(Reading time: 12 - 23 minutes)

02. என் மனதை தொட்டு போனவளே - VJ G

வள் கையை பிடித்து தன் மோட்டார் பைக்கில் உட்காரச் சொல்லி ஒரு ஹோட்டலுக்கு போனான்,'இறங்கு' என்றான் வனிதாவிடம்  

அவள் இறங்கியதும், 'உள்ளே வா' என்று கையை பிடித்துக் கூட்டிக் கொண்டு தனி அறைக்கு  சென்றான் அவனுக்கு அவளுடன் பேச வேண்டியிருந்தது, இதை இரண்டு கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது, 'உட்கார்' என்று  ஒரு சேரை காண்பித்தான்,

அவள் உட்கார்ந்தவுடன், 'என்ன இது எத்தனை  நாட்களாய் இந்த மாதிரி சுற்றிக் கொண்டிருக்கிறாய்?''என்றான் ருத்ரா மிகுந்த கோபத்துடன், அவள் வாயைத் திறக்கவில்லை,

en manathai thottu ponavale

‘உனக்கு என்ன ஆசை, காதலிக்க வேண்டுமென்றா, இல்லை கல்யாணம் செய்துக் கொள்ள ஆசையா, அதுவும் இந்த வயதில், சொல்லு என்ன வேண்டுமோ நான் பெரியவர்களிடம்  பேசறேன், ஆனால் உனக்கு இந்த வயதில் கல்யாணம் பண்ண முடியாது, நீ கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ள வேண்டும் ,அதனால் உன் ஆசை என்னனு சொல்லு.’

'இல்ல அண்ணா, அதெல்லாம் இல்லை, ஏதோ அவன் என்னைக் காதலிக்கிறேன் என்று, என் பின்னாலேயே ரொம்ப நாள் வந்துக் கொண்டு..... அதனால்,' என்று நிறுத்தினாள்

ஏன், என் கிட்ட சொல்லலே?, உன் மேல் தப்பு இல்லன்னா, உனக்கு அவன் மேல் விருப்பு இல்லன்னா, நீ என்னிடம் சொல்லியிருப்பே,'என்றான்.

அவள், வாயே திறக்க வில்லை.

'சரி, இப்போ சொல்லு, நான் வீட்டில் சொல்லனுமா, வேண்டாமா?

'வேண்டாம் அண்ணா,' என்றாள்,

'சரி நான் சொல்லக் கூடாதுன்னா நான் சொல்றதை நீ கேட்கணும், என்ன சொல்லறே,'

'நான் கேக்கிறேன்,'

' நீ சரியா படிக்கிறதில்லை என்று எனக்குத் தெரியும், அதனால்,நான் உனக்கு இனிமேல்  ட்யுஷன் எடுக்கிறேன், நீ நன்றாக படிக்க வேண்டும், இன்னும் ஒரு மூன்று வருடம் படித்தால், ஒரு டிகிரியை முடித்து விடுவாய், அப்போதான் ஒரு நல்ல வரனையும்  பார்க்க முடியும், இல்லையென்றாலும் பார்க்கலாம், ஒரு கிராமத்தில் ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணலாம், என்ன செய்யலாம்  என்று சொல்லு?'

'சரி நீ சொல்றதை கேக்கறேன் அண்ணா,' என்றாள் வனிதா

'சரி, இனி நானே உன்னை ஸ்கூலில் விட்டு கூட்டி வருகிறேன், இது உன்மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை, என் அழகான தங்கையை இன்னும் யாரும் இந்த மாதிரி தொந்தரவு செய்து அவள் மனதும்,வாழ்வும்  அழியக் கூடாது, அதனால் தான்,' என்று கூறி

'சாப்பிட்டாச்சா, போகலாமா?'

'ஹ்ம்ம் 'என்றாள்

இரண்டு பேரும் வெளியே வந்தார்கள், வரும்போதும் அவள் கையை பிடித்துக் கொண்டுதான் வந்தான், அப்போது தான் அவளைப் பார்த்தான், இரண்டு பேர் கண்களும் பார்த்துக் கொண்டது, இவன் அவளைப் பார்த்துக் கொண்டே வனிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளையும் விடாமல் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்.

அவளுக்குக் கோபம், ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு தன்னையும் எப்படி பார்த்துக் கொண்டு போகிறான் பார்,' என்று நினைத்துக் கொண்டாள்.

இந்த பெரிய ஹோடேலில் அவள் எப்படி? என்று யோசித்தான்

னிதாவை கொண்டு போய் ஸ்கூலில் பெர்மிஷன் கேட்டு 'சாரி ஒரு பாதி நாள் வரமுடியவில்லை அவளால் என்று கூறி' அவளை விட்டு விட்டு அவளிடம் தானே வந்து கூட்டிக்கொள்வதாக கூறி, ஸ்கூல் எத்தனை மணிக்கு விடும்,என்று மணியைக் கேட்டுக் கொண்டு, நான் வந்துவிடுவேன் பயபடாதே என்று கூறி சென்று விட்டான்

தன் வேலையைக் கவனிக்கச் சென்றான், அவன் தன் வேலையை முடிக்கும்போது மணி மூன்றாகி இருந்தது, ஸ்கூல் டைம் சரியாக இருக்கும் என்று கிளம்பினான், அவன் போகும் போது வனிதா அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள், அவன் அவளை ஏற்றிக் கொண்டு தங்கள் வீட்டுக்குச் சென்றான், மனதில் மதியம் பார்த்தப் பெண்ணே வந்துக் கொண்டிருந்தாள்.

வீடு வந்தவுடன் 'என்ன இது நீ இவளைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய், ஏன்?' என்று பாட்டி சிவகாமி கேட்டார்,

'ஒன்றுமில்லை பாட்டி, நான் அந்தப் பக்கம் வந்தேன் அதான், அது மட்டுமில்லை அந்த பக்கம் எனக்கு தினமுமே வேலை இருக்கு அதனால் நானே அவளை கூட்டிக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டு விட்டு, வரும்போது நானே கூட்டிக் கொண்டு வருகிறேன்,' என்றான் ருத்ரா

தாத்தா நீலகண்டன் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் தன் ரூமிலிருந்து, இப்போதெல்லாம் தினமும் அவர் கம்பெனிக்கு போவதில்லை,வாரத்தில் இரண்டுநாள் தான் போகிறார். அவருக்கு புரிந்தது ஏதோ வில்லங்கம் என்று.

சிறிது நேரத்தில், அவர் ருத்ராவை அழைத்தார், அவனும் வந்தான் ' என்ன தாத்தா?'

'என்னப்பா, என்னாச்சு உன் ப்ரோபோசல்?’என்று கேட்டார்

ஆமாம் தாத்தா, நான் இன்று பாங்கில், கொடுத்திருக்கிறேன்,அவர்கள் உங்களை கூப்பிட்டு கேட்பார்கள், கொஞ்சம் உங்கள் பேரனைப் பத்தி நல்ல விதமாக சொல்லுங்கள் என்று குறும்பாக சிரித்துக் கொண்டே சொன்னான்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.