(Reading time: 14 - 27 minutes)

18. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

ன்றைக்கு காலையிலிருந்தே ஒரே டென்ஷனாக இருந்தது பைரவிக்கு.. இன்னமும் மூன்று நாட்களில் மஹதிக்கு கல்யாணம்.. ஏற்கனவே முன் பணம் முழுவதுமாக கட்டி விட்டிருந்த படியால் என்றைக்கு கல்யாண சத்தரத்திற்கு போவார்களோ அன்றே அங்கேயே காரை டெலிவரி எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஒரு வழியாக கார் பிரச்சனை முடிந்தது.

பைரவி திரும்பவும் ஒரு முறை தன் மாமாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் இன்னமும் ஷேத்ராடனம் முடிந்து திரும்பியிருக்கவில்லை.. இன்னமும் ஒரு வாரம் கழித்து தான் வருவாதாக ஃபோன் கால் வந்தது என்று சொல்லி விட்டார்கள் எதிர் வீட்டினர்.

vasantha bairavi

அவர்களிடம் அவர் வந்தால் தகவல் சொல்லுமாறு தெரித்துவிட்டு தன்னுடைய மொபைல் நம்பரையும் அவர்களிடம் கொடுத்து வைத்துவிட்டு வந்தாள்.

மொட்டை மாடியில் நின்றவாறு விடியற்காலையின் இயற்கை அழகை அனுபவித்தபடி அங்கிருந்த சில பல செடிகளில் மலர்ந்திருந்த பூக்களை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள் பைரவி.. வாய் தானாகவே தன் பாட்டுக்கு ;

'ஜகதோ தாரனா

அலிசி தலி சோதா"

என்று மெல்ல காபி ராகத்தில் அமைந்திருந்த கீர்த்தனையை பாடியபடி இருந்தது.

கிருஷ்ணரின் பெருமையை உரைக்குமாறு அமைந்திருந்த அந்த கீர்த்தனையை கண் மூடி மெய்மறந்து கேட்டபடி ஒரு டிரேயில் காபியும் கையில் ஏதோ ரிபோர்ட்டுகளை பிடித்தபடியும் நின்றிருந்தாள் மஹதி.

பாடி முடித்து திரும்பிய பைரவி மஹதியை  பார்த்து," வா மஹதி நினைச்சேன் என்னடா இன்னமும் காஃபி வரலையேன்னு.. அஜய் எங்கே? காஃபி குடிச்சாச்சா?"

"இல்லை பைரவி..அஜய் இன்னமும் வாக்கிங்கிலிருந்து திரும்பலை.. சரி உனக்காவது கொண்டு கொடுப்போம்ன்னு வந்தேன்.. அதோட எனக்கு உங்கிட்ட கொஞ்சம் பேசனும்."

"சொல்லு.. என்ன கேக்கனும்?"

"இந்தா நீ கேட்ட லேப் ரிபோர்ட்ஸ்... எனக்கும் கொஞ்சம் இந்த ஃபீல்டுலே இன்ட்ரெஸ்ட் இருக்கறதாலே இந்த ரிபோட்ஸையெல்லாம் நேத்திக்கு ஹாஸ்பிடலில் இருக்கும் போதே படித்து பார்த்தேன்.. அதில் தான் எனக்கு குழப்பம்."

சில நாள் முன்பு பரிசோதனைக்கு கொடுத்திருந்த நாலைந்து குடும்பங்களின் ரிபோர்ட்ஸ் மஹதியின் கைகளுக்கு வந்திருந்தது.

"ஒரு ஃபை மினிட்ஸ் குடு.. நானும் பார்த்து விடுகிறேன்", என்றவள் ரிபோர்ட்ஸை எல்லாம் படிக்க ஆரம்பித்தாள்.

படிக்க படிக்க கொஞ்சம் குழப்ப ரேகைகளும் பின் கொஞ்சம் தெளிவும் இருந்தது அவள் முகத்தில்..

நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள்," சொல்லு என்ன உனக்கு டவுட் இதிலே..?"

"உன்னோட ஆராய்ச்சிக்கு நீ எடுத்துக் கொண்ட டாபிக் மனித மரபியல் பரிமானம் தானே??”, என்று கேட்டவளை பார்த்து சிரித்தாள் பைரவி.

"அதுமட்டுமில்லை மஹதி.. நான் மேற்கொண்டு இருக்கும் ஆராய்ச்சி ஒரு சில குணாதிசயங்கள், பாரம்பரியமாக வருவதா இல்லை தானாக முயற்சி எடுத்தால் வருவதா? அதாவது ஜெனிடிக்ஸ் படி இன் ஹெரிடட் டிரைட்ஸா இல்லை அக்வயர்டு டிரைட்ஸா? என்பதும் கூட..இப்போது இசையை எடுத்து கொண்டால் அது பாரம்பரியமாக மரபணுக்களின் மூலம் வழி வருவதா? இல்லை தானாகவே சுயமாக பயிற்சி மூலம் வருவதா? என்பது.. நான் இசை சம்பந்தப்பட்ட மரபணுக்கள் நம்மில் உண்டா என்பதை ஆராய்கிறேன்..அதனால் தான் பல்வேறு மொழி மதங்களை  நாடுகளை சார்ந்த இசை வழி குடும்பங்களை ஆராய்ந்து வருகிறேன்.".

"அது சரி..எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..இப்போது ஜெனிடிக் டெஸ்ட் எடுக்கும் போது நம்முடைய ஜீன் பேட்டர்ன் நம் பெற்றோரை சார்ந்ததாக இருக்கும் இல்லையா?", என்ற மஹதிக்கு,

"நிச்சயமாய்.. நம் பெற்றோர்களின் மரபணுக்களின் ஆதிக்கம் நிச்சயமாய் இருக்கும் பாதிக்கு மேல் முக்கால் சதவிகிதம்..மீதி நம் தாத்தா, பாட்டி, அண்ணன் தம்பி என்று மிக நெருங்கிய உறவினர்களை கூட சார்ந்து இருக்கக் கூடும். ஆனால் பெரும்பான்மை நம் பெற்றோர்களிடமிருந்து தான் வரும்."

"நீ சொல்வது புரிகிறது..அது படி சிந்தித்தால்..எனக்கு ஒரு சந்தேகம்..எப்போதாவது தாய் தந்தையை விடுத்து வேறு விதமான மரபணுக்கள் முழுவதுமாக ஒருவருக்கு இருக்கக் கூடுமா?"

"நிச்சயம் முடியாது.. கட்டாயம் அது கிடையாது.. ஜீன் பேட்டர்ன் கம்ப்லீட் மேட்ச் இல்லையென்றால் அவர்கள் நிச்சயம் ரத்த சம்பந்தம் கொண்டவர்களாக இருக்க முடியாது...வேறு வித காம்பினேஷன் சாத்தியமே ஆனால் சதவிகிதம் குறைவாகத்தான் இருக்க முடியும்,.."

"அப்படின்னா..நீ இந்த ரிபோர்ட்ஸை பார்த்தாய் தானே?.. என் சந்தேகப்படி.."

"நீ சொல்வது சரிதான் மஹதி.. இது சாத்தியம் இல்லை.. எங்கோ ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.