(Reading time: 11 - 21 minutes)

06. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

ன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் காலை வைத்தாள் சம்யுக்தா, விமானத்தில் இருந்து இறங்கியதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம் மனதிற்குள்.

அவர்களின் வரவுக்காக காத்திருந்தாள் சங்கவி, விமானத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளில் அவர்கள் மூவரையும் கண்டுவிட்டாள், எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது இவர்களை பார்த்து... யுக்தாவை கண்டதும் ஏனோ கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

"கவி" ஓடி வந்து கட்டிக் கொண்டாள் யுக்தா, அவள் கண்களிலும் கண்ணீர்... என்னத்தான் இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பேசிக்கொண்டாலும் ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டதையும்... ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்துக் கொண்டு கதைப் பேசிய படி உறங்கியதையும்... அந்த ஸ்பரிசத்தையும் இவ்வளவு நாள் இவர்கள் இழந்து இருந்தார்களே...!!

Kadalai unarnthathu unnidame

"ஹே சம்யு.. எதுக்கு இப்போ அழற.."

"நீ மட்டும் என்ன... நீயும் தான் அழற.."

"என்னன்னு தெரியல.. உன்ன பார்த்ததும் கண்ணுல தண்ணி வந்துடுச்சு..."

"எனக்கும் தான் கவி.."

"என்னங்க பார்த்தீங்களா... இவங்க ரெண்டுப்பேரையும் பிரிச்சு வச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்... அதான் கவிக்கு நம்ம மேல கோபம் போல... நம்ம வந்ததை அவ கவனிக்கவேயில்லை..."

"அய்யோ.. அப்படியெல்லாம் இல்ல சித்தி... என்னை ரெண்டுபேரும் ஆசிர்வாதம் பண்ணுங்க..."

"நல்லா இரும்மா... எங்களுக்கு தெரியாதா கவி... யுக்தா கூட இருந்தா எல்லாத்தையும் மறந்திடுவேன்னு.. சித்தி உன்னை கிண்டல் பண்றா..."

தெரியும் சித்தப்பா... சித்தி விளையாட்டுக்கு சொல்லியிருப்பாங்கனு... சரி வாங்க வீட்டுக்கு போகலாம்..." எல்லோரும் வீட்டிற்கு சென்றார்கள்.

சாவித்திரி அவர்களுக்காக காத்திருந்தாள்... வாடகை கார் வந்த சத்தம் கேட்டதும் வாசலுக்கு ஓடி வந்தாள்,

"சாவிம்மா..." யுக்தா வந்து அணைத்துக் கொண்டாள், "சாவிம்மா... எப்படி இருக்கீங்க..."

"எனக்கென்ன... யுக்தா வந்தாச்சுள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கு... நீ எப்படிடா இருக்க..."

"நான் நல்லா இருக்கேன் சாவிம்மா..."

"சுஜாதா நீ எப்படி இருக்க... நீங்க எப்படி இருக்கீங்க தம்பி"

"நான் நல்லா இருக்கேங்க்கா..."

"நானும் நல்லா இருக்கேன் அண்ணி.."

"வாங்க... வாங்க... எல்லோரும் உள்ள போகலாம்..."

அதன்பின் அனைவரும் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது, அப்புறம் குளிச்சு... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

"அண்ணி... நான் இந்த 12 வருஷத்துல ரொம்ப மிஸ் பண்ணதுன்னா அது உங்களோட சமையல் தான்... யுக்தா அங்க இருந்தப்பக் கூட அவள் பார்க்க வந்தேனோ இல்லையோ... உங்க சாப்பாட சாப்பிட கண்டிப்பா வருவேன்"

"பார்த்தியா யுக்தா.... உங்கப்பா உன்னை பார்க்க வரமாட்டாராம்... அவங்க அண்ணி சமையலை சாப்பிடத்தான் வருவாராம்...

நியூயார்க்ல இருக்கும் போது... சுஜா நீ சாம்பார் வச்சா எவ்வளவு நல்லா இருக்கும்... இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுன்னு... கேட்டு வாங்கி சாப்பிடுவாரு... இப்பப் பாரு அண்ணி சமையல் நல்லா இருக்குன்னு சொல்றத"

"அம்மா அது வேற ஒன்னும் இல்ல... நீ சாம்பார் மட்டும் தான் நல்லா வைப்ப... அதான் அப்பாக்கு அது மட்டும் பிடிச்சிருக்கு..."

"பாரு கவி... அப்பாவும் பொண்ணும் என்னோட சமையலை எப்படி பேசுறாங்கன்னு..."

"அம்மா இவக்கிட்ட சொல்றீங்களா... நான் சமையல் கத்துக்க போறேன் கவி... அம்மாக்கிட்ட கத்துக்கட்டுமா அப்படின்னு... இவக்கிட்ட கேட்டா...

ஐயோ... அந்த தப்பை மட்டும் பண்ணிடதாத சம்யு... நல்ல குக்கிங் கிளாஸ்க்கு போய் சமையல் கத்துக்கன்னு சொன்னாம்மா..."

"ஐயோ இல்ல சித்தி... நா அப்படி சொல்லல... இவ தான் அப்படி சொன்னா... அப்படியே மாத்தி பேசறா... ஹே சம்யு... ஏன் பொய் சொல்ற..."

"போதும் போதும் விடுங்க... பார்த்தீங்களா அக்கா... எல்லோரும் என்னோட சமையலை கிண்டல் பண்றாங்க..."

"ஏ பிள்ளைங்களா நிறுத்துங்க... சுஜாதா சமையல் வாய்ல வக்கற மாதிரியாவது இருக்கும்... ஒவ்வொருத்தரோட சமையல் அப்படிக்கூட இருக்காது..."

"அக்கா... நீங்க கூட என்ன கிண்டல் பண்றீங்களா..."

"சுஜா எல்லாரும் உண்மையை சொன்னா... உனக்கு கிண்டல் பண்றதா தெரியுதா..."

"ஏன் சொல்லமாட்டீங்க... என்னோட சமையலில் இருந்து எல்லோருக்கும்  விடுதலை இருக்கு... ஆனா நீங்க காலம் முழுக்க என்னோட சமையலை சாப்பிட்டாகனும்... நியூயார்க் வாங்க அந்த சாம்பார் கூட இல்லாம... பிட்சாவும் பர்கரும்  வாங்கிட்டு வந்து வைக்கிறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.