலை கொடுத்துவிட்டு வெளியே வந்த ருத்ரா, அப்போது தன் சித்தப்பா மகள், தன் தங்கை வனிதாவை, ஒரு பையனுடன் பார்த்தான், அந்தப் பையன் யாரென்று தெரியவில்லை …...ருத்ரா, நேரே அவள் கையை பிடித்தான், கூட இருந்தப் பையன்' யாரடா நீ! ஏன், அவள் கையை பிடிக்கிறே என்றான்?'

“நீ யாரென்று சொல்லு, அப்புறம் நான் யாரென்று சொல்லறேன்', என்றான் ருத்ரா

‘அவளை நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன், ‘

'அப்படியா? சரி வா ரெஜிஸ்டர் ஆபீஸ் போகலாம், உடனே நீ கல்யாணம் பண்ணிக்கோ, வா' என்றான் ருத்ரா

‘அதைக் கேக்க நீ யார்?’ என்றான் அந்தப் பையன்

'நான்…..அவள் அண்ணன், போதுமா, இன்னும் வேணுமா? '

'இல்லை சார், தப்பா நினைச்சுக்காதீங்க ,  நான் அவளை உண்மையா லவ் பண்றேன்,'

‘சரி, முதல்ல உன்னைப் பற்றி விவரம் கொடு, உன்னைப் பெற்றவர்கள் யாரு, உன் வீடு எங்கே இருக்கு, நீ என்ன வேலை செய்யறே... எல்லாம் கொடு'

அதில்ல,  சார்  வீ ட்டுக்கு தெரிய வேணாம், நான் இன்னும் என் படிப்பையே முடிக்கலே, எனக்கு வேலை ஒன்றும் இல்லை சார்,'

'இன்னும் படிப்பையே முடிக்கலே, என்ன படிக்கிற நீ,'

'நானும் பன்னிரெண்டாவது தான் சார் படிக்கிறேன்'

வெக்கமாயில்லை, பன்னிரெண்டாவது தான்னு நீயே சொல்லறே, உனக்கே தெரியுது, ரொம்ப சின்ன வயதுன்னு, இப்போ போனா போகுதுன்னு உன்னை விடறேன், ஒழுங்கா ஓடிடு, இன்னொரு முறை இவள் பின்னாடி வந்தே, உன்னை போலீசில் பிடித்துக் கொடுத்துடுவேன்,' வனிதா ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தாள், ருத்ரா, அவளை ஒரு முறை முறைத்தான், அந்தக் கண் சிவந்திருந்தது,அந்தக் கோபத்தைப் பார்த்து நடுங்கினாள்.

தொடரும்

Episode # 02

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.