"சித்தப்பா... சித்திக்கிட்ட சாரிக் கேட்டு சரண்டர் ஆகிடுங்க... "
"ஆமாம்மா... எதாவது கிப்ட் வாங்கிட்டு வந்து தான் சரண்டர் ஆகனும்.."
எல்லோரும் சிரித்தனர், அப்போது சாவித்திரி "இந்த சமயத்துல உங்க அண்ணன் இருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்ருப்பாரு... நீங்க ஒரு வாரம் வரலைனா கூட... குழந்தைங்க இங்க இருக்காங்க... நீ அங்க உட்கார்ந்து என்னப் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு... உங்களை வர வச்சுடுவாரு...
இப்ப எல்லோரும் ஒன்னா இருக்கோம்... இதப் பார்க்க அவரு இல்லையே... என்று வருத்தப்பட்டாள்..." அங்கே இருந்த கலகலப்பு போனது... பிறகு எல்லோரும் சாவித்திரியை சமாதானப்படுத்தினர்.
அதன்பிறகு சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தார்கள், யுக்தா அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவள் பிருத்வியை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்,
கவியையும் சாவிம்மாவையும் பார்த்தாகிவிட்டது... இனி பிருத்வியை எப்போது பார்ப்பது... அம்மாவிடம் எப்படி கேட்பது... வளர்மதி அத்தையை பார்க்கப் போகலாம் என்று கூட கேட்க முடியாது... அவர்களோடு கூட எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பேசியதுதான்...
இவள் எதையாவது கேட்டு வைத்து... கவிக்கோ அம்மாவிற்கோ.. சந்தேகம் வந்துவிட்டால்... என்ன செய்வது என்ற சிந்தனையிலே யுக்தா இருந்தாள்.
அவள் வயிற்றில் பாலை வார்த்தது போல... சுஜாதாவே அந்தப் பேச்சை ஆரம்பித்தாள்,
"என்னங்க... நாம நாளைக்கு மதியை பார்த்துவிட்டு வருவோமா..."
"இல்ல சுஜா... இங்க சென்னை ஆபிஸ் மேனேஜர் நாளைக்கு லன்ச்க்கு வர சொல்லியிருக்காரு..."
"என்னங்க லன்சுக்கு தானே... நம்ம காலையிலையே மதியை பார்த்துட்டு அப்புறம் அங்க போகலாங்க..."
"ம்... சரி"
"யுக்தா... நீயும் காலையிலேயே கிளம்பு... மதி அத்தையை பார்த்துவிட்டு வந்துவிடலாம்..."
"ம்.. சரிம்மா.."
"அவ எதுக்கு சுஜா... நாம மேனேஜர் வீட்டுக்குப் போகனுமே..."
"அதனால என்னங்க... யுக்தாவும் இரண்டு வருஷம் அங்க இருந்தா இல்ல... அவளை கூட்டிட்டுப் போகலைனா எப்படிங்க..."
"அது வந்து சுஜா... நாம அப்படியே வெளியப் போகப் போறோமே... அதான் யுக்தாவை கூட்டிட்டுப் போகனுமா...."
"யுக்தாவை ஒரு டாக்ஸி பிடிச்சு அனுப்பி விட்டுடலாங்க..."
"சரி... சுஜா" மாதவன் ஒத்துக் கொண்டார்... யுக்தாவும் சந்தோஷப்பட்டாள்... பிறகு நாளை பிருத்வியை பார்க்கப் போகும் சந்தோஷத்துடன் தோழியோடு அரட்டை அடிக்க சென்றுவிட்டாள்.
சுஜாதா நாளை வீட்டிற்கு வரப்போகும் விஷயத்தை தெரிவிக்க வளர்மதிக்கு ஃபோன் செய்தாள்.
"ஹலோ.."
"ஹலோ மதி..... நான் சுஜாதா பேசறேன்..."
"ஹே சுஜா... வீட்டுக்கு வந்தாச்சா..."
"வந்துட்டோம் மதி... எல்லோரும் பேசிக்கிட்டு இருந்ததால உடனே ஃபோன் பண்ண முடியல..."
"இருக்கட்டும் சுஜா... நான் ஏர்போர்ட்டுக்கே வரேன்னு சொன்னேன்... நீ தான் பரவாயில்லை கவி இருக்கா.. அவ வந்து கூட்டிட்டு போய்டுவான்னு சொன்ன... இல்லைன்னா நானே வந்திருப்பேன்.."
"அதனாலென்ன மதி... பரவாயில்லை.. நாங்க நல்லபடியா வந்துட்டோம்... நாங்க நாளைக்கு வீட்டுக்கு வரோம்.."
"கண்டிப்பா சுஜா... நாளைக்கு லன்ச் டின்னர் எல்லாம் நம்ம வீட்டில் தான்..."
"இல்லை மதி... நாளைக்கு அவரோட ஆபிஸ் ப்ரண்ட் வீட்டுக்கு போறோம்... மார்னிங் கொஞ்ச நேரம் தான் இருப்போம்... 2 மாசம் இங்க தான இருக்கப் போறோம்... அப்போ பார்த்துக்கலாம்.."
"சரி சுஜா... நாளைக்கு பார்க்கலாம்..."
"ம்ம்... சரி மதி..." ஃபோனை வைத்துவிட்டாள் சுஜாதா,
சுஜாதா வரப்போகும் விஷயத்தை செந்திலிடம் தெரிவிக்க சென்றாள் வளர்மதி.
தோழிகள் இருவரும் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது... இவ்வளவு நாள் பேசிக் கொள்ளாத விஷயமா... அப்படியும் என்னன்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள் கவியும் சம்யுவும்..
"சம்யு... தேவா கல்யாண வேலை நிறைய இருக்குன்னு ஊருக்குப் போயாச்சு... இல்லைன்னா என்னோட ஏர்போர்ட் வந்துருப்பான்..."
"ஆமாம் கவி... கல்யாண வேலை நிறைய இருக்குமில்ல... இருக்கட்டும் நாம தான் ஊருக்குப் போக போறோமே அப்பப் பார்த்துக்கலாம்.."