(Reading time: 11 - 21 minutes)

"... சொல்ல மறந்துட்டேனே... இப்பத்தான் எனக்கு லீவ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க... ஆனா கல்யாணத்துக்கு ஒரு வாரம் லீவ் கொடுத்திடுவாங்க... நம்ம ஜாலியா நம்ம கிராமத்தில எஞ்சாய் பண்ணப் போறோம்..."

"ஹே... அங்க நாம இருந்த நாட்களை மறக்கவே முடியாது கவி... ஒரு வாரம் அங்க இருக்கப் போறோமா...?? நாம நீ சொன்ன மாதிரி ஜாலியா இருக்கலாம்"

"ஆனா இங்க நான் வேலைக்குப் போனதும் உனக்கு போர் அடிக்குமில்ல..."

"பரவாயில்ல கவி... கொஞ்ச நாள் தானே அப்புறம் அப்பாக்கிட்ட பேசி நான் இங்கையே ஏதாவது ஜாப் இல்லை ஏதாவது படிக்கிறத பத்தி பேசலாம்னு இருக்கேன்..."

"சம்யு... கொஞ்ச நாள் வெய்ட் பண்ணு... ரெண்டு மாசத்துல எனக்கு ட்ரெயினிங் முடிஞ்சிடும்... அப்புறம் எனக்கு இங்க வேலையா... இல்ல பெங்களூர்லயான்னு தெரியலை...

எங்க டீம் லீடர்க்கிட்ட சொல்லியிருக்கேன்... சென்னையிலேயே வொர்க் பண்ணனும் கொஞ்சம் நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்னு... பார்க்கலாம்... அதுவரைக்கும் நீ சும்மாவே இரு... பெங்களூர்ல ஜாப் இருந்தா... நீயும் என்னோட வந்திடு... அங்கயே நீ வொர்க் பண்ணலாம்.. இல்ல எதாவது படிக்கலாம்..."

"நான் சென்னையில தான் இருக்கப்போறேன்... நீயும் அங்கயே வந்துடுன்னு சொல்லிக்கிட்டு இருந்த... இப்போ பெங்களூர் போகப் போறேன்னு சொல்ற... இருக்கட்டும் கவி, சென்னையா இருந்தா என்ன... இல்ல பெங்களூரா இருந்தா என்ன... நாம ஒன்னா தானே இருக்கப்போறோம்"

வாய் இப்படி சொன்னாலும் யுக்தாவின் மனசோ வேறொன்று நினைத்தது... கவியும் பிருத்வியும் சென்னையிலேயே இருக்காங்க என்பதால் தான் அவள் சென்னை வர ஆர்வமாக இருந்ததே... இப்போது பெங்களூர் போய்விட்டால் பிருத்வியை அடிக்கடி பார்க்கமுடியாதே...

கவி மனதில் கூட அப்படி ஒரு எண்ணம் தான் ஓடியது... சென்னையில் வேலை என்றதும் அவள் ஆர்வமாக வேலைக்கு சேர்ந்ததே... தேவா இங்கு இருக்கிறான் என்பதால் தான்... இப்போது பெங்களூர் போயிட்டா யுக்தா கூட வந்துவிடுவாள்.... ஆனால் தேவாவை அடிக்கடி பார்க்க முடியாதே... ஆனால் உடனே அவள் மனதுக்கு கடிவாளமிட்டுக் கொண்டாள்...

வேணாம் கவி... யுக்தா வந்தாச்சு.. அத்தை தர்ஷினி கல்யாணம் முடிஞ்சதும் இவங்க கல்யாணத்தை பேச ஆரம்பிச்சிடுவாங்க... அதனால தேவா மேல இருக்க உன்னோட காதலை ஒரு கண்ட்ரோல்ல வச்சுக்க என்று மனதை திசை திருப்பினாள்.

ஆனால் இரண்டு மாதம் கழித்து பிருத்வியோடு அவன் மனைவியாக அவனுடன் தான் யுக்தா இருக்கப்போகிறாள்.... தேவாவும் யுக்தாவும் சென்னையில் இருந்தாலும் சங்கவியே வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு போகப் போகிறாள் என்பதை இருவரும் அறியாமல் மேலும் ஏதேதோ கதை பேசிவிட்டு உறங்கிவிட்டார்கள்.

"பிருத்வி... காலையில கொஞ்ச நேரம் இருக்கக்கூடாதா... அவங்க வந்த உடனே போகலாமே..."

"இல்லம்மா... இது முக்கியமான மீட்டிங்... இத அட்டண்ட் பண்ணியே ஆகனும்... அதனால அவங்களை இன்னொரு நாள் பார்த்துக்கறேனே..."

"பிருத்வி... நீ சுஜாதாவை என்னோட ப்ரண்டா மட்டும் நினைக்காதே... அவளுக்கு இது பொறந்த வீடு மாதிரி... அவ நியூயார்க் போனதும் அவ ஃபோன் பேசறப்போ... ஒன்னு நீங்க தூங்கிகிட்டு இருப்பீங்க.. இல்ல வெளிய போயிருப்பீங்க...

அதனால உங்கக்கூட தொடர்பு இல்லாம போச்சு... ஆனா உங்களை அவ விசாரிச்சுகிட்டு தான் இருப்பா... என்கிட்டயும் அப்பாக்கிட்டயும் தொடர்ந்து பேசிக்கிட்டத் தான் இருக்கா... 12 வருஷம் கழிச்சு அவ வரா... நீங்க இங்க இல்லைன்னா என்ன நினைப்பா...

இதுவே உங்கப்பா கூட பொறந்தவளா இருந்தா எல்லோரும் அவள் ஆவலா எதிர்பார்த்திருப்போம்ன்னு சங்கடப்படமாட்டாளா...???"

"மதி... நம்ம சுஜாதா அப்படியெல்லாம் நினைக்கமாட்டா... அவ பிருத்விக்கு முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னா புரிஞ்சிக்க மாட்டாளா என்ன....??? அவன் போகட்டும் அதான் நாம மூனு பேரும் இருக்கப் போறோமே..."

"சரி பிருத்வி போய்ட்டு வா... இன்னொரு நாள் அவங்க வரும்போது நீ வீட்ல இருக்கனும்.. என்ன..??"

"கண்டிப்பா ம்மா... குட்நைட்"

பிருத்வி அவன் அறைக்கு போனதும் "என்னங்க... சுஜாதா வரப்போ பிருத்வி இல்லைன்னா... அவ தப்பா எடுத்துப்பாளோன்னு பயமா இருக்குங்க.. அவ வந்த உடனையே... பிருத்வி இல்லைன்னா.. யுக்தா பிருத்வி கல்யாணம் நடக்குமான்னு அவளுக்கு சந்தேகம் வந்துடுச்சுன்னா..."

"ஓ.. இத நினைச்சு தான் பிருத்விகிட்ட அப்படி பேசினியா... இங்கப்பாரு சுஜாதா என்ன நினைச்சிப்பாளோன்னு நீ பயந்துகிட்டு இருக்க... கடவுள் மேல பாரத்தை போடு அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.